தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. ஆண்டவர் கூறுகிறார்: அக்காலத்தில் யூதாவின் மன்னர்களுடைய எலும்புகளும், அர்ச்சகர்களுடைய எலும்புகளும், இறைவாக்கினர்களின் எலும்புகளும், யெருசலேமில் வசித்தவர்களின் எலும்புகளும் கல்லறைகளினின்று வெளியே எறியப்படும்;
2. தாங்கள் நேசித்து, சேவித்துப் பின்பற்றி, அறிவுரை தேடி வணங்கிய சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் முன்னிலையில் அவர்களுடைய எலும்புகள் எறியப்பட்டு உலரும்; யாரும் அவற்றைச் சேர்த்துத் திரும்பப் புதைக்க மாட்டார்கள்; அவை தரையில் குப்பை போலக் கிடக்கும்.
3. மிகவும் தீயதான இந்தத் தலைமுறையில் எஞ்சியிருப்பவர்கள், மனிதர் நடமாட்டமில்லாத ஒதுக்கிடங்களில் நம்மால் தள்ளப்பட்டுக் கிடக்கும் போது, வாழ்வை விடச் சாவே மேல் என்று நினைப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
4. "நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவர் கூறுகிறார்: இடறி விழுந்தவன் திரும்ப எழுந்திருக்கிறதில்லையா? வழி தப்பினவன் திரும்ப ஊர் வந்து சேர்வதில்லையா?
5. ஏன் இந்த யெருசலேம் மக்கள் மட்டும் இவ்வாறு அருவருப்போடு நம்மை விட்டு அகன்று நிற்கின்றனர்? பொய்யைக் கடைபிடித்தார்கள்; ஆதலால், நம்மிடம் திரும்பி வர அவர்களுக்கு விருப்பமில்லை.
6. நான் உற்று நோக்கினேன், கவனித்துக் கேட்டேன்; நன்றாய்ப் பேசுபவர் ஒருவருமில்லை; 'நான் என்ன செய்தேன்?' என்று சொல்லுகிறார்களேயன்றி, தன் குற்றத்திற்காக மனம் வருந்துபவர் யாருமில்லை; போர்க்களத்தில் தலைதெறிக்க ஓடும் குதிரையைப் போலத் தங்கள் பாவ நெறியையே பின்பற்றுகிறார்கள்.
7. வானத்தில் உள்ள கொக்கு தன் நேரத்தை அறிகிறது; புறாவும் தகைவிலானும் நாரையும் தங்கள் வருகையின் காலத்தை அறிந்துள்ளன; ஆனால் நம் மக்கள் ஆண்டவரின் நீதியை உணரவில்லையே!
8. "நாங்கள் ஞானிகள்; ஆண்டவரின் திருச்சட்டம் எங்களோடு இருக்கிறது என்று நீங்கள் எவ்வாறு சொல்லத் துணிகிறீர்கள்? மறை நூல் அறிஞர்களின் போலி எழுத்தாணி பொய்களை அல்லவா எழுதிற்று?
9. ஞானிகள் வெட்கி வெருண்டு போவார்கள்; திகைப்புக்குள்ளாகி அகப்படுவார்கள்; ஏனெனில் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்; அவர்களுக்கு ஞானமென்பது கொஞ்சமுமில்லை.
10. "ஆதலால் நாம் அவர்களுடைய மனைவியரை அந்நியர்க்குக் கையளிப்போம்; அவர்களுடைய கழனிகளை வேற்றினத்தார்க்கு உரிமையாகக் கொடுப்போம்; ஏனெனில், சிறுவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் அநியாயமாய்ச் செல்வம் சேர்க்க அலைகிறார்கள்; தீர்க்கதரிசி முதல் அர்ச்சகர் வரை அனைவரும் மோசஞ் செய்வதே அலுவலாய் இருக்கிறார்கள்.
11. சமாதானம் என்பதே இல்லாத போது, சமாதானம், சமாதானம் என்று சொல்லி, நம் மக்களின் காயத்தை மேலோட்டமாய் நலமாக்கி விட்டனர்.
12. அருவருப்பானதைச் செய்யும் போது அவர்கள் வெட்கி நாணினார்களா? இல்லவே இல்லை; அவர்கள் வெட்கி நாணவில்லை; வெட்கம் என்பதே அவர்களுக்கு என்னவென்று தெரியாது; ஆகையால் மடிகிறவர்களோடு விழுந்து மடிவார்கள்; அவர்களை நாம் தண்டிக்கும் காலத்தில் அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.
13. "ஆண்டவர் கூறுகிறார்: நாம் அவர்களை ஒருமிக்கச் சேர்க்கும் போது, திராட்சைக் கொடிகளில் பழங்கள் இருக்கமாட்டா; அத்தி மரங்களில் கனிகள் கிடைக்கமாட்டா; இலைகள் உதிர்ந்து போம்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவை, அவர்கள் கையிலிருந்து நழுவிப் போய்விடும்."
14. அவர்கள்: "நாம் இங்கு உட்கார்ந்திருப்பானேன்? வாருங்கள், கோட்டைகள் அமைந்த நகருக்குப் போவோம்; அங்கு நாம் அழிந்து போவோம்; ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை அழியும்படி விட்டார், நஞ்சு கலந்த நீரைக் குடிக்கத் தந்தார்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக நாம் பாவம் செய்தோம்.
15. நாம் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம்; அதனால் நன்மையொன்றும் விளையவில்லை; நலம் வரும் என்று காத்திருந்தோம்; பதிலுக்குக் திகிலே வந்து நேருகின்றது" என்கிறார்கள்.
16. அதற்கு ஆண்டவர் கூறுகிறார்: "தாண் நகர்ப் பக்கத்திலிருந்து குதிரைகளின் கனைப்பு கேட்கின்றது; போர்க் குதிரைகளின் பேரொலியால் நாடெல்லாம் நடுங்குகின்றது; அவர்கள் வந்து, நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும், நகரத்தையும் அதன் குடிகளையும் விழுங்குவார்கள்.
17. இதோ, உங்களுக்கு எதிராய்ப் பாம்புகளையும் நாகங்களையும் அனுப்புவோம்; அவை எவ்வகை மந்திரத்துக்கும் தந்திரத்துக்கும் மயங்கா; உங்களைக் கண்டிப்பாய்க் கடிக்கும்."
18. உன் துயரத்திற்கு மேற்பட்ட துயரமுண்டோ? என் மனம் மெலிந்து வாடுகின்றதே.
19. எனது இனத்தாரின் அழுகையும் கூக்குரலும் நாட்டின் ஒரு முனை முதல் மறு முனை வரை கேட்கின்றதே! "சீயோனில் ஆண்டவர் இல்லையோ? அங்கே அதன் அரசன் இல்லையோ?" "செதுக்கிய படிமங்களாலும் அந்நிய சிலைகளாலும் நமக்கு அவர்கள் கோபமூட்டியது ஏன்?"
20. அறுவடைக் காலம் முடிந்தது; முதுவேனிற் காலமும் கடந்தது; நாம் இன்னும் விடுதலையடையவில்லை."
21. என் இனத்தாரின் காயத்துக்காக என் இதயம் காயப்பட்டது; நானோ அழுகிறேன்; திகிலுக்கு ஆளாகிறேன்.
22. கலாயாத் நாட்டில் அதற்குத் தைலம் இல்லையோ? அங்கே மருத்துவன் இல்லையோ? பின்னர், என் இனத்தார்க்கு உடல் நலம் ஏன் தரப்படவில்லை?

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 8 of Total Chapters 52
எரேமியா 8:55

×

Alert

×

tamil Letters Keypad References