தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா
1. "நமது மேய்ச்சலின் ஆடுகளைச் சிதறடித்துப் பாழாக்கும் ஆயர்களுக்கு ஐயோ கேடு!" என்கிறார் ஆண்டவர்.
2. நம் மக்களாகிய மந்தையை நடத்தும் ஆயர்களுக்கு இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைக்கும் வாக்கு இதுவே: "நீங்கள் நமது மந்தையைச் சிதறடித்தீர்கள்; அவர்களைத் துரத்தினீர்கள்; அவர்களுக்குப் பணிவிடை புரியவில்லை. ஆதலால் உங்கள் செயல்களின் கெடுதிக்கேற்ற தண்டனையை உங்கள் மேல் வருவிப்போம், என்கிறார் ஆண்டவர்.
3. பின்னர், நாம் நமது மந்தையில் மீதியாயிருக்கும் ஆடுகளை, அவை சிதறியுள்ள நாடுகள் அனைத்தினின்றும் சேர்த்து, அவற்றின் கழனிகளுக்குத் திரும்ப அழைத்து வருவோம்; அங்கு அவை பெருகிப் பலுகும்.
4. அவற்றைக் கண்கானிக்கப் புதிய ஆயர்களை ஏற்படுத்துவோம்; இவர்கள் அவற்றை மேய்ப்பார்கள்; அவை இனிப் பயப்படுவதுமில்லை; திகிலடைவதுமில்லை; காணாமற்போவதுமில்லை, என்கிறார் ஆண்டவர்.
5. நாட்கள் வருகின்றன- ஆண்டவர் கூறுகிறார்- நீதியுள்ள 'தளிரை' தாவீதுக்குப் பிறப்பிப்போம்; அரசராக இருந்து அவர் ஆட்சி செய்வார்; அவர் ஞானமுள்ளவராய் இருப்பார்; நாட்டில் நியாயத்தையும் நீதியையும் செலுத்துவார்.
6. அந்நாட்களில் யூதா மீட்புப் பெறும்; இஸ்ராயேல் நம்பிக்கையோடு வாழும்; 'ஆண்டவர் நமது நீதி' என்பதே அவருக்குப் பெயராய் வழங்கும்.
7. ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அந்நாட்களில், 'எகிப்து நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை மீட்டு வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்று இனி சொல்ல மாட்டார்கள்;
8. வட நாட்டினின்றும், அவர்கள் துரத்தப்பட்டிருந்த எல்லா நாடுகளினின்றும், இஸ்ராயேல் வீட்டாரின் சந்ததியை மீட்டுத் திரும்ப அழைத்து வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்றே இனிச் சொல்வார்கள்; அப்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழ்வார்கள்."
9. தீர்க்கதரிசிகளைப் பற்றிய இறைவாக்கு: என் இதயம் எனக்குள்ளே நைந்து போகின்றது; என் எலும்புகள் கலகலத்துப் போகின்றன; ஆண்டவரை முன்னிட்டும், அவருடைய பரிசுத்த வாக்கியங்களை முன்னிட்டும் நான் போதையடைந்த குடியன் போலவும், மதுவினால் மயங்கிய மனிதன் போலவுமானேன்.
10. ஏனெனில் நாடு விபசாரிகளால் நிறைந்திருக்கிறது; சாபச் சொற்களை முன்னிட்டு அழுகிறது; புல் வெளிகள் உலர்ந்த காடாயின; அவர்கள் தீமை செய்துகொண்டே வருகின்றார்கள்; அவர்கள் தீமையில் வலிமை வாய்ந்தவர்கள்.
11. தீர்க்கதரிசியும் அர்ச்சகரும் கடவுட்பற்று அற்றவர்கள்; நம் கோயிலில் அவர்கள் செய்யும் தீமையைக் கண்டோம், என்கிறார் ஆண்டவர்.
12. ஆகையால் அவர்களுடைய வழி இருளில் இருக்கும், வழுக்கு வழி போல் ஆகும்; அங்குத் தள்ளுண்டு விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் ஆண்டில் அவர்கள் மேல் தீமைகளைப் பொழிவோம், என்கிறார் ஆண்டவர்.
