தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. எப்பிராயீமுடைய குடிவெறியரின் செருக்குள்ள மணிமுடிக்கு ஐயோ கேடு! அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப் போகும் மலருக்கும் ஐயோ கேடு! இரசப் போதையால் மேற்கொள்ளப்பட்டவர்களின் செழிப்பான பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே.
2. இதோ, ஆண்டவர் அனுப்பிய ஆற்றலும் வல்லமையுமுள்ள ஒருவன், அவன் ஆலங்கட்டி மழை போலும், அழித்துப் பாழாக்கும் புயல் போலும், கரை புரண்டு பாயும் வெள்ளப்பெருக்குப் போலும், தன் கை வன்மையால் அவர்களைத் தரையில் வீழ்த்துவான்.
3. எப்பிராயீமுடைய குடிவெறியரின் செருக்குள்ள மணிமுடி இவ்வாறு காலால் மிதிக்கப்படும்.
4. செழிப்பான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்ற அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப்போகும் மலர், கோடைக்காலம் வருமுன் பருவந் தப்பிப்பழுத்த அத்திப்பழம் போலாகும்; அதைக் கண்டவன் கையால் பறித்து அப்பொழுதே உண்டு விடுவான்.
5. அந்நாளில் சேனைகளின் ஆண்டவர் தம் மக்களுள் எஞ்சியிருப்போருக்குத் தாமே மகிமையின் மணிமுடியாகவும் அழகு வாய்ந்த மகுடமாகவும் இருப்பார்.
6. நீதி வழங்க, இருக்கையில் அமர்கிறவனுக்கு நீதியின் வரமாகவும், போர்க்களத்தை விட்டு வாயில் நோக்கித் திரும்புகிறவர்களுக்குப் பலமாகவும் இருப்பார்.
7. இவர்கள் கூட மதுவருந்தி அறிவிழந்தனர், குடிவெறியால் தடுமாறுகின்றனர்; அர்ச்சகரும் தீர்க்கதரிசியும் குடிவெறியால் அறிவிழந்தனர், மதுபானத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர், குடிபோதையில் தடுமாறுகின்றனர்; காணும் காட்சியில் தவறுகின்றனர், தீர்ப்புச் சொல்வதில் தடுமாறுகின்றனர்.
8. ஏனெனில் மேசைகள் யாவும் வாந்தியால் நிறைந்துள்ளன, அசுத்தமில்லாத இடமே கிடையாது.
9. யாருக்கு அவன் அறிவைப் புகட்டுவான்? யாருக்குச் செய்தியை விளக்கிக் கூறுவான்? பால் மறக்கடிக்கப்பட்ட சிறிய குழந்தைகளுக்கா? தாய் மார்பினின்று நீக்கப்பட்ட குழந்தைகளுக்கா?
10. ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளை மேல் கட்டளை, ஒழுங்கு மேல் ஒழுங்கு, ஒழுங்கு மேல் ஒழுங்கு, இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்" என்கிறார்கள்.
11. ஆம் விளங்காத வார்தைகளிலும், தெரியாத அந்நிய மொழியிலுமே இந்த மக்களிடம் ஆண்டவர் பேசுவார்;
12. அவர் அவர்களுக்குச் சொல்லியிருந்தார்: "இதோ, இருக்கிறது இளைப்பாற்றி, களைத்தவன் இளைப்பாறட்டும்; இதோ, இருக்கிறது ஓய்வு; "ஆனால், அவர்கள் கேட்கவில்லை.
13. ஆண்டவரின் வாக்கு அவர்களுக்கு இதுவே: "கட்டளை மேல் கட்டளை, கட்டளை மேல் கட்டளை, ஒழுங்கு மேல் ஒழுங்கு, ஒழுங்கு மேல் ஒழுங்கு, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்." அவ்வாறே அவர்களும் புறப்பட்டுப் போய்ப் புறங்காட்டி வீழ்வர், நொறுக்கப்பட்டுக் கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
14. யெருசலேமிலுள்ள நம் மக்களை ஆண்டு வரும் ஏளனக்காரர்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்!
15. நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம், பாதாளத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம், தீமை மடை புரண்டு வந்தாலும், அது எங்கள்மேல் வராது; ஏனெனில் பொய்மையில் நாங்கள் நம்பிக்கை வைத்தோம், பொய்மையாலேயே நாங்கள் காப்பாற்றப்பட்டோம்" என்று நீங்கள் சொன்னீர்களே.
16. ஆதலால் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, சீயோனில் ஓர் அடிப்படைக் கல்லை- பரிசோதித்து உறுதியானது எனக் கண்ட ஒரு கல்லை, விலையுயர்ந்த மூலைக்கல்லாய், உறுதியான அடிப்படையாய் நாம் நாட்டுவோம்: அது 'விசுவாசிக்கிறவன் இடறி விழ மாட்டான்' எனப்படும்.
17. நீதியை அளவு கோலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் ஏற்படுத்துவோம்; ஆனால் பொய்மையில் வைத்த நம்பிக்கையைக் கல்மழை அழிக்கும், புகலிடத்தை வெள்ளப்பெருக்கு அடித்துப் போகும்.
18. அப்போது, சாவோடு நீங்கள் செய்த உடன்படிக்கை உடைபடும், பாதாளத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தம் ஒழிந்துபோம்; தீமை மடைபுரண்டு வரும் பொழுது, நீங்கள் அதனால் அடித்து நொறுக்கப்படுவீர்கள்.
19. தீமை பெருக்கெடுத்து வரும் போதெல்லாம் உங்களை அது வாரிக்கொண்டு போகும்; அதுவும் வைகறையிலே கிளம்பி, பகலிலும் இரவிலும் பெருக்கெடுத்தோடும்; இந்தச் செய்தியைக் கேட்டுக் கண்டு பிடிப்பதே ஒரு பெருந்திகிலாக இருக்கும்.
20. கால் நீட்டிப் படுக்கக் கட்டில் போதாது, போர்த்துக்கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது.
21. பெராசீம் மலை மீது நின்றது போல் ஆண்டவர் உங்களுக்கு விரோதமாய் எழுந்து நிற்பார்; கபாவோன் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டது போல், அவர் கோபங்கொள்வார். அவர் தமது செயலைச் செய்வார்; அச்செயல் புதுமையானதே! வேலையைச் செய்வார்; அவ்வேலை விந்தையானதே!
22. ஆகையால் இப்பொழுது ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்; இல்லையேல் உங்கள் தளைகள் இறுகிப்போகும்; ஏனெனில் நாடு முழுவதையும் அழிக்கும்படியாகச் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் இட்ட ஆணையை நான் கேட்டிருக்கிறேன்.
23. செவிசாயுங்கள், என் குரலொலியைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள்:
24. விதைப்பதற்காக உழுகிறவன் நாள் முழுவதுமா உழுகிறான்? நிலத்தை நாள் முழுதுமா கொத்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும் இருக்கிறான்?
25. நிலத்தின் மேல்பரப்பை நிரவிய பின், சதகுப்பையை விதைத்துச் சீரகத்தைத் தெளிப்பானன்றோ? அதற்குரிய இடத்தில் கோதுமை, வாற் கோதுமை, துவரை, பயறு இவற்றை முறைப்படி விதைப்பானன்றோ?
26. இந்த முறைமை அவன் கற்றுக்கொண்டான், கடவுளே அதை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
27. சதகுப்பை இருப்பு முட்களால் அடிக்கப்படுவதில்லை, சீரகமானது வண்டி உருளையால் புணையடிக்கப்படுவதில்லை; ஆனால் சதகுப்பை கோலால் அடிக்கப்படும், சீரகம் தடியால் அடிக்கப்படும்.
28. அப்பத்திற்குரிய கோதுமை இடிக்கப்படுமோ? படாது; அதை இடைவிடாமல் புணையடித்துக்கொண்டே இருக்கிறதில்லை. வண்டி உருளையையும் குதிரைகளையும் அதன் மேல் செலுத்தும் போது, அதை நொறுக்கி விடுவதில்லை.
29. சேனைகளின் கடவுளான ஆண்டவரின் போக்கும் இதுவே; அவ்வாறு அவர் அறிவை விளங்கச் செய்கிறார், அவர் ஞானம் தலைசிறந்ததெனக் காட்டுகிறார்.

