தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. இதோ, சேனைகளின் ஆண்டவரான இறைவன் யெருசலேமினின்றும் யூதாவினின்றும், எவ்வகை நலத்தையும் எவ்வகைப் பலத்தையும், உணவாகிய பலத்தையும் நீராகிய பலத்தையும்,
2. வலிமைமிக்க மனிதனையும் வீரனையும், நீதிபதியையும் இறைவாக்கினரையும், நிமித்திகனையும் முதியோரையும்,
3. ஐம்பதின்மர் தலைவனையும் சேனையில் உயர்ந்த பதவியுள்ளவனையும், ஆலோசனைக் காரனையும் திறன் வாய்ந்த மந்திர வாதியையும், மாய வித்தை வல்லோனையும் ஆண்டவர் அகற்றி விடுவார்.
4. சிறுவர்களை அவர்களுக்குத் தலைவர்களாக்குவோம், விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
5. மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள், ஒவ்வொருவனும் தன் அயலானைத் துன்புறுத்துவான், இளைஞர் முதியோரை அவமதிப்பார்கள், கீழ்மக்கள் மேன்மக்களை அசட்டை செய்வார்கள்.
6. ஒருவன் தன் தந்தை வீட்டில் வாழும் சகோதரன் ஒருவனைப் பிடித்து, "உனக்கு ஆடையிருக்கிறது, ஆகவே நீ எங்கள் தலைவனாய் இருக்க வேண்டும்; பாழடைந்து கிடக்கும் இந்த அரசு உன் ஆட்சியில் இருக்கட்டும்" என்று சொல்வான்.
7. அப்போது அந்த மனிதன் மறுமொழியாக, "நான் மருத்துவனாய் இருக்கமாட்டேன்; என் வீட்டில் உணவோ ஆடையோ ஒன்றுமில்லை; என்னை மக்களுக்குத் தலைவனாய் வைக்க வேண்டாம்" என்று சொல்லி மறுத்து விடுவான்.
8. யெருசலேம் இடறித் தடுமாறுகிறது, யூதா கீழே விழுகிறது; ஏனெனில், அவர்களுடைய சொல்லும் செயலும் ஆண்டவருக்கு எதிராயுள்ளன, அவர் மகிமையின் கண்களுக்குச் சினமூட்டின.
9. அவர்களின் ஓரவஞ்சனையே அவர்களுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது, சோதோமைப் போல் தங்கள் பாவத்தைப் பறைசாற்றுகின்றனர், அதை மறைத்து வைப்பதில்லை. அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் தங்கள் மேல் தீமையைத் தாங்களே வருவித்தனர்.
10. ஆனால் நீதிமான் பேறுபெற்றவன் என்று சொல்லுங்கள், ஏனெனில், தன் நற்செயல்களின் பலனைக் கண்டடைவான்;
11. தீயவனுக்கு ஐயோ கேடு! அவனுக்கு நன்மை வராது, ஏனெனில் அவன் தன் செயல்களுக்கேற்பத் தண்டனை பெறுவான்.
12. எம் மக்களே, சிறுவன் ஒருவனால் நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள், பெண்கள் உங்களை ஆளுகிறார்களே! எம் மக்களே, உங்களை ஆள்பவர்களே தவறான நெறியைக் காட்டுகிறார்கள், உங்கள் நெறிகளின் போக்கைக் குழப்புகிறார்கள்.
13. ஆண்டவர் தீர்ப்புச் சொல்ல எழுந்து நிற்கிறார், மக்களினங்களுக்கு நீதி வழங்கத் தயாராய் இருக்கிறார்.
14. மூப்பரோடும் தம் மக்களின் தலைவர்களோடும் ஆண்டவர் முதற்கண் வழக்காடுகிறார்: "திராட்சைத் தோட்டக் கனிகளைத் தின்றவர்கள் நீங்களே, எளியவர்களைக் கொள்ளையிட்டப் பொருட்கள் உங்கள் வீடுகளில் நிறைந்துள்ளன;
15. நம்முடைய மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை நொறுக்க உங்களுக்கு உரிமையேது?" என்கிறார் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.
