தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. அந்நாட்களில் எசேக்கியாஸ் நோய்வாய்ப் பட்டுச் சாகும் நிலையில் இருந்தான்; ஆமோஸ் மகனான இசையாஸ் இறைவாக்கினர் அவனைக் காண வந்து, அவனை நோக்கி, "ஆண்டவர் கூறுகிறார்: உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்து; ஏனெனில் சாகப் போகிறாய், நீ பிழைக்க மாட்டாய்" என்றார்.
2. அப்போது எசேக்கியாஸ் சுவர்ப் பக்கமாய் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு,
3. ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே, உமது முன்னிலையில் நான் எவ்வாறு உண்மையோடு முழு உள்ளத்தோடும் நடந்து வந்தேன் என்பதையும், உம் கண்களுக்கு நல்லதெனப் பட்டதையே செய்து வந்தேன் என்பதையும் நினைத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்" என்று சொல்லி வேண்டிக் கொண்டு, ஏராளமாய்க் கண்ணீர் வடித்தான்.
4. அப்போது ஆண்டவருடைய வாக்கு இசையாசுக்கு உண்டாயிற்று:
5. போய், நீ எசேக்கியாசிடம் சொல்: உன் தந்தை தாவீதின் கடவுளான ஆண்டவர் கூறுகிறார்: நாம் உன் மன்றாட்டைக் கேட்டோம்; உன் கண்ணீரைக் கண்டோம்; இதோ, உன் வாழ்நாட்களோடு பதினைந்து ஆண்டுகளைக் கூட்டுவோம்.
6. உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய அரசனுடைய கையினின்று விடுவிப்போம்; நாம் இந்நகரத்தைப் பாதுகாப்போம்.
7. ஆண்டவர் தாம் வாக்களித்ததைச் செய்வார் என்பதற்கு ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் அடையாளம் இதுவே:
8. இதோ,ஆக்காசின் நிழற் கடிகையில் சாய்ந்திருக்கும் கதிரவனால் உண்டாகும் நிழல் பத்துப் பாகை பின்னுக்குப் போகச் செய்வோம்." அவ்வாறே, சாய்ந்திறங்கிக் கொண்டிருந்த கதிரவன் பத்துப் பாகை மேலேறினான்.
9. யூதாவின் அரசனான எசேக்கியாஸ் நோய்வாய்ப்பட்டு, அந்நோயிலிருந்து நலமான போது இயற்றிய பாடல்:
10. நான் சொன்னேன்: என் வாழ் நாட்களின் நடுவில் பாதாளத்தின் வாயில்களுக்குப் போக வேண்டுமே! இன்னும் நான் வாழக்கூடிய ஆண்டுகள் எனக்குக் கிட்டாமற் போகுமே!
11. மேலும் சொன்னேன்: வாழ்வோருக்குரிய இவ்வுலகில் ஆண்டவரை நான் இனிக் காணமுடியாதே! வையத்தின் குடிகளுள் எவரையும் இனி நான் பார்க்க இயலாது.
12. என்னுடைய இருப்பிடம் தகர்க்கப்படும், இடையர்களின் கூடாரம்போலப் பெயர்க்கப்படும்; நெசவாளனைப் போல நான் என் வாழ்வைச் சுருட்டுகிறேன்; அவரோ என்னைத் தறியிலிருந்தே வெட்டுகிறார்.
13. காலை முதல் மாலை வரை என்னை வாதிக்கிறீர். காலை வரையில் நான் கதறிக் கொண்டிருக்கிறேன். சிங்கத்தைப் போல் என் எலும்புகளையெல்லம் முறிக்கிறார், காலை முதல் மாலை வரை என்னை வாதிக்கிறீர்.
14. மாடப்புறாவைப் போல விம்முகிறேன்; அண்ணாந்து பார்த்து என் கண்கள் மெலிவடைகின்றன. ஆண்டவரே, வேதனைப்படுகிறேன், எனக்குத் துணைபுரியும்!
