தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. முன் நம்மை யார் என விசாரிக்காதவர்கள் நம்மைத் தேட இடங்கொடுத்தோம்; நம்மைத் தேடாதவர்கள் நம்மைக் கண்டுகொள்ள இடங்கொடுத்தோம்; நமது பெயரைக் கூவியழைக்காத மக்களினத்தை நோக்கி, நாம், "இதோ இருக்கிறோம், இதோ இருக்கிறோம்" என்று சொன்னோம்.
2. தங்களுடைய எண்ணங்களையே பின்பற்றிக் கொண்டு, தீய வழியில் நடக்கும்அவிசுவாசிகளான மக்கள்பால் நாள் முழுவதும் நம் கைகளை நீட்டி அழைத்தோம்.
3. அந்த மக்கள் நமக்குக் கோப மூட்டும்படியானதையே எந்நேரமும் நம் கண்கள்முன் செய்கின்றனர்; தோட்டங்களில் பலியிடுகின்றனர்; செங்கற் பீடங்கள் மேல் பலி நிறைவேற்றுகின்றனர்.
4. கல்லறைகளில் வாழ்கிறார்கள்; இருண்ட மூலைகளில் படுத்து உறங்குகிறார்கள்; பன்றி இறைச்சியைத் தின்கிறார்கள்; அருவருப்பான மதுவைத் தங்கள் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள்.
5. இவ்வாறிருந்தும் மற்றவர்களைப் பார்த்து, "எட்டி நில், கிட்டே வராதே; நீ தீட்டுள்ளவன், நானோ தூய்மையானவன்" என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் நமக்கு எரிச்சலூட்டும் புகை போலும், நாள் முழுவதும் எரிகிற நெருப்புப் போலும் இருக்கிறார்கள்.
6. இதோ, நமது முன்னிலையில் எழுதப்பட்டுள்ளது: "நாம் அமைதியாய் இருக்கப் போவதில்லை; அவர்களுக்குக் கைம்மாறு கொடுப்போம், மடியில் அளந்து போடுவோம்.
7. அவர்களின் அக்கிரமங்களையும், மலைகளின் மேல் பலியிட்டுக் குன்றுகளின் மேல் சிலை வழிபாடு செய்து நம்மை அவமானப்படுத்திய அவர்களுடைய தந்தையர்களின் அக்கிரமங்களையும் ஒருமிக்கத் தண்டிப்போம்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய பலனை அவர்கள் மடியில் அளந்து கொடுப்போம், என்கிறார் ஆண்டவர்."
8. திராட்சைக் குலையில் இரசம் இருந்தால், 'அதை அழிக்காதே, அது ஆசீர்வாதம்" என்று மக்கள் சொல்லுகிறார்கள்; அதுபோலவே, நம் அடியார்களை முன்னிட்டும் செய்வோம்; இஸ்ராயேல் முழுவதையுமே அழித்துவிட மாட்டோம்.
9. மேலும் யாக்கோபினின்று சந்ததியையும், யூதாவிலிருந்து நம் மலைகளை உடைமையாக்கிக் கொள்பவனையும் தோன்றச் செய்வோம்; நம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் அந்நாட்டை உரிமைச் சொத்தாய் பெறுவார்கள்; நம் ஊழியர்கள் அங்கே வாழ்வார்கள்.
10. நம்மை தேடிவந்த நம்மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆட்டு மந்தைகளின் கிடையாகவும், ஆங்கோர் பள்ளத்தாக்கு மாட்டுத் தொழுவமாகவும் இருக்கும்.
11. ஆனால் ஆண்டவரை கைவிட்டு நமது பரிசுத்த மலையை மறந்தவர்களே, அதிர்ஷ்ட தேவதைக்குப் பீடம் சமர்ப்பித்து விதியின் தெய்வத்துக்குப் பானப்பலிகளை வார்க்கிறவர்களே,
12. உங்களை நாம் ஒருவர் பின் ஒருவராய் வாளுக்கிரையாக்குவோம், அந்தப் படுகொலையில் நீங்கள் யாவரும் மடிவீர்கள்; ஏனெனில் நாம் கூப்பிட்டோம், நீங்கள் பதில் தரவில்லை, நாம் பேசினோம், நீங்கள் கேட்கவில்லை; நம் கண்கள் முன்பாகத் தீமை செய்தீர்கள், நமக்கு விருப்பமில்லாதவற்றை நீங்கள் தேர்ந்துகொண்டீர்கள்."
