தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. பேல் தெய்வம் உடைபட்டது, நாபோ நொறுக்கப்பட்டது; அவர்களுடைய சிலைகள் மிருகங்கள் மீதும் மாடுகள் மேலும் ஏற்றப்பட்டன; உங்களுடைய இந்தச் சுமைகள் பெரும் பாரமாய் உங்களை அழுத்திச் சோர்ந்து போகச் செய்கின்றன.
2. சிலைகள் எல்லாம் உடைபட்டு ஒருங்கே தவிடு பொடியாய் ஆகிவிட்டன; தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் காப்பாற்ற முடியவில்லை, அவர்களோடு அவர்களின் சிலைகளும் சிறைப்பட்டன.
3. தாய் வயிற்றிலிருந்தே நம்மால் தாங்கப்பட்டு, கருவிலிருந்தே நம்மால் தூக்கி வைக்கப்பட்ட யாக்கோபு வீட்டாரே, இஸ்ராயேல் வீட்டாரில் எஞ்சினோரே, அனைவரும் நமக்குச் செவிசாயுங்கள்.
4. நீங்கள் முதுமையடையும் வரையில் நாம் மாறமாட்டோம், உங்கள் தலை நரைக்கும் வரை உங்களைத் தூக்கிச் செல்வோம்; நாமே படைத்தோம் நாமே உங்களைத் தாங்கினோம், நாமே தூக்கிப் போவோம், உங்களை விடுவிப்போம்.
5. யாருக்கு நம்மை நிகராக்குவீர்கள்? யாருக்கு நம்மைச் சமமாக்குவீர்கள்?யாருக்கு நம்மை ஒப்பிடுவீர்கள்? நம்மை யாருக்கு இணையாக்குவீர்கள்?
6. பையிலிருந்து பொன்னைக் கொட்டியும், தராசில் வெள்ளியை நிறுத்தும் கொடுத்துத் தெய்வமொன்று செய்து தரத் தட்டானை அமர்த்துகிறீர்கள்; செய்த பின் யாவரும் அதன் முன் விழுந்து வணங்குகிறார்கள்!
7. அதைத் தோளில் சுமந்துகொண்டு போகிறார்கள், அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைக்கிறார்கள்; அது அங்கேயே இருக்கும்; தன் இடம் விட்டுப் பெயராது; அதனிடம் கூக்குரலிட்டாலும் அது, கேட்காது, துன்பத்தினின்று அவர்களைக் காப்பாற்றாது.
8. துரோகிகளே, இதை நினைத்து வெட்கப்படுங்கள், உங்கள் உள்ளத்தில் நுழைந்து பாருங்கள்.
9. பண்டைக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள், நாமே கடவுள், நம்மையல்லால் வேறு தெய்வமில்லை, நமக்கு நிகரானது கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
10. ஆதியிலிருந்தே இறுதிக் காலத்தில் நடப்பவற்றையும், தொடக்கத்திலிருந்தே இன்னும் நிகழவிருந்தவற்றையும் அறிவித்தோம். 'நமது தீர்மானம் உறுதியாய் நிற்கும், நம் விருப்பமெல்லாம் நிறைவேறும்' என்று சொன்னோம்.
11. கிழக்கிலிருந்து பறவையொன்றைக் கூப்பிடுவோம், நமது சித்தத்தைச் செய்யும் ஒருவனைத் தொலைவிலிருந்து வரச் செய்வோம்; இதோ, (நாமே) சொன்னோம், சொன்னபடியே செய்வோம், தீர்மானம் செய்தோம், அதைச் செயல்படுத்துவோம்.
12. கடின இதயம் கொண்டவர்களே, நீதிக்குத் தொலைவில் நிற்பவர்களே, கேளுங்கள்:
13. நம்முடைய நீதியை அருகில் கொணர்ந்துள்ளோம், இனித் தொலைவில் இராது; நமது மீட்பு காலந் தாழ்த்தாது, சீயோனில் மீட்பையும், இஸ்ராயேலில் நம் மகிமையையும் நாட்டுவோம்."