13. சமாரியாவின் தீர்க்கதரிசிகளிடம் மூடத் தனத்தைக் கண்டோம்; அவர்கள் பாகால் பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்து, நம் இஸ்ராயேல் மக்களை வஞ்சித்தார்கள்.
14. யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடமும் வெறுப்புக்குரியதைக் கண்டோம்; அவர்கள் விபசாரம் செய்கின்றனர்; பொய்யில் நடக்கிறார்கள்; தீயோருடைய மனத்திற்கு ஊக்கம் தருகிறார்கள்; அதனால் எவனும் தன் தீநெறியை விட்டுத் திரும்புவதில்லை. அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப் போல் ஆனார்கள்; அதன் குடிகள் கொமோராவைப் போல் ஆனார்கள்."
15. ஆகவே சேனைகளின் ஆண்டவர் தீர்க்கதரிசிகளைக் குறித்துக் கூறுவது இதுவே: "இதோ, அவர்களுக்கு உண்ண எட்டியையும், குடிக்க நஞ்சு கலந்த நீரையும் கொடுப்போம்; யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடம் இருந்தே கடவுட்பற்றின்மை நாடெங்கும் பரவிற்று."
16. சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லி வீண் நம்பிக்கைகளை உங்களுக்குத் தந்து, உங்களை மயக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்குக் காது கொடாதீர்கள்; அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று; அவர்களுடைய சொந்த மனக்காட்சியே ஆகும்.
17. நம்மைப் பழித்துரைப்பவர்களைப் பார்த்து அவர்கள், 'உங்களுக்குச் சமாதானம்' என்கிறார் ஆண்டவர் என்று சொல்லி வருகிறார்கள்; தன் தீயமனம் போலப் பிடிவாதமாய் நடக்கிற எவனுக்கும், ' உங்களுக்குத் தீமை நேராது' என்கிறார்கள்,"
18. ஆனால் ஆண்டவரின் ஆலோசனைக் குழுவில் இருந்தவன் யார்? அவருடைய வார்த்தையைப் பார்த்தவன் யார்? கேட்டவன் யார்? அவருடைய வாக்கியத்தைக் கவனித்துக் கேட்டவன் யார்?
19. இதோ, ஆண்டவருடைய கோபத்தின் சூறாவளி எழும்பும், அக்கிரமிகள் தலை மேல் கொடிய புயலடிக்கும்;
20. ஆண்டவருடைய கடுஞ்சினம் அவர்தம் இதய எண்ணங்களைச் செயல்படுத்தி முடிக்கும் வரை தணியாது; இதை நீங்கள் கடைசி நாட்களில் அறிவீர்கள்.
21. நாம் தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை; அவர்களாகவே ஓடினார்கள்; நாம் அவர்களிடத்தில் பேசினதுமில்லை; அவர்களாகவே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
22. அவர்கள் நமது ஆலோசனைக் குழுவிலே இருந்திருந்தால், நம் வாக்கியங்களை நம் மக்களுக்கு அறிவித்து, மெய்யாகவே அவர்களை அவர்களுடைய தீய வழியினின்றும், தீய எண்ணங்களினின்றும் விலக்கியிருப்பார்கள்.
23. தாம் அருகில் இருக்கும் போது தான் கடவுளா? தொலைவில் இருக்கும் போதும் கடவுள் அல்லவா? என்கிறார் ஆண்டவர்.
24. நம் கண்களுக்குப் புலப்படாதபடி மனிதன் மறைவிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். நாம் வானத்தையும் பூமியையும் நிரப்பிக் கொண்டுள்ளோமன்றோ? என்கிறார் ஆண்டவர்.
25. நமது திருப்பெயரால் பொய்களைச் சொல்லி, 'கனவு கண்டேன், கனவு கண்டேன்' என்று தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கேட்டோம்.
26. பொய் உரைத்துத் தங்கள் இதய வஞ்சனையைத் தீர்க்க தரிசனமாய்ச் சொல்லும் தீர்க்கதரிசிகளின் மனத்தில் இந்தப் பொய் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?
27. அவர்களுடைய முன்னோர்கள் பாகாலை முன்னிட்டு நமது பெயரை மறந்தது போல், ஒவ்வொருவனும் தன் அயலானுக்குத் தன்னுடைய கனவுகளைச் சொல்லி, நம் மக்கள் நமது பெயரை மறக்கும்படி செய்ய நினைக்கிறானே!
