தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. யூதாவின் அரசனாகிய செதேசியாசின் ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரும், அவனுடைய எல்லாப் படைகளும் யெருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டார்கள்;
2. செதேசியாசின் பதினோராம் ஆண்டின் நான்காம் மாதத்தில் ஐந்தாம் நாள் பட்டணத்தின் கோட்டைக் கதவு உடைப்பட்டது;
3. பபிலோனிய அரசனின் தலைவர்கள் அனைவரும் உள்ளே நுழைந்து, நடுவாயிலின் அருகில் உட்கார்ந்தார்கள்; நெரேகல், செரேசெர், கெமேகார்னாயு, சார்சக்கீம், இரப்சாரேஸ், நெரேகேல், செரேசெர், இரெப்மாகு என்பவர்களும், இன்னும் பபிலோனிய அரசனின் படைத்தலைவர்கள் எல்லாரும் அங்கே உட்கார்ந்தார்கள்.
4. யூதாவின் அரசனான செதேசியாசும், அவனுடைய போர்வீரர் அனைவரும் அவர்களைக் கண்டு ஓட்டம் பிடித்தார்கள்; அவர்கள் அரசனுடைய தோட்டத்திற்குப் போகும் வழியாய் இரண்டு சுவர்களுக்கு இடையிலிருக்கும் கதவைத் திறந்து கொண்டு இரவோடு இரவாய்ப் பட்டணத்தை விட்டு வெளியேறிப் பாலை நிலத்தை நோக்கி ஓடினார்கள்.
5. கல்தேயருடைய படை அவர்களைப் பின் தொடர்ந்து போய் யெரிக்கோ சமவெளியில் செதேசியாசைப் பிடித்தார்கள்; எமாத்து நாட்டின் இரபிளாத்தா என்னும் ஊரில் பாளையமிறங்கியிருந்த பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரிடம் அவனைக் கொண்டு வந்தார்கள்: அரசன் அவனுக்கு விரோதமாய்த் தீர்ப்புச் சொன்னான்.
6. பபிலோனிய மன்னன் செதேசியாசின் இரண்டு பிள்ளைகளையும் இராபிளாத்தாவுக்குக் கொண்டு வந்து அவர்களுடைய தந்தையின் முன்னால் அவர்களைக் கொலை செய்தான்; மேலும் பபிலோனிய அரசன் யூதாவின் பெருங்குடிமக்கள் அனைவரையும் கொன்றான்.
7. பிறகு செதேசியாசின் கண்களைப் பிடுங்கி, அவனுக்கு விலங்குகளை மாட்டி அவனைப் பபிலோனுக்கு அனுப்பினான்.
8. அரசனுடைய அரண்மனையையும் குடிமக்களின் வீடுகளையும் கல்தேயர் தீ வைத்துக் கொளுத்தி, யெருசலேமின் மதில்களைத் தகர்த்து விட்டார்கள்.
9. சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் இன்னும் பட்டணத்தில் எஞ்சியிருந்த மக்களையும், தன்னிடம் சரணடைந்தவர்களையும், மீதியாயிருந்த பொதுமக்களையும் பபிலோனுக்குக் கொண்டு போனான்.
10. ஆனால் சேனைத் தலைவனான நபுஜார்தான் என்பவன் ஏதுமற்ற ஏழை மக்கள் சிலரை யூதா நாட்டிலேயே விட்டு வைத்து, அவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்துச் சென்றான்.
11. பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் எரெமியாசை குறித்துச் சேனைத் தலைவன் நபுஜார்தானுக்குக் கொடுத்த கட்டளை இதுவே:
12. நீ அவனை வருவித்துக் கண்காணித்துக் கொள். அவனுக்குத் தீங்கொன்றும் நீ செய்யக்கூடாது; ஆனால் அவன் விரும்பவுது போலவே அவனை நடத்து" என்றான்.
13. சேனைத் தலைவன் நபுஜார்தான் அவ்வாறே செய்தான்; அவனும் அவனோடிருந்த நபுஜேஸ்பான் என்னும் உயர் அதிகாரியும், நெரேகஸ்- செரேசெர் என்னும் முக்கிய அதிகாரியும், இன்னும் பபிலோனிய அரசனின் மற்ற தலைவர்கள் யாவரும் ஆளனுப்பி,
14. எரெமியாசைச் சிறைக் கூடத்தின் முற்றத்திலிருந்து விடுதலை செய்து, வீட்டுக்குக் கொண்டு போகும்படி சாவான் மகனாகிய அயிக்காமின் மகன் கொதோலியாசின் பொறுப்பில் அவரை அனுப்பினார்கள்; அவரும் மக்கள் நடுவில் வாழ்ந்து வந்தார்.
15. இனி எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்தில் இருக்கும் போதே, ஆண்டவருடைய வாக்கு அவருக்கு அருளப்பட்டிருந்தது:
16. நீ போய் எத்தியோப்பியனான அப்தேமேலேக்கை நோக்கி, ' இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, இந்த நகரத்திற்கு விரோதமாக நம் வார்த்தைகளை நிறைவேற்றுவோம்; நன்மையை அல்ல, தீமையையே நிறைவேற்றுவோம்; அந்நாளில் நீ இவற்றைக் காண்பாய்.
17. ஆனால் அந்நாளில் நாம் உன்னை மீட்போம்; நீ அஞ்சும் அந்த மனிதர்கள் கையில் உன்னை விட்டுவிட மாட்டோம், என்கிறார் ஆண்டவர்;
18. ஏனெனில் நாம் உன்னைத் திண்ணமாய்க் காப்பாற்றுவோம்; நீ வாளால் மடியமாட்டாய்; உன் உயிர் நலமாய் இருக்கும்; ஏனெனில் நம்மில் நம்பிக்கை வைத்திருந்தாய், என்கிறார் ஆண்டவர்' என்று அவனுக்குச் சொல்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 39 of Total Chapters 52
எரேமியா 39:42

×

Alert

×

tamil Letters Keypad References