தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. பென்யமீன் மக்களே, யெருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்; தேக்குவாவில் எக்காளம் ஊதுங்கள்; பெத்தகாரமில் கொடியேற்றுங்கள்; ஏனெனில் வடக்கிலிருந்து பெருந் தீமையும் அழிவும் எழும்பி வருகின்றன.
2. அழகியும் செல்வமாய் வளர்ந்தவளுமான சீயோன் மகளை அழிக்கப் போகிறோம்.
3. ஆயர்கள் தங்கள் ஆடுகளோடு அவளுக்கு எதிராய் வருவார்கள்; அவளைச் சுற்றிலும் தங்கள் கூடாரங்களை அடிப்பார்கள்; தத்தம் இடத்தில் ஆடுகளை மேய்ப்பார்கள்.
4. அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்; எழுந்திருங்கள், பட்டப் பகலிலேயே தாக்குவோம்!" "நமக்கு ஐயோ கேடு! பொழுது சாய்ந்தது, மாலை நேரத்து நிழல் நீண்டு வளர்கின்றதே!"
5. எழுந்திருங்கள், இரவில் மதில்களில் ஏறுவோம், அவளுடைய அரண்மனைகளை அழித்திடுவோம்!"
6. ஏனெனில் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "அதன் மரங்களை வெட்டுங்கள்; யெருசலேமைச் சுற்றிக் கொத்தளம் எழுப்புங்கள்; அது தண்டிக்கப்பட வேண்டிய பட்டணம்; அதனுள் காணப்படுவது கொடுமை தவிர வேறில்லை.
7. மணற்கேணி தண்ணீரைச் சுரந்து கொண்டிருப்பது போல், அந்நகரம் தன்னிடம் தீமையைச் சுரந்து கொண்டிருக்கின்றது; அதில் அக்கிரமும் அழிவும் நிரம்ப உள்ளன; நோயும் காயங்களும் எப்பொழுதும் என் கண்முன் உள்ளன.
8. யெருசலேமே, எச்சரிக்கையாய் நடந்துகொள்; இல்லையேல், நாம் உன்னை விட்டு அகன்று போவோம்; உன்னைப் பாழாக்கி மனிதர் வாழா இடமாக்குவோம்."
9. சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "திராட்சைக் கொடியில் தப்புப் பழம் தேடிப் பறிப்பதைப் போல், இஸ்ராயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச் சேர்."
10. ஆதலால் நான் யாரிடம் பேசுவேன்? எனக்கு காது கொடுக்கும்படி யாருக்கு எச்சரிக்கை தருவேன்? இதோ, அவர்கள் செவிகள் பரிசுத்தமாக்கப் படவில்லை; அவர்களோ செவிடர்களாய் இருக்கிறார்கள். இதோ, ஆண்டவரின் வாக்கியத்தை நிந்தித்தார்கள்; அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
11. ஆகையால் ஆண்டவரின் கோபத்தால் நான் நிறைந்துள்ளேன், அதை அடக்கி அடக்கிச் சோர்ந்து போனேன். "தெருவில் இருக்கும் சிறுவர்கள் மேலும், இளைஞர்கள் கூடியுள்ள கூட்டங்கள் மேலும், அந்தக் கோபத்தைக் கொட்டு; கணவனும் மனைவியும் பிடிபடுவார்கள்; முதியோரும் வயது சென்றவர்களும் அகப்படுவார்கள்.
12. அவர்களுடைய வீடுகளும் நிலங்களும் மனைவியரும் அந்நியர்கள் கைப்பற்ற விடப்படுவர்; ஏனெனில், நாட்டு மக்கள் மேல் நம் கையை நீட்டப் போகிறோம்." என்கிறார் ஆண்டவர்.
13. சிறுவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் அநியாயமாய்ச் செல்வம் சேர்க்க அலைகிறார்கள்; தீர்க்கதரிசி முதல் அர்ச்சகர் வரையில் அனைவரும் மோசஞ் செய்வதே அலுவலாய் இருக்கிறார்கள். சமாதானம் என்பதே இல்லாத போது,
14. சமாதானம், சமாதானம்' என்று சொல்லி நம் மக்களின் காயத்தை மேலோட்டமாய் நலமாக்கி விட்டனர்.
15. அருவருப்பானதைச் செய்யும் போது அவர்கள் வெட்கி நாணினார்களா இல்லவே இல்லை; அவர்கள் வெட்கி நாணவில்லை. வெட்கம் என்பதே அவர்களுக்கு என்னவென்று தெரியாது, ஆகையால் மடிகிறவர்களோடு விழுந்து மடிவார்கள், அவர்களை நாம் தண்டிக்கும் காலத்தில் அவர்கள் வீழ்த்தப்படுவர்" என்கிறார் ஆண்டவர்.