15. நான் என்ன சொல்வேன்? ஏனெனில் அவரே சொன்னார், அவரே அதைச் செய்தாரே! என் மனக் கசப்பையும் மேற்கொண்டு, என் நாட்களையெல்லாம் தொடர்ந்து வாழ்வேன்.
16. ஆண்டவரே, நான் உமக்காகவே வாழ்கிறேன், என் உள்ளம் உமக்காக மட்டுமே வாழ்கின்றது! என்னை நீர் நலமாக்கினீர், உயிரோடு என்னைக் காப்பாற்றினீர்.
17. இதோ, என்னுடைய மனக்கசப்பே எனக்கு மீட்பாக மாறிற்று, அழிவின் குழியினின்று என்னுயிரைக் காத்தருளினீர், என் பாவங்களையெல்லாம் உமக்குப் பின்னால் எறிந்து விட்டீர்.
18. பாதாளம் உம்மைப் போற்றாது, சாவு உம்மைப் புகழாது; பாதாளத்தினுள் இறங்குகிறவர்களோ உமது பிரமாணிக்கத்தை நம்புவதில்லை.
19. இன்று நான் உம்மைப் புகழ்வது போல, வாழ்வோரே உம்மைப் புகழ்ந்திடுவார்; உமது பிரமாணிக்கத்தைத் தகப்பன் தன் மக்களுக்கு அறிவிப்பான்.
20. ஆண்டவர் என்னைக் காக்கிறார், ஆண்டவருடைய கோயிலிலே எங்களுடைய வாழ் நாட்களெல்லாம் திருப்பாசுரங்களைப் பாடிடுவோம்.
21. இசையாஸ் என்பவரோ, எசேக்கியாஸ் நலம் பெறும்படிக்கு அத்திப் பழத்தைக் கொண்டு வந்து அரைத்துப் பிளவையின் மேல் வைத்துக் கட்டு கட்டச் சொன்னார்.
22. அப்போது எசேக்கியாஸ் அவரைப் பார்த்து, "நான் ஆண்டவரின் கோயிலுக்கு ஏறிப் போவேன் என்பதற்கு அடையாளம் யாது?" என்று கேட்டான்.

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 38 / 66
1 அந்நாட்களில் எசேக்கியாஸ் நோய்வாய்ப் பட்டுச் சாகும் நிலையில் இருந்தான்; ஆமோஸ் மகனான இசையாஸ் இறைவாக்கினர் அவனைக் காண வந்து, அவனை நோக்கி, "ஆண்டவர் கூறுகிறார்: உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்து; ஏனெனில் சாகப் போகிறாய், நீ பிழைக்க மாட்டாய்" என்றார். 2 அப்போது எசேக்கியாஸ் சுவர்ப் பக்கமாய் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, 3 ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே, உமது முன்னிலையில் நான் எவ்வாறு உண்மையோடு முழு உள்ளத்தோடும் நடந்து வந்தேன் என்பதையும், உம் கண்களுக்கு நல்லதெனப் பட்டதையே செய்து வந்தேன் என்பதையும் நினைத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்" என்று சொல்லி வேண்டிக் கொண்டு, ஏராளமாய்க் கண்ணீர் வடித்தான். 4 அப்போது ஆண்டவருடைய வாக்கு இசையாசுக்கு உண்டாயிற்று: 5 போய், நீ எசேக்கியாசிடம் சொல்: உன் தந்தை தாவீதின் கடவுளான ஆண்டவர் கூறுகிறார்: நாம் உன் மன்றாட்டைக் கேட்டோம்; உன் கண்ணீரைக் கண்டோம்; இதோ, உன் வாழ்நாட்களோடு பதினைந்து ஆண்டுகளைக் கூட்டுவோம். 6 உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய அரசனுடைய கையினின்று விடுவிப்போம்; நாம் இந்நகரத்தைப் பாதுகாப்போம். 