தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யாக்கோபு
1. பணக்காரரே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் அவல நிலையை நினைத்து அலறி அழுங்கள்.
2. உங்கள் செல்வம் மட்கிப்போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டு விட்டன.
3. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சாட்சியாய் இருக்கும்; உங்கள் சதையைத் தின்று விடும். இறுதி நாளுக்காக நீங்கள் உங்களுக்கென நெருப்பைத் தான் குவித்து வைத்திருக்கிறீர்கள்.
4. உங்கள் வயலில் அறுவடை செய்தவர்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள். கொடுக்காத கூலி கூக்குரலிடுகிறது. அறுவடையாளர் எழுப்பும் அப்பேரொலி வான்படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.
5. இவ்வுலகிலே இன்பப் பெரு வாழ்வில் மூழ்கியிருந்தீர்கள். உங்களுடைய அழிவு நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்திருக்கிறீர்கள்.
6. நீதிமானுக்குத் தண்டனைத் தீர்ப்பளித்துக் கொலைசெய்தீர்கள். அவனோ உங்களை எதிர்க்கவில்லை.
7. ஆகவே சகோதரர்களே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையாயிருங்கள். பயிரிடுபவனைப் பாருங்கள். நிலத்தில் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன் மாரியும் பின் மாரியும் வருமளவும் பொறுமையோடு காத்திருக்கிறான்.
8. நீங்களும் பொறுமையாயிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில், ஆண்டவரது வருகை அண்மையிலுள்ளது.
9. சகோதரர்களே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதபடி ஒருவர்க்கெதிராய் ஒருவர் குறை கூறி முறையிடாதீர்கள். இதோ! நடுவர், வாசலிலே நிற்கிறார்.
10. சகோதரர்களே, ஆண்டவர் பெயரால் பேசின இறைவாக்கினரை நினைத்துக் கொள்ளுங்கள். துன்பத்தைத் தாங்குவதிலும், பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் அவர்களை மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.
11. இத்தகைய மனவுறுதியுள்ளவர்களைப் பேறு பெற்றவர்கள் என்கிறோம். யோபின் மன உறுதியைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் அவருக்கு என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆண்டவர் மிகுந்த இரக்கமும் தயவுமுள்ளவர் என்று அறிந்திருக்கிறீர்கள்.
12. குறிப்பாக, என் சகோதரர்களே, ஆணையிடாதீர்கள். விண்ணுலகின் மீதோ மண்ணுலகின் மீதோ, வேறெதன் மீதோ ஆணையிட வேண்டாம். நீங்கள், ஆம் என்றால் ஆம் என்றிருக்கட்டும்; இல்லை என்றால் இல்லை என்றிருக்கட்டும். இப்படிச் செய்தால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
13. உங்களுள் யாரேனும் துன்புற்றால் செபிக்கட்டும். மகிழ்ச்சியாயிருந்தால் இறைப்புகழ் பாடட்டும்.
14. உங்களுள் ஒருவன் நோயுற்றிருந்தால் அவன் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும்; அவர்கள் ஆண்டவர் பெயரால் அவன் மீது எண்ணெய் பூசி, அவனுக்காகச் செபிப்பர்.
15. விசுவாசமுள்ள செபம் நோயாளியைக் குணமாக்கும். ஆண்டவர் அவனை எழுப்பி விடுவார்.
16. அவன், பாவம் செய்தவனாயிருந்தால், மன்னிப்புப் பெறுவான். ஆகவே, ஒருவர்க்கொருவர் பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் செபியுங்கள்; அப்போது குணமடைவீர்கள். நீதிமான் முழு உள்ளத்தோடு செய்யும் மன்றாட்டு ஆற்றல் மிக்கது.
17. எலியாஸ் நம்மைப் போல் எளிய நிலைக்குட்பட்ட மனிதர் தான். ஆயினும், மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாகச் செபித்தார். மூன்று ஆண்டு ஆறு மாதங்கள் மழையில்லாது போயிற்று.
18. திரும்பவும் செபித்தார் வானம் பொழிந்தது; நிலம் விளைந்தது.
19. என் சகோதரர்களே, உங்களுள் ஒருவன் உண்மையை விட்டு விலகித் திரியும் போது, அவனை ஒருவன் மனந்திருப்பினால்,
20. தவறான வழியினின்று பாவியை மனந்திருப்புகிறவன் அவனது ஆன்மாவையே இறப்பினின்று மீட்பான் என்றும், திரளான பாவங்கள் அகலச் செய்வான் என்றும் அறிவீர்களாக.
மொத்தம் 5 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 5
