தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோபு
1. யோபுவே, நான் சொல்வதைச் செவிமடுத்துக் கேளும், என் சொற்களையெல்லாம் கூர்ந்து கவனியும்.
2. இதோ, நான் பேசத் தொடங்குகிறேன், என்னுடைய நாக்கு இப்பொழுது பேசும்.
3. என் உள்ளத்தின் நேர்மையை என் சொற்கள் வெளிப்படுத்தும், அறிந்ததை என் உதடுகள் நேர்மையாய்ப் பேசும்.
4. கடவுளின் ஆவி என்னை உண்டாக்கிற்று, எல்லாம் வல்லவரின் மூச்சு எனக்கு உயிரளிக்கிறது.
5. உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி சொல்லும், என்னை எதிர்த்துப் பேசத் தயாராக நில்லும்.
6. இதோ, கடவுள் முன்னிலையில் நீரும் நானும் சமமே, நானும் களிமண்ணால் உண்டாக்கப்பட்டவன் தான்.
7. ஆதலால் என்னைக் கண்டு நீர் அஞ்சித் திகிலுற வேண்டாம், என் கை உம்மீது பழுவாய் விழாது.
8. நான் கேட்கும்படி வெளிப்படையாய் நீர் பேசினீர், உம் சொற்கள் என் செவிகளில் விழுந்தன.
9. நீரோ, 'நான் குற்றமற்றவன், சுத்தமானவன், என்னிடம் அக்கிரமமில்லை, நான் மாசற்றவன்.
10. அவரோ, என்னிடம் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தம் பகைவனாகக் கருதுகிறார்.
11. என் கால்களைத் தொழுவிலே மாட்டுகிறார், என் வழிகளனைத்தையும் கவனிக்கிறார்' என்கிறீர்.
12. இப்படிச் சொன்னது தான் நீர் செய்த குற்றம்; மனிதனை விடக் கடவுள் பெரியவர்- இது என் பதில்.
13. என் சொற்களில் ஒன்றுக்கும் அவர் பதில் சொல்லவில்லை' என்று சொல்லி அவரோடு நீர் வழக்காடுவதேன்?
14. கடவுள் முதலில் ஒரு வகையில் பேசுகிறார், பிறகு இன்னொரு வகையில் பேசுகிறார், இதை யாரும் கவனிக்கிறதில்லை.
15. எல்லா மனிதர்களும், ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது, அவர்கள் தங்கள் படுக்கைகளில் தூங்கும் போது, இரவுக்காட்சியில்- கனவில்,
16. கடவுள் மனிதரின் காதுகளைத் திறக்கிறார், எச்சரிக்கைகளால் அவர்களை அச்சுறுத்துகிறார்.
17. தீச்செயலை விட்டு மனிதனைத் திருப்பிடவும், மனிதனிடமிருந்து செருக்கைத் தொலைக்கவும் இப்படிச் செய்கிறார்.
18. படுகுழியில் விழாதபடி அவன் ஆன்மாவை இவ்வாறு காக்கிறார், அவனுயிர் வாளால் மடியாதபடி பார்த்துக் கொள்ளுகிறார்.
19. நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் படும் வேதனையாலும், மனிதனைக் கடவுள் தண்டித்துத் திருத்துகிறார். அப்போது எலும்புகள் இடைவிடாது நடுங்குகின்றன.
20. மனிதன் உணவையே அருவருக்கிறான், சுவையான உணவும் அவன் நாவுக்குக் கசக்கிறது.
21. அவன் எலும்பும் தோலுமாய் மெலிந்து போகிறான், அவன் எலும்புகள் கண்ணுக்குப் புலப்படுகின்றன.
22. படுகுழியை நோக்கி அவன் ஆன்மா நெருங்குகிறது, கொலைஞரை அவன் உயிர் அணுகுகிறது.
23. அவ்வாறு மனிதன் வேதனைப்படும் பொழுது ஆயிரம் பேர்களுள் ஒரே ஒரு தூதர் அவன் பக்கம் நின்று, அவன் குற்றமற்றவன் என்று அவன் சார்பாகப் பேசி,
24. அவனிடத்தில் பரிவுகாட்டி, 'படுகுழிக்குப் போகாமல் அவனைக் காப்பாற்றும், அவனது விடுதலைக்கான விலையைப் பெற்றுக் கொண்டேன்.
