தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. நம் ஊழியனாகிய யாக்கோபே, நாம் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலே, கேள்.
2. உன்னைப் படைத்துத் தாய் வயிற்றில் உருவாக்கிக் காத்து வரும் ஆண்டவர் கூறுகிறார்: நம் ஊழியனாகிய யாக்கோபே, நாம் தேர்ந்து கொண்ட நேர்மையாளனே, அஞ்சவேண்டா.
3. ஏனெனில் வறண்ட இடத்தில் நீரைப் பொழிவோம், ஈரமற்ற நிலத்தில் ஆறுகள் ஓடச் செய்வோம். உனது வித்தின் மேல் நம்முடைய ஆவியையும், உனது சந்ததியின் மேல் நமது ஆசியையும் பொழிவோம்.
4. செடிகளைப் போல் அவர்கள் தளிர்ப்பார்கள், நீரருகில் உள்ள மரம் போலத் தழைப்பார்கள்.
5. 'நான் ஆண்டவருக்குச் சொந்தம்' என்பார் ஒருவன்; யாக்கோபின் பெயரைச் சூடிக்கொள்வான் மற்றொருவன். 'ஆண்டவர்' என்று இன்னொருவன் தன் கையில் எழுதி, 'இஸ்ராயேல்' என்று புனைப்பெயர் சூடிக்கொள்வான்." ஒரே கடவுள் என்னும் கோட்பாடு
6. இஸ்ராயேலின் மாமன்னரும், அதன் மீட்பரும், சேனைகளின் ஆண்டவருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "முதலும் நாமே, முடிவும் நாமே; நம்மையன்றி வேறு தெய்வம் இல்லை.
7. நமக்குச் சமமானவன் யார்? அறிவிக்கட்டும்; எடுத்துக்காட்டி எண்பிக்கட்டும்; நடக்கப்போகின்றவற்றை முதலிலிருந்தே முன்னறிவித்தவன் யார்? வரப்போவதை இப்பொழுதே நமக்கு அறிவிக்கட்டும்!
8. நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்; துவக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொன்னோம், அறிவித்தோம் அன்றோ? நீங்களே நமக்குச் சாட்சிகள்! நம்மையன்றி வேறு தெய்வம் உண்டோ? புகலிடம் வேறில்லை; அப்படியொன்றையும் நாம் அறியோம்."
9. சிலை செய்யும் அனைவரும் வீணராவர்; அவர்களுடைய விலையுயர்ந்த வேலைப்பாடுகள் பயனற்றவை; அவர்களே, அவை காண்பதில்லை, கண்டுபிடிப்பதில்லை என்பதைக் குறித்து வெட்கி நாணவேண்டிய சாட்சிகளாய் இருக்கின்றனர்.
10. ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை எவனாவது உருவாக்குவதுண்டா? அல்லது செதுக்குவதுண்டா?
11. இதோ அவ்வேலையில் ஈடுபடுவோர் யாவரும் நாணமடைவர்; அந்த வேலைக்காரர் வெறும் மனிதர் தானே! அவர்கள் எல்லாரும் ஒன்றாய்க் கூடிவந்து நம்முன் நிற்கட்டும்; அப்போது தம் மடமைக்காக நடுங்குவார்கள்; அனைவரும் வெட்கமடைவார்கள்.
12. கொல்லன் இரும்பை வாள் போன்ற அரத்தால் அராவி வேலை செய்கிறான்; அதை உலையிலிட்டுச் சம்மட்டியால் அடித்து அந்தச் சிலையை உருவாக்குகிறான்; தன் கைப் பலத்தைப் பயன்படுத்தி வேலை செய்கிறான்; பசியுறுகிறான், சோர்ந்து போகிறான்; தண்ணீர் குடிப்பதில்லை; களைத்துப் போகிறான்.
13. மரத்தில் சிலை செய்யும் தச்சன் மரத்தின் மீது நூலிட்டு, உளியால் பக்குவப்படுத்தி, மூலமட்டப்பலகையால் சரிபார்த்து, கவராயம் என்னும் கருவியால் அளவாகப் பிரித்து ஓர் அழகான மனித உருவத்தைச் செய்கிறான்; அதையெடுத்து ஒரு மாடத்தில் வைக்கிறான்.
