தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
1. எலியூ தன் பேருரையைத் தொடர்ந்தான்:
2. ஞானிகளே, என் சொற்களைக் கேளுங்கள், அறிஞர்களே, எனக்குச் செவிசாயுங்கள்.
3. நாக்கு உணவைச் சுவைப்பது போல், சொற்களைச் செவி சுவைத்துணருகிறது.
4. சரியானதை நாம் தேர்ந்து கொள்வோம், நன்மை எது என்பதை நமக்குள் தீர்மானிப்போம்.
5. ஏனெனில் யோபு, 'நான் மாசற்றவன், கடவுளோ என் நியாயத்தைத் தள்ளிவிட்டார்;
6. நியாயம் என் பக்கம் இருந்தும், நான் பொய்யனானேன்; குற்றமில்லாதிருந்தும், ஆறாக்காயத்துக்கு ஆளானேன்' என்றாரே.
7. ஏளனத்தைத் தண்ணீரைப் போல் பருகும் யோபுவையொத்த மனிதன் எவனாவதுண்டோ?
8. அவரைப் போல், தீமை செய்பவரின் கூட்டத்தோடு சேர்ந்து, கொடியவர்களுடன் திரிபவன் எவனாவதுண்டோ?
9. ஏனெனில், 'கடவுளிடம் மகிழ்ந்திருப்பதால், மனிதனுக்குத் தினைத்துணையும் பயனில்லை' என்றாரே.
10. ஆதலால், உணரும் உள்ளம் படைத்தவர்களே, செவிசாயுங்கள்; கொடுமை செய்தல் என்பதே கடவுளிடம் கிடையாது. தீமை என்பதே எல்லாம் வல்லவரிடம் இருக்க முடியாது.
11. ஏனெனில் ஒருவன் செயலுக்கேற்பவே அவர் பலனளிக்கிறார், அவன் நெறிகளுக்குத் தக்கபடியே அவனுக்கு எதுவும் நேருகிறது.
12. கொடுமை எதுவும் கடவுள் செய்யமாட்டார், இது உண்மை; எல்லாம் வல்லவர் நியாயத்தை மீறி நடக்கமாட்டார்.
13. உலகத்தை அவர் பொறுப்பில் ஒப்புவித்தவன் யார்? உலக முழுவதையும் அவர்மேல் சுமத்தியவன் யார்?
14. அவர் தமது ஆவியைத் தம்மிடமே திரும்ப எடுத்துக்கொண்டால், தமது மூச்சைத் தம்மிடம் மீண்டும் கூட்டிக் கொண்டால்,
15. உயிருள்ள யாவும் ஒருங்கே அழிந்து போகும், மனிதனோ மீண்டும் மண்ணாய்ப் போவான்.
16. அறிவாற்றல் உமக்கிருந்தால் இதைக்கேளும், நான் சொல்வதைக் கூர்ந்து கவனியும்.
17. நீதியைப் பகைப்பவர் ஆளக் கூடுமோ? நேர்மையும் வலிமையும் கொண்டவர்மேல் குற்றம் சுமத்துவீரோ?
18. அவர் அரசனைப் பார்த்து, 'ஒன்றுக்கும் உதவாதவனே' என்றும், பெருங்குடி மக்களிடம், 'கொடியவர்களே' என்றும் சொல்லுகிறார்;
19. தலைவர்களை அவர் ஓரவஞ்சனையால் நடத்துகிறதில்லை, ஏழைகளை விடச் செல்வர்களை அவர் மிகுதியாய் மதிக்கிறதில்லை; ஏனெனில் அவர்களனைவரும் அவருடைய கை வேலைகளே.
20. ஒரு நொடியில் அவர்கள் செத்துப் போகிறார்கள், செல்வச் சீமான்களும் நள்ளிரவில் அதிர்ச்சியுற்று இறக்கிறார்கள், கண் காணாக் கையால் கொடியவர்களும் அகற்றப்படுகின்றனர்.
21. ஏனெனில், அவர் கண்கள் மனிதனின் வழிகளைக் காண்கின்றன. அவன் காலடிகளையெல்லாம் அவை பார்க்கின்றன.
