தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோபு
1. கன்னிப்பெண் எவளையும் நோக்காதிருக்க என் கண்களோடு நான் ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.
2. உன்னதத்திலிருக்கும் கடவுளிடமிருந்து எனக்கு என்ன பங்கு கிடைக்கும்? விண்ணிலிருந்து எல்லாம் வல்லவர் என் உரிமைச் சொத்தாய் எதைத் தருவார்?
3. நேர்மையற்றவர்களுக்கு இடுக்கண் அன்றோ விளைகிறது? அக்கிரமம் செய்வோருக்கு அழிவன்றோ நேருகிறது?
4. என் வழிகளை அவர் பார்க்கிறார் அல்லவா? என் காலடிகளை எல்லாம் கணக்கிடுகின்றாரன்றோ?
5. பொய்ம்மை நெறியில் நான் நடந்திருந்தால், வஞ்சகம் செய்ய என் கால் விரைந்திருந்தால்,
6. சமன் செய்து சீர்தூக்கும் கோலில் நான் நிறுக்கப்படுக! அப்போது கடவுள் என் மாசின்மையை அறிவார்.
7. நெறியினின்று என் கால் பிறழ்ந்திருந்தால், என் கண்களைப் பின்பற்றி என் உள்ளம் சென்றிருந்தால், என் கைகளில் ஏதேனும் மாசு ஏற்பட்டிருந்தால்,
8. நான் விதைப்பதை இன்னொருவன் உண்டு போகட்டும், எனக்கென்று வளர்வது வேரோடு பிடுங்கப்படட்டும்!
9. பிறன் மனைவியைக் கண்டு என்னுள்ளம் மயங்கியிருந்தால், அயலான் வீட்டு வாயிலில் நான் காத்துக் கிடந்திருந்தால்,
10. பிறனொருவனுக்கு என் மனைவி மாவரைக்கட்டும், மற்றவர்கள் அவள் தோளை முயங்கட்டும்.
11. ஏனெனில் அது பழிச்செயலாகவும், தண்டனைக்குரிய அக்கிரமமாயும் இருந்திருக்கும்;
12. கீழுலகம் வரை சுட்டெரிக்கும் தீயாய் இருந்து, என் விளைச்சல்களையெல்லாம் அது வேரோடு எரித்திருக்கும்.
13. என் வேலைக்காரனோ வேலைக்காரியோ என் மேல் வழக்குத் தொடுத்து, அவ்வழக்கை நான் அசட்டை செய்து தள்ளியிருந்தால்,
14. கடவுள் தீர்ப்பிட எழுந்து வரும் போது நான் என்ன செய்வேன்? அவர் விசாரணை நடத்தும் போது என்ன பதில் கொடுப்பேன்?
15. என்னைத் தாய் வயிற்றில் உண்டாக்கியவர் தானே அவனையும் உண்டாக்கினார்? தாய் வயிற்றில் எங்களை உருவாக்கியவர் ஒருவரே அன்றோ?
16. ஏழைகள் விரும்பிக் கேட்டதை நான் தராமாற் போயிருந்தால், கைம்பெண்ணின் கண்கள் மங்கிப் போகச் செய்திருந்தால்,
17. திக்கற்றவனுக்கு உணவில் பங்கு தராமல், நான் மட்டும் தனியாய் அதை உண்டிருந்தால்,
18. (ஏனெனில் சிறுவயது முதல் அவனுக்குத் தந்தையாயிருந்து வளர்த்தேன், தாய் வயிற்றிலிருந்தே அவனை நடத்தி வந்தேன்),
19. ஆடையின்றி எவனாவது அழிவதை நான் கண்டிருந்தால், ஏழையொருவன் போர்வையின்றி இருப்பதைப் பார்த்திருந்தால்,
20. ஆடையுடுத்தப் பெற்ற அவன் இடை என்னை வாழ்த்தாதிருந்தால், எனது ஆட்டு மயிராடையால் அவன் குளிர் போக்கப்படாதிருந்தால்,
21. ஊர்ச்சபையில் எனக்குச் செல்வாக்கு உண்டெனக் கண்டு, திக்கற்றவர்களுக்கெதிராய் நான் கையோங்கியிருந்தால்,
22. என் தோள்பட்டை தோளிலிருந்து விழுந்து போகட்டும், மூட்டினின்று என் கை முறிந்து போகட்டும்.
