தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
1. பெண் வயிற்றில் பிறந்த மனிதன் சில நாட்களே வாழ்கிறான், அவையும் தொல்லை நிறைந்த நாட்களாய் இருக்கின்றன.
2. அவன் பூவைப் போல் பூத்து வாடிப் போகிறான், நிலையாமல் நிழலைப் போல் ஓடி மறைகிறான்.
3. இப்படிப்பட்டவன் மேல் உம் கண்களைத் திருப்பி, உம்மோடு வழக்காடக் கொண்டு வருகிறீரோ?
4. அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைக் கொண்டுவர யாரால் முடியும்? எவனாலும் முடியாது.
5. மனிதனுக்குரிய நாட்களோ மிகச் சில; அவன் மாதங்களின் கணக்கும் உம்மிடமே உள்ளது; கடந்து போகாமல் அவனுக்கு எல்லைகளும் குறித்தீர்.
6. கூலியாள் நாள் முடிவில் மகிழ்வது போல் அவனும் மகிழும்படி உமது பார்வையை அவனிடமிருந்து அகற்றியருளும்.
7. மரத்தைப் பொருத்த மட்டில் எப்பொழுதும் நம்பிக்கையுண்டு; அது வெட்டுண்டால் மறுபடியும் தளிர்க்கும்; அதனுடைய தளிர்கள் தொடர்ந்து கிளைக்கும்.
8. மரத்தின் வேர்கள் நிலத்தில் பழையதாக ஆயினும், அதன் அடித்தண்டு மண்ணில் அழுகிப் போனாலும்,
9. மழை வாசனை அடித்ததும் அது தளிர்விடும்; இளமரம் போலவே கிளைகளை விடும்.
10. ஆனால் மனிதன் செத்தால் அப்படியே கிடக்கிறான்; கடைசி மூச்சுக்குப் பின் அவன் எங்கே? கடல் தண்ணீர் வடிந்து போகலாம்,
11. ஆறுகளெல்லாம் வறண்டு வற்றிப்போகலாம்,
12. ஆனால் மனிதன் துஞ்சினால், மறுபடி எழுகிறதில்லை; வானம் தேய்ந்து போனாலும் அவன் விழிக்க மாட்டான், அவனது உறக்கத்திலிருந்து எழமாட்டான்.
13. பாதாளத்தில் என்னை மறைக்கமாட்டீரா! உம் சினம் தணியும் வரை என்னை ஒளிக்கமாட்டீரா! குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகாவது என்னை நினைக்கமாட்டீரா!
14. அவ்வரம் கிடைக்குமாயின்- ஆனால் செத்தவன் எங்கே மறுபடி உயிர் பெறுவான்? எனக்கு விடுதலை எப்பொழுது வருமோவென்று என் போராட்ட நாட்களிலெல்லாம் நான் காத்திருப்பேன்.
15. அப்போது, நீர் என்னைக் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன்; உம் கைகளின் படைப்பாகிய என்னை நீர் காணவிழைவீர்.
16. என்னுடைய காலடிகளை இப்போது கணக்குப் பார்க்கின்ற நீர், இனி என் பாவங்களை வேவு பார்க்கமாட்டீர்.
17. என் மீறுதலைப் பையிலிட்டுக் கட்டி முத்திரை போடுவீர், என் அக்கிரமத்தை மூடி மறைப்பீர்.
18. ஆனால், மலை விழுந்து தவிடு பொடியாகிறது, பாறை தன் இடத்தை விட்டுப் பெயர்கிறது.
19. நீரோட்டம் கற்களைத் தேய்த்து விடுகிறது, வெள்ளப் பெருக்கு நிலத்து மண்ணை அடித்துச் செல்கிறது; அவ்வாறே மனிதனின் நம்பிக்கையை நீர் அழித்து விடுகிறீர்.
20. என்றென்றைக்கும் நீரே அவனை மேற்கொள்ளுகிறீர், அவனோ கடந்து போகிறான்; நீர் அவன் தோற்றத்தைக் கெடுத்து விரட்டி விடுகிறீர்.
21. அவன் மக்கள் உயர்வடைந்தாலும் அவன் அறியான்; அவர்கள் தாழ்வுற்றாலும் அவனுக்குத் தெரியவராது.
22. தன் சொந்த உடலின் நோவையே அவன் உணருகிறான், தனக்காக மட்டுமே அவன் புலம்பி அழுகிறான்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 42 Chapters, Current Chapter 14 of Total Chapters 42
யோபு 14:30

×

Alert

×

tamil Letters Keypad References