தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. அதே ஆண்டில், யூதாவின் அரசனாகிய செதேசியாஸ் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் நான்காம் ஆண்டின் ஐந்தாம் மாதத்தில் இது நடந்தது: ஆஜீர் மகனும் கபாவோன் ஊரானுமாகிய அனானியாஸ் என்னும் தீர்க்கதரிசி ஆண்டவரின் கோயிலில் அர்ச்சகர்கள் முன்னிலையிலும், மக்கள் அனைவர் முன்னிலையிலும் என்னிடம் சொன்னான்:
2. இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: பபிலோனிய மன்னனின் நுகத்தை நாம் முறித்து விட்டோம்;
3. பபிலோனிய மன்னன் இந்த இடத்திலிருந்து பபிலோனுக்குத் தூக்கிப்போன ஆண்டவரின் கோயில் பாத்திரங்கள் அனைத்தையும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் திரும்ப இவ்விடத்திற்குக் கொண்டு வருவோம்.
4. யூதாவின் அரசனும் யோவாக்கீமுடைய மகனுமான எக்கோனியாசையும், யூதாவினின்று பபிலோனுக்குச் சென்ற எல்லாரையும் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டு வருவோம்; ஏனெனில் பபிலோனிய மன்னனின் நுகத்தை முறித்து விடுவோம், என்கிறார் ஆண்டவர்" என்றான்.
5. பின்பு, இறைவாக்கினரான எரெமியாஸ் அர்ச்சகர்களின் முன்னிலையிலும், ஆண்டவரின் கோயிலில் நின்று கொண்டிருந்த எல்லா மக்களின் முன்னிலையிலும் அனானியாஸ் தீர்க்கதரிசியிடம் பேசினார்:
6. இறைவாக்கினரான எரெமியாஸ் அவனை நோக்கி, "ஆமென்! அவ்வாறே ஆண்டவர் செய்வாராக! நீ உரைத்த வார்த்தைகளை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! பாத்திரங்கள் ஆண்டவரின் கோயிலுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுக! பபிலோனுக்குப் போனவர்கள் இவ்விடத்திற்குத் திரும்பி வருக!
7. ஆயினும் நீயும் இங்குள்ளவர்களும் கேட்க நான் சொல்லும் இவ்வார்த்தையைக் கேள்:
8. ஆதி முதல் உனக்கும் எனக்கும் முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகள் பல நாடுகளைப் பற்றியும், வல்லரசுகள், போர், துன்பம், பஞ்சம் ஆகியவற்றைக் குறித்தும் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்கள்;
9. சமாதானத்தை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி ஒருவன் இருந்தால், அவன் சொன்ன சொல் நிறைவேறினால் தான், அவனை உண்மையாகவே ஆண்டவர் அனுப்பினார் என்பது தெளிவாகும்" என்று மறுமொழி கூறினார்.
10. அதைக் கேட்டு, அனானியாஸ் தீர்க்கதரிசி எரெமியாஸ் இறைவாக்கினரின் கழுத்திலிருந்த நுகத்தை முறித்து எறிந்துவிட்டான்.
11. பின்னும் அனானியாஸ் மக்கள் அனைவர் முன்னிலையிலும் வாய் திறந்து, "ஆண்டவர் கூறுகிறார்: இவ்வாறே பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசாரின் நுகத்தை எல்லா மக்களினத்தாரின் கழுத்தினின்றும் இன்னும் இரண்டே ஆண்டுகளில் முறித்து விடுவோம்" என்றான். அதன் பின் எரெமியாஸ் இறைவாக்கினர் அவ்விடம் விட்டகன்றார்.
12. அனானியாஸ் தீர்க்கதரிசி எரெமியாஸ் இறைவாக்கினரின் கழுத்தினின்று நுகத்தடியை முறித்தெறிந்த சில நாட்களுக்குப் பின், ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அறிவிக்கப்பட்டது.
13. நீ போய் அனானியாசுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: நீ மர நுகத்தை முறித்தாய்; ஆனால் அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்வோம்.
14. ஏனெனில் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாருக்கு அடங்கிச் சேவை செய்யுமாறு இந்த மக்கள் எல்லாருடைய கழுத்திலும் இரும்பு நுகத்தை வைத்தோம்; அவர்கள் அவனுக்குத் தொண்டு புரிவார்கள்; பூமியின் மிருகங்களையும் அவனுக்கு அளித்திருக்கிறோம், என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர்."
15. அப்பொழுது எரெமியாஸ் இறைவாக்கினர் அனானியாஸ் தீர்க்கதரிசியை நோக்கி, "அனானியாசே, கூர்ந்து கேள்; ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை; இந்த மக்கள் உன் பொய்யை நம்பும்படி செய்து விட்டாய்; ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்:
16. இதோ நாம் உன்னை இவ்வுலகத்திலிருந்தே அகற்றி விடுவோம்; இந்த ஆண்டிலேயே நீ சாவாய்; ஏனெனில், நீ ஆண்டவருக்கு விரோதமாய்ப் பேசினாய்" என்று சொன்னார்.
17. அந்த ஆண்டிலேயே ஏழாம் மாதத்தில் அனானியாஸ் தீர்க்கதரிசி இறந்து போனான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 28 of Total Chapters 52
எரேமியா 28:15

×

Alert

×

tamil Letters Keypad References