13. ஆதலால் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நம் ஊழியர்கள் உண்பார்கள், நீங்களோ பசியால் வாடுவீர்கள்;
14. இதோ, நம் ஊழியர்கள் பானம் அருந்துவார்கள், நீங்களோ தாகத்தால் வருந்துவீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள், நீங்களோ வெட்கத்தால் தலை கவிழ்வீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் இதய மகிழ்ச்சியால் பாடுவார்கள், நீங்களோ உள்ளத்தின் வருத்தத்தால் கூக்குரலிடுவீர்கள்; மனமொடிந்து புலம்பியழுவீர்கள்.
15. நம்மால் தேர்ந்து கொள்ளப் பட்டவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபனைப் பெயராக விட்டுச் செல்வீர்கள்; கடவுளாகிய ஆண்டவர் உங்களைக் கொன்று போடுவார்; தம்முடைய ஊழியர்களுக்கு வேறு பெயர் சூட்டுவார்.
16. இவ்வுலகில் ஆசீர்வதிக்கப்படுபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசீர்வதிக்கப்படுவான்; இவ்வுலகில் ஆணையிடுபவன், உண்மைக் கடவுளின் திருப்பெயரால் ஆணையிடுவான்; ஏனெனில் முந்திய இடையூறுகள் மறதியாய்ப் போயின; என் கண்களுக்கு மறைந்து போயின.
17. இதோ, புதிய வானத்தையும் புதிய பூமியையும் நாம் படைக்கிறோம்; முன்னையவை நினைவில் இருக்கமாட்டா; எண்ணத்திலும் தோன்ற மாட்டா.
18. நாம் படைக்கப் போவதைக் குறித்து நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து அக்களிப்பீர்கள்; ஏனெனில், இதோ நாம் யெருசலேமை அக்களிப்பாகவும், அதன் குடிமக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கப் போகிறோம்.
19. நாமும் யெருசலேமைக் குறித்து அக்களிப்போம், நம் மக்களை நினைத்து அகமகிழ்வோம்; இனி ஆங்கே அழுகுரலோ கூக்குரலோ கேட்கப்படாது.
20. அதில் சில நாட்களே வாழ்ந்த சிறுவனோ, தன் வாழ்நாளை நிறைவு செய்யாக் கிழவனோ இருக்கமாட்டார்கள்; ஏனெனில் சிறுவன் நூறு வயதினனாய் இறப்பான்; நூறு வயதுள்ள பாவியோ சபிக்கப்படுவான்.
21. அவர்கள் வீடுகள் கட்டிக் குடியிருப்பார்கள்; திராட்சைச் கொடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பார்கள்.
22. வேறொருவன் குடியிருக்கும்படி அவர்கள் வீடு கட்ட மாட்டார்கள்; அந்நியன் சாப்பிடும்படி திராட்சைக் கொடிகளை நடமாட்டார்கள். மரங்களின் வயதைப் போல நம்முடைய மக்களின் நாட்களும் இருக்கும்; நம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் வேலைகளின் பயனைத் துய்ப்பார்கள்.
23. அவர்கள் வீணுக்கு உழைப்பதில்லை; அழிவதற்கென்று பிள்ளைகளைப் பெற மாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் வழித் தோன்றல்கள்; அவர்களுடைய புதல்வர்களும் அத்தகையவர்களே.
24. அவர்கள் கூக்குரலிடுவதற்கு முன்பே நாம் செவிசாய்ப்போம்; அவர்கள் இன்னும் பேசிக்கொண்டிருக்கும் போதே நாம் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்போம்.
25. ஓநாயும் செம்மறியும் ஒன்றாய் மேயும்; சிங்கமும் மாடும் வைக்கோலைத் தின்னும். பாம்புக்கு மண் உணவாகும்; நமது பரிசுத்த மலையெங்கும் அவை யாரையும் துன்புறுத்த மாட்டா, கொலை செய்யமாட்டா, என்கிறார் ஆண்டவர்."