7 ஆண்டவர் தாம் வாக்களித்ததைச் செய்வார் என்பதற்கு ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் அடையாளம் இதுவே: 8 இதோ,ஆக்காசின் நிழற் கடிகையில் சாய்ந்திருக்கும் கதிரவனால் உண்டாகும் நிழல் பத்துப் பாகை பின்னுக்குப் போகச் செய்வோம்." அவ்வாறே, சாய்ந்திறங்கிக் கொண்டிருந்த கதிரவன் பத்துப் பாகை மேலேறினான். 9 யூதாவின் அரசனான எசேக்கியாஸ் நோய்வாய்ப்பட்டு, அந்நோயிலிருந்து நலமான போது இயற்றிய பாடல்: 10 நான் சொன்னேன்: என் வாழ் நாட்களின் நடுவில் பாதாளத்தின் வாயில்களுக்குப் போக வேண்டுமே! இன்னும் நான் வாழக்கூடிய ஆண்டுகள் எனக்குக் கிட்டாமற் போகுமே! 11 மேலும் சொன்னேன்: வாழ்வோருக்குரிய இவ்வுலகில் ஆண்டவரை நான் இனிக் காணமுடியாதே! வையத்தின் குடிகளுள் எவரையும் இனி நான் பார்க்க இயலாது. 12 என்னுடைய இருப்பிடம் தகர்க்கப்படும், இடையர்களின் கூடாரம்போலப் பெயர்க்கப்படும்; நெசவாளனைப் போல நான் என் வாழ்வைச் சுருட்டுகிறேன்; அவரோ என்னைத் தறியிலிருந்தே வெட்டுகிறார். 13 காலை முதல் மாலை வரை என்னை வாதிக்கிறீர். காலை வரையில் நான் கதறிக் கொண்டிருக்கிறேன். சிங்கத்தைப் போல் என் எலும்புகளையெல்லம் முறிக்கிறார், காலை முதல் மாலை வரை என்னை வாதிக்கிறீர். 14 மாடப்புறாவைப் போல விம்முகிறேன்; அண்ணாந்து பார்த்து என் கண்கள் மெலிவடைகின்றன. ஆண்டவரே, வேதனைப்படுகிறேன், எனக்குத் துணைபுரியும்! 15 நான் என்ன சொல்வேன்? ஏனெனில் அவரே சொன்னார், அவரே அதைச் செய்தாரே! என் மனக் கசப்பையும் மேற்கொண்டு, என் நாட்களையெல்லாம் தொடர்ந்து வாழ்வேன். 16 ஆண்டவரே, நான் உமக்காகவே வாழ்கிறேன், என் உள்ளம் உமக்காக மட்டுமே வாழ்கின்றது! என்னை நீர் நலமாக்கினீர், உயிரோடு என்னைக் காப்பாற்றினீர். 17 இதோ, என்னுடைய மனக்கசப்பே எனக்கு மீட்பாக மாறிற்று, அழிவின் குழியினின்று என்னுயிரைக் காத்தருளினீர், என் பாவங்களையெல்லாம் உமக்குப் பின்னால் எறிந்து விட்டீர். 18 பாதாளம் உம்மைப் போற்றாது, சாவு உம்மைப் புகழாது; பாதாளத்தினுள் இறங்குகிறவர்களோ உமது பிரமாணிக்கத்தை நம்புவதில்லை. 19 இன்று நான் உம்மைப் புகழ்வது போல, வாழ்வோரே உம்மைப் புகழ்ந்திடுவார்; உமது பிரமாணிக்கத்தைத் தகப்பன் தன் மக்களுக்கு அறிவிப்பான். 20 ஆண்டவர் என்னைக் காக்கிறார், ஆண்டவருடைய கோயிலிலே எங்களுடைய வாழ் நாட்களெல்லாம் திருப்பாசுரங்களைப் பாடிடுவோம். 21 இசையாஸ் என்பவரோ, எசேக்கியாஸ் நலம் பெறும்படிக்கு அத்திப் பழத்தைக் கொண்டு வந்து அரைத்துப் பிளவையின் மேல் வைத்துக் கட்டு கட்டச் சொன்னார். 22 அப்போது எசேக்கியாஸ் அவரைப் பார்த்து, "நான் ஆண்டவரின் கோயிலுக்கு ஏறிப் போவேன் என்பதற்கு அடையாளம் யாது?" என்று கேட்டான்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 38 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References