14. அவன் கேதுரு மரங்களை வெட்டுகிறான்; அல்லது காட்டிலுள்ள மரங்களின் நடுவில் நிற்கும் காஞ்சி மரத்தையோ ஆலமரத்தையோ தேர்ந்தெடுக்கிறான்; அல்லது தான் நட்டு, மழை வளர்த்த கேதுரு மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்.
15. அது மனிதர்களுக்கு விறகாகப் பயன்படும்படி உண்டாக்கப்பட்டது; குளிர்காய்வதற்கும் அதிலிருந்தே விறகு எடுக்கிறான்; அப்பஞ் சுடவும் அதையே பயன்படுத்துகிறான்; அதிலும் மீதியாய் இருப்பதைக் கொண்டு தான் தெய்வத்தை உருவாக்கி வணங்குகிறான்; உளியால் ஒரு சிலை செதுக்கி அதன் முன் தெண்டனிடுகிறான்.
16. அதில் பாதியை அடுப்பெரிக்கிறான்; மற்றொரு பாகத்தைப் பயன்படுத்தி இறைச்சி சமைத்துச் சுவையான உணவுப் பொருட்களைத் தயாரித்து வயிறாரச் சாப்பிடுகிறான்; சாப்பிட்ட பின் குளிர்காய்கிறான்: "நன்றாகக் குளிர்காய்ந்தேன், நல்ல தீ வளர்த்தேன்" என்று சொல்லிக் கொள்ளுகிறான்.
17. மீதியைக் கொண்டோ தனக்கொரு தெய்வமாகச் சிலை செதுக்கி, அதன்முன் குப்புற விழுந்து வணங்கி, "நீரே என் கடவுள், என்னை மீட்டருளும்!" என மன்றாடுகிறான்.
18. அவர்கள் ஒன்றும் அறியவில்லை; கண்டுபிடிக்கவுமில்லை. காணமுடியாதபடி அவர்களின் கண்கள் கட்டப்பட்டன; உணரமுடியாதபடி அவர்களின் உள்ளம அடைபட்டது.
19. ஆதலால் அவர்கள் மனத்தில் சிந்திப்பதில்லை; கண்டுபிடிப்பதில்லை; உணர்வதும் கிடையாது: "ஒரு பாதியை அடுப்பெரித்தேன்; அதன் நெருப்புக் பொறிகளில் அப்பம் சுட்டேன்; இறைச்சி சமைத்துச் சாப்பிட்டேன். அதில் மீதியானதைக் கொண்டு சிலை செதுக்குவேனோ? மரக்கட்டை முன் குப்புற விழுந்து வணங்குவேனா?" என்று சொல்லக் கூடத் தெரியாமல் உணர்ச்சியற்றுப் போயினர்.
20. வெறும் சாம்பலில் பற்ற வைக்கிறான்; அதன் உள்ளம் உணர்விழந்து போகிறது; அவன் தவறுகிறான்; "என் கைவேலைப்பாடு சுத்தப் பொய்" என்று சொல்லித் தன்னையே அவன் விடுவித்துக் கொள்ளமாட்டான்.
21. யாக்கோபே, இவற்றை றினைவில் வைத்துக் கொள்: இஸ்ராயேலே, நீ நம் ஊழியன் என்பதை மறவாதே; நாமே உன்னை உருவாக்கினோம், நீ நம்முடைய ஊழியன்; இஸ்ராயேலே, உன்னை மறவேன்.
22. கார்மேகம் கலைவது போல் உன் அக்கிரமங்களைப் போக்கினோம், பனிப்படலம் போல் உன் பாவங்கள் பறந்தன; நம்மிடத்தில் நீ திரும்பி வா, ஏனெனில் உன்னை நாம் மீட்டிருக்கிறோம்.
23. வானமே, அக்களித்து ஆர்ப்பரி, ஆண்டவர் செயலாற்றினார்; மண்ணுலகின் எல்லைகளே, அகமகிழுங்கள், மலைகளே, காடுகளே, அங்குள்ள மரங்களே, மகிழ்ச்சியால் ஆரவாரஞ் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டார், இஸ்ராயேலில் தம் மகிமையை வெளிப்படுத்தினார்.
