தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. ஓசியாஸ் அரசன் இறந்த ஆண்டில், மிகவும் உயரமான ஓர் அரியணையின் மேல் ஆண்டவர் வீற்றிருப்பதைக் கண்டேன்; அவருடைய தொங்கலாடை திருக்கோயிலை நிரப்பி நின்றது.
2. அவருக்கு மேலே உயரத்தில் சேராபீன்கள் நின்றனர். ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; இரண்டு இறக்கைகளால் முகத்தை மூடிக்கொண்டனர்; இன்னும் இரண்டினால் கால்களை மறைத்துக் கொண்டனர்; மற்ற இரண்டினால் பறந்தனர்.
3. ஒருவரை ஒருவர் உரத்த குரலில் கூப்பிட்டு, "சேனைகளின் ஆண்டவர் பரிசுத்தர், பரிசுத்தர், பரித்தர்; உலக முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்துள்ளது" என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
4. கூறியவரின் குரலொலியால் வாயில் நிலைகளெல்லாம் அதிர்ந்தன; கோயில் முழுவதும் புகை நிறைந்தது.
5. அப்பொழுது நான்: "ஐயோ, நான் அழிந்தேன்; ஏனெனில் அசுத்த உதடுகள் கொண்டவன் நான்; அசுத்த உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்கிற நான், சேனைகளின் ஆண்டவராகிய அரசரை, என் கண்களால் கண்டேனே!" என்றேன்.
6. அப்பொழுது, சேராபீன்களுள் ஒருவர் பீடத்திலிருந்து எரி நெருப்புப் பொறியொன்றைக் குறட்டினால் எடுத்துக் கொண்டு என்னிடம் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு,
7. இதோ, இந் நெருப்புத் தழல் உன் இதழ்களைத் தொட்டது; ஆதலின் உன் குற்றம் நீக்கப்பட்டது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது" என்றார்.
8. மேலும் ஆண்டவருடைய குரலைக் கேட்டேன்; அவர், "யாரை அனுப்புவோம்? நமக்காக எவன் போவான்?" என்றார். உடனே நான், "இதோ, அடியேன் என்னை அனுப்பும்" என்றேன்.
9. அப்பொழுது அவர், "நீ போய் இந்த மக்களுக்கு, 'கேட்டுக் கேட்டும் நீங்கள் உணராதீர்கள், பார்த்துப் பார்த்தும் நீங்கள் அறியாதீர்கள்' என்று சொல்.
10. அவர்கள் கண்ணால் காணாமலும் காதால் கேட்காமலும் உள்ளத்தால் உணராமலும் அவர்கள் மனந்திரும்பிக் குணமாகாமலும் இருக்கும்படி இம்மக்களின் உள்ளத்தை மழுங்கச் செய்; காதுகளை மந்தமாக்கு; கண்களை மூடு" என்றார்.
11. அதற்கு நான், "எவ்வளவு காலத்திற்கு, ஆண்டவரே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "பட்டணங்கள் பாழாகிக் குடியிருப்பாரற்று, வீடுகளில் மனிதர்களின்றி, நாடு முற்றிலும் பாழடைந்து
12. ஆண்டவர் மனிதர்களைத் தொலை நாட்டுக்குக் கொண்டு போனபின், கைவிடப்பட்ட இடங்கள் நாட்டில் பலவாகும் வரையில்!
13. பத்தில் ஒரு பகுதி அதில் எஞ்சியிருந்தாலும் அதுவும் அழிக்கப்படும், தேவதாரு மரமோ கருவாலி மரமோ வெட்டி வீழ்த்தப்பட்டபின் அதில் அடித் தண்டு எஞ்சியிருப்பது போலவே அதுவும் இருக்கும்" என்றார். அந்த அடித் தண்டு பரிசுத்த வித்தாகும்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 66
ஏசாயா 6:13
1 ஓசியாஸ் அரசன் இறந்த ஆண்டில், மிகவும் உயரமான ஓர் அரியணையின் மேல் ஆண்டவர் வீற்றிருப்பதைக் கண்டேன்; அவருடைய தொங்கலாடை திருக்கோயிலை நிரப்பி நின்றது. 2 அவருக்கு மேலே உயரத்தில் சேராபீன்கள் நின்றனர். ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; இரண்டு இறக்கைகளால் முகத்தை மூடிக்கொண்டனர்; இன்னும் இரண்டினால் கால்களை மறைத்துக் கொண்டனர்; மற்ற இரண்டினால் பறந்தனர். 3 ஒருவரை ஒருவர் உரத்த குரலில் கூப்பிட்டு, "சேனைகளின் ஆண்டவர் பரிசுத்தர், பரிசுத்தர், பரித்தர்; உலக முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்துள்ளது" என்று கூறிக் கொண்டிருந்தார்கள். 4 கூறியவரின் குரலொலியால் வாயில் நிலைகளெல்லாம் அதிர்ந்தன; கோயில் முழுவதும் புகை நிறைந்தது. 5 அப்பொழுது நான்: "ஐயோ, நான் அழிந்தேன்; ஏனெனில் அசுத்த உதடுகள் கொண்டவன் நான்; அசுத்த உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்கிற நான், சேனைகளின் ஆண்டவராகிய அரசரை, என் கண்களால் கண்டேனே!" என்றேன். 6 அப்பொழுது, சேராபீன்களுள் ஒருவர் பீடத்திலிருந்து எரி நெருப்புப் பொறியொன்றைக் குறட்டினால் எடுத்துக் கொண்டு என்னிடம் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, 7 இதோ, இந் நெருப்புத் தழல் உன் இதழ்களைத் தொட்டது; ஆதலின் உன் குற்றம் நீக்கப்பட்டது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது" என்றார். 8 மேலும் ஆண்டவருடைய குரலைக் கேட்டேன்; அவர், "யாரை அனுப்புவோம்? நமக்காக எவன் போவான்?" என்றார். உடனே நான், "இதோ, அடியேன் என்னை அனுப்பும்" என்றேன். 9 அப்பொழுது அவர், "நீ போய் இந்த மக்களுக்கு, 'கேட்டுக் கேட்டும் நீங்கள் உணராதீர்கள், பார்த்துப் பார்த்தும் நீங்கள் அறியாதீர்கள்' என்று சொல். 10 அவர்கள் கண்ணால் காணாமலும் காதால் கேட்காமலும் உள்ளத்தால் உணராமலும் அவர்கள் மனந்திரும்பிக் குணமாகாமலும் இருக்கும்படி இம்மக்களின் உள்ளத்தை மழுங்கச் செய்; காதுகளை மந்தமாக்கு; கண்களை மூடு" என்றார். 11 அதற்கு நான், "எவ்வளவு காலத்திற்கு, ஆண்டவரே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "பட்டணங்கள் பாழாகிக் குடியிருப்பாரற்று, வீடுகளில் மனிதர்களின்றி, நாடு முற்றிலும் பாழடைந்து 12 ஆண்டவர் மனிதர்களைத் தொலை நாட்டுக்குக் கொண்டு போனபின், கைவிடப்பட்ட இடங்கள் நாட்டில் பலவாகும் வரையில்! 13 பத்தில் ஒரு பகுதி அதில் எஞ்சியிருந்தாலும் அதுவும் அழிக்கப்படும், தேவதாரு மரமோ கருவாலி மரமோ வெட்டி வீழ்த்தப்பட்டபின் அதில் அடித் தண்டு எஞ்சியிருப்பது போலவே அதுவும் இருக்கும்" என்றார். அந்த அடித் தண்டு பரிசுத்த வித்தாகும்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References