தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ச்சியால் கூச்சலிடு! பிரசவ வேதனையுறாத மங்கையே, அக்களித்து ஆர்ப்பரி! ஏனெனில் கைவிடப்பட்டவளின் மக்கள் கணவனைக் கொண்டுள்ளவளின் மக்களை விடப் பலராயினர், என்கிறார் ஆண்டவர்.
2. உன் கூடாரத்தின் இடத்தை அகலப்படுத்து, உன் கூடாரத் துணிகளைத் தாராளமாய் விரித்து விடு; இன்னும் கயிறுகளை நீளமாக்கு, கயிறு கட்டும் முளைகளை உறுதிப்படுத்து.
3. நீ வலப்புறம் இடப்புறமாய்ப் பெருகி விரிவாய், உன் சந்ததியார் மக்களினங்களை உடைமையாக்கிக் கொள்வர்; பாழடைந்த நகரங்களில் குடியேறி வாழ்வர்.
4. அஞ்சாதே, ஏனெனில் நீ அவமானம் அடையமாட்டாய், கலங்காதே, ஏனெனில் நீ வெட்கத்துக்கு உள்ளாகமாட்டாய்; உன் இளமையின் வெட்கத்தை மறந்துவிடுவாய், உன் கைம்மையின் நிந்தையை இனி நினைக்கமாட்டாய்;
5. ஏனெனில் உன்னைப் படைத்தவரே உனக்குக் கணவன், சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்; இஸ்ராயேலின் பரிசுத்தரே உன் மீட்பர், உலகுக்கெல்லாம் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
6. ஏனெனில், கைவிடப்பட்டு மனம் நொந்தவளான மனைவியை அழைப்பது போலும், இளமை முதலே துணைவியாய் இருந்த ஒருத்தியை மணமுறிவுக்குப் பின் அழைப்பது போலும் ஆண்டவர் உன்னை அழைக்கிறார், என்கிறார் உன்னுடைய கடவுள்.
7. குறுகிய காலந்தான் நாம் உன்னைக் கைவிட்டோம், ஆனால் மிகுந்த இரக்கத்தோடு உன்னைச் சேர்த்துக் கொள்வோம்.
8. பொங்கிய கோபத்தில் ஒரு நொடிப் பொழுது உன்னிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டோம்; ஆயினும், முடிவில்லாத அன்போடு உன் மேல் இரக்கம் கொள்வோம், என்கிறார் உன் மீட்பராகிய ஆண்டவர்.
9. நோவே நாட்களில் நாம் செய்தது போல் இன்றும் செய்வோம்; நோவே காலத்துப் பெருவெள்ளம் இனி மேல் மண்ணுலகை மூழ்கடிக்காது என்று ஆணையிட்டுச் சொன்னது போல், உன் மேல் சினங்கொள்ளவே மாட்டோம் என்றும், உன்னைக் கண்டனம் செய்யமாட்டோம் என்றும் ஆணையிட்டு உனக்கும் சொல்லியுள்ளோம்.
10. மலைகள் நிலைபெயரலாம், குன்றுகள் அசைந்து போகலாம், ஆனால் உன்மீது நாம் கொண்ட அன்பு நிலை பெயராதிருக்கும்; நம் சமாதானத்தின் உடன்படிக்கை அசையாதிருக்கும், என்கிறார் உன் மேல் இரக்கம் கொள்ளும் ஆண்டவர்.
11. புயலால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதலின்றித் தவிக்கும், ஏழைப் பெண்ணான யெருசலேமே, இதோ நாமே உன் கற்களை மாணிக்கங்கள் மேல் அடுக்குவோம்; உனக்கு நீலக் கற்களால் அடிப்படை இடுவோம்.
12. உன் கோட்டைச் சுவரின் முகடுகளைச் சலவைக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும், உன் சுவர்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவோம்.
13. உன் மக்கள் அனைவருக்கும் ஆண்டவரே போதிப்பார், உன் புதல்வர்களுக்கு நிரம்பச் சமாதானம் இருக்கும்.
14. நீதியில் நீ நிலைநாட்டப் படுவாய், கொடுமை அகன்று போம், நீ அஞ்சமாட்டாய், பயம் ஒழிந்திருப்பாய், அது உன்னை அணுகாது.
15. எவனாவது போர்புரிய வந்தால், அவன் நம்மால் தூண்டப்பட்டு வரமாட்டான்; உன்னோடு எவனெவன் போர் தொடுப்பானோ அவனெல்லாம் உன் பொருட்டு வீழ்ச்சியடைவான்.
16. இதோ, தீயில் கரிகளைப் போட்டு ஊதி வேலை செய்து, போர்க்கருவி செய்யும் கொல்லனை நாமே படைத்தோம்; பாழாக்க வரும் கொலைகாரணையும் நாமே உண்டாக்கினோம்.
17. உனக்கு விரோதமாய்த் தயாரிக்கப்பட்ட படைக்கலம் உன்மேல் பயன்படுத்தப்படாது; உனக்குத் தண்டனை விதிக்க வழக்காடும் நாவை நீயே கண்டனம் செய்து அடக்கி விடுவாய். ஆண்டவருடைய ஊழியர்களின் உரிமைச் சொத்தும் அவர்களுக்கு எம்மிடம் கிடைக்கும் நீதியும் இதுவே, என்றார் ஆண்டவர்.