16. யெருசலேம் பெண்களுக்கு எச்சரிக்கை: ஆண்டவர் தொடர்ந்து கூறினார்: சீயோனின் மங்கையர் அகந்தை கொண்டவர்கள், கழுத்தை நீட்டி நீட்டி நடக்கிறார்கள், கண் வீச்சுகளை வீசித் திரிகிறார்கள், நடக்கும் போது காற்சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவுகிறார்கள்;
17. ஆதலால் ஆண்டவர் சீயோன் மங்கையரின் தலைகளில் புண்ணும் பொருக்கும் உண்டாக்குவார், ஆண்டவர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.
18. அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய காற்சிலம்புகளையும் பிறை வடிவமான அணிகளையும்,
19. ஆரங்களையும் கழுத்துப் பொற் சங்கிலிகளையும் கை வளையல்களையும் தலைச் சோடினைகளையும்,
20. கூந்தல் கட்டும் பட்டு நாடாக்களையும் அரைக்கச்சைகளையும் பொற் சங்கிலிகளையும் நறுமணச் சிமிழ்களையும் காதணிகளையும்,
21. மோதிரங்களையும் மூக்குத்திகளையும்,
22. அழகான ஆடைகளையும் மேற்போர்வைகளையும் நாடோறும் மாறுதலடையும் உடைகளையும் கொண்டையூசிகளையும்,
23. கண்ணாடிகளையும் மெல்லிய சட்டைகளையும் நாடாக்களையும் சல்லா முக்காடுகளையும் ஆண்டவர் உரிந்து போடுவார்.
24. நறுமணத்திற்குப் பதிலாக நாற்றமும், பொன் ஒட்டியாணத்திற்குப் பதிலாகக் கயிறும், வாரி முடித்த கூந்தலுக்குப் பதிலாய் வழுக்கையும் இருக்கும். ஆடம்பர உடைகளுக்குப் பதில் கோணி ஆடையும், அழகுக்குப் பதிலாக சூட்டுத் தழும்பும் இருக்கும்.
25. அழகு வாய்ந்த ஆண்கள் வாளுக்கிரையாவார்கள், வலிமை மிக்க வீரர்கள் போர் முகத்தில் மடிவார்கள்.
26. அதன் வாயில்கள் புலம்பி அழும், நகரமோ வறிதாகித் தரையில் அமரும்.

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 66
1 இதோ, சேனைகளின் ஆண்டவரான இறைவன் யெருசலேமினின்றும் யூதாவினின்றும், எவ்வகை நலத்தையும் எவ்வகைப் பலத்தையும், உணவாகிய பலத்தையும் நீராகிய பலத்தையும், 2 வலிமைமிக்க மனிதனையும் வீரனையும், நீதிபதியையும் இறைவாக்கினரையும், நிமித்திகனையும் முதியோரையும், 3 ஐம்பதின்மர் தலைவனையும் சேனையில் உயர்ந்த பதவியுள்ளவனையும், ஆலோசனைக் காரனையும் திறன் வாய்ந்த மந்திர வாதியையும், மாய வித்தை வல்லோனையும் ஆண்டவர் அகற்றி விடுவார். 4 சிறுவர்களை அவர்களுக்குத் தலைவர்களாக்குவோம், விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள். 5 மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள், ஒவ்வொருவனும் தன் அயலானைத் துன்புறுத்துவான், இளைஞர் முதியோரை அவமதிப்பார்கள், கீழ்மக்கள் மேன்மக்களை அசட்டை செய்வார்கள். 6 ஒருவன் தன் தந்தை வீட்டில் வாழும் சகோதரன் ஒருவனைப் பிடித்து, "உனக்கு ஆடையிருக்கிறது, ஆகவே நீ எங்கள் தலைவனாய் இருக்க வேண்டும்; பாழடைந்து கிடக்கும் இந்த அரசு உன் ஆட்சியில் இருக்கட்டும்" என்று சொல்வான். 7 அப்போது அந்த மனிதன் மறுமொழியாக, "நான் மருத்துவனாய் இருக்கமாட்டேன்; என் வீட்டில் உணவோ ஆடையோ ஒன்றுமில்லை; என்னை மக்களுக்குத் தலைவனாய் வைக்க வேண்டாம்" என்று சொல்லி மறுத்து விடுவான். 