தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
2. நீ பெண் தேடி மணஞ்செய்து கொள்ளாதே; இந்த இடத்தில் புதல்வரோ புதல்வியரோ உனக்கு இருக்க வேண்டாம்;
3. ஏனெனில் இவ்விடத்தில் பிறக்கும் புதல்வர், புதல்வியரையும், அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், தந்தைமார்களையும் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே:
4. அவர்கள் கொடிய நோய்களால் மடிவார்கள்; அவர்களுக்காக அழுது புலம்புவார் யாருமிரார்; அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்; சாணக் குவியல் போலப் பூமியின் மேல் கிடப்பார்கள்; வாளாலும் பஞ்சத்தாலும் சாவார்கள். அவர்களுடைய உயிரற்ற உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
5. ஆண்டவர் கூறுகிறார்: நீ துக்கம் கொண்டாடும் வீட்டுக்குள் போகாதே; இழவுக்குப் போகவேண்டாம்; அவர்களைத் தேற்றவும் வேண்டாம்; ஏனெனில் நம்முடைய சமாதானத்தையும் இரக்கத்தையும் நிலையான அன்பையும் இந்த மக்களிடமிருந்து எடுத்து விட்டோம்;
6. இந்நாட்டில் பெரியோரும் சிறியோரும் மடிவார்கள்; அவர்கள் அடக்கம் செய்யப்பட மாட்டார்கள்; அவர்களுக்காக இழவு கொண்டாட மாட்டார்கள்; அவர்களுக்காக யாரும் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளவோ தலையை மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள்.
7. செத்தவனுக்காக அழுகிறவனைத் தேற்ற ஓர் அப்பத்துண்டு கொடுப்பவர் அவர்களுக்குள் இல்லை; இறந்த தாய், தந்தையர்க்காகத் துயரப்படுகிறவனுக்கு ஆறுதலாக ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பார் யாருமில்லை.
8. விருந்து நடக்கும் எவ்வீட்டுக்கும் போகாதே; அவர்களோடு பந்தியமராதே; உண்ணாதே; குடியாதே.
9. ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ இந்த நாட்டில், உங்கள் நாட்களில், உங்கள் கண் முன்பாகவே அக்களிப்பின் ஆரவாரத்தையும், அகமகிழ்ச்சியின் சந்தடியையும், மணவாளன், மணவாட்டி ஆகியோரின் குரல்களையும் ஒழித்து விடுவோம்.
10. நீ இந்த மக்களுக்கு இவ்வார்த்தைகளை எல்லாம் அறிவிக்கும் போது, அவர்கள் உன்னை நோக்கி, 'ஆண்டவர் ஏன் எங்களுக்கு எதிராக இம்மாபெரும் தீங்கை அறிவித்தார்? நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? எங்கள் ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன?' என்று கேட்பார்கள்.
11. அப்போது நீ இவ்வாறு சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: உங்கள் முன்னோர்கள் நம்மைக் கைவிட்டு அந்நிய தெய்வங்களைப் பின் சென்று, அவர்களைச் சேவித்து, அவர்களை வழிபட்டு, நம்மைப் புறக்கணித்து, நமது சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை.
12. ஆனால், நீங்கள் உங்கள் தந்தையரை விடப் பெருந்தீமை செய்தீர்கள்; இதோ ஒவ்வொருவனும் நமக்குக் காதுகொடாமல் தன் தீய இதயத்தின் கெட்ட இச்சைப்படி நடக்கின்றான்;
13. ஆகையால், உங்களை இந் நாட்டினின்று நீங்களோ உங்கள் தந்தையரோ அறியாத நாட்டுக்குத் துரத்துவோம்; அங்கே அந்நிய தெய்வங்களுக்கு இரவும் பகலும் தொண்டு புரிவீர்கள்; நாமோ உங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டோம்.'
14. "ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது: 'எகிப்து நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை மீட்டு வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்று சொல்லப்படாது;
15. ஆனால், 'வட நாட்டினின்றும், அவர்கள் துரத்தப்பட்டிருந்த எல்லா நாடுகளினின்றும் இஸ்ராயேல் மக்களைக் கூட்டி வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்றே சொல்லப்படும். ஏனெனில் அவர்களுடைய முன்னோர்களுக்கு நாம் கொடுத்த அவர்களின் சொந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்ப அழைத்து வருவோம்.
