தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யோபு
1. யோபு இன்னும் தொடந்து பேசினார்:
2. முன்னரே கடந்து சென்ற திங்கள்களிலும், கடவுள் என் மேல் அக்கறை வைத்திருந்த நாட்களிலும் நான் இருந்த இன்ப நிலை திரும்பவும் வந்தெய்துமோ?
3. அப்போது அவரது விளக்கு என் தலைக்கு மேல் சுடர் விட்டது, இருளிலும் அவரது ஒளியால் நான் நடந்தேன்.
4. கடவுளின் நட்பு என் கூடாரங்களில் நிலைத்திருந்த அந்த இன்ப நாட்களை இனி நான் காண்பேனா!
5. அப்போது எல்லாம் வல்லவர் என்னோடு இருந்தார், என் குழந்தைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
6. அந்நாட்களில் என் கால்கள் நெய்யில் தோய்ந்திருந்தன, பாறையிலிருந்து எனக்காக எண்ணெய் ஆறாய் வழிந்ததே!
7. ஊர்ச்சபைக்கு நான் போன போதும் பொதுவிடத்தில் என் இருக்கையில் அமரச் சென்றாலும்,
8. இளைஞர்கள் என்னைக் கண்டு வழிபட்டனர், முதியவர்கள் என்னைக் கண்டு எழுந்து நின்றனர்.
9. பெருங்குடி மக்கள் பேசாமல் இருந்தனர், தங்கள் வாயில் கை வைத்து மௌனம் காத்தனர்.
10. பெருமக்கள் தங்கள் குரலையடக்கினர், அவர்களுடைய நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
11. என் புகழைக் கேட்டவன், என்னைப் பேறு பெற்றவன் என்றான், என்னைக் கண்ட கண் மலர்ச்சியுற்றது.
12. ஏனெனில் கூக்குரலிட்ட ஏழையையும் உதவி செய்வாரில்லாத அனாதையையும் நான் காத்தேன்.
13. சாகக் கிடந்தவர்களின் ஆசிமொழி எனக்குக் கிடைத்தது, கைம்பெண்ணின் உள்ளம் மகிழும்படி செய்தேன்.
14. நேர்மையை நான் ஆடையாய் உடுத்தியிருந்தேன், என் நீதி எனக்கு மேலாடையும் தலைப்பாகையுமாய் இருந்தது.
15. குருடனுக்குக் கண்ணாக இருந்தேன், முடவனுக்குக் காலாக இருந்தேன்.
16. ஏழைகளுக்குத் தந்தையாக இருந்தேன், அறிமுகமில்லாதவன் வழக்கையும் தீர ஆராய்ந்தேன்.
17. கொடியவர்களின் கோரைப் பற்களை உடைத்து, பற்களிடையில் அவர்கள் பிடித்திருந்த இரையை விடுவித்தேன்.
18. அந்நாட்களில், 'என் கூடாரத்தில் அமைதியாய் உயிர் துறப்பேன், மணல் மணி போல் என் நாட்கள் மிகுதியாகும்,
19. நீரருகே என் வேர்கள் படர்ந்திருக்கும், இரவெல்லாம் பனி நீர் என் இலைகளில் தங்கும்,
20. என் மகிமை நாளுக்கு நாள் வளரும், என் கையிலுள்ள வில் புது வலிமை பெறும்' என்றெல்லாம் நான் எண்ணியிருந்தேன்.
21. மனிதர் என் பேச்சைக் கேட்கக் காத்திருந்தனர், என் ஆலோசனையைக் கேட்க அமைதியாய் இருந்தனர்.
22. என் பேச்சுக்கு மறுபேச்சு அவர்கள் பேசவில்லை, ஒன்றொன்றாய் என் சொற்கள் அவர்கள் மேல் இறங்கின.
23. மழைக்குக் காத்திருப்பது போல் எனக்காகக் காத்திருந்தனர், பின்மாரியை எதிர்நோக்கி நிலம் வாய் திறப்பது போல் அவர்களும் எனக்காகக் காத்திருந்தனர்.
24. அவர்களைப் பார்த்து நான் புன்முறுவல் பூத்தபோது, 'அத்தகைய பேறு நமக்குக் கிடைத்ததோ' என ஐயுற்றனர், என் முகத் தோற்றத்தின் ஒளியைப் பெற ஏங்கிக் கிடந்தனர்.
25. நானே அவர்களுக்கு வழி காட்டினேன், தலைமை பூண்டேன்; படைகள் நடுவில் அரசன் போலும் அழுகிறவர்களைத் தேற்றுபவன் போலும் நான் வாழ்ந்தேன்.