24. உன் மீட்பரும், தாய் வயிற்றில் உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுகிறார்: "நாமே ஆண்டவர், நாமே அனைத்தையும் படைத்தோம்; தனியாகவே வானத்தை விரித்தோம், பூமியை நிலைநாட்டினோம்; நமக்கு உதவினவன் ஒருவனுமில்லை.
25. நிமித்தகர் சொல்லும் குறிகளைப் பொய்யாக்குகிறோம், மந்திரவாதிகளை மடயராக்குகிறோம்; ஞானிகளை விழத்தாட்டுகிறோம், அவர்களது அறிவை மடமையாக்குகிறோம்.
26. நம் ஊழியனின் வாக்கியத்தையோ உறுதிப்படுத்துகிறோம், நம் தூதர்களின் மொழிகளை நிறைவேற்றுகிறோம்; யெருசலேமைப் பார்த்து, 'நீ குடியிருப்பு ஆவாய்' என்றும், யூதாவின் நகரங்களுக்கு, 'நீங்கள் கட்டப்படுவீர்கள், அதன் பாழடைந்த இடங்களை எழுப்புவோம்' என்றும், சொல்லுகிறவர் நாமே.
27. பாதாளத்தைப் பார்த்து, 'நீ வற்றிப்போகக்கடவாய், உன் ஆறுகளை நாம் வற்றச் செய்வோம்' என்பவர் நாமே;
28. சீருஸ் அரசனுக்கு, 'நீ நமது மந்தையின் மேய்ப்பன், நம் விருப்பத்தையெல்லாம் நிறைவேற்றுவாய்' என்று சொல்லுகிறவர் நாமே; யெருசலேமை நோக்கி, 'நீ மறுபடி கட்டப்படுவாய்' என்றும், திருக்கோயிலைப் பார்த்து, 'உன் அடிப்படை மறுபடி இடப்படும்' என்றும் சொல்லுகிறவர் நாமே."

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 44 / 66
ஏசாயா 44:26
1 நம் ஊழியனாகிய யாக்கோபே, நாம் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலே, கேள். 2 உன்னைப் படைத்துத் தாய் வயிற்றில் உருவாக்கிக் காத்து வரும் ஆண்டவர் கூறுகிறார்: நம் ஊழியனாகிய யாக்கோபே, நாம் தேர்ந்து கொண்ட நேர்மையாளனே, அஞ்சவேண்டா. 3 ஏனெனில் வறண்ட இடத்தில் நீரைப் பொழிவோம், ஈரமற்ற நிலத்தில் ஆறுகள் ஓடச் செய்வோம். உனது வித்தின் மேல் நம்முடைய ஆவியையும், உனது சந்ததியின் மேல் நமது ஆசியையும் பொழிவோம். 4 செடிகளைப் போல் அவர்கள் தளிர்ப்பார்கள், நீரருகில் உள்ள மரம் போலத் தழைப்பார்கள். 5 'நான் ஆண்டவருக்குச் சொந்தம்' என்பார் ஒருவன்; யாக்கோபின் பெயரைச் சூடிக்கொள்வான் மற்றொருவன். 'ஆண்டவர்' என்று இன்னொருவன் தன் கையில் எழுதி, 'இஸ்ராயேல்' என்று புனைப்பெயர் சூடிக்கொள்வான்." ஒரே கடவுள் என்னும் கோட்பாடு 6 இஸ்ராயேலின் மாமன்னரும், அதன் மீட்பரும், சேனைகளின் ஆண்டவருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "முதலும் நாமே, முடிவும் நாமே; நம்மையன்றி வேறு தெய்வம் இல்லை. 7 நமக்குச் சமமானவன் யார்? அறிவிக்கட்டும்; எடுத்துக்காட்டி எண்பிக்கட்டும்; நடக்கப்போகின்றவற்றை முதலிலிருந்தே முன்னறிவித்தவன் யார்? வரப்போவதை இப்பொழுதே நமக்கு அறிவிக்கட்டும்! 