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 66
1 பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ச்சியால் கூச்சலிடு! பிரசவ வேதனையுறாத மங்கையே, அக்களித்து ஆர்ப்பரி! ஏனெனில் கைவிடப்பட்டவளின் மக்கள் கணவனைக் கொண்டுள்ளவளின் மக்களை விடப் பலராயினர், என்கிறார் ஆண்டவர். 2 உன் கூடாரத்தின் இடத்தை அகலப்படுத்து, உன் கூடாரத் துணிகளைத் தாராளமாய் விரித்து விடு; இன்னும் கயிறுகளை நீளமாக்கு, கயிறு கட்டும் முளைகளை உறுதிப்படுத்து. 3 நீ வலப்புறம் இடப்புறமாய்ப் பெருகி விரிவாய், உன் சந்ததியார் மக்களினங்களை உடைமையாக்கிக் கொள்வர்; பாழடைந்த நகரங்களில் குடியேறி வாழ்வர். 4 அஞ்சாதே, ஏனெனில் நீ அவமானம் அடையமாட்டாய், கலங்காதே, ஏனெனில் நீ வெட்கத்துக்கு உள்ளாகமாட்டாய்; உன் இளமையின் வெட்கத்தை மறந்துவிடுவாய், உன் கைம்மையின் நிந்தையை இனி நினைக்கமாட்டாய்; 5 ஏனெனில் உன்னைப் படைத்தவரே உனக்குக் கணவன், சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்; இஸ்ராயேலின் பரிசுத்தரே உன் மீட்பர், உலகுக்கெல்லாம் கடவுள் என அழைக்கப்படுகிறார். 6 ஏனெனில், கைவிடப்பட்டு மனம் நொந்தவளான மனைவியை அழைப்பது போலும், இளமை முதலே துணைவியாய் இருந்த ஒருத்தியை மணமுறிவுக்குப் பின் அழைப்பது போலும் ஆண்டவர் உன்னை அழைக்கிறார், என்கிறார் உன்னுடைய கடவுள். 7 குறுகிய காலந்தான் நாம் உன்னைக் கைவிட்டோம், ஆனால் மிகுந்த இரக்கத்தோடு உன்னைச் சேர்த்துக் கொள்வோம். 8 பொங்கிய கோபத்தில் ஒரு நொடிப் பொழுது உன்னிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டோம்; ஆயினும், முடிவில்லாத அன்போடு உன் மேல் இரக்கம் கொள்வோம், என்கிறார் உன் மீட்பராகிய ஆண்டவர். 9 நோவே நாட்களில் நாம் செய்தது போல் இன்றும் செய்வோம்; நோவே காலத்துப் பெருவெள்ளம் இனி மேல் மண்ணுலகை மூழ்கடிக்காது என்று ஆணையிட்டுச் சொன்னது போல், உன் மேல் சினங்கொள்ளவே மாட்டோம் என்றும், உன்னைக் கண்டனம் செய்யமாட்டோம் என்றும் ஆணையிட்டு உனக்கும் சொல்லியுள்ளோம். 10 மலைகள் நிலைபெயரலாம், குன்றுகள் அசைந்து போகலாம், ஆனால் உன்மீது நாம் கொண்ட அன்பு நிலை பெயராதிருக்கும்; நம் சமாதானத்தின் உடன்படிக்கை அசையாதிருக்கும், என்கிறார் உன் மேல் இரக்கம் கொள்ளும் ஆண்டவர். 11 புயலால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதலின்றித் தவிக்கும், ஏழைப் பெண்ணான யெருசலேமே, இதோ நாமே உன் கற்களை மாணிக்கங்கள் மேல் அடுக்குவோம்; உனக்கு நீலக் கற்களால் அடிப்படை இடுவோம். 12 உன் கோட்டைச் சுவரின் முகடுகளைச் சலவைக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும், உன் சுவர்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவோம். 13 உன் மக்கள் அனைவருக்கும் ஆண்டவரே போதிப்பார், உன் புதல்வர்களுக்கு நிரம்பச் சமாதானம் இருக்கும். 14 நீதியில் நீ நிலைநாட்டப் படுவாய், கொடுமை அகன்று போம், நீ அஞ்சமாட்டாய், பயம் ஒழிந்திருப்பாய், அது உன்னை அணுகாது. 15 எவனாவது போர்புரிய வந்தால், அவன் நம்மால் தூண்டப்பட்டு வரமாட்டான்; உன்னோடு எவனெவன் போர் தொடுப்பானோ அவனெல்லாம் உன் பொருட்டு வீழ்ச்சியடைவான். 16 இதோ, தீயில் கரிகளைப் போட்டு ஊதி வேலை செய்து, போர்க்கருவி செய்யும் கொல்லனை நாமே படைத்தோம்; பாழாக்க வரும் கொலைகாரணையும் நாமே உண்டாக்கினோம். 17 உனக்கு விரோதமாய்த் தயாரிக்கப்பட்ட படைக்கலம் உன்மேல் பயன்படுத்தப்படாது; உனக்குத் தண்டனை விதிக்க வழக்காடும் நாவை நீயே கண்டனம் செய்து அடக்கி விடுவாய். ஆண்டவருடைய ஊழியர்களின் உரிமைச் சொத்தும் அவர்களுக்கு எம்மிடம் கிடைக்கும் நீதியும் இதுவே, என்றார் ஆண்டவர்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References