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 66
1 எப்பிராயீமுடைய குடிவெறியரின் செருக்குள்ள மணிமுடிக்கு ஐயோ கேடு! அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப் போகும் மலருக்கும் ஐயோ கேடு! இரசப் போதையால் மேற்கொள்ளப்பட்டவர்களின் செழிப்பான பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே. 2 இதோ, ஆண்டவர் அனுப்பிய ஆற்றலும் வல்லமையுமுள்ள ஒருவன், அவன் ஆலங்கட்டி மழை போலும், அழித்துப் பாழாக்கும் புயல் போலும், கரை புரண்டு பாயும் வெள்ளப்பெருக்குப் போலும், தன் கை வன்மையால் அவர்களைத் தரையில் வீழ்த்துவான். 3 எப்பிராயீமுடைய குடிவெறியரின் செருக்குள்ள மணிமுடி இவ்வாறு காலால் மிதிக்கப்படும். 4 செழிப்பான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்ற அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப்போகும் மலர், கோடைக்காலம் வருமுன் பருவந் தப்பிப்பழுத்த அத்திப்பழம் போலாகும்; அதைக் கண்டவன் கையால் பறித்து அப்பொழுதே உண்டு விடுவான். 5 அந்நாளில் சேனைகளின் ஆண்டவர் தம் மக்களுள் எஞ்சியிருப்போருக்குத் தாமே மகிமையின் மணிமுடியாகவும் அழகு வாய்ந்த மகுடமாகவும் இருப்பார். 6 நீதி வழங்க, இருக்கையில் அமர்கிறவனுக்கு நீதியின் வரமாகவும், போர்க்களத்தை விட்டு வாயில் நோக்கித் திரும்புகிறவர்களுக்குப் பலமாகவும் இருப்பார். 7 இவர்கள் கூட மதுவருந்தி அறிவிழந்தனர், குடிவெறியால் தடுமாறுகின்றனர்; அர்ச்சகரும் தீர்க்கதரிசியும் குடிவெறியால் அறிவிழந்தனர், மதுபானத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர், குடிபோதையில் தடுமாறுகின்றனர்; காணும் காட்சியில் தவறுகின்றனர், தீர்ப்புச் சொல்வதில் தடுமாறுகின்றனர். 8 ஏனெனில் மேசைகள் யாவும் வாந்தியால் நிறைந்துள்ளன, அசுத்தமில்லாத இடமே கிடையாது. 9 யாருக்கு அவன் அறிவைப் புகட்டுவான்? யாருக்குச் செய்தியை விளக்கிக் கூறுவான்? பால் மறக்கடிக்கப்பட்ட சிறிய குழந்தைகளுக்கா? தாய் மார்பினின்று நீக்கப்பட்ட குழந்தைகளுக்கா? 10 ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளை மேல் கட்டளை, ஒழுங்கு மேல் ஒழுங்கு, ஒழுங்கு மேல் ஒழுங்கு, இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்" என்கிறார்கள். 11 ஆம் விளங்காத வார்தைகளிலும், தெரியாத அந்நிய மொழியிலுமே இந்த மக்களிடம் ஆண்டவர் பேசுவார்; 12 அவர் அவர்களுக்குச் சொல்லியிருந்தார்: "இதோ, இருக்கிறது இளைப்பாற்றி, களைத்தவன் இளைப்பாறட்டும்; இதோ, இருக்கிறது ஓய்வு; "ஆனால், அவர்கள் கேட்கவில்லை. 13 ஆண்டவரின் வாக்கு அவர்களுக்கு இதுவே: "கட்டளை மேல் கட்டளை, கட்டளை மேல் கட்டளை, ஒழுங்கு மேல் ஒழுங்கு, ஒழுங்கு மேல் ஒழுங்கு, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்." அவ்வாறே அவர்களும் புறப்பட்டுப் போய்ப் புறங்காட்டி வீழ்வர், நொறுக்கப்பட்டுக் கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவார்கள். 14 யெருசலேமிலுள்ள நம் மக்களை ஆண்டு வரும் ஏளனக்காரர்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்! 15 நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம், பாதாளத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம், தீமை மடை புரண்டு வந்தாலும், அது எங்கள்மேல் வராது; ஏனெனில் பொய்மையில் நாங்கள் நம்பிக்கை வைத்தோம், பொய்மையாலேயே நாங்கள் காப்பாற்றப்பட்டோம்" என்று நீங்கள் சொன்னீர்களே. 