25. அவன் உடல் இளமை கொழித்து விளங்கட்டும், இளமையின் துடிப்புமிக்க நாட்களுக்கு அவன் திரும்பிப் போகட்டும்' என்று சொல்லுவாரானால்,
26. அப்போது, மனிதன் கடவுளிடம் மன்றாட அவர் கேட்டருள்கிறார்; மகிழ்ச்சியோடு அவர் திருமுன் வருகிறான், அவரோ அவனுக்கு மீட்பளிக்கிறார்.
27. அவனோ மனிதர்கள் முன்னிலையில் மகிழ்ந்து பாடி, 'நேர்மையானதைக் கோணலாக்கிப் பாவஞ் செய்தேன்,
28. ஆயினும் அதற்கேற்ப நான் தண்டனை பெறவில்லை; படுகுழிக்குப் போகாமல் என் ஆன்மாவை அவர் காத்தருளினார், என் உயிரும் ஒளியைக் காணும்' என்கிறான்.
29. இதோ, கடவுள் தான் மனிதனுக்கு இதெல்லாம் செய்கிறார், இருமுறை மும்முறையும் செய்து வருகிறார்.
30. படுகுழியிலிருந்து அவன் ஆன்மாவைத் திரும்பக் கொணரவும், வாழ்வின் ஒளியை அவன் காணச் செய்யவும் இவ்வாறு செய்கிறார்.
31. யோபுவே, நான் சொல்வதைக் கவனித்துக் கேளும், மவுனமாயிரும், நான் பேசுகிறேன்.
32. சொல்வதற்கு ஏதேனுமிருந்தால் மறுமொழி கூறும், பேசும், உம் குற்றமின்மையை நிலை நாட்டுவதே என் விருப்பம்.
33. இல்லையேல், நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும், மவுனமாயிரும், உமக்கு நான் ஞானத்தைக் கற்பிப்பேன்."

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 33 / 42
1 யோபுவே, நான் சொல்வதைச் செவிமடுத்துக் கேளும், என் சொற்களையெல்லாம் கூர்ந்து கவனியும். 2 இதோ, நான் பேசத் தொடங்குகிறேன், என்னுடைய நாக்கு இப்பொழுது பேசும். 3 என் உள்ளத்தின் நேர்மையை என் சொற்கள் வெளிப்படுத்தும், அறிந்ததை என் உதடுகள் நேர்மையாய்ப் பேசும். 4 கடவுளின் ஆவி என்னை உண்டாக்கிற்று, எல்லாம் வல்லவரின் மூச்சு எனக்கு உயிரளிக்கிறது. 5 உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி சொல்லும், என்னை எதிர்த்துப் பேசத் தயாராக நில்லும். 6 இதோ, கடவுள் முன்னிலையில் நீரும் நானும் சமமே, நானும் களிமண்ணால் உண்டாக்கப்பட்டவன் தான். 7 ஆதலால் என்னைக் கண்டு நீர் அஞ்சித் திகிலுற வேண்டாம், என் கை உம்மீது பழுவாய் விழாது. 8 நான் கேட்கும்படி வெளிப்படையாய் நீர் பேசினீர், உம் சொற்கள் என் செவிகளில் விழுந்தன. 9 நீரோ, 'நான் குற்றமற்றவன், சுத்தமானவன், என்னிடம் அக்கிரமமில்லை, நான் மாசற்றவன். 10 அவரோ, என்னிடம் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தம் பகைவனாகக் கருதுகிறார். 11 என் கால்களைத் தொழுவிலே மாட்டுகிறார், என் வழிகளனைத்தையும் கவனிக்கிறார்' என்கிறீர். 12 இப்படிச் சொன்னது தான் நீர் செய்த குற்றம்; மனிதனை விடக் கடவுள் பெரியவர்- இது என் பதில். 13 என் சொற்களில் ஒன்றுக்கும் அவர் பதில் சொல்லவில்லை' என்று சொல்லி அவரோடு நீர் வழக்காடுவதேன்? 14 கடவுள் முதலில் ஒரு வகையில் பேசுகிறார், பிறகு இன்னொரு வகையில் பேசுகிறார், இதை யாரும் கவனிக்கிறதில்லை. 