28. கனவு கண்ட தீர்க்கதரிசி தன் கனவைச் சொல்லட்டும்; நமது வாக்கியத்தைக் கேட்கிறவன் நம் வாக்கியத்தை நேர்மையோடு பேசட்டும். "கோதுமைக்கும் வைக்கோலுக்கும் ஒப்புமை என்ன? என்கிறார் ஆண்டவர்.
29. நம்முடைய வார்த்தை நெருப்பைப் போன்றதன்றோ? கற்பாறை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றதன்றோ? என்கிறார் ஆண்டவர்.
30. ஆகையால் இதோ, ஒருவனிடமிருந்து ஒருவர் நம் வார்த்தைகளைத் திருடுகிற தீர்க்க தரிசிகளுக்கு விரோதமாய் நாம் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
31. இதோ, தங்கள் நாவைப் பயன்படுத்தி, 'ஆண்டவர் கூறுகிறார்' என்று பேசுகிற தீர்க்கதரிசிகளுக்கு நாம் எதிராய் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
32. இதோ, பொய்க் கனவுகளைத் தீர்க்கதரிசனமாய் உரைத்துத் தங்கள் பொய்களாலும் நடிப்புகளாலும் நம் மக்களை மயக்குகின்ற தீர்க்கதரிசிகளுக்கு நாம் விரோதமாய் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் நாம் அவர்களை அனுப்பவுமில்லை; அவர்களுக்கு ஆணை தந்ததுமில்லை; அவர்களால் இந்த மக்களுக்கு ஒரு பயனுமில்லை, என்கிறார் ஆண்டவர்.
33. இந்த மக்களாவது, ஒரு தீர்க்கதரிசியாவது, ஓர் அர்ச்சகராவது, 'ஆண்டவருடைய சுமை என்ன?' என்று உன்னிடம் கேட்டால், ' நீங்களே அவருடைய சுமை, உங்களை எறிந்து விடுவோம் என்கிறார் ஆண்டவர்' என்று நீ அவர்களுக்குச் சொல்:
34. ஆண்டவருடைய சுமை' என்று தீர்க்கதரிசியோ, அர்ச்சகரோ, மக்களுள் ஒருவனோ சொன்னால், நாம் அவனையும் அவன் வீட்டையும் தண்டிப்போம்.
35. உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் அயலானிடம் அல்லது சகோதரனிடம், 'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?' அல்லது, 'ஆண்டவர் என்ன சொன்னார்?' என்று தான் கேட்க வேண்டும்.
36. ஆனால் 'ஆண்டவருடைய சுமை' என்று எவனும் குறிப்பிடலாகாது; ஏனெனில், அப்படிக் குறிப்பிடுவதோ அவனுக்குச் சுமையாகலாம்; நீங்களோ நம் கடவுளும் சேனைகளின் ஆண்டவருமான உயிருள்ள கடவுளின் வார்த்தைகளைத் திரித்து விடுகிறீர்கள்.
37. தீர்க்கதரிசியிடம், 'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?' அல்லது, 'ஆண்டவர் என்ன சொன்னார்?' என்று தான் கேட்க வேண்டும்;
38. ஆனால் நீங்கள், 'ஆண்டவருடைய சுமை' என்று குறிப்பிடுவீர்களாகில், அதற்கு ஆண்டவரின் வாக்கு இதுவே: 'நீங்கள், "ஆண்டவருடைய சுமை" என்று சொல்லாதீர்கள்' என்று உங்களை அனுப்பிய போது நாம் உங்களிடம் சொல்லியிருந்தும் நீங்கள், 'ஆண்டவருடைய சுமை' என்று சொன்னபடியால்,
39. இதோ, உங்களையும், நாம் உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் கொடுத்திருக்கும் நகரத்தையும் நம் முன்னிலையிலிருந்து தூக்கித் தொலைவில் எறிவோம்;
40. மேலும் முடிவில்லாத இழிச்சொல்லையும், நீடித்த வெட்கத்தையும் உங்கள் மேல் வரச் செய்வோம்; அவை என்றும் மறக்கப்படமாட்டா."
