தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா
1. ஆண்டவர் கூறுகிறார்: "நீ யூதாவின் அரசன் வீட்டுக்குச் சென்று அங்குச் சொல்ல வேண்டிய வாக்கு இதுவே:
2. தாவீதின் அரியணையில் உட்கார்ந்திருக்கிற யூதாவின் அரசே, ஆண்டவருடைய வாக்கைக் கேளும்; நீரும், உம் ஊழியர்களும், இந்த வாயில்களுக்குள் நுழையும் உம் மக்களும் ஆண்டவர் சொல்வதற்குச் செவி கொடுங்கள்.
3. ஆண்டவர் கூறுகிறார்: நீதியையும் நேர்மையையும் கடைப்பிடியுங்கள்; ஒடுக்குகிறவன் கையினின்று இடுக்கண்படுகிறவனை விடுதலை செய்யுங்கள்; அந்நியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் மனநோகப் பண்ணவேண்டாம்; அவர்களைக் கொடுமை செய்யாதீர்கள்; இந்த இடத்தில் மாசற்ற இரத்தத்தைச் சிந்தவேண்டாம்;
4. இவ்வார்த்தையை நுணுக்கமாய் நிறைவேற்றுவீர்களாகில், தாவீதின் குலத்தில் தோன்றிய அரசர்கள் அவரது அரியணையில் அமர்வார்கள்; தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிக் கொண்டு அவர்களும், அவர்களின் ஊழியர்களும், மக்களும் இவ்வீட்டின் வாயில்கள் வழியாய் உள்ளே நுழைவார்கள்.
5. இவ்வார்த்தைகளை நீங்கள் கேளாவிடில்,- நமதுபேரில் ஆணை!- இவ்வீடு காடாகும், என்கிறார் ஆண்டவர்.
6. மீண்டும் யூதாவின் அரச குலத்துக்கு விரோதமாய் ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே: ' நீ நமக்கு கலஹாத்தைப் போலவும், லீபான் மலையின் கொடுமுடி போலவும் இருக்கிறாய்; இருப்பினும், உன்னைப் பாலை நிலமாக்குவோம், குடிகளற்ற நகரமாக்குவோம்.
7. உனக்கு மாறாய் எழும்பும் கொலைஞர்களையும், அவர்களின் ஆயுதங்களையும் நாம் தயாராக்குவோம்; உன்னுடைய சிறந்த கேதுரு மரங்களை வெட்டி நெருப்பில் போடுவார்கள்.
8. பல்வேறு மக்கள் இப்பட்டணத்தின் வீதிகளில் சுற்றித் திரிந்து, ஒவ்வொருவனும் தன் அயலானை நோக்கி," இப்பெரிய பட்டணத்திற்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?" என்பான்.
9. அதற்கு அவர்கள், "தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை அவர்கள் புறக்கணித்து, அந்நிய தெய்வங்களை ஆராதித்துத் தொண்டு புரிந்தமையாலே" என்று பதில் கூறுவார்கள்."
10. இறந்தவனைப் பற்றி அழவேண்டாம்; அவனுக்காகத் துக்கம் கொண்டாட வேண்டாம்: புறப்படுகிறவனைப் பற்றியே அழுங்கள்; ஏனெனில் அவன் ஒருகாலும் திரும்பி வர மாட்டான், தன் பிறந்த நாட்டையும் மறுபடி பாரான்.
11. தன் தந்தை யோசியாசுக்குப் பதிலாய் அரசாண்டு வந்த யோசியாசின் மகனும், யூதாவின் அரசனுமாகிய செல்லோமைக் குறித்து ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: "இந்த இடத்திலிருந்து புறப்பட்டுப் போன அவன் இனி ஒருபோதும் மீண்டுவரான்.
12. அவன் அடிமையாய்க் கொண்டு போகப்பட்ட இடத்திலேயே சாவான்; இனி ஒருபோதும் இந்நாட்டைப் பாரான்."
13. "அநியாயமாய்த் தன் வீட்டையும், அக்கிரமமாய்த் தன் அறைகளையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! அவன் தன் அயலானைக் கூலியின்றி உழைக்கச் செய்கிறான்; அவனுக்குக் கூலி கொடுக்கிறதில்லை.
14. அவன், 'பெரிய வீட்டையும் அகலமான மேலறைகளையும் எனக்குக் கட்டிக் கொள்வேன்' என்கிறான்; அவன் தனக்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கிறான்; கேதுரு பலகையால் சுவரை மூடிச் சிவப்பு வண்ணம் பூசி அழகுபடுத்துகிறான்.
