தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா
1. ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "நீ போய் உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி உன் இடையில் கட்டிக்கொள்; அதனைத் தண்ணீரில் துவைக்காதே."
2. ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப ஒரு கச்சை வாங்கி என் இடையில் கட்டிக் கொண்டேன்.
3. ஆண்டவரின் வாக்கு எனக்கு இரண்டாம் முறையாக அருளப்பட்டது:
4. நீ வாங்கி, இடையில் கட்டியிருக்கும் கச்சையை அவிழ்த்து எடுத்துக் கொண்டு, எழுந்து எப்பிராத்து நதிக்குப் போய் அங்கே கல் இடுக்கில் மறைத்து வை" என்றார்.
5. ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டவாறே நான் போய் அதனை எப்பிராத்து நதியின் ஓரத்திலே மறைத்து வைத்தேன். நாட்கள் பல கடந்த பின்னர் ஆண்டவர் ஒருநாள் என்னிடம்,
6. நீ எழுந்து எப்பிராத்துக்குப் போய் அங்கே நாம் மறைத்து வைக்கும்படி உனக்குச் சொன்ன அந்தக் கச்சையை அங்கிருந்து எடுத்துக் கொள்" என்றார்.
7. நான் அவ்வாறே எப்பிராத்துக்குப் போய், அந்தக் கச்சையைப் புதைத்த இடத்தைத் தோண்டி அதனை எடுத்தேன்; இதோ அந்தக் கச்சை ஒன்றுக்கும் பயன்படாதபடி நைந்து போயிருந்தது.
8. பின்னர், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
9. ஆண்டவர் கூறுகிறார்: இவ்வாறு யூதாவின் செருக்கையும் யெருசலேமின் மிஞ்சின இறுமாப்பையும் நையச் செய்வோம்.
10. நம் சொற்களைக் கேளாமல் தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கில் நடந்து, அந்நிய தெய்வங்களைப் பின்சென்று, சேவித்து, வழிபட்டு வருகிற இந்தக் கொடிய மக்கள் ஒன்றுக்கும் உதவாத இக்கச்சையைப் போல் ஆவார்கள்.
11. கச்சை மனிதனின் இடையில் ஒட்டிச் சேர்ந்திருப்பது போல், இஸ்ராயேல் வீடு முழுவதையும், யூதாவின் வீடு முழுவதையும், நம்மோடு ஒன்றித்திருக்கச் செய்தோம்; அவர்கள் நமக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மகிமையாகவும் இருக்கும்படி செய்திருந்தோம்; ஆயினும் அவர்கள் நமக்குச் செவிசாய்க்கவில்லை", என்கிறார் ஆண்டவர்.
12. "நீ அவர்களுக்கு இவ்வார்த்தையைச் சொல்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும்." அவர்கள்: 'சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியாதா?' என்பார்கள்.
13. அப்போது நீ அவர்களுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள், அர்ச்சகர்கள், இறைவாக்கினர்கள், யெருசலேமில் வாழும் எல்லாக் குடிகளும் உட்பட, இந்நாட்டு மக்களனைவரையும் நாம் போதையால் நிரப்புவோம்.
14. ஒருவனோடு ஒருவன் மோதி நொறுங்கச் செய்வோம்; பிள்ளைகள் தங்கள் தந்தையோடு முட்டிக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் மேல் நாம் இரக்கம் காட்டவோ, அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டோம்; அவர்களை அழிக்காமல் விடோம்."
15. கேளுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள்; செருக்கடையாதீர்கள்; ஏனெனில் ஆண்டவர் பேசுகிறார்:
16. உங்களை இருள் மூடிக்கொள்வதற்கு முன்னும், உங்கள் கால்கள் மலைகளின் இருளில் இடறு முன்னரும், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மகிமைப் படுத்துங்கள்; நீங்கள் ஒளியைத் தேடிப் பார்ப்பீர்கள்; அவரோ அதனை உங்களுக்கு மந்தாரமாகவும் காரிருளாகவும் மாற்றி விடுவார்.
17. ஆனால் நீங்கள் இதனைக் கேளாவிடில், உங்கள் இறுமாப்புக்காக என் உள்ளம் மறைவில் அழும்; என் கண்கள் கலங்கிக் கண்ணீர் விடும்; ஏனெனில் ஆண்டவரின் மந்தை அடிமையாய்ப் பிடிபட்டது.
18. அரசனுக்கும் அரசிக்கும் சொல்: "தாழ்ந்த இருக்கையில் உட்காருங்கள்; ஏனெனில் உங்கள் மகிமையான மணிமுடி உங்கள் தலையிலிருந்து விழுந்து போயிற்று."
