தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா
1. என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமாய் இருக்கக்கூடாதா! அப்பொழுது என் இனத்தாரில் கொலையுண்ட மக்களுக்காக அல்லும் பகலும் புலம்பி அழுவேனே!
2. வழிப்போக்கர் தங்குமிடத்தைப் போலப் பாலை நிலத்தில் எனக்கோர் இடம் இருக்கக் கூடாதா! அப்பொழுது அவர்களை விட்டகன்று அங்கே போய் விடுவேனே! ஏனெனில் அவர்கள் அனைவரும் விபசாரிகள், துரோகிகளின் கூட்டம்;
3. அவர்களுடைய நாக்கு வில்லைப் போல வளைகிறது, அதில் உண்மை கொஞ்சமும் இல்லை, பொய்யே மலிந்துள்ளது; அவர்கள் ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு முன்னேறுகிறார்கள். நம்மை அவர்கள் அறிந்தார்களல்லர்.
4. ஒவ்வொருவனும் தன் அயலான் மட்டில் எச்சரிக்கையாய் இருக்கட்டும், எவனும் தன் சகோதரனை நம்பக் கூடாது; ஏனெனில் ஒவ்வொரு சகோதரனும் மற்றவனுடைய இடத்தைத் தந்திரமாய்க் கவர்ந்து கொள்கிறான்; ஒவ்வொரு நண்பனும் புறணி பேசுகிறான்.
5. ஒவ்வொருவனும் தன் சகோதரனை ஏமாற்றுகிறான்; எவனும் உண்மை பேசுவது இல்லை; பொய் சொல்வதில் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள்; அக்கிரமம் செய்கின்றனர்; மனம் வருந்தவே மாட்டார்கள்;
6. கொடுமைக்கு மேல் கொடுமையும், வஞ்சனைக்கு மேல் வஞ்சனையும் செய்கிறார்கள்; என்னை அறிந்து கொள்ள மறுக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
7. ஆகையால், சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ நாம் அவர்களை உருக்கிப் புடமிட்டுச் சோதிப்போம்; நம் மக்களுக்கு நாம் என்னதான் செய்ய முடியும்?
8. அவர்களுடைய நாக்கு காயப்படுத்தும் அம்பு; அது பேசுவதெல்லாம் கபடு; வாயால் அயலானுடன் சமாதான மொழிகளைப் பேசுவர்; உள்ளத்திலோ அவனுக்குப் படுகுழி வெட்டுகிறார்கள்.
9. இவற்றுக்கெல்லாம் நாம் அவர்களைத் தண்டியாமல் விடுவோமோ? இத்தகைய மக்கள் மேல் பழிதீர்த்துக் கொள்ளாமல் இருப்போமோ?
10. "மலைகளைக் குறித்து ஒப்பாரி வைத்து அழுவோம்; பாலை நிலத்தில் இருக்கும் செழித்த இடங்களுக்காகப் புலம்புவோம்; ஏனெனில் அவையெல்லாம் பாழாக்கப்பட்டன; இனி அங்கே போகிறவன் எவனுமில்லை; ஆடுமாடுகளின் குரலொலி கேட்கவில்லை; வானத்துப் பறவைகளும், வயல்வெளி மிருகங்களும், எல்லாம் அங்கிருந்து ஓடிப்போயின.
11. யெருசலேமை நாம் மண் மேடாக்குவோம், குள்ள நரிகள் வாழும் குகையாக்கி விடுவோம்; யூதாவின் பட்டணங்களையெல்லாம் குடியிருப்பார் யாருமின்றிப் பாழாக்குவோம்."
12. இதனைக் கண்டுணரத் தக்க ஞானமுள்ளவன் யார்? இதனை அறிவிக்கும்படி யாருக்கு ஆண்டவரின் வாய் பேசியிருக்கிறது? மனிதர் கடக்க முடியாதபடி நாடு பாழாகிப் பாலையானது ஏன்? மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்:
13. நாம் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தை வெறுத்து ஒதுக்கினார்கள்; நமது வாக்கியத்தைக் கேட்டு அதற்கேற்ப நடக்கவில்லை;
14. தங்கள் தீய உள்ளத்தைப் பிடிவாதமாய்ப் பின்பற்றினார்கள். முன்னோர்கள் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தபடி பாகாலைப் பின்தொடர்ந்தார்கள்;
15. ஆகையால் இஸ்ராயலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் இம்மக்களுக்குப் புசிக்கக் கசப்பான புல்லையும், குடிக்க நஞ்சு கலந்த தண்ணீரையும் கொடுப்போம்;
16. அவர்களும் அவர்களுடைய முன்னோர்களும் அறியாத புறவினத்தார்களுக்குள் அவர்களைச் சிதறடிப்போம்; அவர்களை முற்றிலும் அழிக்கவேண்டி அவர்களுக்குப் பின்னாலேயே வாளையும் அனுப்புவோம்."
17. சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "ஒப்பாரி வைக்கும் பெண்களைத் தேடிப் பார்த்து கூப்பிடுங்கள்; அவர்களுள் திறமை வாய்ந்தவர்களை அழையுங்கள்;
18. அவர்கள் விரைந்து வந்து நம்மைப் பற்றிப் புலம்பட்டும்; நம் கண்கள் கண்ணீரைச் சொரியட்டும்; நம் இமைகளினின்று தண்ணீர் வெள்ளமாய் ஓடட்டும்.
19. ஏனெனில் ஏற்கெனவே சீயோனிலிருந்து புலம்பல் கேட்கிறது: ' ஐயோ, நாம் எக்கதியானோம்! எங்கள் மானமெல்லாம் போயிற்றே! நாங்கள் நாட்டை விட்டு அகன்றோம், எங்கள் வீடுகள் தகர்க்கப்பட்டன' என்கிறார்கள்."
20. பெண்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; அவரது வாய்மொழி உங்கள் காதுகளில் நன்றாய் ஏறட்டும்; உங்கள் புதல்வியர்க்கு ஒப்பாரி கற்றுக் கொடுங்கள்; ஒவ்வொருத்தியும் தன் தோழிக்குப் புலம்பல் கற்பிக்கட்டும்.
21. ஏனெனில் சாவு நம் பலகணிகள் வழியாய் ஏறி வந்தது; நம்முடைய அரண்மனைகளுக்குள் நுழைந்து விட்டது; தெருக்களில் உள்ள சிறுவர்களையும் பொது இடங்களில் உள்ள இளைஞர்களையும் வீழ்த்தி விட்டது;
22. (எரெமியாசே), பேசு: "ஆண்டவர் கூறுகிறார்: 'மனிதரின் பிணங்கள் நாடெல்லாம் குப்பை போலக் குவியும், அறுப்புக்காரர் விட்டுச் சென்று எடுப்பாரின்றிக் கிடக்கும் நெற்கதிர்கள் போலக் கிடக்கும்."
23. ஆண்டவர் கூறுகிறார்: "ஞானி தன் ஞானத்தைப் பாராட்ட வேண்டாம்; வல்லவன் தன் வலிமையில் பெருமை கொள்ள வேண்டாம்; செல்வன் தன் செல்வங்களால் செருக்கு அடைய வேண்டாம்.
24. பெருமையடைய விரும்புகிறவன் நம்மையறியும் ஞானத்திலேயே பெருமையடையட்டும்; நிலையான அன்பும் நீதியும் நியாயமும் காட்டுகிற ஆண்டவர் நாமே என்பதில் அவன் பெருமிதம் கொள்ளட்டும்; ஏனெனில், இவற்றில் நாம் இன்பம் காண்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
25. விருத்தசேதனம்: நிலையற்ற உத்தரவாதம்: "இதோ நாட்கள் வருகின்றன; அப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டும் செய்யப் படாதவர்களாய் இருப்பவர் எல்லாரையும் தண்டிப்போம்;
26. எகிப்து, யூதேயா, இதுமேயா முதலிய நாடுகளையும், அம்மோன், மோவாபு மக்களையும், தங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டிக் கொள்கிறவர்களும், பாலை நிலத்தில் வாழ்கிறவர்களுமான எல்லாரையும் தண்டிப்போம்; ஏனெனில் இந்த இனத்தவரெல்லாரும் உடலில் விருத்தசேதனம் செய்யப்படவில்லை; ஆனால் இஸ்ராயேல் வீட்டார் அனைவரும் உள்ளத்திலே விருத்தசேதனம் இல்லாதவர்கள்."
