தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. ஆண்டவர் கூறுகிறார்: "வானம் நம்முடைய அரியணை, பூமி நம்முடைய கால் மணை; அப்படியிருக்க, நீங்கள் நமக்கெனக் கட்டும் கோயில் எங்கே? நாம் வீற்றிருக்கும் இந்த இடந்தான் யாது?
2. இவற்றையெல்லாம் நமது கையே படைத்தது; இவையனைத்தும் நம்மால் உண்டாக்கப்பட்டவை, என்கிறார் ஆண்டவர். உள்ளம் வருந்தி, நம் சொற்களுக்கு அஞ்சி நடுங்குகிற எளியவனுக்கன்றி வேறெவனுக்கு இரக்கம் காட்டுவோம்?
3. "மாட்டை வெட்டிப் பலியிடுவோன் நமக்கு மனிதனைக் கொலை செய்பவன் போலாம்; ஆட்டை வெட்டுகிற ஒருவன் நாயை மூளை சிதற அடிப்பவன் போலாம்; காணிக்கை ஒப்புக்கொடுக்கிறவன் பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பவன் போலாம்; தூபக் காணிக்கை தரக் கருத்துள்ளவன் சிலையை வாழ்த்தித் தொழுபவன் போலாம்; தங்கள் போக்கின்படியே இவற்றையெல்லாம் தேர்ந்துகொண்டனர், அருவருப்பானவற்றில் அவர்களின் உள்ளம் இன்பம் கண்டது.
4. ஆதலால் நாம் அவர்களுக்குத் துன்பங்களைத் தருவோம், அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மேல் வரச் செய்வோம்; ஏனெனில் நாம் கூப்பிட்டோம், அவர்களுள் பதில் தருபவன் ஒருவனுமில்லை; நாம் பேசினோம், அவர்கள் கேட்கவில்லை; நம் கண்கள் முன்பாகத் தீமை செய்தார்கள், நமக்கு விருப்பமில்லாதவற்றில் அவர்கள் இன்பம் கண்டார்கள்."
5. ஆண்டவருடைய வாக்கைக் கேட்டு அஞ்சுகிறவர்களே, அவர் சொல்வதைக் கேளுங்கள்: "நமது திருப்பெயரை முன்னிட்டு உங்களைப் பகைத்து வெறுத்துத் தள்ளும் உங்கள் சகோதரர்கள், 'ஆண்டவர் மகிமைப்படுத்தப்படட்டும். உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு அவரை நாங்கள் கண்டு கொள்வோம்' என்றார்கள்; ஆனால் அவர்கள்தான் வெட்கிப் போவார்கள்.
6. இதோ, நகரத்திலிருந்து ஓர் இரைச்சல்! திருக்கோயிலினின்று ஒரு குரலொலி கேட்கிறது! தம் பகைவர்களுக்குப் பிரதிபலன் கொடுக்கும் ஆண்டவரின் குரலொலி கேட்கின்றது!
7. சீயோன் பிரசவ வேதனைப்படு முன்னே பிள்ளை பெற்றாள், பிரசவ நேரம் வருமுன்பே ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
8. இத்தகைய நிகழ்ச்சியை யாரேனும் கேட்டதுண்டோ? இதைப் போன்றது ஒன்றை யாரேனும் கண்டதுண்டோ? ஒரே நாளில் ஒரு நாட்டைப் பெற்றெடுக்க முடியுமோ? ஒரே நொடியில் மக்களினம் ஒன்றைப் பிறப்பிக்க முடியுமோ? ஆயினும் சீயோன் பிரசவ வேதனையுற்றவுடனே தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.
9. பேறு காலத்தை நெருங்கச் செய்துவிட்டுப் பிள்ளை பிறக்காமல் செய்து விடுவோமோ? என்கிறார் ஆண்டவர்; பிரசவ வேதனையைக் கொடுத்து விட்டுப் பிள்ளை பிறக்காமல் தடுத்து விடுவோமோ? என்கிறார் உன் கடவுள்.
10. யெருசலேமுடன் சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள், அவள் மேல் அன்பு கொண்ட அனைவரும் அக்களியுங்கள்; அவளைக் குறித்துத் துயரப்படும் நீங்கள் எல்லோரும் அவளோடு சேர்ந்து அகமகிழுங்கள்.
11. அப்பொழுது, அவளுடைய ஆறுதலின் கொங்கைகளில் பால் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவளுடைய மகிமையின் பெருக்கினின்று இன்பமாய்ப் பருகி மிகுதியாய்த் திளைத்திருப்பீர்கள்."
12. ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, ஆற்றுப் பெருக்கு போல் அவள் மேல் சமாதானத்தை நாம் பொழிந்திடுவோம்; மடை புரண்டோடும் வெள்ளம் போல் அவள் மேல் மக்களினங்களின் மகிமையை ஓடச் செய்வோம்; அவள் பாலை அருந்துவீர்கள், மார்போடணைக்கப்படுவீர்கள், மடிமேல் சீராட்டப் பெறுவீர்கள்.