23. ஏனெனில் கடவுள் அனுப்பும் வேதனைக்காக அஞ்சி நடுங்கினேன், அவரது மகிமையின் முன் என்னால் நிற்கவே முடியவில்லையே.
24. பொன்னில் என்னுடைய நம்பிக்கையை வைத்திருந்தால், தங்கம் என் உறுதுணை என்று நம்பியிருந்தால்,
25. எனக்குச் செல்வம் மிகுதியாய் இருந்ததாலும், என் கை மிகுதியாய்ச் சேர்த்ததாலும் நான் மகிழ்ந்திருந்தால்,
26. ஒளி வீசும் கதிரவனைக் கண்ணால் நோக்கி, சுடர் நடுவில் அசையும் நிலவைப் பார்த்து,
27. என் உள்ளம் மறைவிலே மயங்கியிருந்தால், என் வாய் என் கையை முத்தமிட்டிருந்தால்,
28. இதுவும் தண்டனைக்குரிய அக்கிரமமாய் இருந்திருக்கும்; ஏனெனில் அது உன்னத கடவுளை நான் மறுதலித்ததாகும்.
29. என்னைப் பகைத்தவனின் அழிவைக் கண்டு நான் மகிழ்ந்ததுண்டோ? தீமை அவனைத் தாவிப் பிடித்த போது நான் அக்களித்தேனா?
30. சாபனையால் அவன் உயிரை வாங்கும்படி கேட்டு, என் வாய் பாவம் செய்ய நான் விடவேயில்லை;
31. அவன் தரும் புலாலுணவைப் புசியாதவன் உண்டோ?' என்று என் கூடாரத்தில் இருந்தவர்கள் சொல்லாதிருந்தார்களோ?
32. வெளி ஊரான் எவனுமே வீதியில் தங்கியதில்லை, வழிப்போக்கனுக்கு என் கதவுகளைக் திறந்துவிட்டேன்;
33. என் அக்கிரமத்தை என் உள்ளத்திலேயே ஒளித்து வைத்து, என் மீறுதல்களை மனிதரிடமிருந்து நான் மறைத்ததுண்டோ?
34. மக்கள் கூட்டத்திற்கு மிகவும் அஞ்சி, சொந்த இனத்தாரின் இகழ்ச்சிக்கு அஞ்சி மவுனமாயிருந்ததுண்டோ? அல்லது வீட்டுக்குள்ளேயே இருந்ததுண்டோ?
35. ஐயோ! என் வழக்கை யாரேனும் கேட்கும் வரம் எனக்குக் கிடைக்காதா? இதோ இருக்கிறது என் கையொப்பம், எல்லாம் வல்லவர் எனக்கு மறுமொழி கூறட்டும்! என் எதிராளி எனக்கெதிராய்க் கொண்டுள்ள வழக்கை எழுதி என் கையில் கொடுத்தால் நலமாயிருக்குமே!
36. அதனை என் தோள் மீது சுமந்து செல்வேன், மணி முடியாக என் மேல் சுற்றிக் கட்டிக் கொள்வேன்.
37. என் நெறிகளை ஒவ்வொன்றாய் எடுத்துரைப்பேன், ஓர் இளவரசனைப் போல் நான் அவனை அணுகிடுவேன்.
38. எனது நிலம் எனக்கெதிராய்க் கூக்குரலிட்டு அதன் படைசால்கள் ஒன்று கூடி அழுதிருந்தால்,
39. கூலி கொடாமல் அதன் விளைவை நான் உண்டிருந்தால், அதன் உரிமையாளர்களின் சாவுக்கு நான் சதி செய்திருந்தால்,
40. கோதுமைக்குப் பதிலாக முட்கள் வளரட்டும், வாற் கோதுமைக்குப் பதிலாக வேண்டாத களைகள் முளைக்கட்டும்". இத்துடன் யோபுவின் வார்த்தைகள் முடிவுற்றன.

