தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
1. பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் யூதாவின் அரசனும், யோவாக்கீமுடைய மகனுமான எக்கோனியாசையும், யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் யெருசலேமிலிருந்து பபிலோனுக்குச் சிறை பிடித்துக் கொண்டு போன பிறகு, ஆண்டவர் எனக்கு ஒரு காட்சி அருளினார்: இதோ, ஆண்டவருடைய கோயிலுக்கு முன்னால் அத்திப் பழங்கள் நிறைந்த கூடைகள் இரண்டு வைக்கப்பட்டிருந்தன;
2. ஒன்றில் மிக நல்ல பழங்கள் இருந்தன; தக்க பருவத்தில் பழுத்த முதற் கனிகள் போல் இருந்தன. மற்றதில் இருந்த அத்திப்பழங்கள் மிக்க கெட்ட பழங்களாயிருந்தன; யாரும் தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தன.
3. அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "எரேமியாசே, நீ என்ன காண்கிறாய்?" என்று கேட்டார். "அத்திப் பழங்களைக் காண்கிறேன்; அவற்றுள் நல்ல பழங்கள் மிக்க நல்ல பழங்களாகவும், கெட்ட பழங்கள் தின்ன முடியாத அளவுக்கு மிக்க கெட்ட பழங்களாகவும் இருக்கின்றன" என்றேன்.
4. அப்போது ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
5. இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: யூதாவிருந்து கல்தேயர்களின் நாட்டுக்கு நாம் அனுப்பியிருப்பவர்களை இந்த நல்ல அத்திப் பழங்களைப் போலக் கருதி நன்றாய் நடத்துவோம்.
6. அவர்களை நாம் இரக்கத்தோடு பார்ப்போம்; திரும்ப இந்த நாட்டிற்கே அவர்களைக் கொண்டு வந்து நிலை நாட்டுவோம்; அவர்களைக் கட்டியெழுப்புவோம்; தகர்த்துத் தரைமட்டமாக்க மாட்டோம்; அவர்களை நட்டு வளர்ப்போம்; பிடுங்கி எறிய மாட்டோம்.
7. நாமே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளக் கூடிய உள்ளத்தை அவர்களுக்குக் கொடுப்போம்; அப்போது, அவர்கள் நமக்கு மக்களாகவும், நாம் அவர்களுக்குக் கடவுளாகவும் இருப்போம்; ஏனெனில், தங்கள் முழு இதயத்தோடு நம்மிடம் திரும்பி வருவார்கள்.
8. இன்னும் ஆண்டவர் தொடர்ந்து கூறினார்: தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருக்கும் அந்தக் கெட்ட அத்திப் பழங்களைப் போலக் கருதி, யூதாவின் அரசனான செதேசியாசையும், அவனுடனிருக்கும் தலைவர்களையும், யெருசலேமில் எஞ்சியிருந்து இந்நாட்டில் தங்கி விட்டவர்களையும், எகிப்து நாட்டில் இருப்பவர்களையும் நாம் நடத்துவோம்.
9. உலகத்தின் அரசுகளுக்கெல்லாம் அவர்களைத் திகிலின் அடையாளமாக்குவோம்; நாம் அவர்களை விரட்டியுள்ள இடங்களிலெல்லாம் அவர்களை அவமானமாகவும் பழமொழியாகவும் பழிப்புக்கு உரியவர்களாகவும் சாபமாகவும் இருப்பார்கள்.
10. அவர்கள்மேல் வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பி, அவர்களுக்கும் அவர்களுடைய தந்தையர்க்கும் நாம் தந்த நாட்டினின்று அவர்கள் அழியும் வரை அவர்களை வதைப்போம்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 52 Chapters, Current Chapter 24 of Total Chapters 52
எரேமியா 24:29

×

Alert

×

tamil Letters Keypad References