13. தாயானவள் தன் மகவைச் சீராட்டுவது போல நாம் உங்களுக்கு ஆறுதல் தருவோம், நீங்களும் யெருசலேமில் தேற்றப்படுவீர்கள்.
14. இவற்றை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயமும் மகிழ்ச்சி கொள்ளும்; உங்கள் எலும்புகள் புல்லைப் போலப் பசுமை பெற்றெழும், ஆண்டவர் தம்முடைய ஊழியர்களுக்கு தமது வல்லமையுள்ள கரத்தைக் காட்டுவா; தம் பகைவர் மேல் கோபத்தைக் கொட்டித் தீர்ப்பார்.
15. இதோ ஆண்டவர் நெருப்பு மயமாய் வருவார், அவருடைய தேர்கள் புயல்காற்றுப் போலக் கிளம்பும்; தமது கோபத்தைக் கடுமையாய்க் காட்டவும், தமது பழியைத் தீத்தழலில் செயலாற்றவும் வருவார்.
16. ஏனெனில் தீயினால் ஆண்டவர் தீர்ப்பிடுவார், தம் வாளினால் மனிதர் யாவர்க்கும் தீர்ப்பு வழங்குவார்; ஆண்டவரால் கொலையுண்டவரின் தொகை கணக்கிலடங்காது.
17. சோலைக்குள் சென்று தொழுவதற்காகத் தங்கள் நடுவிலுள்ள ஒருவன் சொற்படி தங்களைச் சுத்திகரம் செய்து தூய்மையாக்கிக் கொள்பவர்களும், பன்றி இறைச்சியையும் அருவருப்பானதையும் சுண்டெலியையும் தின்கிறவர்களும் ஒருங்கே அழிக்கப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
18. அவர்களுடைய செயல்களையும் எண்ணங்களையும் நாம் அறிவோம்; வேற்றினத்தார், பிறமொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க நாமே வருகிறோம்; அவர்கள் கூடி வந்து நம்முடைய மகிமையைக் காண்பார்கள்.
19. அவர்கள் நடுவில் ஓர் அடையாளத்தை நாட்டுவோம்; அவர்களுள் மீதியாய் இருப்பவர்களை ஆப்பிரிக்காவுக்கும், வில் வீரர்கள் வாழும் லீதியாவுக்கும், தூபால், கிரீஸ் நாடுகளுக்கும், தொலைவிலுள்ள தீவுகளுக்கும், நம் திருப்பெயரைக் கேட்டிராதார், நம் மகிமையைக் கண்டிராதார் அனைவரிடமும் அனுப்புவோம்; அவர்களும் மக்களினங்களுக்கு நம் மகிமையை வெளிப்படுத்துவார்கள்.
20. அவர்கள் ஆண்டவருக்கு உகந்த காணிக்கையாக எல்லா மக்களினங்களினின்றும் உங்கள் சகோதரரைச் சேர்த்து, இஸ்ராயேல் மக்கள் காணிக்கைகளைச் சுத்தமான பாத்திரத்தில் ஏந்தி ஆண்டவரின் கோயிலுக்குக் கொண்டு வருவது போல் அவர்களைக் குதிரைகள் மேலும் தேர்களின் மீதும், பல்லக்குகளிலும், கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும் ஏற்றி யெருசலேமிலுள்ள நமது பரிசுத்த மலைக்குக் கொண்டுவருவார்கள், என்கிறார் ஆண்டவர்.
21. அவர்களுள் சிலரை அர்ச்சகர்களாகவும், லேவியராகவும் தேர்ந்து கொள்வோம், என்கிறார் ஆண்டவர்.
22. நாம் படைக்கும் புதிய வானமும் புதிய பூமியும் நம்முன் நிலைபெயராதிருக்கப் போவது போல், உங்கள் சந்ததியும் பெயரும் நிலைபெயராதிருக்கும், என்கிறார் ஆண்டவர்.
23. அமாவாசை தோறும் ஓய்வு நாள் தோறும் மனிதர் அனைவரும் வந்து, நம் திருமுன் வழிபாடு செய்வர், என்கிறார் ஆண்டவர்.
24. அவர்கள் புறப்பட்டுப் போய், நமக்கெதிராய்த் துரோகம் செய்தவர்களின் பிணங்களைக் காண்பர்; அவர்களைத் தின்னும் அரிபுழு சாகாது, அவர்களை எரிக்கும் நெருப்பு அவியாது; மனிதர் அனைவரும் அருவருக்கும் காட்சியாக எக்காலத்தும் இப்படியே இருப்பார்கள்."