1 2 3 4 5
1 பணக்காரரே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் அவல நிலையை நினைத்து அலறி அழுங்கள். 2 உங்கள் செல்வம் மட்கிப்போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டு விட்டன. 3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சாட்சியாய் இருக்கும்; உங்கள் சதையைத் தின்று விடும். இறுதி நாளுக்காக நீங்கள் உங்களுக்கென நெருப்பைத் தான் குவித்து வைத்திருக்கிறீர்கள். 4 உங்கள் வயலில் அறுவடை செய்தவர்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள். கொடுக்காத கூலி கூக்குரலிடுகிறது. அறுவடையாளர் எழுப்பும் அப்பேரொலி வான்படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. 5 இவ்வுலகிலே இன்பப் பெரு வாழ்வில் மூழ்கியிருந்தீர்கள். உங்களுடைய அழிவு நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்திருக்கிறீர்கள். 6 நீதிமானுக்குத் தண்டனைத் தீர்ப்பளித்துக் கொலைசெய்தீர்கள். அவனோ உங்களை எதிர்க்கவில்லை. 7 ஆகவே சகோதரர்களே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையாயிருங்கள். பயிரிடுபவனைப் பாருங்கள். நிலத்தில் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன் மாரியும் பின் மாரியும் வருமளவும் பொறுமையோடு காத்திருக்கிறான். 8 நீங்களும் பொறுமையாயிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில், ஆண்டவரது வருகை அண்மையிலுள்ளது. 9 சகோதரர்களே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதபடி ஒருவர்க்கெதிராய் ஒருவர் குறை கூறி முறையிடாதீர்கள். இதோ! நடுவர், வாசலிலே நிற்கிறார். 10 சகோதரர்களே, ஆண்டவர் பெயரால் பேசின இறைவாக்கினரை நினைத்துக் கொள்ளுங்கள். துன்பத்தைத் தாங்குவதிலும், பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் அவர்களை மாதிரிகளாகக் கொள்ளுங்கள். 11 இத்தகைய மனவுறுதியுள்ளவர்களைப் பேறு பெற்றவர்கள் என்கிறோம். யோபின் மன உறுதியைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் அவருக்கு என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆண்டவர் மிகுந்த இரக்கமும் தயவுமுள்ளவர் என்று அறிந்திருக்கிறீர்கள். 12 குறிப்பாக, என் சகோதரர்களே, ஆணையிடாதீர்கள். விண்ணுலகின் மீதோ மண்ணுலகின் மீதோ, வேறெதன் மீதோ ஆணையிட வேண்டாம். நீங்கள், ஆம் என்றால் ஆம் என்றிருக்கட்டும்; இல்லை என்றால் இல்லை என்றிருக்கட்டும். இப்படிச் செய்தால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். 13 உங்களுள் யாரேனும் துன்புற்றால் செபிக்கட்டும். மகிழ்ச்சியாயிருந்தால் இறைப்புகழ் பாடட்டும். 14 உங்களுள் ஒருவன் நோயுற்றிருந்தால் அவன் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும்; அவர்கள் ஆண்டவர் பெயரால் அவன் மீது எண்ணெய் பூசி, அவனுக்காகச் செபிப்பர். 15 விசுவாசமுள்ள செபம் நோயாளியைக் குணமாக்கும். ஆண்டவர் அவனை எழுப்பி விடுவார். 16 அவன், பாவம் செய்தவனாயிருந்தால், மன்னிப்புப் பெறுவான். ஆகவே, ஒருவர்க்கொருவர் பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் செபியுங்கள்; அப்போது குணமடைவீர்கள். நீதிமான் முழு உள்ளத்தோடு செய்யும் மன்றாட்டு ஆற்றல் மிக்கது. 17 எலியாஸ் நம்மைப் போல் எளிய நிலைக்குட்பட்ட மனிதர் தான். ஆயினும், மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாகச் செபித்தார். மூன்று ஆண்டு ஆறு மாதங்கள் மழையில்லாது போயிற்று. 18 திரும்பவும் செபித்தார் வானம் பொழிந்தது; நிலம் விளைந்தது. 19 என் சகோதரர்களே, உங்களுள் ஒருவன் உண்மையை விட்டு விலகித் திரியும் போது, அவனை ஒருவன் மனந்திருப்பினால், 20 தவறான வழியினின்று பாவியை மனந்திருப்புகிறவன் அவனது ஆன்மாவையே இறப்பினின்று மீட்பான் என்றும், திரளான பாவங்கள் அகலச் செய்வான் என்றும் அறிவீர்களாக.
மொத்தம் 5 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 5
1 2 3 4 5
×

Alert

×

Tamil Letters Keypad References