8 யெருசலேம் இடறித் தடுமாறுகிறது, யூதா கீழே விழுகிறது; ஏனெனில், அவர்களுடைய சொல்லும் செயலும் ஆண்டவருக்கு எதிராயுள்ளன, அவர் மகிமையின் கண்களுக்குச் சினமூட்டின. 9 அவர்களின் ஓரவஞ்சனையே அவர்களுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது, சோதோமைப் போல் தங்கள் பாவத்தைப் பறைசாற்றுகின்றனர், அதை மறைத்து வைப்பதில்லை. அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் தங்கள் மேல் தீமையைத் தாங்களே வருவித்தனர். 10 ஆனால் நீதிமான் பேறுபெற்றவன் என்று சொல்லுங்கள், ஏனெனில், தன் நற்செயல்களின் பலனைக் கண்டடைவான்; 11 தீயவனுக்கு ஐயோ கேடு! அவனுக்கு நன்மை வராது, ஏனெனில் அவன் தன் செயல்களுக்கேற்பத் தண்டனை பெறுவான். 12 எம் மக்களே, சிறுவன் ஒருவனால் நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள், பெண்கள் உங்களை ஆளுகிறார்களே! எம் மக்களே, உங்களை ஆள்பவர்களே தவறான நெறியைக் காட்டுகிறார்கள், உங்கள் நெறிகளின் போக்கைக் குழப்புகிறார்கள். 13 ஆண்டவர் தீர்ப்புச் சொல்ல எழுந்து நிற்கிறார், மக்களினங்களுக்கு நீதி வழங்கத் தயாராய் இருக்கிறார். 14 மூப்பரோடும் தம் மக்களின் தலைவர்களோடும் ஆண்டவர் முதற்கண் வழக்காடுகிறார்: "திராட்சைத் தோட்டக் கனிகளைத் தின்றவர்கள் நீங்களே, எளியவர்களைக் கொள்ளையிட்டப் பொருட்கள் உங்கள் வீடுகளில் நிறைந்துள்ளன; 15 நம்முடைய மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை நொறுக்க உங்களுக்கு உரிமையேது?" என்கிறார் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர். 16 யெருசலேம் பெண்களுக்கு எச்சரிக்கை: ஆண்டவர் தொடர்ந்து கூறினார்: சீயோனின் மங்கையர் அகந்தை கொண்டவர்கள், கழுத்தை நீட்டி நீட்டி நடக்கிறார்கள், கண் வீச்சுகளை வீசித் திரிகிறார்கள், நடக்கும் போது காற்சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவுகிறார்கள்; 17 ஆதலால் ஆண்டவர் சீயோன் மங்கையரின் தலைகளில் புண்ணும் பொருக்கும் உண்டாக்குவார், ஆண்டவர் அவர்கள் மானத்தைக் குலைப்பார். 18 அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய காற்சிலம்புகளையும் பிறை வடிவமான அணிகளையும், 19 ஆரங்களையும் கழுத்துப் பொற் சங்கிலிகளையும் கை வளையல்களையும் தலைச் சோடினைகளையும், 20 கூந்தல் கட்டும் பட்டு நாடாக்களையும் அரைக்கச்சைகளையும் பொற் சங்கிலிகளையும் நறுமணச் சிமிழ்களையும் காதணிகளையும், 21 மோதிரங்களையும் மூக்குத்திகளையும், 22 அழகான ஆடைகளையும் மேற்போர்வைகளையும் நாடோறும் மாறுதலடையும் உடைகளையும் கொண்டையூசிகளையும், 23 கண்ணாடிகளையும் மெல்லிய சட்டைகளையும் நாடாக்களையும் சல்லா முக்காடுகளையும் ஆண்டவர் உரிந்து போடுவார். 24 நறுமணத்திற்குப் பதிலாக நாற்றமும், பொன் ஒட்டியாணத்திற்குப் பதிலாகக் கயிறும், வாரி முடித்த கூந்தலுக்குப் பதிலாய் வழுக்கையும் இருக்கும். ஆடம்பர உடைகளுக்குப் பதில் கோணி ஆடையும், அழகுக்குப் பதிலாக சூட்டுத் தழும்பும் இருக்கும். 25 அழகு வாய்ந்த ஆண்கள் வாளுக்கிரையாவார்கள், வலிமை மிக்க வீரர்கள் போர் முகத்தில் மடிவார்கள். 26 அதன் வாயில்கள் புலம்பி அழும், நகரமோ வறிதாகித் தரையில் அமரும்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References