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 66 / 66
1 ஆண்டவர் கூறுகிறார்: "வானம் நம்முடைய அரியணை, பூமி நம்முடைய கால் மணை; அப்படியிருக்க, நீங்கள் நமக்கெனக் கட்டும் கோயில் எங்கே? நாம் வீற்றிருக்கும் இந்த இடந்தான் யாது? 2 இவற்றையெல்லாம் நமது கையே படைத்தது; இவையனைத்தும் நம்மால் உண்டாக்கப்பட்டவை, என்கிறார் ஆண்டவர். உள்ளம் வருந்தி, நம் சொற்களுக்கு அஞ்சி நடுங்குகிற எளியவனுக்கன்றி வேறெவனுக்கு இரக்கம் காட்டுவோம்? 3 "மாட்டை வெட்டிப் பலியிடுவோன் நமக்கு மனிதனைக் கொலை செய்பவன் போலாம்; ஆட்டை வெட்டுகிற ஒருவன் நாயை மூளை சிதற அடிப்பவன் போலாம்; காணிக்கை ஒப்புக்கொடுக்கிறவன் பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பவன் போலாம்; தூபக் காணிக்கை தரக் கருத்துள்ளவன் சிலையை வாழ்த்தித் தொழுபவன் போலாம்; தங்கள் போக்கின்படியே இவற்றையெல்லாம் தேர்ந்துகொண்டனர், அருவருப்பானவற்றில் அவர்களின் உள்ளம் இன்பம் கண்டது. 4 ஆதலால் நாம் அவர்களுக்குத் துன்பங்களைத் தருவோம், அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மேல் வரச் செய்வோம்; ஏனெனில் நாம் கூப்பிட்டோம், அவர்களுள் பதில் தருபவன் ஒருவனுமில்லை; நாம் பேசினோம், அவர்கள் கேட்கவில்லை; நம் கண்கள் முன்பாகத் தீமை செய்தார்கள், நமக்கு விருப்பமில்லாதவற்றில் அவர்கள் இன்பம் கண்டார்கள்." 5 ஆண்டவருடைய வாக்கைக் கேட்டு அஞ்சுகிறவர்களே, அவர் சொல்வதைக் கேளுங்கள்: "நமது திருப்பெயரை முன்னிட்டு உங்களைப் பகைத்து வெறுத்துத் தள்ளும் உங்கள் சகோதரர்கள், 'ஆண்டவர் மகிமைப்படுத்தப்படட்டும். உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு அவரை நாங்கள் கண்டு கொள்வோம்' என்றார்கள்; ஆனால் அவர்கள்தான் வெட்கிப் போவார்கள். 6 இதோ, நகரத்திலிருந்து ஓர் இரைச்சல்! திருக்கோயிலினின்று ஒரு குரலொலி கேட்கிறது! தம் பகைவர்களுக்குப் பிரதிபலன் கொடுக்கும் ஆண்டவரின் குரலொலி கேட்கின்றது! 7 சீயோன் பிரசவ வேதனைப்படு முன்னே பிள்ளை பெற்றாள், பிரசவ நேரம் வருமுன்பே ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். 8 இத்தகைய நிகழ்ச்சியை யாரேனும் கேட்டதுண்டோ? இதைப் போன்றது ஒன்றை யாரேனும் கண்டதுண்டோ? ஒரே நாளில் ஒரு நாட்டைப் பெற்றெடுக்க முடியுமோ? ஒரே நொடியில் மக்களினம் ஒன்றைப் பிறப்பிக்க முடியுமோ? ஆயினும் சீயோன் பிரசவ வேதனையுற்றவுடனே தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். 9 பேறு காலத்தை நெருங்கச் செய்துவிட்டுப் பிள்ளை பிறக்காமல் செய்து விடுவோமோ? என்கிறார் ஆண்டவர்; பிரசவ வேதனையைக் கொடுத்து விட்டுப் பிள்ளை பிறக்காமல் தடுத்து விடுவோமோ? என்கிறார் உன் கடவுள். 10 யெருசலேமுடன் சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள், அவள் மேல் அன்பு கொண்ட அனைவரும் அக்களியுங்கள்; அவளைக் குறித்துத் துயரப்படும் நீங்கள் எல்லோரும் அவளோடு சேர்ந்து அகமகிழுங்கள். 11 அப்பொழுது, அவளுடைய ஆறுதலின் கொங்கைகளில் பால் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவளுடைய மகிமையின் பெருக்கினின்று இன்பமாய்ப் பருகி மிகுதியாய்த் திளைத்திருப்பீர்கள்." 