16. ஆண்டவர் கூறுகிறார்: "வழிகளில் நின்று பாருங்கள், உங்கள் பழைய நெறிகள் எவை, எது நல்ல வழி என்று கேட்டு, அதில் செல்லுங்கள். அப்போது உங்கள் உள்ளத்திற்கு ஓய்வு கிடைக்கும். அவர்களோ, ' அவ்வழியே செல்ல மாட்டோம் ' என்கிறார்கள்.
17. நாம் உங்களுக்குக் காவலாளரை ஏற்படுத்தியிருக்கிறோம்; 'எக்காளம் ஊதுவதைக் கேட்கத் தயாராயிருங்கள் ' என்று சொல்ல, அவர்கள், 'நாங்கள் கேட்கமாட்டோம்' என்றார்கள்.
18. ஆகையால் மக்களே, மக்கள் கூட்டமே, அவர்களுக்கு என்ன நேரப் போகிறதெனப் பாருங்கள்.
19. பூமியே, நீயும் கவனி; இம்மக்கள் மேல் அவர்களுடைய தீய எண்ணங்களின் பயனான தீமைகளை இதோ பொழியப் போகிறோம்; ஏனெனில் அவர்கள் நம் வார்த்தைகளைப் பொருட்படுத்த வில்லை. நமது சட்டத்தைப் புறக்கணித்துத் தள்ளி விட்டார்கள்.
20. நீங்கள் சாபா நாட்டுத் தூபத்தையும், நறுமண நாணலையும் நமக்கு அர்ப்பணம் செய்வானேன்? உங்கள் தகனப் பலிகள் நமக்கேற்கவில்லை, உங்கள் மிருகப் பலிகளும் நமக்கு உகந்தவையல்ல.
21. ஆகவே ஆண்டவர் கூறுகிறார்: 'இதோ இம்மக்கள் முன் இடறு கற்களை வைத்து இடறச் செய்வோம், அவற்றின் நடுவில் பெற்றோரும் பின்ளைகளும், அயலானும் நண்பனும் ஒருமிக்க மடிவார்கள்."
22. ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: இதோ, வடக்கிலிருந்து ஒரு மக்களினம் வரும், பூமியின் கடைசி எல்லையிலிருந்து ஒரு மக்கட் கூட்டம் எழும்பி வரும்.
23. அம்பும் கேடயமும் அவர்களுக்குப் படைக்கலங்கள், அவர்கள் இரக்கமற்ற கொடிய மக்கள்; அவர்களின் இரைச்சல் கடலின் இரைச்சலைப் போன்றது. சீயோன் மகளே, அவர்கள் குதிரைகள் மேல் ஏறி உனக்கெதிராய்ப் போருக்கு வருகின்றார்கள்.
24. அவர்கள் வரும் செய்தியை நாம் அறிந்த அளவில் நம் கைகள் விலவிலத்துப் போயின. துயரமும் கர்ப்பவதியின் வேதனையும் நம்மைச் சூழ்ந்து கொண்டன.
25. நீங்கள் கழனிகளைப் பார்க்கப் போக வேண்டாம், வழிகளிலும் செல்லாதீர்கள். ஏனெனில் எப்பக்கத்திலும் எதிரியின் வாள் தயாராயிருக்கிறது; சுற்றிலும் திகில் உலாவுகின்றது.
26. என் மக்களே, மயிராடையை அணிந்து கொள்ளுங்கள்; சாம்பலில் புரண்டு வருந்துங்கள்; இறந்த ஒரே மகனுக்காக அழுவது போலப் புலம்பி அழுங்கள். ஏனெனில் கொலைஞன் திடீரென வந்து நம்மைச் சூழ்ந்து கொள்வான்.
27. (எரெமியாசே), நாம் உன்னை நம் மக்களில் பலசாலியாகவும் பரிசோதிப்பவனாகவும் ஏற்படுத்தியிருக்கின்றோம்; நீ அஞ்சாது நன்றாகப் பார்த்து அறிவாய், அவர்களுடைய நெறியை ஆராயக்கடவாய்.
28. தலைவர்கள் எல்லாரும் முரட்டுத்தனமுள்ள கலகக்காரர்கள்; அவர்களுடைய மனம் செம்பையும் இரும்பையும் போன்றது. அவர்கள் எல்லாரும் கெட்ட வழியில் நடக்கிறார்கள்.
29. துருத்திகள் இடைவிடாது ஊதுகின்றனர்; காரீயம் நெருப்பினால் முற்றிலும் உருகிற்று. தூய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பது வீண். ஏனெனில் தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
30. தள்ளுபடியான வெள்ளி என்று அவர்களைச் சொல்லுங்கள்; ஏனெனில் ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்தார்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 6 of Total Chapters 52
எரேமியா 6:27

×

Alert

×

tamil Letters Keypad References