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 52
1 என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமாய் இருக்கக்கூடாதா! அப்பொழுது என் இனத்தாரில் கொலையுண்ட மக்களுக்காக அல்லும் பகலும் புலம்பி அழுவேனே! 2 வழிப்போக்கர் தங்குமிடத்தைப் போலப் பாலை நிலத்தில் எனக்கோர் இடம் இருக்கக் கூடாதா! அப்பொழுது அவர்களை விட்டகன்று அங்கே போய் விடுவேனே! ஏனெனில் அவர்கள் அனைவரும் விபசாரிகள், துரோகிகளின் கூட்டம்; 3 அவர்களுடைய நாக்கு வில்லைப் போல வளைகிறது, அதில் உண்மை கொஞ்சமும் இல்லை, பொய்யே மலிந்துள்ளது; அவர்கள் ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்கு முன்னேறுகிறார்கள். நம்மை அவர்கள் அறிந்தார்களல்லர். 4 ஒவ்வொருவனும் தன் அயலான் மட்டில் எச்சரிக்கையாய் இருக்கட்டும், எவனும் தன் சகோதரனை நம்பக் கூடாது; ஏனெனில் ஒவ்வொரு சகோதரனும் மற்றவனுடைய இடத்தைத் தந்திரமாய்க் கவர்ந்து கொள்கிறான்; ஒவ்வொரு நண்பனும் புறணி பேசுகிறான். 5 ஒவ்வொருவனும் தன் சகோதரனை ஏமாற்றுகிறான்; எவனும் உண்மை பேசுவது இல்லை; பொய் சொல்வதில் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள்; அக்கிரமம் செய்கின்றனர்; மனம் வருந்தவே மாட்டார்கள்; 6 கொடுமைக்கு மேல் கொடுமையும், வஞ்சனைக்கு மேல் வஞ்சனையும் செய்கிறார்கள்; என்னை அறிந்து கொள்ள மறுக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர். 7 ஆகையால், சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ நாம் அவர்களை உருக்கிப் புடமிட்டுச் சோதிப்போம்; நம் மக்களுக்கு நாம் என்னதான் செய்ய முடியும்? 8 அவர்களுடைய நாக்கு காயப்படுத்தும் அம்பு; அது பேசுவதெல்லாம் கபடு; வாயால் அயலானுடன் சமாதான மொழிகளைப் பேசுவர்; உள்ளத்திலோ அவனுக்குப் படுகுழி வெட்டுகிறார்கள். 9 இவற்றுக்கெல்லாம் நாம் அவர்களைத் தண்டியாமல் விடுவோமோ? இத்தகைய மக்கள் மேல் பழிதீர்த்துக் கொள்ளாமல் இருப்போமோ? 10 "மலைகளைக் குறித்து ஒப்பாரி வைத்து அழுவோம்; பாலை நிலத்தில் இருக்கும் செழித்த இடங்களுக்காகப் புலம்புவோம்; ஏனெனில் அவையெல்லாம் பாழாக்கப்பட்டன; இனி அங்கே போகிறவன் எவனுமில்லை; ஆடுமாடுகளின் குரலொலி கேட்கவில்லை; வானத்துப் பறவைகளும், வயல்வெளி மிருகங்களும், எல்லாம் அங்கிருந்து ஓடிப்போயின. 11 யெருசலேமை நாம் மண் மேடாக்குவோம், குள்ள நரிகள் வாழும் குகையாக்கி விடுவோம்; யூதாவின் பட்டணங்களையெல்லாம் குடியிருப்பார் யாருமின்றிப் பாழாக்குவோம்." 12 இதனைக் கண்டுணரத் தக்க ஞானமுள்ளவன் யார்? இதனை அறிவிக்கும்படி யாருக்கு ஆண்டவரின் வாய் பேசியிருக்கிறது? மனிதர் கடக்க முடியாதபடி நாடு பாழாகிப் பாலையானது ஏன்? மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்: 13 நாம் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தை வெறுத்து ஒதுக்கினார்கள்; நமது வாக்கியத்தைக் கேட்டு அதற்கேற்ப நடக்கவில்லை; 14 தங்கள் தீய உள்ளத்தைப் பிடிவாதமாய்ப் பின்பற்றினார்கள். முன்னோர்கள் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தபடி