15 எல்லா மனிதர்களும், ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது, அவர்கள் தங்கள் படுக்கைகளில் தூங்கும் போது, இரவுக்காட்சியில்- கனவில், 16 கடவுள் மனிதரின் காதுகளைத் திறக்கிறார், எச்சரிக்கைகளால் அவர்களை அச்சுறுத்துகிறார். 17 தீச்செயலை விட்டு மனிதனைத் திருப்பிடவும், மனிதனிடமிருந்து செருக்கைத் தொலைக்கவும் இப்படிச் செய்கிறார். 18 படுகுழியில் விழாதபடி அவன் ஆன்மாவை இவ்வாறு காக்கிறார், அவனுயிர் வாளால் மடியாதபடி பார்த்துக் கொள்ளுகிறார். 19 நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் படும் வேதனையாலும், மனிதனைக் கடவுள் தண்டித்துத் திருத்துகிறார். அப்போது எலும்புகள் இடைவிடாது நடுங்குகின்றன. 20 மனிதன் உணவையே அருவருக்கிறான், சுவையான உணவும் அவன் நாவுக்குக் கசக்கிறது. 21 அவன் எலும்பும் தோலுமாய் மெலிந்து போகிறான், அவன் எலும்புகள் கண்ணுக்குப் புலப்படுகின்றன. 22 படுகுழியை நோக்கி அவன் ஆன்மா நெருங்குகிறது, கொலைஞரை அவன் உயிர் அணுகுகிறது. 23 அவ்வாறு மனிதன் வேதனைப்படும் பொழுது ஆயிரம் பேர்களுள் ஒரே ஒரு தூதர் அவன் பக்கம் நின்று, அவன் குற்றமற்றவன் என்று அவன் சார்பாகப் பேசி, 24 அவனிடத்தில் பரிவுகாட்டி, 'படுகுழிக்குப் போகாமல் அவனைக் காப்பாற்றும், அவனது விடுதலைக்கான விலையைப் பெற்றுக் கொண்டேன். 25 அவன் உடல் இளமை கொழித்து விளங்கட்டும், இளமையின் துடிப்புமிக்க நாட்களுக்கு அவன் திரும்பிப் போகட்டும்' என்று சொல்லுவாரானால், 26 அப்போது, மனிதன் கடவுளிடம் மன்றாட அவர் கேட்டருள்கிறார்; மகிழ்ச்சியோடு அவர் திருமுன் வருகிறான், அவரோ அவனுக்கு மீட்பளிக்கிறார். 27 அவனோ மனிதர்கள் முன்னிலையில் மகிழ்ந்து பாடி, 'நேர்மையானதைக் கோணலாக்கிப் பாவஞ் செய்தேன், 28 ஆயினும் அதற்கேற்ப நான் தண்டனை பெறவில்லை; படுகுழிக்குப் போகாமல் என் ஆன்மாவை அவர் காத்தருளினார், என் உயிரும் ஒளியைக் காணும்' என்கிறான். 29 இதோ, கடவுள் தான் மனிதனுக்கு இதெல்லாம் செய்கிறார், இருமுறை மும்முறையும் செய்து வருகிறார். 30 படுகுழியிலிருந்து அவன் ஆன்மாவைத் திரும்பக் கொணரவும், வாழ்வின் ஒளியை அவன் காணச் செய்யவும் இவ்வாறு செய்கிறார். 31 யோபுவே, நான் சொல்வதைக் கவனித்துக் கேளும், மவுனமாயிரும், நான் பேசுகிறேன். 32 சொல்வதற்கு ஏதேனுமிருந்தால் மறுமொழி கூறும், பேசும், உம் குற்றமின்மையை நிலை நாட்டுவதே என் விருப்பம். 33 இல்லையேல், நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும், மவுனமாயிரும், உமக்கு நான் ஞானத்தைக் கற்பிப்பேன்."
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 33 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References