22. தீமை செய்பவர்கள் தங்களை ஒளித்துக் கொள்ளக்கூடிய இருட்டோ காரிருளோ எங்கும் இல்லை.
23. ஏனெனில் தீர்ப்பு பெறக் கடவுள்முன் போவதற்கு எவனுக்கும் நேரம் அவர் குறிப்பிடவில்லை.
24. விசாரணை இன்றியே அவர் பெரியோர்களை நொறுக்குகிறார், அவர்களது இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்துகிறார்.
25. இவ்வாறு, அவர்கள் செய்கைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, இரவில் அவர்களை விழத்தாட்டுகிறார், அவர்களோ நொறுக்கப்படுகின்றனர்.
26. மனிதர்கள் முன்னிலையிலேயே அவர்களை அவர் அவர்களுடைய அக்கிரமத்திற்காகத் தண்டிக்கிறார்.
27. அவரைப் பின்பற்றாமல் அவர்கள் விலகிப்போய், அவருடைய நெறிகளை அவர்கள் பொருட்படுத்தாததால்,
28. ஏழைகள் அவர்களுக்கு எதிராய் அவரிடம் கூக்குரலிட்டனர், தாழ்ந்தோரின் அழுகுரல் அவர் செவிகளுக்கு எட்டிற்று,
29. ஆயினும் அவர் கவலைப்படவில்லை, எதுவும் அவரை அசைக்காது; தம் முகத்தை மறைத்துக் கொள்ளுகிறார், யாரும் அவரைக் காண்பதில்லை' என்று சொல்லக்கூடும். ஆயினும் மக்கள் மேலும் மக்களினங்கள் மேலும் அவர் இரங்குகிறார்.
30. வேதனையின் கண்ணிகளினின்று இறைப்பற்றில்லாதவனை விடுவிக்கிறார்.
31. அப்படிப்பட்டவன் கடவுளைப் பார்த்து, 'நான் தவறான நெறியில் நடத்தப்பட்டேன், இனி நான் பாவஞ் செய்யேன்;
32. நான் தவறு செய்திருந்தால் அதை எனக்குச் சொல்லும், நான் அக்கிரமம் செய்திருந்தால், இனி நான் செய்யேன்' என்று சொல்வானாகில், -
33. அப்பொழுதும் அவனை அவர் தண்டிக்க வேண்டுமென நீர்- அவருடைய தீர்மானங்களைப் புறக்கணிக்கும் நீர்- நினைக்கிறீரோ? இவ்வாறு முடிவு கூறுவது நானல்லேன், நீரேயாதலால், எங்கள் அனைவருக்கும் உம் அறிவை வழங்கும்.
34. அறிவுள்ளவன் எவனும், எனக்குச் செவிமடுப்போருள் ஞானம் படைத்தவன் எவனும் கூறுவது இதுவே:
35. யோபுவின் பேச்சில் ஞானமே இல்லை, அவர் சொற்களில் ஞானம் புலப்படவில்லை;
36. இறுதி வரை யோபுவைச் சோதனைக்குட்படுத்துங்கள், ஏனெனில் தீய மனிதரைப் போல் தான் அவரும் வாதாடுகிறார்!
37. தம் முன்னைய பாவத்துடன் இறைவனை எதிர்த்து இன்னொரு பாவத்தையும் சேர்த்துவிட்டார்; நம் நடுவில் அவர் நீதியையே எதிர்த்துக் கேள்வி விடுக்கிறார், கடவுள் மேல் பழிச்சொற்களைக் கொட்டுகிறார்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 42 Chapters, Current Chapter 34 of Total Chapters 42
யோபு 34:6

×

Alert

×

tamil Letters Keypad References