15. கேதுரு மர வேலைப்பாட்டில் உன் வீடு பிறர் வீட்டினும் மேம்பட்டிருப்பதாலேயே நீ அரசனாய் இருக்கிறாயோ? உன் தந்தை உண்டு குடித்து இன்பமாய் வாழ்ந்த போதும், நீதியாயும் நேர்மையாயும் நடக்கவில்லையா?
16. ஏழையின் வழக்கையும் எளியவனின் வழக்கையும் தீர்த்து, அதனால் தனக்கு நன்மை தேடிக் கொண்டான்; இதெல்லாம் செய்வதே நம்மை அறிதல் அன்றோ? என்கிறார் ஆண்டவர்.
17. ஆனால் உன் கண்களும் உன் இதயமும், அநியாயமாய்ச் செல்வம் சேர்ப்பதிலும், மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும், பிறரை ஒடுக்கித் துன்புறுத்துவதிலுமே நோக்கம் கொண்டவை."
18. ஆதலால் யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமான யோவாக்கீமுக்கு ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: 'ஐயோ, சகோதரனே! ஐயோ, சகோதரியே!" என்று அவனைக் குறித்து அழமாட்டார்கள்; 'ஐயோ, ஆண்டவனே! ஐயோ, மாட்சியுள்ளோனே!' என்று சொல்லிப் புலம்ப மாட்டார்கள்;
19. ஒரு கழுதையைப் போல் அவன் புதைக்கப்படுவான்; புழுத்து யெருசலேமின் வாயில்களுக்கப்பால் எறியப்படுவான்."
20. "லீபான் மலை மேலேறிக் கூவு; பாசானில் உனது குரலையுயர்த்தி, உன் அன்பரெல்லாரும் இதோ நசுக்கப்பட்டார்கள் என்று அவரிடம் மலை மேலிருந்து கூவு.
21. நல்ல காலத்திலேயே உனக்குச் சொன்னோம்; நீயோ 'நான் கேட்க மாட்டேன்' என்றாய்; நம்முடைய வாக்கைக் கேளாத வழக்கம் உனக்கு இளமையிலிருந்தே இருக்கிறது.
22. உன்னுடைய மேய்ப்பர்களைக் கடுங்காற்றே மேய்த்து நடத்தும்; உன் அன்பர்கள் உன்னோடு அடிமைத் தனத்திற்குச் செல்வார்கள்; அப்போது நீ உன் கெடு மதியை எண்ணி வெட்கி நாணுவாய்.
23. லீபானில் விற்றிருக்கும் நீ, கேதுரு மரத்தில் கூடு கட்டியிருக்கும் நீ, பிரசவிக்கும் பெண்ணின் துன்பங்களைப் போன்ற துன்பங்கள் உனக்கு நேரும் போது நீ எவ்வாறு விம்முவாயோ!"
24. ஆண்டவர் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! யூதாவின் அரசனாகிய யோவாக்கீமுடைய மகன் எக்கோனியாஸ் நமது வலக்கை விரலின் மோதிரம் போலிருப்பினும், அதிலிருந்து உன்னைக் கழற்றி விடுவோம்;
25. உன் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், நீ எவருடைய முகத்தைப் பார்க்க அஞ்சுகிறாயோ, அவர்கள் கையிலும், பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் கையிலும், கல்தேயர் கையிலுமே உன்னை ஒப்புவிப்போம்.
26. உன்னையும் உன்னைப் பெற்ற தாயையும் நீங்கள் பிறவாத அந்நிய நாட்டுக்குத் துரத்துவோம். நீங்கள் அங்கேயே சாவீர்கள்.
27. திரும்பி வருவதற்கு மிக விரும்பும் இந்நாட்டிற்கோ அவர்கள் மீண்டும் வரவே மாட்டார்கள்."
28. எக்கோனியாஸ் என்கிற அந்த மனிதன் உடைந்த மட்கலந்தானோ? ஒருவரும் விரும்பாத பானையோ? ஏன் அவனும் அவன் பிள்ளைகளும் தள்ளப்பட்டார்கள்? அறியாத நாட்டுக்குத் துரத்தப்பட்டார்கள்?
29. நாடே! நாடே! நாடே! ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்:
30. ஆண்டவர் கூறுகிறார்: "இந்த மனிதன் மக்கட் பேறற்றவன், தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன் என்று எழுது; ஏனெனில் தாவீதின் அரியணையில் உட்காரவும், இனி யூதாவில் அரசு செலுத்தவும், இவனது சந்ததியில் யாருமிரார்."