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 42
1 கன்னிப்பெண் எவளையும் நோக்காதிருக்க என் கண்களோடு நான் ஒப்பந்தம் செய்திருக்கிறேன். 2 உன்னதத்திலிருக்கும் கடவுளிடமிருந்து எனக்கு என்ன பங்கு கிடைக்கும்? விண்ணிலிருந்து எல்லாம் வல்லவர் என் உரிமைச் சொத்தாய் எதைத் தருவார்? 3 நேர்மையற்றவர்களுக்கு இடுக்கண் அன்றோ விளைகிறது? அக்கிரமம் செய்வோருக்கு அழிவன்றோ நேருகிறது? 4 என் வழிகளை அவர் பார்க்கிறார் அல்லவா? என் காலடிகளை எல்லாம் கணக்கிடுகின்றாரன்றோ? 5 பொய்ம்மை நெறியில் நான் நடந்திருந்தால், வஞ்சகம் செய்ய என் கால் விரைந்திருந்தால், 6 சமன் செய்து சீர்தூக்கும் கோலில் நான் நிறுக்கப்படுக! அப்போது கடவுள் என் மாசின்மையை அறிவார். 7 நெறியினின்று என் கால் பிறழ்ந்திருந்தால், என் கண்களைப் பின்பற்றி என் உள்ளம் சென்றிருந்தால், என் கைகளில் ஏதேனும் மாசு ஏற்பட்டிருந்தால், 8 நான் விதைப்பதை இன்னொருவன் உண்டு போகட்டும், எனக்கென்று வளர்வது வேரோடு பிடுங்கப்படட்டும்! 9 பிறன் மனைவியைக் கண்டு என்னுள்ளம் மயங்கியிருந்தால், அயலான் வீட்டு வாயிலில் நான் காத்துக் கிடந்திருந்தால், 10 பிறனொருவனுக்கு என் மனைவி மாவரைக்கட்டும், மற்றவர்கள் அவள் தோளை முயங்கட்டும். 11 ஏனெனில் அது பழிச்செயலாகவும், தண்டனைக்குரிய அக்கிரமமாயும் இருந்திருக்கும்; 12 கீழுலகம் வரை சுட்டெரிக்கும் தீயாய் இருந்து, என் விளைச்சல்களையெல்லாம் அது வேரோடு எரித்திருக்கும். 13 என் வேலைக்காரனோ வேலைக்காரியோ என் மேல் வழக்குத் தொடுத்து, அவ்வழக்கை நான் அசட்டை செய்து தள்ளியிருந்தால், 14 கடவுள் தீர்ப்பிட எழுந்து வரும் போது நான் என்ன செய்வேன்? அவர் விசாரணை நடத்தும் போது என்ன பதில் கொடுப்பேன்? 15 என்னைத் தாய் வயிற்றில் உண்டாக்கியவர் தானே அவனையும் உண்டாக்கினார்? தாய் வயிற்றில் எங்களை உருவாக்கியவர் ஒருவரே அன்றோ? 16 ஏழைகள் விரும்பிக் கேட்டதை நான் தராமாற் போயிருந்தால், கைம்பெண்ணின் கண்கள் மங்கிப் போகச் செய்திருந்தால், 17 திக்கற்றவனுக்கு உணவில் பங்கு தராமல், நான் மட்டும் தனியாய் அதை உண்டிருந்தால், 18 (ஏனெனில் சிறுவயது முதல் அவனுக்குத் தந்தையாயிருந்து வளர்த்தேன், தாய் வயிற்றிலிருந்தே அவனை நடத்தி வந்தேன்), 19 ஆடையின்றி எவனாவது அழிவதை நான் கண்டிருந்தால், ஏழையொருவன் போர்வையின்றி இருப்பதைப் பார்த்திருந்தால், 20 ஆடையுடுத்தப் பெற்ற அவன் இடை என்னை வாழ்த்தாதிருந்தால், எனது ஆட்டு மயிராடையால் அவன் குளிர் போக்கப்படாதிருந்தால், 21 ஊர்ச்சபையில் எனக்குச் செல்வாக்கு உண்டெனக் கண்டு, திக்கற்றவர்களுக்கெதிராய் நான் கையோங்கியிருந்தால், 22 என் தோள்பட்டை தோளிலிருந்து விழுந்து போகட்டும், மூட்டினின்று என் கை முறிந்து போகட்டும். 