16. "ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாம் செம்படவர் பலரை அனுப்புவோம்; இவர்கள் அவர்களை வலைபோட்டுப் பிடிப்பார்கள்; அதன் பின்பு வேடர் பலரை அனுப்புவோம்; இவர்கள் அவர்களை ஒவ்வொரு மலையிலும் குன்றிலும் மலையிடுக்குகளிலும் வேட்டையாடுவார்கள்;
17. ஏனெனில் நம்முடைய கண்கள் அவர்களின் செயல்களையெல்லாம் நோக்குகின்றன; அவை நம் முன்னிலையில் மறைந்தவை அல்ல; அவர்களுடைய அக்கிரமம் நம் கண்களுக்குப் புலப்படாமல் போவதில்லை.
18. முதற்கண், அவர்களின் அக்கிரமத்துக்கும் பாவத்திற்கும் இரட்டிப்பான தண்டனை தருவோம்; ஏனெனில், அருவருப்பான சிலைகளின் உயிரற்ற உருவங்களால்; நமது நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்; தங்கள் அருவருப்பான செயல்களால் நாம் அவர்களுக்கு உரிமைச் சொத்தாய் அளித்த நாட்டை நிரப்பினார்கள்."
19. ஆண்டவரே, என் வல்லமையே, என் அரணே, இடையூறு காலத்தில் என் புகலிடமே, புறக்குலத்தார் பூமியின் கடை கோடிகளினின்று வந்து, "எங்கள் தந்தையார் பொய்களையும் மாயையும், ஒன்றுக்கும் பயன்படாதவற்றையுமே உரிமைச் சொத்தாய்ப் பெற்றுக் கொண்டார்கள்;
20. தனக்கென மனிதன் தெய்வங்களைப் படைக்க முடியுமோ? அத்தகைய படைப்புகள் தெய்வங்கள் அல்லவே" என்று உம்மிடம் சொல்வார்கள்.
21. ஆதலால், இதோ, இந்தத் தடவை அவர்களுக்குக் காட்டுவோம்: அவர்களுக்கு நமது கரத்தையும், அதன் வல்லமையையும் காட்டுவோம்; அப்போது அவர்கள் நமது திருப்பெயர் ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வார்கள்."
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 52
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; 2 நீ பெண் தேடி மணஞ்செய்து கொள்ளாதே; இந்த இடத்தில் புதல்வரோ புதல்வியரோ உனக்கு இருக்க வேண்டாம்; 3 ஏனெனில் இவ்விடத்தில் பிறக்கும் புதல்வர், புதல்வியரையும், அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், தந்தைமார்களையும் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: 4 அவர்கள் கொடிய நோய்களால் மடிவார்கள்; அவர்களுக்காக அழுது புலம்புவார் யாருமிரார்; அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்; சாணக் குவியல் போலப் பூமியின் மேல் கிடப்பார்கள்; வாளாலும் பஞ்சத்தாலும் சாவார்கள். அவர்களுடைய உயிரற்ற உடல் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். 5 ஆண்டவர் கூறுகிறார்: நீ துக்கம் கொண்டாடும் வீட்டுக்குள் போகாதே; இழவுக்குப் போகவேண்டாம்; அவர்களைத் தேற்றவும் வேண்டாம்; ஏனெனில் நம்முடைய சமாதானத்தையும் இரக்கத்தையும் நிலையான அன்பையும் இந்த மக்களிடமிருந்து எடுத்து விட்டோம்; 6 இந்நாட்டில் பெரியோரும் சிறியோரும் மடிவார்கள்; அவர்கள் அடக்கம் செய்யப்பட மாட்டார்கள்; அவர்களுக்காக இழவு கொண்டாட மாட்டார்கள்; அவர்களுக்காக யாரும் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளவோ தலையை மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள். 7 செத்தவனுக்காக அழுகிறவனைத் தேற்ற ஓர் அப்பத்துண்டு கொடுப்பவர் அவர்களுக்குள் இல்லை; இறந்த தாய், தந்தையர்க்காகத் துயரப்படுகிறவனுக்கு ஆறுதலாக ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பார் யாருமில்லை. 8 விருந்து நடக்கும் எவ்வீட்டுக்கும் போகாதே; அவர்களோடு பந்தியமராதே; உண்ணாதே; குடியாதே. 9 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ இந்த நாட்டில், உங்கள் நாட்களில், உங்கள் கண் முன்பாகவே அக்களிப்பின் ஆரவாரத்தையும், அகமகிழ்ச்சியின் சந்தடியையும், மணவாளன், மணவாட்டி ஆகியோரின் குரல்களையும் ஒழித்து விடுவோம். 