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 52
1 ஆண்டவர் கூறுகிறார்: "நீ யூதாவின் அரசன் வீட்டுக்குச் சென்று அங்குச் சொல்ல வேண்டிய வாக்கு இதுவே: 2 தாவீதின் அரியணையில் உட்கார்ந்திருக்கிற யூதாவின் அரசே, ஆண்டவருடைய வாக்கைக் கேளும்; நீரும், உம் ஊழியர்களும், இந்த வாயில்களுக்குள் நுழையும் உம் மக்களும் ஆண்டவர் சொல்வதற்குச் செவி கொடுங்கள். 3 ஆண்டவர் கூறுகிறார்: நீதியையும் நேர்மையையும் கடைப்பிடியுங்கள்; ஒடுக்குகிறவன் கையினின்று இடுக்கண்படுகிறவனை விடுதலை செய்யுங்கள்; அந்நியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் மனநோகப் பண்ணவேண்டாம்; அவர்களைக் கொடுமை செய்யாதீர்கள்; இந்த இடத்தில் மாசற்ற இரத்தத்தைச் சிந்தவேண்டாம்; 4 இவ்வார்த்தையை நுணுக்கமாய் நிறைவேற்றுவீர்களாகில், தாவீதின் குலத்தில் தோன்றிய அரசர்கள் அவரது அரியணையில் அமர்வார்கள்; தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிக் கொண்டு அவர்களும், அவர்களின் ஊழியர்களும், மக்களும் இவ்வீட்டின் வாயில்கள் வழியாய் உள்ளே நுழைவார்கள். 5 இவ்வார்த்தைகளை நீங்கள் கேளாவிடில்,- நமதுபேரில் ஆணை!- இவ்வீடு காடாகும், என்கிறார் ஆண்டவர். 6 மீண்டும் யூதாவின் அரச குலத்துக்கு விரோதமாய் ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே: ' நீ நமக்கு கலஹாத்தைப் போலவும், லீபான் மலையின் கொடுமுடி போலவும் இருக்கிறாய்; இருப்பினும், உன்னைப் பாலை நிலமாக்குவோம், குடிகளற்ற நகரமாக்குவோம். 7 உனக்கு மாறாய் எழும்பும் கொலைஞர்களையும், அவர்களின் ஆயுதங்களையும் நாம் தயாராக்குவோம்; உன்னுடைய சிறந்த கேதுரு மரங்களை வெட்டி நெருப்பில் போடுவார்கள். 8 பல்வேறு மக்கள் இப்பட்டணத்தின் வீதிகளில் சுற்றித் திரிந்து, ஒவ்வொருவனும் தன் அயலானை நோக்கி," இப்பெரிய பட்டணத்திற்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?" என்பான். 9 அதற்கு அவர்கள், "தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை அவர்கள் புறக்கணித்து, அந்நிய தெய்வங்களை ஆராதித்துத் தொண்டு புரிந்தமையாலே" என்று பதில் கூறுவார்கள்." 10 இறந்தவனைப் பற்றி அழவேண்டாம்; அவனுக்காகத் துக்கம் கொண்டாட வேண்டாம்: புறப்படுகிறவனைப் பற்றியே அழுங்கள்; ஏனெனில் அவன் ஒருகாலும் திரும்பி வர மாட்டான், தன் பிறந்த நாட்டையும் மறுபடி பாரான். 11 தன் தந்தை யோசியாசுக்குப் பதிலாய் அரசாண்டு வந்த யோசியாசின் மகனும், யூதாவின் அரசனுமாகிய செல்லோமைக் குறித்து ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: "இந்த இடத்திலிருந்து புறப்பட்டுப் போன அவன் இனி ஒருபோதும் மீண்டுவரான். 12 அவன் அடிமையாய்க் கொண்டு போகப்பட்ட இடத்திலேயே சாவான்; இனி ஒருபோதும் இந்நாட்டைப் பாரான்." 13 "அநியாயமாய்த் தன் வீட்டையும், அக்கிரமமாய்த் தன் அறைகளையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! அவன் தன் அயலானைக் கூலியின்றி உழைக்கச் செய்கிறான்; அவனுக்குக் கூலி கொடுக்கிறதில்லை. 14 அவன், 'பெரிய வீட்டையும் அகலமான மேலறைகளையும் எனக்குக் கட்டிக் கொள்வேன்' என்கிறான்; அவன் தனக்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கிறான்; கேதுரு பலகையால் சுவரை மூடிச் சிவப்பு வண்ணம் பூசி அழகுபடுத்துகிறான். 