8 நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்; துவக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொன்னோம், அறிவித்தோம் அன்றோ? நீங்களே நமக்குச் சாட்சிகள்! நம்மையன்றி வேறு தெய்வம் உண்டோ? புகலிடம் வேறில்லை; அப்படியொன்றையும் நாம் அறியோம்." 9 சிலை செய்யும் அனைவரும் வீணராவர்; அவர்களுடைய விலையுயர்ந்த வேலைப்பாடுகள் பயனற்றவை; அவர்களே, அவை காண்பதில்லை, கண்டுபிடிப்பதில்லை என்பதைக் குறித்து வெட்கி நாணவேண்டிய சாட்சிகளாய் இருக்கின்றனர். 10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை எவனாவது உருவாக்குவதுண்டா? அல்லது செதுக்குவதுண்டா? 11 இதோ அவ்வேலையில் ஈடுபடுவோர் யாவரும் நாணமடைவர்; அந்த வேலைக்காரர் வெறும் மனிதர் தானே! அவர்கள் எல்லாரும் ஒன்றாய்க் கூடிவந்து நம்முன் நிற்கட்டும்; அப்போது தம் மடமைக்காக நடுங்குவார்கள்; அனைவரும் வெட்கமடைவார்கள். 12 கொல்லன் இரும்பை வாள் போன்ற அரத்தால் அராவி வேலை செய்கிறான்; அதை உலையிலிட்டுச் சம்மட்டியால் அடித்து அந்தச் சிலையை உருவாக்குகிறான்; தன் கைப் பலத்தைப் பயன்படுத்தி வேலை செய்கிறான்; பசியுறுகிறான், சோர்ந்து போகிறான்; தண்ணீர் குடிப்பதில்லை; களைத்துப் போகிறான். 13 மரத்தில் சிலை செய்யும் தச்சன் மரத்தின் மீது நூலிட்டு, உளியால் பக்குவப்படுத்தி, மூலமட்டப்பலகையால் சரிபார்த்து, கவராயம் என்னும் கருவியால் அளவாகப் பிரித்து ஓர் அழகான மனித உருவத்தைச் செய்கிறான்; அதையெடுத்து ஒரு மாடத்தில் வைக்கிறான். 14 அவன் கேதுரு மரங்களை வெட்டுகிறான்; அல்லது காட்டிலுள்ள மரங்களின் நடுவில் நிற்கும் காஞ்சி மரத்தையோ ஆலமரத்தையோ தேர்ந்தெடுக்கிறான்; அல்லது தான் நட்டு, மழை வளர்த்த கேதுரு மரத்தைத் தேர்ந்து கொள்கிறான். 15 அது மனிதர்களுக்கு விறகாகப் பயன்படும்படி உண்டாக்கப்பட்டது; குளிர்காய்வதற்கும் அதிலிருந்தே விறகு எடுக்கிறான்; அப்பஞ் சுடவும் அதையே பயன்படுத்துகிறான்; அதிலும் மீதியாய் இருப்பதைக் கொண்டு தான் தெய்வத்தை உருவாக்கி வணங்குகிறான்; உளியால் ஒரு சிலை செதுக்கி அதன் முன் தெண்டனிடுகிறான். 16 அதில் பாதியை அடுப்பெரிக்கிறான்; மற்றொரு பாகத்தைப் பயன்படுத்தி இறைச்சி சமைத்துச் சுவையான உணவுப் பொருட்களைத் தயாரித்து வயிறாரச் சாப்பிடுகிறான்; சாப்பிட்ட பின் குளிர்காய்கிறான்: "நன்றாகக் குளிர்காய்ந்தேன், நல்ல தீ வளர்த்தேன்" என்று சொல்லிக் கொள்ளுகிறான். 17 மீதியைக் கொண்டோ தனக்கொரு தெய்வமாகச் சிலை செதுக்கி, அதன்முன் குப்புற விழுந்து வணங்கி, "நீரே என் கடவுள், என்னை மீட்டருளும்!" என மன்றாடுகிறான். 18 அவர்கள் ஒன்றும் அறியவில்லை; கண்டுபிடிக்கவுமில்லை. காணமுடியாதபடி அவர்களின் கண்கள் கட்டப்பட்டன; உணரமுடியாதபடி அவர்களின் உள்ளம அடைபட்டது. 