10 நீ இந்த மக்களுக்கு இவ்வார்த்தைகளை எல்லாம் அறிவிக்கும் போது, அவர்கள் உன்னை நோக்கி, 'ஆண்டவர் ஏன் எங்களுக்கு எதிராக இம்மாபெரும் தீங்கை அறிவித்தார்? நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? எங்கள் ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன?' என்று கேட்பார்கள். 11 அப்போது நீ இவ்வாறு சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: உங்கள் முன்னோர்கள் நம்மைக் கைவிட்டு அந்நிய தெய்வங்களைப் பின் சென்று, அவர்களைச் சேவித்து, அவர்களை வழிபட்டு, நம்மைப் புறக்கணித்து, நமது சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை. 12 ஆனால், நீங்கள் உங்கள் தந்தையரை விடப் பெருந்தீமை செய்தீர்கள்; இதோ ஒவ்வொருவனும் நமக்குக் காதுகொடாமல் தன் தீய இதயத்தின் கெட்ட இச்சைப்படி நடக்கின்றான்; 13 ஆகையால், உங்களை இந் நாட்டினின்று நீங்களோ உங்கள் தந்தையரோ அறியாத நாட்டுக்குத் துரத்துவோம்; அங்கே அந்நிய தெய்வங்களுக்கு இரவும் பகலும் தொண்டு புரிவீர்கள்; நாமோ உங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டோம்.' 14 "ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாட்கள் வருகின்றன; அப்போது: 'எகிப்து நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை மீட்டு வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்று சொல்லப்படாது; 15 ஆனால், 'வட நாட்டினின்றும், அவர்கள் துரத்தப்பட்டிருந்த எல்லா நாடுகளினின்றும் இஸ்ராயேல் மக்களைக் கூட்டி வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்றே சொல்லப்படும். ஏனெனில் அவர்களுடைய முன்னோர்களுக்கு நாம் கொடுத்த அவர்களின் சொந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்ப அழைத்து வருவோம். 16 "ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாம் செம்படவர் பலரை அனுப்புவோம்; இவர்கள் அவர்களை வலைபோட்டுப் பிடிப்பார்கள்; அதன் பின்பு வேடர் பலரை அனுப்புவோம்; இவர்கள் அவர்களை ஒவ்வொரு மலையிலும் குன்றிலும் மலையிடுக்குகளிலும் வேட்டையாடுவார்கள்; 17 ஏனெனில் நம்முடைய கண்கள் அவர்களின் செயல்களையெல்லாம் நோக்குகின்றன; அவை நம் முன்னிலையில் மறைந்தவை அல்ல; அவர்களுடைய அக்கிரமம் நம் கண்களுக்குப் புலப்படாமல் போவதில்லை. 18 முதற்கண், அவர்களின் அக்கிரமத்துக்கும் பாவத்திற்கும் இரட்டிப்பான தண்டனை தருவோம்; ஏனெனில், அருவருப்பான சிலைகளின் உயிரற்ற உருவங்களால்; நமது நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்; தங்கள் அருவருப்பான செயல்களால் நாம் அவர்களுக்கு உரிமைச் சொத்தாய் அளித்த நாட்டை நிரப்பினார்கள்." 19 ஆண்டவரே, என் வல்லமையே, என் அரணே, இடையூறு காலத்தில் என் புகலிடமே, புறக்குலத்தார் பூமியின் கடை கோடிகளினின்று வந்து, "எங்கள் தந்தையார் பொய்களையும் மாயையும், ஒன்றுக்கும் பயன்படாதவற்றையுமே உரிமைச் சொத்தாய்ப் பெற்றுக் கொண்டார்கள்; 20 தனக்கென மனிதன் தெய்வங்களைப் படைக்க முடியுமோ? அத்தகைய படைப்புகள் தெய்வங்கள் அல்லவே" என்று உம்மிடம் சொல்வார்கள். 21 ஆதலால், இதோ, இந்தத் தடவை அவர்களுக்குக் காட்டுவோம்: அவர்களுக்கு நமது கரத்தையும், அதன் வல்லமையையும் காட்டுவோம்; அப்போது அவர்கள் நமது திருப்பெயர் ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வார்கள்."
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 52
×

Alert

×

Tamil Letters Keypad References