பாகாலைப் பின்தொடர்ந்தார்கள்; 15 ஆகையால் இஸ்ராயலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் இம்மக்களுக்குப் புசிக்கக் கசப்பான புல்லையும், குடிக்க நஞ்சு கலந்த தண்ணீரையும் கொடுப்போம்; 16 அவர்களும் அவர்களுடைய முன்னோர்களும் அறியாத புறவினத்தார்களுக்குள் அவர்களைச் சிதறடிப்போம்; அவர்களை முற்றிலும் அழிக்கவேண்டி அவர்களுக்குப் பின்னாலேயே வாளையும் அனுப்புவோம்." 17 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "ஒப்பாரி வைக்கும் பெண்களைத் தேடிப் பார்த்து கூப்பிடுங்கள்; அவர்களுள் திறமை வாய்ந்தவர்களை அழையுங்கள்; 18 அவர்கள் விரைந்து வந்து நம்மைப் பற்றிப் புலம்பட்டும்; நம் கண்கள் கண்ணீரைச் சொரியட்டும்; நம் இமைகளினின்று தண்ணீர் வெள்ளமாய் ஓடட்டும். 19 ஏனெனில் ஏற்கெனவே சீயோனிலிருந்து புலம்பல் கேட்கிறது: ' ஐயோ, நாம் எக்கதியானோம்! எங்கள் மானமெல்லாம் போயிற்றே! நாங்கள் நாட்டை விட்டு அகன்றோம், எங்கள் வீடுகள் தகர்க்கப்பட்டன' என்கிறார்கள்." 20 பெண்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; அவரது வாய்மொழி உங்கள் காதுகளில் நன்றாய் ஏறட்டும்; உங்கள் புதல்வியர்க்கு ஒப்பாரி கற்றுக் கொடுங்கள்; ஒவ்வொருத்தியும் தன் தோழிக்குப் புலம்பல் கற்பிக்கட்டும். 21 ஏனெனில் சாவு நம் பலகணிகள் வழியாய் ஏறி வந்தது; நம்முடைய அரண்மனைகளுக்குள் நுழைந்து விட்டது; தெருக்களில் உள்ள சிறுவர்களையும் பொது இடங்களில் உள்ள இளைஞர்களையும் வீழ்த்தி விட்டது; 22 (எரெமியாசே), பேசு: "ஆண்டவர் கூறுகிறார்: 'மனிதரின் பிணங்கள் நாடெல்லாம் குப்பை போலக் குவியும், அறுப்புக்காரர் விட்டுச் சென்று எடுப்பாரின்றிக் கிடக்கும் நெற்கதிர்கள் போலக் கிடக்கும்." 23 ஆண்டவர் கூறுகிறார்: "ஞானி தன் ஞானத்தைப் பாராட்ட வேண்டாம்; வல்லவன் தன் வலிமையில் பெருமை கொள்ள வேண்டாம்; செல்வன் தன் செல்வங்களால் செருக்கு அடைய வேண்டாம். 24 பெருமையடைய விரும்புகிறவன் நம்மையறியும் ஞானத்திலேயே பெருமையடையட்டும்; நிலையான அன்பும் நீதியும் நியாயமும் காட்டுகிற ஆண்டவர் நாமே என்பதில் அவன் பெருமிதம் கொள்ளட்டும்; ஏனெனில், இவற்றில் நாம் இன்பம் காண்கிறோம், என்கிறார் ஆண்டவர்." 25 விருத்தசேதனம்: நிலையற்ற உத்தரவாதம்: "இதோ நாட்கள் வருகின்றன; அப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டும் செய்யப் படாதவர்களாய் இருப்பவர் எல்லாரையும் தண்டிப்போம்; 26 எகிப்து, யூதேயா, இதுமேயா முதலிய நாடுகளையும், அம்மோன், மோவாபு மக்களையும், தங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டிக் கொள்கிறவர்களும், பாலை நிலத்தில் வாழ்கிறவர்களுமான எல்லாரையும் தண்டிப்போம்; ஏனெனில் இந்த இனத்தவரெல்லாரும் உடலில் விருத்தசேதனம் செய்யப்படவில்லை; ஆனால் இஸ்ராயேல் வீட்டார் அனைவரும் உள்ளத்திலே விருத்தசேதனம் இல்லாதவர்கள்."
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 52
×

Alert

×

Tamil Letters Keypad References