19 ஆதலால் அவர்கள் மனத்தில் சிந்திப்பதில்லை; கண்டுபிடிப்பதில்லை; உணர்வதும் கிடையாது: "ஒரு பாதியை அடுப்பெரித்தேன்; அதன் நெருப்புக் பொறிகளில் அப்பம் சுட்டேன்; இறைச்சி சமைத்துச் சாப்பிட்டேன். அதில் மீதியானதைக் கொண்டு சிலை செதுக்குவேனோ? மரக்கட்டை முன் குப்புற விழுந்து வணங்குவேனா?" என்று சொல்லக் கூடத் தெரியாமல் உணர்ச்சியற்றுப் போயினர். 20 வெறும் சாம்பலில் பற்ற வைக்கிறான்; அதன் உள்ளம் உணர்விழந்து போகிறது; அவன் தவறுகிறான்; "என் கைவேலைப்பாடு சுத்தப் பொய்" என்று சொல்லித் தன்னையே அவன் விடுவித்துக் கொள்ளமாட்டான். 21 யாக்கோபே, இவற்றை றினைவில் வைத்துக் கொள்: இஸ்ராயேலே, நீ நம் ஊழியன் என்பதை மறவாதே; நாமே உன்னை உருவாக்கினோம், நீ நம்முடைய ஊழியன்; இஸ்ராயேலே, உன்னை மறவேன். 22 கார்மேகம் கலைவது போல் உன் அக்கிரமங்களைப் போக்கினோம், பனிப்படலம் போல் உன் பாவங்கள் பறந்தன; நம்மிடத்தில் நீ திரும்பி வா, ஏனெனில் உன்னை நாம் மீட்டிருக்கிறோம். 23 வானமே, அக்களித்து ஆர்ப்பரி, ஆண்டவர் செயலாற்றினார்; மண்ணுலகின் எல்லைகளே, அகமகிழுங்கள், மலைகளே, காடுகளே, அங்குள்ள மரங்களே, மகிழ்ச்சியால் ஆரவாரஞ் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டார், இஸ்ராயேலில் தம் மகிமையை வெளிப்படுத்தினார். 24 உன் மீட்பரும், தாய் வயிற்றில் உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுகிறார்: "நாமே ஆண்டவர், நாமே அனைத்தையும் படைத்தோம்; தனியாகவே வானத்தை விரித்தோம், பூமியை நிலைநாட்டினோம்; நமக்கு உதவினவன் ஒருவனுமில்லை. 25 நிமித்தகர் சொல்லும் குறிகளைப் பொய்யாக்குகிறோம், மந்திரவாதிகளை மடயராக்குகிறோம்; ஞானிகளை விழத்தாட்டுகிறோம், அவர்களது அறிவை மடமையாக்குகிறோம். 26 நம் ஊழியனின் வாக்கியத்தையோ உறுதிப்படுத்துகிறோம், நம் தூதர்களின் மொழிகளை நிறைவேற்றுகிறோம்; யெருசலேமைப் பார்த்து, 'நீ குடியிருப்பு ஆவாய்' என்றும், யூதாவின் நகரங்களுக்கு, 'நீங்கள் கட்டப்படுவீர்கள், அதன் பாழடைந்த இடங்களை எழுப்புவோம்' என்றும், சொல்லுகிறவர் நாமே. 27 பாதாளத்தைப் பார்த்து, 'நீ வற்றிப்போகக்கடவாய், உன் ஆறுகளை நாம் வற்றச் செய்வோம்' என்பவர் நாமே; 28 சீருஸ் அரசனுக்கு, 'நீ நமது மந்தையின் மேய்ப்பன், நம் விருப்பத்தையெல்லாம் நிறைவேற்றுவாய்' என்று சொல்லுகிறவர் நாமே; யெருசலேமை நோக்கி, 'நீ மறுபடி கட்டப்படுவாய்' என்றும், திருக்கோயிலைப் பார்த்து, 'உன் அடிப்படை மறுபடி இடப்படும்' என்றும் சொல்லுகிறவர் நாமே."
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 44 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References