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 65 / 66
1 முன் நம்மை யார் என விசாரிக்காதவர்கள் நம்மைத் தேட இடங்கொடுத்தோம்; நம்மைத் தேடாதவர்கள் நம்மைக் கண்டுகொள்ள இடங்கொடுத்தோம்; நமது பெயரைக் கூவியழைக்காத மக்களினத்தை நோக்கி, நாம், "இதோ இருக்கிறோம், இதோ இருக்கிறோம்" என்று சொன்னோம். 2 தங்களுடைய எண்ணங்களையே பின்பற்றிக் கொண்டு, தீய வழியில் நடக்கும்அவிசுவாசிகளான மக்கள்பால் நாள் முழுவதும் நம் கைகளை நீட்டி அழைத்தோம். 3 அந்த மக்கள் நமக்குக் கோப மூட்டும்படியானதையே எந்நேரமும் நம் கண்கள்முன் செய்கின்றனர்; தோட்டங்களில் பலியிடுகின்றனர்; செங்கற் பீடங்கள் மேல் பலி நிறைவேற்றுகின்றனர். 4 கல்லறைகளில் வாழ்கிறார்கள்; இருண்ட மூலைகளில் படுத்து உறங்குகிறார்கள்; பன்றி இறைச்சியைத் தின்கிறார்கள்; அருவருப்பான மதுவைத் தங்கள் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள். 5 இவ்வாறிருந்தும் மற்றவர்களைப் பார்த்து, "எட்டி நில், கிட்டே வராதே; நீ தீட்டுள்ளவன், நானோ தூய்மையானவன்" என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் நமக்கு எரிச்சலூட்டும் புகை போலும், நாள் முழுவதும் எரிகிற நெருப்புப் போலும் இருக்கிறார்கள். 6 இதோ, நமது முன்னிலையில் எழுதப்பட்டுள்ளது: "நாம் அமைதியாய் இருக்கப் போவதில்லை; அவர்களுக்குக் கைம்மாறு கொடுப்போம், மடியில் அளந்து போடுவோம். 7 அவர்களின் அக்கிரமங்களையும், மலைகளின் மேல் பலியிட்டுக் குன்றுகளின் மேல் சிலை வழிபாடு செய்து நம்மை அவமானப்படுத்திய அவர்களுடைய தந்தையர்களின் அக்கிரமங்களையும் ஒருமிக்கத் தண்டிப்போம்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய பலனை அவர்கள் மடியில் அளந்து கொடுப்போம், என்கிறார் ஆண்டவர்." 8 திராட்சைக் குலையில் இரசம் இருந்தால், 'அதை அழிக்காதே, அது ஆசீர்வாதம்" என்று மக்கள் சொல்லுகிறார்கள்; அதுபோலவே, நம் அடியார்களை முன்னிட்டும் செய்வோம்; இஸ்ராயேல் முழுவதையுமே அழித்துவிட மாட்டோம். 9 மேலும் யாக்கோபினின்று சந்ததியையும், யூதாவிலிருந்து நம் மலைகளை உடைமையாக்கிக் கொள்பவனையும் தோன்றச் செய்வோம்; நம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் அந்நாட்டை உரிமைச் சொத்தாய் பெறுவார்கள்; நம் ஊழியர்கள் அங்கே வாழ்வார்கள். 10 நம்மை தேடிவந்த நம்மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆட்டு மந்தைகளின் கிடையாகவும், ஆங்கோர் பள்ளத்தாக்கு மாட்டுத் தொழுவமாகவும் இருக்கும். 11 ஆனால் ஆண்டவரை கைவிட்டு நமது பரிசுத்த மலையை மறந்தவர்களே, அதிர்ஷ்ட தேவதைக்குப் பீடம் சமர்ப்பித்து விதியின் தெய்வத்துக்குப் பானப்பலிகளை வார்க்கிறவர்களே, 12 உங்களை நாம் ஒருவர் பின் ஒருவராய் வாளுக்கிரையாக்குவோம், அந்தப் படுகொலையில் நீங்கள் யாவரும் மடிவீர்கள்; ஏனெனில் நாம் கூப்பிட்டோம், நீங்கள் பதில் தரவில்லை, நாம் பேசினோம், நீங்கள் கேட்கவில்லை; நம் கண்கள் முன்பாகத் தீமை செய்தீர்கள், நமக்கு விருப்பமில்லாதவற்றை நீங்கள் தேர்ந்துகொண்டீர்கள்." 