தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. உரத்த குரலில் கத்திப் பேசு, நிறுத்தி விடாதே, எக்காளத்தைப் போல் உன் குரலை உயர்த்து; நம் மக்களுக்கு அவர்களுடைய அக்கிரமத்தை அறிவி, யாக்கோபின் வீட்டார்க்கு அவர்கள் பாவத்தைத் தெரிவி.
2. நீதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் போலவும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கைவிடாதவர்கள் போலவும் நடித்து, நாடோறும் நம்மைத் தேடுகிறார்கள், நீதியான முறைமைகளைப் பற்றி நம்மிடம் கேட்கிறார்கள், கடவுளை அணுகி வர விழைகிறார்கள்.
3. நாங்கள் உண்ணா நோன்பிருந்தோம், நீர் கண்ணோக்காததேன்? எங்களை நாங்களே ஒடுக்கினோம், நீர் அதை அறியாததேன்?' என்கிறார்கள். இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உங்கள் விருப்பத்தையே தேடுகிறீர்கள்; உங்கள் கூலியாட்களை வாட்டி வதைக்கிறீர்கள்.
4. இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் போது, சண்டை சச்சரவுகள் போட்டுப் பிறரை அநியாயமாய் அடிக்கிறீர்கள். இன்று வரை நீங்கள் நோன்பிருந்தது போல் இருந்தால், உங்கள் கூக்குரல் உன்னதத்திற்கு எட்டாது.
5. மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா? நாணலைப் போலத் தலை குணிவதும், கோணி ஆடையை உடுப்பதும், சாம்பலில் உட்காருவதுந்தான் நமக்கேற்ற நோன்பா? இதைத் தான் நோன்பென்றும், ஆண்டவருக்குகந்த நாளென்றும் சொல்லுகிறாயோ?
6. அக்கிரமத்தின் சங்கிலிகளை அறுத்துவிடு, அழுத்தியிறுத்தும் நுகத்தடிகளை இறக்கு; ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாய் விடுதலை செய், சுமையானதையெல்லாம் உடைத்தெறி;
7. பசித்திருப்பவனுக்கு உன் அப்பத்தைப் பகிர்ந்து கொடு, ஏழைகளுக்கும் அந்நியருக்கும் உன் வீட்டில் தங்குவதற்கு இடங்கொடு; ஆடையில்லாதவனைக் கண்டால் அவனைப் போர்த்து; உன் இனத்தானை அவமதிக்காதே; இதுவன்றோ நாம் விரும்பும் மேலான நோன்பு?
8. அப்போது, உன் ஒளி காலைக் கதிரவன் போலத் தோன்றும், விரைவில் உனக்கு நலம் கிடைக்கும்; உன் நீதி உனக்கு முன் நடக்கும், ஆண்டவருடைய மகிமை உன்னைப் பின்தொடரும்.
9. அப்போது, ஆண்டவரை கூவியழைப்பாய், அவரும் உன் மன்றாட்டைக் கேட்டருள்வார்; அவரை நோக்கிக் கூக்குரலிடுவாய், அவரும், 'இதோ இருக்கிறோம்' என்பார். "உன் நடுவிலிருந்து நுகத்தடியைத் தள்ளிவிட்டு, உன் அயலானுக்கு எதிராய்க் கையோங்காமல், அடாததொன்றையும் சொல்லாமல் இருந்தால்,
10. பசித்திருப்பவனுக்கு உன் உணவைப் பகிர்ந்து, துன்புற்றவன் விருப்பத்தை நிறைவு செய்தால், உன் வெளிச்சம் இருள் நடுவில் உதயமாகும், உன் காரிருள் பட்டப் பகல் போல் இருக்கும்.
11. ஆண்டவர் என்றென்றும் உன்னை வழி நடத்துவார், பாலை நிலத்தில் உன் உள்ளம் நிறைவு பெறச் செய்வார்; உன் எலும்புகளை உறுதிப்படுத்துவார், நீர் வளமிக்க தோட்டம் போலும் வற்றாத நீரூற்றுப் போலும் விளங்கச் செய்வார்.
12. பல்லாண்டுகளாய்ப் பாழடைந்து கிடந்த உன் இடங்கள் கட்டப்படும்; தலைமுறை தலைமுறையாய்க் கிடந்த அடிப்படைகளை நீ கட்டியெழுப்புவாய்; மதிற்சுவர் உடைப்புகளைக் கட்டுகிறவன் என்றும், மக்கள் குடியேறும்படி தெருக்களை அமைக்கிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
13. ஓய்வு நாள் ஒழுங்குகளை உதறித் தள்ளாமல், நமது பரிசுத்த நாளில் உன் விருப்பம் போல் செய்யாமலிருந்தால்; ஓய்வு நாளை இன்ப நாள் என்றும், ஆண்டவருடைய பரிசுத்த நாளை மகிமையான நாள் என்றும் போற்றினால்; அன்று உன் மனம் போன போக்குப்படி செல்லாமல், உன் விருப்பம் போலச் செய்யாமல், வீண் பேச்சுகளைப் பேசாமல் அந் நாளை மதித்து நடந்தால்,
14. அப்போது ஆண்டவரில் பேரின்பம் அடைவாய், நாட்டின் உயரமான இடங்களிலெல்லாம் உன்னை வெற்றிப் பவனியாய்க் கொண்டு செல்வோம்; உன் தந்தையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்திலிருந்து உனக்கு உணவு வழங்குவோம்; ஆண்டவரே இதைத் திருவாய் மலர்ந்தார்."