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 42
1 யோபு இன்னும் தொடந்து பேசினார்: 2 முன்னரே கடந்து சென்ற திங்கள்களிலும், கடவுள் என் மேல் அக்கறை வைத்திருந்த நாட்களிலும் நான் இருந்த இன்ப நிலை திரும்பவும் வந்தெய்துமோ? 3 அப்போது அவரது விளக்கு என் தலைக்கு மேல் சுடர் விட்டது, இருளிலும் அவரது ஒளியால் நான் நடந்தேன். 4 கடவுளின் நட்பு என் கூடாரங்களில் நிலைத்திருந்த அந்த இன்ப நாட்களை இனி நான் காண்பேனா! 5 அப்போது எல்லாம் வல்லவர் என்னோடு இருந்தார், என் குழந்தைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள். 6 அந்நாட்களில் என் கால்கள் நெய்யில் தோய்ந்திருந்தன, பாறையிலிருந்து எனக்காக எண்ணெய் ஆறாய் வழிந்ததே! 7 ஊர்ச்சபைக்கு நான் போன போதும் பொதுவிடத்தில் என் இருக்கையில் அமரச் சென்றாலும், 8 இளைஞர்கள் என்னைக் கண்டு வழிபட்டனர், முதியவர்கள் என்னைக் கண்டு எழுந்து நின்றனர். 9 பெருங்குடி மக்கள் பேசாமல் இருந்தனர், தங்கள் வாயில் கை வைத்து மௌனம் காத்தனர். 10 பெருமக்கள் தங்கள் குரலையடக்கினர், அவர்களுடைய நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. 11 என் புகழைக் கேட்டவன், என்னைப் பேறு பெற்றவன் என்றான், என்னைக் கண்ட கண் மலர்ச்சியுற்றது. 12 ஏனெனில் கூக்குரலிட்ட ஏழையையும் உதவி செய்வாரில்லாத அனாதையையும் நான் காத்தேன். 13 சாகக் கிடந்தவர்களின் ஆசிமொழி எனக்குக் கிடைத்தது, கைம்பெண்ணின் உள்ளம் மகிழும்படி செய்தேன். 14 நேர்மையை நான் ஆடையாய் உடுத்தியிருந்தேன், என் நீதி எனக்கு மேலாடையும் தலைப்பாகையுமாய் இருந்தது. 15 குருடனுக்குக் கண்ணாக இருந்தேன், முடவனுக்குக் காலாக இருந்தேன். 16 ஏழைகளுக்குத் தந்தையாக இருந்தேன், அறிமுகமில்லாதவன் வழக்கையும் தீர ஆராய்ந்தேன். 17 கொடியவர்களின் கோரைப் பற்களை உடைத்து, பற்களிடையில் அவர்கள் பிடித்திருந்த இரையை விடுவித்தேன். 18 அந்நாட்களில், 'என் கூடாரத்தில் அமைதியாய் உயிர் துறப்பேன், மணல் மணி போல் என் நாட்கள் மிகுதியாகும், 19 நீரருகே என் வேர்கள் படர்ந்திருக்கும், இரவெல்லாம் பனி நீர் என் இலைகளில் தங்கும், 20 என் மகிமை நாளுக்கு நாள் வளரும், என் கையிலுள்ள வில் புது வலிமை பெறும்' என்றெல்லாம் நான் எண்ணியிருந்தேன். 21 மனிதர் என் பேச்சைக் கேட்கக் காத்திருந்தனர், என் ஆலோசனையைக் கேட்க அமைதியாய் இருந்தனர். 22 என் பேச்சுக்கு மறுபேச்சு அவர்கள் பேசவில்லை, ஒன்றொன்றாய் என் சொற்கள் அவர்கள் மேல் இறங்கின. 23 மழைக்குக் காத்திருப்பது போல் எனக்காகக் காத்திருந்தனர், பின்மாரியை எதிர்நோக்கி நிலம் வாய் திறப்பது போல் அவர்களும் எனக்காகக் காத்திருந்தனர். 24 அவர்களைப் பார்த்து நான் புன்முறுவல் பூத்தபோது, 'அத்தகைய பேறு நமக்குக் கிடைத்ததோ' என ஐயுற்றனர், என் முகத் தோற்றத்தின் ஒளியைப் பெற ஏங்கிக் கிடந்தனர். 25 நானே அவர்களுக்கு வழி காட்டினேன், தலைமை பூண்டேன்; படைகள் நடுவில் அரசன் போலும் அழுகிறவர்களைத் தேற்றுபவன் போலும் நான் வாழ்ந்தேன்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References