19. தென்னாட்டுப் பட்டணங்களெல்லாம் அடைக்கப்பட்டன; அவற்றைத் திறப்பவர் யாருமில்லை; யூதேயா முழுவதும் நாடுகடத்தப்பட்டது;
20. "உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பாருங்கள். உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட மந்தை, அந்தச் சிறந்த மந்தை எங்கே?
21. உன் நண்பர்களாக உன்னிடம் வரும்படி நீ பழக்கினவர்களை உன் மேல். அதிகாரம் உள்ளவர்களாக ஏற்படுத்தும் போது நீ என்ன சொல்லுவாய்? பிரசவிக்கும் பெண்ணின் வேதனைக்கு ஒப்பான வேதனைகள் உன்னைப் பீடிக்காமல் இருக்குமோ?
22. இவை யாவும் எனக்கு ஏன் நேர்ந்தன?' என்று உன் உள்ளத்தில் கேட்பாயாகில் உன் மிகுதியான அக்கிரமத்தாலேயே உன் மானம் பறந்து போனது; உன் கால்கள் அவமானத்துக்கு உள்ளாயின.
23. எத்தியோப்பியன் தன் தோல் நிறத்தை மாற்ற இயலுமா? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்யப் பழகிக் கொண்ட நீங்களும் நன்மை செய்யக் கூடும்.
24. பாலை நிலக் காற்றில் பறந்தோடும் துரும்பைப் போல, நாம் உங்களை எங்கணும் சிதறடிப்போம்.
25. இதுவே உன் கதி; தீமைக்கேற்ப நாம் அளந்து கொடுத்த பலன்; ஏனெனில் நீ நம்மை அறவே மறந்து விட்டாய்; பொய்களை நம்பினாய், என்கிறார் ஆண்டவர்.
26. நாமே உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல் தூக்குவோம்; அப்போது உன் மானம் காணப்படும்;
27. உன் அருவருப்பான செயல்களும் விபசாரங்களும், உன் காமக் கனைப்புகளும், பரந்த வெளியில் குன்றுகளின் மேல் நீ செய்த வெறிகொண்ட வேசித்தனங்களும் நம் பார்வைக்குத் தப்பவில்லை. யெருசலெமே, உனக்கு ஐயோ கேடு! நீ சுத்தமாக்கப்படாமல் இன்னும் எத்துணைக் காலம் இருப்பாய்?"
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 52
1 ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "நீ போய் உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி உன் இடையில் கட்டிக்கொள்; அதனைத் தண்ணீரில் துவைக்காதே." 2 ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப ஒரு கச்சை வாங்கி என் இடையில் கட்டிக் கொண்டேன். 3 ஆண்டவரின் வாக்கு எனக்கு இரண்டாம் முறையாக அருளப்பட்டது: 4 நீ வாங்கி, இடையில் கட்டியிருக்கும் கச்சையை அவிழ்த்து எடுத்துக் கொண்டு, எழுந்து எப்பிராத்து நதிக்குப் போய் அங்கே கல் இடுக்கில் மறைத்து வை" என்றார். 5 ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டவாறே நான் போய் அதனை எப்பிராத்து நதியின் ஓரத்திலே மறைத்து வைத்தேன். நாட்கள் பல கடந்த பின்னர் ஆண்டவர் ஒருநாள் என்னிடம், 6 நீ எழுந்து எப்பிராத்துக்குப் போய் அங்கே நாம் மறைத்து வைக்கும்படி உனக்குச் சொன்ன அந்தக் கச்சையை அங்கிருந்து எடுத்துக் கொள்" என்றார். 7 நான் அவ்வாறே எப்பிராத்துக்குப் போய், அந்தக் கச்சையைப் புதைத்த இடத்தைத் தோண்டி அதனை எடுத்தேன்; இதோ அந்தக் கச்சை ஒன்றுக்கும் பயன்படாதபடி நைந்து போயிருந்தது. 8 பின்னர், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 9 ஆண்டவர் கூறுகிறார்: இவ்வாறு யூதாவின் செருக்கையும் யெருசலேமின் மிஞ்சின இறுமாப்பையும் நையச் செய்வோம். 10 நம் சொற்களைக் கேளாமல் தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கில் நடந்து, அந்நிய தெய்வங்களைப் பின்சென்று, சேவித்து, வழிபட்டு வருகிற இந்தக் கொடிய மக்கள் ஒன்றுக்கும் உதவாத இக்கச்சையைப் போல் ஆவார்கள். 11 கச்சை மனிதனின் இடையில் ஒட்டிச் சேர்ந்திருப்பது போல், இஸ்ராயேல் வீடு முழுவதையும், யூதாவின் வீடு முழுவதையும், நம்மோடு ஒன்றித்திருக்கச் செய்தோம்; அவர்கள் நமக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மகிமையாகவும் இருக்கும்படி செய்திருந்தோம்; ஆயினும் அவர்கள் நமக்குச் செவிசாய்க்கவில்லை", என்கிறார் ஆண்டவர். 