13 ஆதலால் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நம் ஊழியர்கள் உண்பார்கள், நீங்களோ பசியால் வாடுவீர்கள்; 14 இதோ, நம் ஊழியர்கள் பானம் அருந்துவார்கள், நீங்களோ தாகத்தால் வருந்துவீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள், நீங்களோ வெட்கத்தால் தலை கவிழ்வீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் இதய மகிழ்ச்சியால் பாடுவார்கள், நீங்களோ உள்ளத்தின் வருத்தத்தால் கூக்குரலிடுவீர்கள்; மனமொடிந்து புலம்பியழுவீர்கள். 15 நம்மால் தேர்ந்து கொள்ளப் பட்டவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபனைப் பெயராக விட்டுச் செல்வீர்கள்; கடவுளாகிய ஆண்டவர் உங்களைக் கொன்று போடுவார்; தம்முடைய ஊழியர்களுக்கு வேறு பெயர் சூட்டுவார். 16 இவ்வுலகில் ஆசீர்வதிக்கப்படுபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசீர்வதிக்கப்படுவான்; இவ்வுலகில் ஆணையிடுபவன், உண்மைக் கடவுளின் திருப்பெயரால் ஆணையிடுவான்; ஏனெனில் முந்திய இடையூறுகள் மறதியாய்ப் போயின; என் கண்களுக்கு மறைந்து போயின. 17 இதோ, புதிய வானத்தையும் புதிய பூமியையும் நாம் படைக்கிறோம்; முன்னையவை நினைவில் இருக்கமாட்டா; எண்ணத்திலும் தோன்ற மாட்டா. 18 நாம் படைக்கப் போவதைக் குறித்து நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து அக்களிப்பீர்கள்; ஏனெனில், இதோ நாம் யெருசலேமை அக்களிப்பாகவும், அதன் குடிமக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கப் போகிறோம். 19 நாமும் யெருசலேமைக் குறித்து அக்களிப்போம், நம் மக்களை நினைத்து அகமகிழ்வோம்; இனி ஆங்கே அழுகுரலோ கூக்குரலோ கேட்கப்படாது. 20 அதில் சில நாட்களே வாழ்ந்த சிறுவனோ, தன் வாழ்நாளை நிறைவு செய்யாக் கிழவனோ இருக்கமாட்டார்கள்; ஏனெனில் சிறுவன் நூறு வயதினனாய் இறப்பான்; நூறு வயதுள்ள பாவியோ சபிக்கப்படுவான். 21 அவர்கள் வீடுகள் கட்டிக் குடியிருப்பார்கள்; திராட்சைச் கொடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பார்கள். 22 வேறொருவன் குடியிருக்கும்படி அவர்கள் வீடு கட்ட மாட்டார்கள்; அந்நியன் சாப்பிடும்படி திராட்சைக் கொடிகளை நடமாட்டார்கள். மரங்களின் வயதைப் போல நம்முடைய மக்களின் நாட்களும் இருக்கும்; நம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் வேலைகளின் பயனைத் துய்ப்பார்கள். 23 அவர்கள் வீணுக்கு உழைப்பதில்லை; அழிவதற்கென்று பிள்ளைகளைப் பெற மாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் வழித் தோன்றல்கள்; அவர்களுடைய புதல்வர்களும் அத்தகையவர்களே. 24 அவர்கள் கூக்குரலிடுவதற்கு முன்பே நாம் செவிசாய்ப்போம்; அவர்கள் இன்னும் பேசிக்கொண்டிருக்கும் போதே நாம் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்போம். 25 ஓநாயும் செம்மறியும் ஒன்றாய் மேயும்; சிங்கமும் மாடும் வைக்கோலைத் தின்னும். பாம்புக்கு மண் உணவாகும்; நமது பரிசுத்த மலையெங்கும் அவை யாரையும் துன்புறுத்த மாட்டா, கொலை செய்யமாட்டா, என்கிறார் ஆண்டவர்."
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 65 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References