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 52
1 "நமது மேய்ச்சலின் ஆடுகளைச் சிதறடித்துப் பாழாக்கும் ஆயர்களுக்கு ஐயோ கேடு!" என்கிறார் ஆண்டவர். 2 நம் மக்களாகிய மந்தையை நடத்தும் ஆயர்களுக்கு இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைக்கும் வாக்கு இதுவே: "நீங்கள் நமது மந்தையைச் சிதறடித்தீர்கள்; அவர்களைத் துரத்தினீர்கள்; அவர்களுக்குப் பணிவிடை புரியவில்லை. ஆதலால் உங்கள் செயல்களின் கெடுதிக்கேற்ற தண்டனையை உங்கள் மேல் வருவிப்போம், என்கிறார் ஆண்டவர். 3 பின்னர், நாம் நமது மந்தையில் மீதியாயிருக்கும் ஆடுகளை, அவை சிதறியுள்ள நாடுகள் அனைத்தினின்றும் சேர்த்து, அவற்றின் கழனிகளுக்குத் திரும்ப அழைத்து வருவோம்; அங்கு அவை பெருகிப் பலுகும். 4 அவற்றைக் கண்கானிக்கப் புதிய ஆயர்களை ஏற்படுத்துவோம்; இவர்கள் அவற்றை மேய்ப்பார்கள்; அவை இனிப் பயப்படுவதுமில்லை; திகிலடைவதுமில்லை; காணாமற்போவதுமில்லை, என்கிறார் ஆண்டவர். 5 நாட்கள் வருகின்றன- ஆண்டவர் கூறுகிறார்- நீதியுள்ள 'தளிரை' தாவீதுக்குப் பிறப்பிப்போம்; அரசராக இருந்து அவர் ஆட்சி செய்வார்; அவர் ஞானமுள்ளவராய் இருப்பார்; நாட்டில் நியாயத்தையும் நீதியையும் செலுத்துவார். 6 அந்நாட்களில் யூதா மீட்புப் பெறும்; இஸ்ராயேல் நம்பிக்கையோடு வாழும்; 'ஆண்டவர் நமது நீதி' என்பதே அவருக்குப் பெயராய் வழங்கும். 7 ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அந்நாட்களில், 'எகிப்து நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை மீட்டு வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்று இனி சொல்ல மாட்டார்கள்; 8 வட நாட்டினின்றும், அவர்கள் துரத்தப்பட்டிருந்த எல்லா நாடுகளினின்றும், இஸ்ராயேல் வீட்டாரின் சந்ததியை மீட்டுத் திரும்ப அழைத்து வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்றே இனிச் சொல்வார்கள்; அப்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழ்வார்கள்." 9 தீர்க்கதரிசிகளைப் பற்றிய இறைவாக்கு: என் இதயம் எனக்குள்ளே நைந்து போகின்றது; என் எலும்புகள் கலகலத்துப் போகின்றன; ஆண்டவரை முன்னிட்டும், அவருடைய பரிசுத்த வாக்கியங்களை முன்னிட்டும் நான் போதையடைந்த குடியன் போலவும், மதுவினால் மயங்கிய மனிதன் போலவுமானேன். 10 ஏனெனில் நாடு விபசாரிகளால் நிறைந்திருக்கிறது; சாபச் சொற்களை முன்னிட்டு அழுகிறது; புல் வெளிகள் உலர்ந்த காடாயின; அவர்கள் தீமை செய்துகொண்டே வருகின்றார்கள்; அவர்கள் தீமையில் வலிமை வாய்ந்தவர்கள். 11 தீர்க்கதரிசியும் அர்ச்சகரும் கடவுட்பற்று அற்றவர்கள்; நம் கோயிலில் அவர்கள் செய்யும் தீமையைக் கண்டோம், என்கிறார் ஆண்டவர். 12 ஆகையால் அவர்களுடைய வழி இருளில் இருக்கும், வழுக்கு வழி போல் ஆகும்; அங்குத் தள்ளுண்டு விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் ஆண்டில் அவர்கள் மேல் தீமைகளைப் பொழிவோம், என்கிறார் ஆண்டவர். 13 சமாரியாவின் தீர்க்கதரிசிகளிடம் மூடத் தனத்தைக் கண்டோம்; அவர்கள் பாகால் பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்து, நம் இஸ்ராயேல் மக்களை வஞ்சித்தார்கள். 