தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. வானத்தைக் கிழித்து நீர் இறங்கி வரமாட்டீரா! - மலைகள் உம் திருமுன் கரைந்து போகுமே!
2. அவை நெருப்பில் எரியும் விறகைப் போலவும், நெருப்பால் கொதிக்கும் தண்ணீரைப் போலவும் ஆகும். உமது பெயர் உம் பகைவர்களுக்கு விளங்கவும், புறவினத்தார் உம் திருமுன் நடுங்கவும் நீர் வரமாட்டீரா!
3. நாங்கள் எதிர்பாராத அச்சத்துக்குரிய விந்தைகளை நீர் செய்த போது, நீர் இறங்கி வந்தீர், உம் திருமுன் மலைகள் உருகிப் போயின.
4. தமக்காகக் காத்திருப்பவர்களுக்கென செயலாற்றும் கடவுள் உண்டோ? உம்மையன்றி வேறொருவர் உண்டென்று தொடக்கத்திலிருந்து யாரும் கேள்விப்பட்டதுமில்லை, செவியுற்றதுமில்லை, கண்ணால் கண்டதுமில்லை.
5. மகிழ்ச்சியோடு நீதியைக் கடைப்பிடிப்பவனையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைவு கூர்கிறவர்களையும், நீர் எதிர்கொண்டு வந்து சந்திக்கிறீர்; இதோ நீர் எங்கள் மேல் சினங்கொண்டீர், நாங்களோ பாவஞ்செய்தோம்; அவற்றிலேயே நாங்கள் நெடுங்காலமாய் உழல்கிறோம், எங்களுக்கும் மீட்புக் கிடைக்குமோ?
6. நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்ட மனிதனைப் போல் ஆனோம், எங்கள் நீதியின் செயல்கள் யாவும் கறைபட்ட ஆடை போலாயின; இலை போல நாங்கள் அனைவரும் உதிர்ந்து போனோம், காற்றைப் போல் எங்கள் அக்கிரமங்கள் எங்களை அடித்துப் போயின.
7. உமது பெயரைக் கூவியழைப்பவன் எவனுமில்லை, எழுந்து உம்மைப் பற்றிக்கொள்பவன் ஒருவனுமில்லை; எங்களிடமிருந்து உமது முகத்தை மறைத்துக் கொண்டீர், எங்கள் அக்கிரமங்களின் கையில் எங்களை விட்டு விட்டீர்.
8. ஆயினும், ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை, நாங்கள் களிமண், நீர் எங்களை வனைபவர்; நாங்கள் யாவரும் உம்முடைய கைவேலைப் பாடுகள்.
9. ஆண்டவரே, கடுமையாய் எங்கள் மேல் சினங்கொள்ளாதீர், இனியும் எங்கள் அக்கிரமத்தை நினைவு கூராதீர்; இதோ பாரும், நாங்கள் எல்லாரும் உம் மக்கள் தானே!
10. உம் பரிசுத்த பட்டணங்கள் பாலை நிலமாகி விட்டன, சீயோன் பாழடைந்து போயிற்று, யெருசலேம் பாழ்வெளியாகி விட்டது.
11. பரிசுத்தமும் மகிமையும் வாய்ந்த எங்கள் கோயில், எங்கள் தந்தையர் உம்மைப் புகழ்ந்து கொண்டாடிய அந்த இடம் தீக்கிரையாகி அழிந்ததே; எங்கள் சிறந்த கட்டடங்கள் அனைத்தும் பாழடைந்த நிலையில் கிடக்கின்றனவே.
12. ஆண்டவரே, இவற்றுக்குப் பின்னும் நீர் அமைந்திருப்பீரோ? மௌனங் காத்து, இன்னும் கடுமையாய் எங்களைத் துன்புறுத்துவீரோ?

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 64 of Total Chapters 66
ஏசாயா 64:1

×

Alert

×

tamil Letters Keypad References