தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. யூதாவின் அரசனான ஓசியாஸ் என்பவனின் மகன் யோவாத்தானின் மகன் ஆக்காஸ் அரசனுடைய நாட்களில் சீரியாவின் அரசனான இராசீன் என்பவனும், இஸ்ராயேலின் அரசனாகிய ரொமேலியின் மகன் பாசே என்பவனும் யெருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அதைப் பிடிக்கப் பார்த்தனர்; ஆயினும் அதைப் பிடிக்க முடியவில்லை.
2. சீரியா எப்பிராயீமோடு சேர்ந்துகொண்டது" என்னும் செய்தி தாவீதின் வீட்டாருக்கு எட்டியதும், ஆக்காஸ் உள்ளமும், அவன் நாட்டினரின் உள்ளங்களும் காட்டு மரங்கள் காற்றில் அலைக்கழிக்கப் படுவது போல் அலைக்கழிக்கப் பட்டன.
3. அப்போது ஆண்டவர் இசையாசை நோக்கிக் கூறினார்: "நீயும் உன் மகன் ஷூயார் யஷபூ என்பவனும் 'வண்ணான் வயல்' என்னுமிடத்திற்குப் போகும் சாலையில், மேற்குளத்துக்குப் போகும் கட்டுக் கால்வாயின் மறுமுனைக்குப் போய் அங்கே ஆக்காசைச் சந்தித்து,
4. அவனுக்கு இதைச் சொல்: 'அமைதியாய் இரு, அஞ்சாதே; சீரியாவின் அரசனான இராசீனுடையவும் ரொமேலியின் மகனுடையவும் பொங்கியெழும் கடுஞ்சினமாகிய புகையும் இரண்டு கொள்ளிகளைக் கண்டு உன் உள்ளம் கலங்காதிருக்கட்டும்.
5. சீரியாவும் எப்பிராயீமும் ரொமேலியின் மகனும், உனக் கெதிராகச் சதித்திட்டம் தீட்டி,
6. யூதாவுக்கு எதிராகப் படையெடுத்துப் போய், அதனை அச்சுறுத்திப் போர் புரிந்து கைப்பற்றுவோம்; தபேயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்" என்று பேசிக் கொண்டார்கள்.
7. ஆதலால் ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: அவர்களின் திட்டம் நிலைபெறாது, அது நிறைவேறாது;
8. ஏனெனில் சீரியாவுக்குத் தலைநகரம் தமஸ்குப் பட்டணம், தமஸ்குப் பட்டணத்தின் தலைவன் இராசீன் அரசன். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்பிராயீம் தவிடு பொடியாக்கப்படும்: அதன் பின் அது ஒரு மக்களினமாகவே இராது.)
9. எப்பிராயீமுக்குத் தலைநகரம் சமாரியாப் பட்டணம், சமாரியாப் பட்டணத்தின் தலைவன் ரொமேலியின் மகன். உங்களிடம் விசுவாசம் இல்லாவிட்டால், நீங்கள் நிலைபெற்றிருக்க மாட்டீர்கள்."
10. ஆண்டவர் மீண்டும் ஆக்காசிடம் பேசி,
11. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஓர் அடையாளம் காட்டும்படி கேள்; பாதாளத்தின் கீழோ, வானத்தின் மேலோ தோன்றும் படி கேட்கலாம்" என்றார்.
12. அதற்கு ஆக்காஸ் மறுமொழியாக, "நான் கேட்க மாட்டேன்; ஆண்டவரை நான் சோதிக்கமாட்டேன்" என்று சொன்னான்.
13. அப்பொழுது அவர் சொன்னார்: "அப்படியானால் தாவீதின் வீட்டாரே, கேளுங்கள்; மனிதரைச் சலிப்படையச் செய்தது போதாதென்றா என் கடவுளையும் சலிப்படையச் செய்கிறீர்கள்?
14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்;
15. தீமையை விலக்கி நன்மையைத் தேர்ந்து கொள்ள அறியும் வரை, அவன் வெண்ணெயும் தேனும் சாப்பிடுவான்.
16. குழந்தை தீமையை விலக்கி நன்மையைத் தேர்ந்து கொள்ள அறிவதற்கு முன், நீ அஞ்சி நடுங்கும் அரசர்கள் இருவரின் நாடு அழிந்து பாழாய்ப் போகும்;
17. யூதாவினின்று எப்பிராயீம் பிரிந்து போன நாட்களிலிருந்து இன்று வரையில் வந்திராத நாட்களை ஆண்டவர் உன் மேலும், உன் நாட்டு மக்கள் மேலும், உன் தந்தையின் வீட்டார் மேலும் வரச் செய்வார்." (அதாவது - அசீரியா அரசன் வருவான் என்பது.)