23 ஏனெனில் கடவுள் அனுப்பும் வேதனைக்காக அஞ்சி நடுங்கினேன், அவரது மகிமையின் முன் என்னால் நிற்கவே முடியவில்லையே. 24 பொன்னில் என்னுடைய நம்பிக்கையை வைத்திருந்தால், தங்கம் என் உறுதுணை என்று நம்பியிருந்தால், 25 எனக்குச் செல்வம் மிகுதியாய் இருந்ததாலும், என் கை மிகுதியாய்ச் சேர்த்ததாலும் நான் மகிழ்ந்திருந்தால், 26 ஒளி வீசும் கதிரவனைக் கண்ணால் நோக்கி, சுடர் நடுவில் அசையும் நிலவைப் பார்த்து, 27 என் உள்ளம் மறைவிலே மயங்கியிருந்தால், என் வாய் என் கையை முத்தமிட்டிருந்தால், 28 இதுவும் தண்டனைக்குரிய அக்கிரமமாய் இருந்திருக்கும்; ஏனெனில் அது உன்னத கடவுளை நான் மறுதலித்ததாகும். 29 என்னைப் பகைத்தவனின் அழிவைக் கண்டு நான் மகிழ்ந்ததுண்டோ? தீமை அவனைத் தாவிப் பிடித்த போது நான் அக்களித்தேனா? 30 சாபனையால் அவன் உயிரை வாங்கும்படி கேட்டு, என் வாய் பாவம் செய்ய நான் விடவேயில்லை; 31 அவன் தரும் புலாலுணவைப் புசியாதவன் உண்டோ?' என்று என் கூடாரத்தில் இருந்தவர்கள் சொல்லாதிருந்தார்களோ? 32 வெளி ஊரான் எவனுமே வீதியில் தங்கியதில்லை, வழிப்போக்கனுக்கு என் கதவுகளைக் திறந்துவிட்டேன்; 33 என் அக்கிரமத்தை என் உள்ளத்திலேயே ஒளித்து வைத்து, என் மீறுதல்களை மனிதரிடமிருந்து நான் மறைத்ததுண்டோ? 34 மக்கள் கூட்டத்திற்கு மிகவும் அஞ்சி, சொந்த இனத்தாரின் இகழ்ச்சிக்கு அஞ்சி மவுனமாயிருந்ததுண்டோ? அல்லது வீட்டுக்குள்ளேயே இருந்ததுண்டோ? 35 ஐயோ! என் வழக்கை யாரேனும் கேட்கும் வரம் எனக்குக் கிடைக்காதா? இதோ இருக்கிறது என் கையொப்பம், எல்லாம் வல்லவர் எனக்கு மறுமொழி கூறட்டும்! என் எதிராளி எனக்கெதிராய்க் கொண்டுள்ள வழக்கை எழுதி என் கையில் கொடுத்தால் நலமாயிருக்குமே! 36 அதனை என் தோள் மீது சுமந்து செல்வேன், மணி முடியாக என் மேல் சுற்றிக் கட்டிக் கொள்வேன். 37 என் நெறிகளை ஒவ்வொன்றாய் எடுத்துரைப்பேன், ஓர் இளவரசனைப் போல் நான் அவனை அணுகிடுவேன். 38 எனது நிலம் எனக்கெதிராய்க் கூக்குரலிட்டு அதன் படைசால்கள் ஒன்று கூடி அழுதிருந்தால், 39 கூலி கொடாமல் அதன் விளைவை நான் உண்டிருந்தால், அதன் உரிமையாளர்களின் சாவுக்கு நான் சதி செய்திருந்தால், 40 கோதுமைக்குப் பதிலாக முட்கள் வளரட்டும், வாற் கோதுமைக்குப் பதிலாக வேண்டாத களைகள் முளைக்கட்டும்". இத்துடன் யோபுவின் வார்த்தைகள் முடிவுற்றன.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References