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 46 / 66
1 பேல் தெய்வம் உடைபட்டது, நாபோ நொறுக்கப்பட்டது; அவர்களுடைய சிலைகள் மிருகங்கள் மீதும் மாடுகள் மேலும் ஏற்றப்பட்டன; உங்களுடைய இந்தச் சுமைகள் பெரும் பாரமாய் உங்களை அழுத்திச் சோர்ந்து போகச் செய்கின்றன. 2 சிலைகள் எல்லாம் உடைபட்டு ஒருங்கே தவிடு பொடியாய் ஆகிவிட்டன; தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் காப்பாற்ற முடியவில்லை, அவர்களோடு அவர்களின் சிலைகளும் சிறைப்பட்டன. 3 தாய் வயிற்றிலிருந்தே நம்மால் தாங்கப்பட்டு, கருவிலிருந்தே நம்மால் தூக்கி வைக்கப்பட்ட யாக்கோபு வீட்டாரே, இஸ்ராயேல் வீட்டாரில் எஞ்சினோரே, அனைவரும் நமக்குச் செவிசாயுங்கள். 4 நீங்கள் முதுமையடையும் வரையில் நாம் மாறமாட்டோம், உங்கள் தலை நரைக்கும் வரை உங்களைத் தூக்கிச் செல்வோம்; நாமே படைத்தோம் நாமே உங்களைத் தாங்கினோம், நாமே தூக்கிப் போவோம், உங்களை விடுவிப்போம். 5 யாருக்கு நம்மை நிகராக்குவீர்கள்? யாருக்கு நம்மைச் சமமாக்குவீர்கள்?யாருக்கு நம்மை ஒப்பிடுவீர்கள்? நம்மை யாருக்கு இணையாக்குவீர்கள்? 6 பையிலிருந்து பொன்னைக் கொட்டியும், தராசில் வெள்ளியை நிறுத்தும் கொடுத்துத் தெய்வமொன்று செய்து தரத் தட்டானை அமர்த்துகிறீர்கள்; செய்த பின் யாவரும் அதன் முன் விழுந்து வணங்குகிறார்கள்! 7 அதைத் தோளில் சுமந்துகொண்டு போகிறார்கள், அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைக்கிறார்கள்; அது அங்கேயே இருக்கும்; தன் இடம் விட்டுப் பெயராது; அதனிடம் கூக்குரலிட்டாலும் அது, கேட்காது, துன்பத்தினின்று அவர்களைக் காப்பாற்றாது. 8 துரோகிகளே, இதை நினைத்து வெட்கப்படுங்கள், உங்கள் உள்ளத்தில் நுழைந்து பாருங்கள். 9 பண்டைக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள், நாமே கடவுள், நம்மையல்லால் வேறு தெய்வமில்லை, நமக்கு நிகரானது கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 10 ஆதியிலிருந்தே இறுதிக் காலத்தில் நடப்பவற்றையும், தொடக்கத்திலிருந்தே இன்னும் நிகழவிருந்தவற்றையும் அறிவித்தோம். 'நமது தீர்மானம் உறுதியாய் நிற்கும், நம் விருப்பமெல்லாம் நிறைவேறும்' என்று சொன்னோம். 11 கிழக்கிலிருந்து பறவையொன்றைக் கூப்பிடுவோம், நமது சித்தத்தைச் செய்யும் ஒருவனைத் தொலைவிலிருந்து வரச் செய்வோம்; இதோ, (நாமே) சொன்னோம், சொன்னபடியே செய்வோம், தீர்மானம் செய்தோம், அதைச் செயல்படுத்துவோம். 12 கடின இதயம் கொண்டவர்களே, நீதிக்குத் தொலைவில் நிற்பவர்களே, கேளுங்கள்: 13 நம்முடைய நீதியை அருகில் கொணர்ந்துள்ளோம், இனித் தொலைவில் இராது; நமது மீட்பு காலந் தாழ்த்தாது, சீயோனில் மீட்பையும், இஸ்ராயேலில் நம் மகிமையையும் நாட்டுவோம்."
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 46 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References