18. அந்நாளில், எகிப்து நதிகளின் ஊற்று முனையிலிருந்து கொசுக்களையும், அசீரியா நாட்டினின்று தேனீக்களையும் சீழ்க்கையொலி செய்து ஆண்டவர் கூப்பிடுவார்.
19. உடனே அவை யாவும் ஓடிவந்து, கணவாய்களின் நீர்த்தாரைகளிலும், கற்பாறைகளின் பொந்துகளிளிலும் முட்புதர்கள் அனைத்தின் மேலும், எல்லா மேய்ச்சல் நிலங்களிலும், ஏராளமாய் வந்திறங்கும்.
20. அந்நாளில் பேராற்றுக்கு அப்பாலிலிருந்து வாங்கிய கத்தியைக் கொண்டு, (கத்தி - அசீரிய அரசனைக் குறிக்கிறது) தலையிலும் உடலிலும் உள்ள மயிரையும், தாடி அனைத்தையும் ஆண்டவர் மழித்து விடுவார்.
21. அந்நாளில் இளம்பசு ஒன்றையும் இரண்டு ஆடுகளையுமே ஒரு மனிதன் வைத்திருப்பான்;
22. அவை கொடுக்கும் பாலின் மிகுதியினால் அவன் வெண்ணெய் சாப்பிடுவான்; ஏனெனில் நாட்டில் விடப்பட்டவன் ஒவ்வொருவனும் வெண்ணெயும் தேனுமே சாப்பிடுவான்.
23. அந் நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு பெறுமானமுள்ள ஆயிரம் திராட்சைக் கொடிகள் இருந்த இடமெல்லாம் முட்களும் புதர்களுமே முளைத்திருக்கும்;
24. வில்லோடும் அம்போடும் மனிதர்கள் அங்கே வருவார்கள், ஏனெனில் நாடெங்கும் முட்களும் முட்புதர்களுமே இருக்கும்.
25. மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டுப் பயிரிடப்பட்டு வந்த மலைகளுக்கெல்லாம், முட்களுக்கும் முட்புதர்களுக்கும் அஞ்சி யாருமே வரத் துணியமாட்டார்கள்; அவை மாடுகள் மேயும் இடமாகும், ஆடுகள் நடமாடும் காடாகும்.

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 66
1 யூதாவின் அரசனான ஓசியாஸ் என்பவனின் மகன் யோவாத்தானின் மகன் ஆக்காஸ் அரசனுடைய நாட்களில் சீரியாவின் அரசனான இராசீன் என்பவனும், இஸ்ராயேலின் அரசனாகிய ரொமேலியின் மகன் பாசே என்பவனும் யெருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அதைப் பிடிக்கப் பார்த்தனர்; ஆயினும் அதைப் பிடிக்க முடியவில்லை. 2 சீரியா எப்பிராயீமோடு சேர்ந்துகொண்டது" என்னும் செய்தி தாவீதின் வீட்டாருக்கு எட்டியதும், ஆக்காஸ் உள்ளமும், அவன் நாட்டினரின் உள்ளங்களும் காட்டு மரங்கள் காற்றில் அலைக்கழிக்கப் படுவது போல் அலைக்கழிக்கப் பட்டன. 3 அப்போது ஆண்டவர் இசையாசை நோக்கிக் கூறினார்: "நீயும் உன் மகன் ஷூயார் யஷபூ என்பவனும் 'வண்ணான் வயல்' என்னுமிடத்திற்குப் போகும் சாலையில், மேற்குளத்துக்குப் போகும் கட்டுக் கால்வாயின் மறுமுனைக்குப் போய் அங்கே ஆக்காசைச் சந்தித்து, 4 அவனுக்கு இதைச் சொல்: 'அமைதியாய் இரு, அஞ்சாதே; சீரியாவின் அரசனான இராசீனுடையவும் ரொமேலியின் மகனுடையவும் பொங்கியெழும் கடுஞ்சினமாகிய புகையும் இரண்டு கொள்ளிகளைக் கண்டு உன் உள்ளம் கலங்காதிருக்கட்டும். 5 சீரியாவும் எப்பிராயீமும் ரொமேலியின் மகனும், உனக் கெதிராகச் சதித்திட்டம் தீட்டி, 6 யூதாவுக்கு எதிராகப் படையெடுத்துப் போய், அதனை அச்சுறுத்திப் போர் புரிந்து கைப்பற்றுவோம்; தபேயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்" என்று பேசிக் கொண்டார்கள். 7 ஆதலால் ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: அவர்களின் திட்டம் நிலைபெறாது, அது நிறைவேறாது; 8 ஏனெனில் சீரியாவுக்குத் தலைநகரம் தமஸ்குப் பட்டணம், தமஸ்குப் பட்டணத்தின் தலைவன் இராசீன் அரசன். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்பிராயீம் தவிடு பொடியாக்கப்படும்: அதன் பின் அது ஒரு மக்களினமாகவே இராது.) 9 எப்பிராயீமுக்குத் தலைநகரம் சமாரியாப் பட்டணம், சமாரியாப் பட்டணத்தின் தலைவன் ரொமேலியின் மகன். உங்களிடம் விசுவாசம் இல்லாவிட்டால், நீங்கள் நிலைபெற்றிருக்க மாட்டீர்கள்." 10 ஆண்டவர் மீண்டும் ஆக்காசிடம் பேசி, 11 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஓர் அடையாளம் காட்டும்படி கேள்; பாதாளத்தின் கீழோ, வானத்தின் மேலோ தோன்றும் படி கேட்கலாம்" என்றார். 12 அதற்கு ஆக்காஸ் மறுமொழியாக, "நான் கேட்க மாட்டேன்; ஆண்டவரை நான் சோதிக்கமாட்டேன்" என்று சொன்னான். 13 அப்பொழுது அவர் சொன்னார்: "அப்படியானால் தாவீதின் வீட்டாரே, கேளுங்கள்; மனிதரைச் சலிப்படையச் செய்தது போதாதென்றா என் கடவுளையும் சலிப்படையச் செய்கிறீர்கள்? 14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்; 15 தீமையை விலக்கி நன்மையைத் தேர்ந்து கொள்ள அறியும் வரை, அவன் வெண்ணெயும் தேனும் சாப்பிடுவான். 16 குழந்தை தீமையை விலக்கி நன்மையைத் தேர்ந்து கொள்ள அறிவதற்கு முன், நீ அஞ்சி நடுங்கும் அரசர்கள் இருவரின் நாடு அழிந்து பாழாய்ப் போகும்; 17 யூதாவினின்று எப்பிராயீம் பிரிந்து போன நாட்களிலிருந்து இன்று வரையில் வந்திராத நாட்களை ஆண்டவர் உன் மேலும், உன் நாட்டு மக்கள் மேலும், உன் தந்தையின் வீட்டார் மேலும் வரச் செய்வார்." (அதாவது - அசீரியா அரசன் வருவான் என்பது.) 18 அந்நாளில், எகிப்து நதிகளின் ஊற்று முனையிலிருந்து கொசுக்களையும், அசீரியா நாட்டினின்று தேனீக்களையும் சீழ்க்கையொலி செய்து ஆண்டவர் கூப்பிடுவார். 19 உடனே அவை யாவும் ஓடிவந்து, கணவாய்களின் நீர்த்தாரைகளிலும், கற்பாறைகளின் பொந்துகளிளிலும் முட்புதர்கள் அனைத்தின் மேலும், எல்லா மேய்ச்சல் நிலங்களிலும், ஏராளமாய் வந்திறங்கும். 20 அந்நாளில் பேராற்றுக்கு அப்பாலிலிருந்து வாங்கிய கத்தியைக் கொண்டு, (கத்தி - அசீரிய அரசனைக் குறிக்கிறது) தலையிலும் உடலிலும் உள்ள மயிரையும், தாடி அனைத்தையும் ஆண்டவர் மழித்து விடுவார். 21 அந்நாளில் இளம்பசு ஒன்றையும் இரண்டு ஆடுகளையுமே ஒரு மனிதன் வைத்திருப்பான்; 22 அவை கொடுக்கும் பாலின் மிகுதியினால் அவன் வெண்ணெய் சாப்பிடுவான்; ஏனெனில் நாட்டில் விடப்பட்டவன் ஒவ்வொருவனும் வெண்ணெயும் தேனுமே சாப்பிடுவான். 23 அந் நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு பெறுமானமுள்ள ஆயிரம் திராட்சைக் கொடிகள் இருந்த இடமெல்லாம் முட்களும் புதர்களுமே முளைத்திருக்கும்; 24 வில்லோடும் அம்போடும் மனிதர்கள் அங்கே வருவார்கள், ஏனெனில் நாடெங்கும் முட்களும் முட்புதர்களுமே இருக்கும். 25 மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டுப் பயிரிடப்பட்டு வந்த மலைகளுக்கெல்லாம், முட்களுக்கும் முட்புதர்களுக்கும் அஞ்சி யாருமே வரத் துணியமாட்டார்கள்; அவை மாடுகள் மேயும் இடமாகும், ஆடுகள் நடமாடும் காடாகும்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References