16 ஆதலால் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, சீயோனில் ஓர் அடிப்படைக் கல்லை- பரிசோதித்து உறுதியானது எனக் கண்ட ஒரு கல்லை, விலையுயர்ந்த மூலைக்கல்லாய், உறுதியான அடிப்படையாய் நாம் நாட்டுவோம்: அது 'விசுவாசிக்கிறவன் இடறி விழ மாட்டான்' எனப்படும். 17 நீதியை அளவு கோலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் ஏற்படுத்துவோம்; ஆனால் பொய்மையில் வைத்த நம்பிக்கையைக் கல்மழை அழிக்கும், புகலிடத்தை வெள்ளப்பெருக்கு அடித்துப் போகும். 18 அப்போது, சாவோடு நீங்கள் செய்த உடன்படிக்கை உடைபடும், பாதாளத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தம் ஒழிந்துபோம்; தீமை மடைபுரண்டு வரும் பொழுது, நீங்கள் அதனால் அடித்து நொறுக்கப்படுவீர்கள். 19 தீமை பெருக்கெடுத்து வரும் போதெல்லாம் உங்களை அது வாரிக்கொண்டு போகும்; அதுவும் வைகறையிலே கிளம்பி, பகலிலும் இரவிலும் பெருக்கெடுத்தோடும்; இந்தச் செய்தியைக் கேட்டுக் கண்டு பிடிப்பதே ஒரு பெருந்திகிலாக இருக்கும். 20 கால் நீட்டிப் படுக்கக் கட்டில் போதாது, போர்த்துக்கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது. 21 பெராசீம் மலை மீது நின்றது போல் ஆண்டவர் உங்களுக்கு விரோதமாய் எழுந்து நிற்பார்; கபாவோன் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டது போல், அவர் கோபங்கொள்வார். அவர் தமது செயலைச் செய்வார்; அச்செயல் புதுமையானதே! வேலையைச் செய்வார்; அவ்வேலை விந்தையானதே! 22 ஆகையால் இப்பொழுது ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்; இல்லையேல் உங்கள் தளைகள் இறுகிப்போகும்; ஏனெனில் நாடு முழுவதையும் அழிக்கும்படியாகச் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் இட்ட ஆணையை நான் கேட்டிருக்கிறேன். 23 செவிசாயுங்கள், என் குரலொலியைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள்: 24 விதைப்பதற்காக உழுகிறவன் நாள் முழுவதுமா உழுகிறான்? நிலத்தை நாள் முழுதுமா கொத்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும் இருக்கிறான்? 25 நிலத்தின் மேல்பரப்பை நிரவிய பின், சதகுப்பையை விதைத்துச் சீரகத்தைத் தெளிப்பானன்றோ? அதற்குரிய இடத்தில் கோதுமை, வாற் கோதுமை, துவரை, பயறு இவற்றை முறைப்படி விதைப்பானன்றோ? 26 இந்த முறைமை அவன் கற்றுக்கொண்டான், கடவுளே அதை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். 27 சதகுப்பை இருப்பு முட்களால் அடிக்கப்படுவதில்லை, சீரகமானது வண்டி உருளையால் புணையடிக்கப்படுவதில்லை; ஆனால் சதகுப்பை கோலால் அடிக்கப்படும், சீரகம் தடியால் அடிக்கப்படும். 28 அப்பத்திற்குரிய கோதுமை இடிக்கப்படுமோ? படாது; அதை இடைவிடாமல் புணையடித்துக்கொண்டே இருக்கிறதில்லை. வண்டி உருளையையும் குதிரைகளையும் அதன் மேல் செலுத்தும் போது, அதை நொறுக்கி விடுவதில்லை. 29 சேனைகளின் கடவுளான ஆண்டவரின் போக்கும் இதுவே; அவ்வாறு அவர் அறிவை விளங்கச் செய்கிறார், அவர் ஞானம் தலைசிறந்ததெனக் காட்டுகிறார்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References