14 யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடமும் வெறுப்புக்குரியதைக் கண்டோம்; அவர்கள் விபசாரம் செய்கின்றனர்; பொய்யில் நடக்கிறார்கள்; தீயோருடைய மனத்திற்கு ஊக்கம் தருகிறார்கள்; அதனால் எவனும் தன் தீநெறியை விட்டுத் திரும்புவதில்லை. அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப் போல் ஆனார்கள்; அதன் குடிகள் கொமோராவைப் போல் ஆனார்கள்." 15 ஆகவே சேனைகளின் ஆண்டவர் தீர்க்கதரிசிகளைக் குறித்துக் கூறுவது இதுவே: "இதோ, அவர்களுக்கு உண்ண எட்டியையும், குடிக்க நஞ்சு கலந்த நீரையும் கொடுப்போம்; யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடம் இருந்தே கடவுட்பற்றின்மை நாடெங்கும் பரவிற்று." 16 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லி வீண் நம்பிக்கைகளை உங்களுக்குத் தந்து, உங்களை மயக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்குக் காது கொடாதீர்கள்; அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று; அவர்களுடைய சொந்த மனக்காட்சியே ஆகும். 17 நம்மைப் பழித்துரைப்பவர்களைப் பார்த்து அவர்கள், 'உங்களுக்குச் சமாதானம்' என்கிறார் ஆண்டவர் என்று சொல்லி வருகிறார்கள்; தன் தீயமனம் போலப் பிடிவாதமாய் நடக்கிற எவனுக்கும், ' உங்களுக்குத் தீமை நேராது' என்கிறார்கள்," 18 ஆனால் ஆண்டவரின் ஆலோசனைக் குழுவில் இருந்தவன் யார்? அவருடைய வார்த்தையைப் பார்த்தவன் யார்? கேட்டவன் யார்? அவருடைய வாக்கியத்தைக் கவனித்துக் கேட்டவன் யார்? 19 இதோ, ஆண்டவருடைய கோபத்தின் சூறாவளி எழும்பும், அக்கிரமிகள் தலை மேல் கொடிய புயலடிக்கும்; 20 ஆண்டவருடைய கடுஞ்சினம் அவர்தம் இதய எண்ணங்களைச் செயல்படுத்தி முடிக்கும் வரை தணியாது; இதை நீங்கள் கடைசி நாட்களில் அறிவீர்கள். 21 நாம் தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை; அவர்களாகவே ஓடினார்கள்; நாம் அவர்களிடத்தில் பேசினதுமில்லை; அவர்களாகவே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 22 அவர்கள் நமது ஆலோசனைக் குழுவிலே இருந்திருந்தால், நம் வாக்கியங்களை நம் மக்களுக்கு அறிவித்து, மெய்யாகவே அவர்களை அவர்களுடைய தீய வழியினின்றும், தீய எண்ணங்களினின்றும் விலக்கியிருப்பார்கள். 23 தாம் அருகில் இருக்கும் போது தான் கடவுளா? தொலைவில் இருக்கும் போதும் கடவுள் அல்லவா? என்கிறார் ஆண்டவர். 24 நம் கண்களுக்குப் புலப்படாதபடி மனிதன் மறைவிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். நாம் வானத்தையும் பூமியையும் நிரப்பிக் கொண்டுள்ளோமன்றோ? என்கிறார் ஆண்டவர். 25 நமது திருப்பெயரால் பொய்களைச் சொல்லி, 'கனவு கண்டேன், கனவு கண்டேன்' என்று தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கேட்டோம். 26 பொய் உரைத்துத் தங்கள் இதய வஞ்சனையைத் தீர்க்க தரிசனமாய்ச் சொல்லும் தீர்க்கதரிசிகளின் மனத்தில் இந்தப் பொய் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்? 27 அவர்களுடைய முன்னோர்கள் பாகாலை முன்னிட்டு நமது பெயரை மறந்தது போல், ஒவ்வொருவனும் தன் அயலானுக்குத் தன்னுடைய கனவுகளைச் சொல்லி, நம் மக்கள் நமது பெயரை மறக்கும்படி செய்ய நினைக்கிறானே! 