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 58 / 66
1 உரத்த குரலில் கத்திப் பேசு, நிறுத்தி விடாதே, எக்காளத்தைப் போல் உன் குரலை உயர்த்து; நம் மக்களுக்கு அவர்களுடைய அக்கிரமத்தை அறிவி, யாக்கோபின் வீட்டார்க்கு அவர்கள் பாவத்தைத் தெரிவி. 2 நீதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் போலவும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கைவிடாதவர்கள் போலவும் நடித்து, நாடோறும் நம்மைத் தேடுகிறார்கள், நீதியான முறைமைகளைப் பற்றி நம்மிடம் கேட்கிறார்கள், கடவுளை அணுகி வர விழைகிறார்கள். 3 நாங்கள் உண்ணா நோன்பிருந்தோம், நீர் கண்ணோக்காததேன்? எங்களை நாங்களே ஒடுக்கினோம், நீர் அதை அறியாததேன்?' என்கிறார்கள். இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உங்கள் விருப்பத்தையே தேடுகிறீர்கள்; உங்கள் கூலியாட்களை வாட்டி வதைக்கிறீர்கள். 4 இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் போது, சண்டை சச்சரவுகள் போட்டுப் பிறரை அநியாயமாய் அடிக்கிறீர்கள். இன்று வரை நீங்கள் நோன்பிருந்தது போல் இருந்தால், உங்கள் கூக்குரல் உன்னதத்திற்கு எட்டாது. 5 மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா? நாணலைப் போலத் தலை குணிவதும், கோணி ஆடையை உடுப்பதும், சாம்பலில் உட்காருவதுந்தான் நமக்கேற்ற நோன்பா? இதைத் தான் நோன்பென்றும், ஆண்டவருக்குகந்த நாளென்றும் சொல்லுகிறாயோ? 6 அக்கிரமத்தின் சங்கிலிகளை அறுத்துவிடு, அழுத்தியிறுத்தும் நுகத்தடிகளை இறக்கு; ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாய் விடுதலை செய், சுமையானதையெல்லாம் உடைத்தெறி; 7 பசித்திருப்பவனுக்கு உன் அப்பத்தைப் பகிர்ந்து கொடு, ஏழைகளுக்கும் அந்நியருக்கும் உன் வீட்டில் தங்குவதற்கு இடங்கொடு; ஆடையில்லாதவனைக் கண்டால் அவனைப் போர்த்து; உன் இனத்தானை அவமதிக்காதே; இதுவன்றோ நாம் விரும்பும் மேலான நோன்பு? 8 அப்போது, உன் ஒளி காலைக் கதிரவன் போலத் தோன்றும், விரைவில் உனக்கு நலம் கிடைக்கும்; உன் நீதி உனக்கு முன் நடக்கும், ஆண்டவருடைய மகிமை உன்னைப் பின்தொடரும். 9 அப்போது, ஆண்டவரை கூவியழைப்பாய், அவரும் உன் மன்றாட்டைக் கேட்டருள்வார்; அவரை நோக்கிக் கூக்குரலிடுவாய், அவரும், 'இதோ இருக்கிறோம்' என்பார். "உன் நடுவிலிருந்து நுகத்தடியைத் தள்ளிவிட்டு, உன் அயலானுக்கு எதிராய்க் கையோங்காமல், அடாததொன்றையும் சொல்லாமல் இருந்தால், 10 பசித்திருப்பவனுக்கு உன் உணவைப் பகிர்ந்து, துன்புற்றவன் விருப்பத்தை நிறைவு செய்தால், உன் வெளிச்சம் இருள் நடுவில் உதயமாகும், உன் காரிருள் பட்டப் பகல் போல் இருக்கும். 11 ஆண்டவர் என்றென்றும் உன்னை வழி நடத்துவார், பாலை நிலத்தில் உன் உள்ளம் நிறைவு பெறச் செய்வார்; உன் எலும்புகளை உறுதிப்படுத்துவார், நீர் வளமிக்க தோட்டம் போலும் வற்றாத நீரூற்றுப் போலும் விளங்கச் செய்வார். 12 பல்லாண்டுகளாய்ப் பாழடைந்து கிடந்த உன் இடங்கள் கட்டப்படும்; தலைமுறை தலைமுறையாய்க் கிடந்த அடிப்படைகளை நீ கட்டியெழுப்புவாய்; மதிற்சுவர் உடைப்புகளைக் கட்டுகிறவன் என்றும், மக்கள் குடியேறும்படி தெருக்களை அமைக்கிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். 13 ஓய்வு நாள் ஒழுங்குகளை உதறித் தள்ளாமல், நமது பரிசுத்த நாளில் உன் விருப்பம் போல் செய்யாமலிருந்தால்; ஓய்வு நாளை இன்ப நாள் என்றும், ஆண்டவருடைய பரிசுத்த நாளை மகிமையான நாள் என்றும் போற்றினால்; அன்று உன் மனம் போன போக்குப்படி செல்லாமல், உன் விருப்பம் போலச் செய்யாமல், வீண் பேச்சுகளைப் பேசாமல் அந் நாளை மதித்து நடந்தால், 14 அப்போது ஆண்டவரில் பேரின்பம் அடைவாய், நாட்டின் உயரமான இடங்களிலெல்லாம் உன்னை வெற்றிப் பவனியாய்க் கொண்டு செல்வோம்; உன் தந்தையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்திலிருந்து உனக்கு உணவு வழங்குவோம்; ஆண்டவரே இதைத் திருவாய் மலர்ந்தார்."
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 58 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References