15 கேதுரு மர வேலைப்பாட்டில் உன் வீடு பிறர் வீட்டினும் மேம்பட்டிருப்பதாலேயே நீ அரசனாய் இருக்கிறாயோ? உன் தந்தை உண்டு குடித்து இன்பமாய் வாழ்ந்த போதும், நீதியாயும் நேர்மையாயும் நடக்கவில்லையா? 16 ஏழையின் வழக்கையும் எளியவனின் வழக்கையும் தீர்த்து, அதனால் தனக்கு நன்மை தேடிக் கொண்டான்; இதெல்லாம் செய்வதே நம்மை அறிதல் அன்றோ? என்கிறார் ஆண்டவர். 17 ஆனால் உன் கண்களும் உன் இதயமும், அநியாயமாய்ச் செல்வம் சேர்ப்பதிலும், மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும், பிறரை ஒடுக்கித் துன்புறுத்துவதிலுமே நோக்கம் கொண்டவை." 18 ஆதலால் யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமான யோவாக்கீமுக்கு ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: 'ஐயோ, சகோதரனே! ஐயோ, சகோதரியே!" என்று அவனைக் குறித்து அழமாட்டார்கள்; 'ஐயோ, ஆண்டவனே! ஐயோ, மாட்சியுள்ளோனே!' என்று சொல்லிப் புலம்ப மாட்டார்கள்; 19 ஒரு கழுதையைப் போல் அவன் புதைக்கப்படுவான்; புழுத்து யெருசலேமின் வாயில்களுக்கப்பால் எறியப்படுவான்." 20 "லீபான் மலை மேலேறிக் கூவு; பாசானில் உனது குரலையுயர்த்தி, உன் அன்பரெல்லாரும் இதோ நசுக்கப்பட்டார்கள் என்று அவரிடம் மலை மேலிருந்து கூவு. 21 நல்ல காலத்திலேயே உனக்குச் சொன்னோம்; நீயோ 'நான் கேட்க மாட்டேன்' என்றாய்; நம்முடைய வாக்கைக் கேளாத வழக்கம் உனக்கு இளமையிலிருந்தே இருக்கிறது. 22 உன்னுடைய மேய்ப்பர்களைக் கடுங்காற்றே மேய்த்து நடத்தும்; உன் அன்பர்கள் உன்னோடு அடிமைத் தனத்திற்குச் செல்வார்கள்; அப்போது நீ உன் கெடு மதியை எண்ணி வெட்கி நாணுவாய். 23 லீபானில் விற்றிருக்கும் நீ, கேதுரு மரத்தில் கூடு கட்டியிருக்கும் நீ, பிரசவிக்கும் பெண்ணின் துன்பங்களைப் போன்ற துன்பங்கள் உனக்கு நேரும் போது நீ எவ்வாறு விம்முவாயோ!" 24 ஆண்டவர் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! யூதாவின் அரசனாகிய யோவாக்கீமுடைய மகன் எக்கோனியாஸ் நமது வலக்கை விரலின் மோதிரம் போலிருப்பினும், அதிலிருந்து உன்னைக் கழற்றி விடுவோம்; 25 உன் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், நீ எவருடைய முகத்தைப் பார்க்க அஞ்சுகிறாயோ, அவர்கள் கையிலும், பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் கையிலும், கல்தேயர் கையிலுமே உன்னை ஒப்புவிப்போம். 26 உன்னையும் உன்னைப் பெற்ற தாயையும் நீங்கள் பிறவாத அந்நிய நாட்டுக்குத் துரத்துவோம். நீங்கள் அங்கேயே சாவீர்கள். 27 திரும்பி வருவதற்கு மிக விரும்பும் இந்நாட்டிற்கோ அவர்கள் மீண்டும் வரவே மாட்டார்கள்." 28 எக்கோனியாஸ் என்கிற அந்த மனிதன் உடைந்த மட்கலந்தானோ? ஒருவரும் விரும்பாத பானையோ? ஏன் அவனும் அவன் பிள்ளைகளும் தள்ளப்பட்டார்கள்? அறியாத நாட்டுக்குத் துரத்தப்பட்டார்கள்? 29 நாடே! நாடே! நாடே! ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்: 30 ஆண்டவர் கூறுகிறார்: "இந்த மனிதன் மக்கட் பேறற்றவன், தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன் என்று எழுது; ஏனெனில் தாவீதின் அரியணையில் உட்காரவும், இனி யூதாவில் அரசு செலுத்தவும், இவனது சந்ததியில் யாருமிரார்."
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 52
×

Alert

×

Tamil Letters Keypad References