12 ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, ஆற்றுப் பெருக்கு போல் அவள் மேல் சமாதானத்தை நாம் பொழிந்திடுவோம்; மடை புரண்டோடும் வெள்ளம் போல் அவள் மேல் மக்களினங்களின் மகிமையை ஓடச் செய்வோம்; அவள் பாலை அருந்துவீர்கள், மார்போடணைக்கப்படுவீர்கள், மடிமேல் சீராட்டப் பெறுவீர்கள். 13 தாயானவள் தன் மகவைச் சீராட்டுவது போல நாம் உங்களுக்கு ஆறுதல் தருவோம், நீங்களும் யெருசலேமில் தேற்றப்படுவீர்கள். 14 இவற்றை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயமும் மகிழ்ச்சி கொள்ளும்; உங்கள் எலும்புகள் புல்லைப் போலப் பசுமை பெற்றெழும், ஆண்டவர் தம்முடைய ஊழியர்களுக்கு தமது வல்லமையுள்ள கரத்தைக் காட்டுவா; தம் பகைவர் மேல் கோபத்தைக் கொட்டித் தீர்ப்பார். 15 இதோ ஆண்டவர் நெருப்பு மயமாய் வருவார், அவருடைய தேர்கள் புயல்காற்றுப் போலக் கிளம்பும்; தமது கோபத்தைக் கடுமையாய்க் காட்டவும், தமது பழியைத் தீத்தழலில் செயலாற்றவும் வருவார். 16 ஏனெனில் தீயினால் ஆண்டவர் தீர்ப்பிடுவார், தம் வாளினால் மனிதர் யாவர்க்கும் தீர்ப்பு வழங்குவார்; ஆண்டவரால் கொலையுண்டவரின் தொகை கணக்கிலடங்காது. 17 சோலைக்குள் சென்று தொழுவதற்காகத் தங்கள் நடுவிலுள்ள ஒருவன் சொற்படி தங்களைச் சுத்திகரம் செய்து தூய்மையாக்கிக் கொள்பவர்களும், பன்றி இறைச்சியையும் அருவருப்பானதையும் சுண்டெலியையும் தின்கிறவர்களும் ஒருங்கே அழிக்கப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர். 18 அவர்களுடைய செயல்களையும் எண்ணங்களையும் நாம் அறிவோம்; வேற்றினத்தார், பிறமொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க நாமே வருகிறோம்; அவர்கள் கூடி வந்து நம்முடைய மகிமையைக் காண்பார்கள். 19 அவர்கள் நடுவில் ஓர் அடையாளத்தை நாட்டுவோம்; அவர்களுள் மீதியாய் இருப்பவர்களை ஆப்பிரிக்காவுக்கும், வில் வீரர்கள் வாழும் லீதியாவுக்கும், தூபால், கிரீஸ் நாடுகளுக்கும், தொலைவிலுள்ள தீவுகளுக்கும், நம் திருப்பெயரைக் கேட்டிராதார், நம் மகிமையைக் கண்டிராதார் அனைவரிடமும் அனுப்புவோம்; அவர்களும் மக்களினங்களுக்கு நம் மகிமையை வெளிப்படுத்துவார்கள். 20 அவர்கள் ஆண்டவருக்கு உகந்த காணிக்கையாக எல்லா மக்களினங்களினின்றும் உங்கள் சகோதரரைச் சேர்த்து, இஸ்ராயேல் மக்கள் காணிக்கைகளைச் சுத்தமான பாத்திரத்தில் ஏந்தி ஆண்டவரின் கோயிலுக்குக் கொண்டு வருவது போல் அவர்களைக் குதிரைகள் மேலும் தேர்களின் மீதும், பல்லக்குகளிலும், கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும் ஏற்றி யெருசலேமிலுள்ள நமது பரிசுத்த மலைக்குக் கொண்டுவருவார்கள், என்கிறார் ஆண்டவர். 21 அவர்களுள் சிலரை அர்ச்சகர்களாகவும், லேவியராகவும் தேர்ந்து கொள்வோம், என்கிறார் ஆண்டவர். 22 நாம் படைக்கும் புதிய வானமும் புதிய பூமியும் நம்முன் நிலைபெயராதிருக்கப் போவது போல், உங்கள் சந்ததியும் பெயரும் நிலைபெயராதிருக்கும், என்கிறார் ஆண்டவர். 23 அமாவாசை தோறும் ஓய்வு நாள் தோறும் மனிதர் அனைவரும் வந்து, நம் திருமுன் வழிபாடு செய்வர், என்கிறார் ஆண்டவர். 24 அவர்கள் புறப்பட்டுப் போய், நமக்கெதிராய்த் துரோகம் செய்தவர்களின் பிணங்களைக் காண்பர்; அவர்களைத் தின்னும் அரிபுழு சாகாது, அவர்களை எரிக்கும் நெருப்பு அவியாது; மனிதர் அனைவரும் அருவருக்கும் காட்சியாக எக்காலத்தும் இப்படியே இருப்பார்கள்."
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 66 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References