28 கனவு கண்ட தீர்க்கதரிசி தன் கனவைச் சொல்லட்டும்; நமது வாக்கியத்தைக் கேட்கிறவன் நம் வாக்கியத்தை நேர்மையோடு பேசட்டும். "கோதுமைக்கும் வைக்கோலுக்கும் ஒப்புமை என்ன? என்கிறார் ஆண்டவர். 29 நம்முடைய வார்த்தை நெருப்பைப் போன்றதன்றோ? கற்பாறை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றதன்றோ? என்கிறார் ஆண்டவர். 30 ஆகையால் இதோ, ஒருவனிடமிருந்து ஒருவர் நம் வார்த்தைகளைத் திருடுகிற தீர்க்க தரிசிகளுக்கு விரோதமாய் நாம் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர். 31 இதோ, தங்கள் நாவைப் பயன்படுத்தி, 'ஆண்டவர் கூறுகிறார்' என்று பேசுகிற தீர்க்கதரிசிகளுக்கு நாம் எதிராய் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர். 32 இதோ, பொய்க் கனவுகளைத் தீர்க்கதரிசனமாய் உரைத்துத் தங்கள் பொய்களாலும் நடிப்புகளாலும் நம் மக்களை மயக்குகின்ற தீர்க்கதரிசிகளுக்கு நாம் விரோதமாய் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் நாம் அவர்களை அனுப்பவுமில்லை; அவர்களுக்கு ஆணை தந்ததுமில்லை; அவர்களால் இந்த மக்களுக்கு ஒரு பயனுமில்லை, என்கிறார் ஆண்டவர். 33 இந்த மக்களாவது, ஒரு தீர்க்கதரிசியாவது, ஓர் அர்ச்சகராவது, 'ஆண்டவருடைய சுமை என்ன?' என்று உன்னிடம் கேட்டால், ' நீங்களே அவருடைய சுமை, உங்களை எறிந்து விடுவோம் என்கிறார் ஆண்டவர்' என்று நீ அவர்களுக்குச் சொல்: 34 ஆண்டவருடைய சுமை' என்று தீர்க்கதரிசியோ, அர்ச்சகரோ, மக்களுள் ஒருவனோ சொன்னால், நாம் அவனையும் அவன் வீட்டையும் தண்டிப்போம். 35 உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் அயலானிடம் அல்லது சகோதரனிடம், 'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?' அல்லது, 'ஆண்டவர் என்ன சொன்னார்?' என்று தான் கேட்க வேண்டும். 36 ஆனால் 'ஆண்டவருடைய சுமை' என்று எவனும் குறிப்பிடலாகாது; ஏனெனில், அப்படிக் குறிப்பிடுவதோ அவனுக்குச் சுமையாகலாம்; நீங்களோ நம் கடவுளும் சேனைகளின் ஆண்டவருமான உயிருள்ள கடவுளின் வார்த்தைகளைத் திரித்து விடுகிறீர்கள். 37 தீர்க்கதரிசியிடம், 'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?' அல்லது, 'ஆண்டவர் என்ன சொன்னார்?' என்று தான் கேட்க வேண்டும்; 38 ஆனால் நீங்கள், 'ஆண்டவருடைய சுமை' என்று குறிப்பிடுவீர்களாகில், அதற்கு ஆண்டவரின் வாக்கு இதுவே: 'நீங்கள், "ஆண்டவருடைய சுமை" என்று சொல்லாதீர்கள்' என்று உங்களை அனுப்பிய போது நாம் உங்களிடம் சொல்லியிருந்தும் நீங்கள், 'ஆண்டவருடைய சுமை' என்று சொன்னபடியால், 39 இதோ, உங்களையும், நாம் உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் கொடுத்திருக்கும் நகரத்தையும் நம் முன்னிலையிலிருந்து தூக்கித் தொலைவில் எறிவோம்; 40 மேலும் முடிவில்லாத இழிச்சொல்லையும், நீடித்த வெட்கத்தையும் உங்கள் மேல் வரச் செய்வோம்; அவை என்றும் மறக்கப்படமாட்டா."
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 52
×

Alert

×

Tamil Letters Keypad References