12 "நீ அவர்களுக்கு இவ்வார்த்தையைச் சொல்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும்." அவர்கள்: 'சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியாதா?' என்பார்கள். 13 அப்போது நீ அவர்களுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள், அர்ச்சகர்கள், இறைவாக்கினர்கள், யெருசலேமில் வாழும் எல்லாக் குடிகளும் உட்பட, இந்நாட்டு மக்களனைவரையும் நாம் போதையால் நிரப்புவோம். 14 ஒருவனோடு ஒருவன் மோதி நொறுங்கச் செய்வோம்; பிள்ளைகள் தங்கள் தந்தையோடு முட்டிக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் மேல் நாம் இரக்கம் காட்டவோ, அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டோம்; அவர்களை அழிக்காமல் விடோம்." 15 கேளுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள்; செருக்கடையாதீர்கள்; ஏனெனில் ஆண்டவர் பேசுகிறார்: 16 உங்களை இருள் மூடிக்கொள்வதற்கு முன்னும், உங்கள் கால்கள் மலைகளின் இருளில் இடறு முன்னரும், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மகிமைப் படுத்துங்கள்; நீங்கள் ஒளியைத் தேடிப் பார்ப்பீர்கள்; அவரோ அதனை உங்களுக்கு மந்தாரமாகவும் காரிருளாகவும் மாற்றி விடுவார். 17 ஆனால் நீங்கள் இதனைக் கேளாவிடில், உங்கள் இறுமாப்புக்காக என் உள்ளம் மறைவில் அழும்; என் கண்கள் கலங்கிக் கண்ணீர் விடும்; ஏனெனில் ஆண்டவரின் மந்தை அடிமையாய்ப் பிடிபட்டது. 18 அரசனுக்கும் அரசிக்கும் சொல்: "தாழ்ந்த இருக்கையில் உட்காருங்கள்; ஏனெனில் உங்கள் மகிமையான மணிமுடி உங்கள் தலையிலிருந்து விழுந்து போயிற்று." 19 தென்னாட்டுப் பட்டணங்களெல்லாம் அடைக்கப்பட்டன; அவற்றைத் திறப்பவர் யாருமில்லை; யூதேயா முழுவதும் நாடுகடத்தப்பட்டது; 20 "உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பாருங்கள். உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட மந்தை, அந்தச் சிறந்த மந்தை எங்கே? 21 உன் நண்பர்களாக உன்னிடம் வரும்படி நீ பழக்கினவர்களை உன் மேல். அதிகாரம் உள்ளவர்களாக ஏற்படுத்தும் போது நீ என்ன சொல்லுவாய்? பிரசவிக்கும் பெண்ணின் வேதனைக்கு ஒப்பான வேதனைகள் உன்னைப் பீடிக்காமல் இருக்குமோ? 22 இவை யாவும் எனக்கு ஏன் நேர்ந்தன?' என்று உன் உள்ளத்தில் கேட்பாயாகில் உன் மிகுதியான அக்கிரமத்தாலேயே உன் மானம் பறந்து போனது; உன் கால்கள் அவமானத்துக்கு உள்ளாயின. 23 எத்தியோப்பியன் தன் தோல் நிறத்தை மாற்ற இயலுமா? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்யப் பழகிக் கொண்ட நீங்களும் நன்மை செய்யக் கூடும். 24 பாலை நிலக் காற்றில் பறந்தோடும் துரும்பைப் போல, நாம் உங்களை எங்கணும் சிதறடிப்போம். 25 இதுவே உன் கதி; தீமைக்கேற்ப நாம் அளந்து கொடுத்த பலன்; ஏனெனில் நீ நம்மை அறவே மறந்து விட்டாய்; பொய்களை நம்பினாய், என்கிறார் ஆண்டவர். 26 நாமே உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல் தூக்குவோம்; அப்போது உன் மானம் காணப்படும்; 27 உன் அருவருப்பான செயல்களும் விபசாரங்களும், உன் காமக் கனைப்புகளும், பரந்த வெளியில் குன்றுகளின் மேல் நீ செய்த வெறிகொண்ட வேசித்தனங்களும் நம் பார்வைக்குத் தப்பவில்லை. யெருசலெமே, உனக்கு ஐயோ கேடு! நீ சுத்தமாக்கப்படாமல் இன்னும் எத்துணைக் காலம் இருப்பாய்?"
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 52
×

Alert

×

Tamil Letters Keypad References