தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்த யோசியாசின் மகன் செதேசியாஸ், யோவாக்கீமுடைய மகன் யேக்கோனியாசுக்குப் பதிலாய் அரசாளத் தொடங்கினான்.
2. ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினரின் வாயிலாக அறிவித்த வார்த்தைகளை அவனோ அவனுடைய ஊழியர்களோ நாட்டு மக்களோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
3. செதேசியாஸ் அரசன் செலேமியாஸ் மகன் யூக்காலையும், மவாசியாஸ் மகன் சோப்போனியாஸ் என்னும் அர்ச்சகரையும் எரெமியாஸ் இறைவாக்கினரிடம் அனுப்பி, "நம் கடவுளாகிய ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்" என்று கேட்டுக் கொண்டான்.
4. அந்நாட்களில் எரெமியாஸ் உரிமையாய் மக்கள் நடுவில் நடமாடிக் கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை;
5. (4b) அப்போது பார்வோரின் படை எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தது; யெருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு யெருசலேமை விட்டகன்றார்கள்.
6. (5) அப்பொழுது ஆண்டவருடைய வாக்கு எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளப்பட்டது:
7. (6) இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் ஆலோசனை கேட்க உங்களை அனுப்பின யூதாவின் அரசனிடம் போய் இவ்வாறு சொல்லுங்கள்: 'இதோ உங்களுக்கு உதவியாக வந்த பார்வோனின் படை தன் சொந்த நாடாகிய எகிப்துக்குத் திரும்பிப் போகும்;
8. (7) கல்தேயர் திரும்பி வந்து இப்பட்டணத்திற்கு விரோதமாய்ப் போர் புரிந்து, அதனைக் கைப்பற்றி நெருப்பினால் எரிப்பார்கள்.
9. (8) ஆண்டவர் இன்னும் கூறுகிறார்: "கல்தேயர் திண்ணமாய் நம்மை விட்டகலுவார்கள்" என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்; அவர்கள் போகமாட்டார்கள்.
10. (9) உங்களுக்கு எதிராய்ப் போர்புரியும் கல்தேயரின் படையை முற்றிலும் நீங்கள் தோற்கடித்தாலும், அவர்களுள் காயம்பட்டவர்கள் சிலேரேனும் இருப்பார்களாகில், அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் கூடாரத்தை விட்டு வெளியேறி இப்பட்டணத்தை நெருப்பினால் சுட்டெரிப்பான்."
11. (10) அப்படியிருக்கும் போது, பார்வோன் படை நெருங்கி வந்த செய்தியைக் கேட்டுக் கல்தேயர் படைகள் யெருசலேமை விட்டகன்ற பின்னர்,
12. (11) எரெமியாஸ் பென்யமீன் நாட்டுக்குப் போய், அங்கிருந்த தமது சொத்தைக் குடிமக்கள் முன்னிலையில் பாகம் பிரிக்கக் கருதி யெருசலேமை விட்டுப் புறப்பட்டார்.
13. (12) அவர் பென்யமீன் வாயிலை அணுகி வந்தார்; அங்கே தன் முறைப்படி காவல் காத்துக் கொண்டிருந்த அனானியாஸ் மகனான செலேமியாசின் மகன் யேரியாஸ் என்பவன் எரெமியாசைக் கண்டு, "நீ கல்தேயர் பக்கம் சேரப்போகிறாய்" என்று சொல்லி அவரைப் பிடித்துக் கொண்டான்.
14. (13) அதற்கு எரெமியாஸ், "இது பொய்; நான் கல்தேயர் பக்கம் சேர்வதற்காகப் போகவில்லை" என்றார்; ஆனால் யேரியாஸ் அதைப் பொருட்படுத்தாமல், ஏரெமியாசைப் பிடித்துத் தலைவர்களிடம் கொண்டு வந்தான்.
15. (14) தலைவர்கள் சினங்கொண்டு, எரெமியாசை அடித்து, யோனத்தான் என்னும் செயலாளனின் வீட்டில் அடைத்தார்கள். இவ்வீடு ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருந்தது.
16. (15) எரெமியாஸ் அடிமைகள் போடப்படும் நிலவறைச் சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டார்; எரெமியாஸ் நெடுநாள் அங்கிருந்தார்.
17. (16) ஒரு நாள் செதேசியாஸ் அரசன் அவரைத் தன்னிடம் கூட்டிவரச் சொல்லி, தன் வீட்டில் தனிமையில், "ஆண்டவர் கூறிய வாக்கு ஏதெனும் உண்டோ?" என்று அவரை வினவினான்; எரெமியாஸ், "ஆம், உண்டு" என்றார். தொடர்ந்து, "நீர் பபிலோனிய அரசனுக்குக் கையளிக்கப்படுவீர்" என்று சொன்னார்.
18. (17) மீண்டும் எரெமியாஸ் அரசனை நோக்கி, "உமக்கோ, உம் ஊழியருக்கோ, இந்த மக்களுக்கோ நான் செய்த தீமை என்ன? ஏன் என்னைச் சிறையிலடைத்தீர்?
19. (18) உங்களுக்கும் இந்த நாட்டுக்கும் விரோதமாய்ப் பபிலோனிய அரசன் படையெடுத்து வரமாட்டான்' என்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் எங்கே?
20. (19) ஆகையால் என் ஆண்டவனே, அரசே உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்; என் மன்றாட்டு உம்முன் ஏற்கப்படுவதாக! செயலாளனாகிய யோனத்தானின் வீட்டிலிருக்கும் சிறைக்கூடத்திற்குத் திரும்ப என்னை அனுப்பாதீர்; அனுப்பினால் அங்கேயே நான் மடிந்தாலும் மடியலாம்" என்றார்.
21. (20) ஆகையால் எரெமியாசைச் சிறைக்கூடத்தின் முற்றத்தில் வைத்திருக்குமாறும், பட்டணத்திலுள்ள உரொட்டிகளெல்லாம் தீரும் வரையில் நாடோறும் அவருக்கு இறைச்சியின்றி வட்ட உரொட்டி மட்டும் ஒன்று கொடுக்குமாறும் செதேசியாஸ் அரசன் கட்டளையிட்டான்; அவ்வாறே எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்தில் இருந்தார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 37 of Total Chapters 52
எரேமியா 37:2

×

Alert

×

tamil Letters Keypad References