தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. தாகமாயிருப்பவர்களே, அனைவரும் நீரருகில் வாருங்கள், கையில் பணமில்லாதவர்களே, விரைந்து வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி திராட்சை இரசமும் பாலும் வாங்கிப் பருகுங்கள்!
2. அப்பமல்லாத ஒன்றுக்காகப் பணஞ் செலவிடுவானேன்? உங்களுக்கு நிறைவு தராத ஒன்றுக்காக உழைப்பானேன்? நாம் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள்; அப்போது சுவையானதை உண்பீர்கள், கொழுப்புள்ளதைப் புசித்து மகிழ்வீர்கள்.
3. செவிசாயுங்கள், நம்மிடம் வாருங்கள்; நாம் சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்; "தாவீதுக்கு நாம் வாக்களித்த அருள் வரங்களை நிலைப்பிக்க, உங்களோடு முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வோம்.
4. இதோ, மக்களுக்கு அவரைச் சாட்சியாகவும், புறவினத்தார்க்குத் தலைவராகவும் ஆளுநராகவும் ஏற்படுத்தினோம்.
5. யெருசலேமே, இதோ, நீ அறியாத மக்களைக் கூப்பிடுவாய், உன்னை அறிந்திராத இனத்தார், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தரும், உன் கடவுளுமாகிய ஆண்டவரை முன்னிட்டு உன்னிடம் ஓடி வாருவார்கள்.
6. ஆண்டவர் அருகிலும் தொலைவிலும் இருக்கிறார்: "ஆண்டவரைக் கண்டடையக் கூடிய போதே, அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே, அவரைக் கூவியழையுங்கள்
7. தீயவன் தன் தீநெறியையும், அநீதன் தன் எண்ணங்களையும் தள்ளிவிட்டு, ஆண்டவரிடம் திரும்பி வரட்டும், அவன் மேல் அவர் இரக்கம் காட்டுவார்; நம்முடைய கடவுளிடம் வரட்டும், ஏனெனில் மன்னிப்பு வழங்குவதில் அவர் வள்ளல்.
8. நம்முடைய எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல, நம்முடைய வழிகள் உங்கள் வழிகளல்ல, என்கிறார் ஆண்டவர்.
9. மண்ணிலிருந்து விண் மிக உயர்ந்திருப்பது போல் உங்கள் வழிகளை விட நம்முடைய வழிகளும், உங்கள் எண்ணங்களை விட நம்முடைய எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
10. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல், நிலத்தை நனைத்து, செழிப்பாக்கி, அதில் முளை கிளம்பி விளையும்படி செய்து, விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் தருகிறது.
11. அவ்வாறே, நம் வாயினின்று புறப்படும் வார்த்தையும் இருக்கும்; அது பயன் தராமல் நம்மிடம் திரும்பாது; நாம் விரும்பியதையெல்லாம் செய்து முடிக்கும்; எதற்காக நாம் அதை அனுப்பினோமோ, அதை நிறைவேற்றும்.
12. நீங்கள் மகிழ்ச்சியோடு புறப்படுவீர்கள், சமாதானத்தில் நடத்திச் செல்லப் படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் புகழ்பாடும், காட்டு மரங்களெல்லாம் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.
13. முட்செடிக்குப் பதிலாய்த் தேவதாரு முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாய் நறுமணச்செடி கிளம்பும்; இச்செயல் ஆண்டவர்க்குப் புகழ் தேடிக் கொடுக்கும், முடிவில்லா அடையாளமாய் என்றென்றும் நிலைக்கும்."

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 55 / 66
1 தாகமாயிருப்பவர்களே, அனைவரும் நீரருகில் வாருங்கள், கையில் பணமில்லாதவர்களே, விரைந்து வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி திராட்சை இரசமும் பாலும் வாங்கிப் பருகுங்கள்! 2 அப்பமல்லாத ஒன்றுக்காகப் பணஞ் செலவிடுவானேன்? உங்களுக்கு நிறைவு தராத ஒன்றுக்காக உழைப்பானேன்? நாம் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள்; அப்போது சுவையானதை உண்பீர்கள், கொழுப்புள்ளதைப் புசித்து மகிழ்வீர்கள். 3 செவிசாயுங்கள், நம்மிடம் வாருங்கள்; நாம் சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்; "தாவீதுக்கு நாம் வாக்களித்த அருள் வரங்களை நிலைப்பிக்க, உங்களோடு முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வோம். 4 இதோ, மக்களுக்கு அவரைச் சாட்சியாகவும், புறவினத்தார்க்குத் தலைவராகவும் ஆளுநராகவும் ஏற்படுத்தினோம். 5 யெருசலேமே, இதோ, நீ அறியாத மக்களைக் கூப்பிடுவாய், உன்னை அறிந்திராத இனத்தார், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தரும், உன் கடவுளுமாகிய ஆண்டவரை முன்னிட்டு உன்னிடம் ஓடி வாருவார்கள். 6 ஆண்டவர் அருகிலும் தொலைவிலும் இருக்கிறார்: "ஆண்டவரைக் கண்டடையக் கூடிய போதே, அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே, அவரைக் கூவியழையுங்கள் 7 தீயவன் தன் தீநெறியையும், அநீதன் தன் எண்ணங்களையும் தள்ளிவிட்டு, ஆண்டவரிடம் திரும்பி வரட்டும், அவன் மேல் அவர் இரக்கம் காட்டுவார்; நம்முடைய கடவுளிடம் வரட்டும், ஏனெனில் மன்னிப்பு வழங்குவதில் அவர் வள்ளல். 8 நம்முடைய எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல, நம்முடைய வழிகள் உங்கள் வழிகளல்ல, என்கிறார் ஆண்டவர். 9 மண்ணிலிருந்து விண் மிக உயர்ந்திருப்பது போல் உங்கள் வழிகளை விட நம்முடைய வழிகளும், உங்கள் எண்ணங்களை விட நம்முடைய எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. 10 மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல், நிலத்தை நனைத்து, செழிப்பாக்கி, அதில் முளை கிளம்பி விளையும்படி செய்து, விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் தருகிறது. 11 அவ்வாறே, நம் வாயினின்று புறப்படும் வார்த்தையும் இருக்கும்; அது பயன் தராமல் நம்மிடம் திரும்பாது; நாம் விரும்பியதையெல்லாம் செய்து முடிக்கும்; எதற்காக நாம் அதை அனுப்பினோமோ, அதை நிறைவேற்றும். 12 நீங்கள் மகிழ்ச்சியோடு புறப்படுவீர்கள், சமாதானத்தில் நடத்திச் செல்லப் படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் புகழ்பாடும், காட்டு மரங்களெல்லாம் கைகொட்டி ஆர்ப்பரிக்கும். 13 முட்செடிக்குப் பதிலாய்த் தேவதாரு முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாய் நறுமணச்செடி கிளம்பும்; இச்செயல் ஆண்டவர்க்குப் புகழ் தேடிக் கொடுக்கும், முடிவில்லா அடையாளமாய் என்றென்றும் நிலைக்கும்."
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 55 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References