தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. சீயோனைப் பற்றிப் பேசாமல் நான் மௌனமாய் இருக்கமாட்டேன், யெருசலேமின் காரியத்தில் சோர்வடைய மாட்டேன்; அன் நீதி சுடரொளி போல வெளிப்படு மட்டும், அதன் மீட்பு தீப்பந்தம் போலச் சுடர் விடும் வரையிலும் நான் அமைதியடைய மாட்டேன்.
2. புறவினத்தார் உன் நீதியைக் காண்பார்கள், அரசர்கள் அனைவரும் உன் மகிமையை நோக்குவார்கள்; புதுப் பெயர் ஒன்று உனக்கு வழங்கப்படும், ஆண்டவரின் நாவே அந்தப் பெயரைச் சூட்டும் .
3. ஆண்டவரின் கையில் நீ மகிமையின் மணி முடியாகவும், உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாகவும் இருப்பாய்.
4. தள்ளப்பட்டவள்' என நீ இனி அழைக்கப்படமாட்டாய், 'கைவிடப்பட்டவள்' என உன் நாடும் இனிச் சொல்லப்படாது, 'என் அன்புடையாள்' என நீ அழைக்கப்படுவாய், 'மணமானவள்' என உன் நாடும் சொல்லப்படும்; ஏனெனில் ஆண்டவர் உன் மேல் அன்பு கூர்ந்தார், உன் நாடு இறைவனுக்கு வாழ்க்கைப்படும்.
5. இளைஞன் கன்னிப் பெண்ணை மணந்து கொள்வது போல், உன்னை அமைத்தவர் உன்னை மணந்து கொள்வார்; மணவாளன் தன் மணவாட்டியைக் குறித்து மகிழ்வது போல், உன் கடவுள் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவார்.
6. யெருசலேமே, உன் மதில்கள் மேல் சாமக் காவலரை ஏற்படுத்தினோம், இரவும் பகலும் நாள் முழுதும் அவர்கள் மௌனமாய் இரார்கள்; ஆண்டவரை நினைவு கொள்ளும் நீங்கள், என்றென்றும் வாய் மூடிக் கிடக்காதீர்கள்.
7. அவர் யெருசலேமை நிலை நாட்டி, அதை உலகில் புகழுக்குரியதாய்ச் செய்யும் வரையில் அவரை அமைதியாய் இருக்க விடாதீர்கள்.
8. ஆண்டவர் தம் வலக்கையால் ஆணையிட்டு, வல்லமையுள்ள தம் கரமுயர்த்தி உறுதி சொன்னார்: "உன் கோதுமையைப் பகைவர்களுக்கு உணவாக இனி நாம் தரவே மாட்டோம்; நீ உழைத்து பிழிந்த திராட்சை இரசத்தைப் புறவினத்தாரின் மக்கள் குடிக்க விடமாட்டோம்.
9. ஆனால் அறுவடை செய்தவர்களே அதைச் சாப்பிடுவார்கள், அதற்காக ஆண்டவரை வாழ்த்துவார்கள்; திராட்சைப் பழங்களைச் சேர்த்தவர்களே அதன் இரசத்தை நமது திருக்கோயிலின் முற்றத்தில் பருகுவார்கள்."
10. புறப்படுங்கள், வாயில்கள் வழியாய்ப் புறப்படுங்கள், வருகின்ற மக்கட்கு வழியைத் தயாரியுங்கள் வழியைச் செவ்வைப்படுத்துங்கள், கற்களை அகற்றுங்கள், மக்களினங்களுக்கு அடையாளக் கொடி ஏற்றுங்கள்.
11. இதோ, உலகத்தின் எல்லை வரை கேட்கும்படி, ஆண்டவர் அறிவித்துச் சொன்னதாவது: "இதோ, உன் மீட்பர் வருகின்றார், அவருடைய வெற்றிப் பரிசு அவரோடு இருக்கிறது; அவர் முன்னால் அவருடைய வெற்றிச் சின்னங்கள் வருகின்றன" என்று சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்.
12. அப்போது, 'பரிசுத்த மக்கள்' என அவர்களை அழைப்பார்கள், 'ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள்' என்பார்கள்; நீயோ 'தேடிக் கொள்ளப்பட்டவள்' எனப்படுவாய், 'கைவிடப்படாத நகரம்' என்று பெயர் பெறுவாய்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 62 of Total Chapters 66
ஏசாயா 62:15

×

Alert

×

tamil Letters Keypad References