தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. இதோ ஆண்டவர் பூமியைப் பாழாக்கப் போகிறார்; அதனை வெறுமையாக்கப் போகிறார்; அதன் முகத்தை மாற்றமடையச் செய்வார், அதில் வாழ்பவர்களைச் சிதறடிப்பார்.
2. பொதுமக்களுக்கு எப்படியோ அப்படியே அர்ச்சகருக்கும், ஊழியனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும், பணிப் பெண்ணுக்கு எங்ஙனமோ அங்ஙனமே அவள் தலைவிக்கும், வாங்குபவனுக்கு எப்படியோ அப்படியே விற்பவனுக்கும், கடன் கொடுப்பவனுக்கு எவ்வாறோ அவ்வாறே கடன் வாங்குபவனுக்கும், வட்டி வாங்குபவனுக்கு எங்ஙனமோ அங்ஙனமே வட்டி தருபவனுக்கும், அனைவர்க்கும் தீர்ப்பு நடக்கும்.
3. பூமி முற்றிலும் அலைக்கழிக்கப்படும், கொள்ளையடிக்கப்பட்டுப் பாழாகும்; ஏனெனில் ஆண்டவரே இவ்வார்த்தையைச் சொல்லியிருக்கிறார்.
4. பூமி அழுது புலம்புகிறது, வாடி வதங்குகிறது; உலகம் வேதனையுறுகிறது, சோர்வுற்றுச் சாய்கிறது; வானமும் பூமியுடன் சேர்ந்து துன்புறுகிறது.
5. பூமி அதனுடைய குடிமக்களால் தீட்டுப்பட்டு, அசுத்தத்தால் நாறுகிறது; ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள், கட்டளைகளுக்குக் கட்டுப்படவில்லை, முடிவில்லா உடன்படிக்கையை முறித்து விட்டார்கள்.
6. ஆதலால் உலகத்தைச் சாபனை விழுங்குகின்றது, அதன் குடிகள் தங்கள் குற்றத்துக்காகத் துன்புறுகிறார்கள். ஆதலால் தான் அதில் வாழ்வோர் வெப்பத்தால் தீய்கிறார்கள், அதிலிருந்து மிகச் சிலரே தப்புவார்கள்.
7. திராட்சை இரசம் அழுகிறது, திராட்சைக் கொடி வேதனைப்படுகிறது, மகிழ்ந்திருந்த உள்ளமெல்லாம் பெருமூச்செறிகின்றது.
8. மேளத்தின் மகிழ்ச்சியொலி அடங்கி விட்டது, மகிழ்ச்சியுற்றோர் ஆரவாரம் ஓய்ந்து விட்டது, வீணையின் இன்னிசை அடங்கிப் போயிற்று.
9. பாடலோடு இரசபானஞ் செய்ய மாட்டார்கள், போதை தரும் பானமும் குடிப்போர்க்குக் கசப்பாயிருக்கும்.
10. ஒழுங்கீனத்தின் நகரம் தகர்க்கப்பட்டது, வீடுகள் எல்லாம் அடைபட்டன, அவற்றினுள் நுழைபவன் எவனுமில்லை.
11. இரசமின்மையால் தெருக்களில் கூச்சல் உண்டாகும், மகிழ்ச்சியெல்லாம் மௌ;ள மௌ;ள மங்கிப் போகிறது, பூமியின் அக்களிப்பு அகற்றப்பட்டது.
12. பாழாக்கப்பட்ட நிலைமையே நகரத்தில் காணப்படும், வாயில்கள் இடித்துத் தகர்க்கப்படும்.
13. ஒலிவ மரத்தில் காய்களை அடிக்கும் போது இருப்பது போலும், திராட்சை அறுவடையில் பழம் பறிக்கும் போது இருப்பது போலும், பூமியில் மக்களினங்களின் நடுவிலும் இருக்கும்.
14. அவர்களோ தங்கள் குரல்களை உயர்த்தி மகிழ்ச்சி பொங்கப் பாடுவார்கள், ஆண்டவரின் மகிமையைக் குறித்து மேற்குத் திசையிலிருந்து ஆரவாரம் செய்வார்கள்.
15. ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள். கடலையடுத்துள்ள கடற்கரை நாடுகளில், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் புகழ்ந்து போற்றுங்கள்.
16. உலகத்தின் இறுதி எல்லைகளினின்று புகழ்ப்பாடல் எழுகின்றது, 'நீதியுள்ளவர்க்கு மகிமை' என்று கேட்கின்றது; அப்போது நான் சொன்னேன்: "ஐயோ ஐயோ, போதும் போதும், துரோகிகள் துரோகம் செய்தனர், துரோகிகள் கொடிய துரோகம் செய்தனர்."
17. பூமியில் வாழும் மனிதனே, உனக்கெதிராய்த் திகில், படுகுழி, கண்ணி இவை காத்திருக்கின்றன.
18. திகில் தரும் இரைச்சல் கேட்டு ஓடுபவன் படுகுழியில் விழுவான், படுகுழிக்குத் தப்பி ஏறியோடுபவன் கண்ணியில் மாட்டிக் கொள்வான். தீர்ப்புப்பற்றிய கவிதையின் தொடர்ச்சி: வானத்து நீர்மடைகள் திறக்கப்படும், பூமியின் அடிப்படைகள் ஆட்டங்கொள்ளும்.
19. பூமியானது முற்றிலும் முறிக்கப்படும், நிலவுலகம் இரண்டாகக் கிழிக்கப்படும். மண்ணுலகம் பலமாக ஆட்டப்படும்.
20. குடியனைப் போல் உலகம் தள்ளாடும், வயல் வெளிக் குடிசை போல் அலைக்கழிக்கப்படும், அதன் அக்கிரமம் அதனை அழுத்தும், அது வீழ்ச்சியுறும்; அது இனி மேல் ஒருநாளும் எழும்பாது.
21. அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படையையும், பூமியில் உலகத்தின் அரசர்களையும் தண்டிப்பார்.
22. எல்லாரும் ஒன்றாகக் கூட்டப்பட்டுப் படுகுழியில் கைதிகளாய் அடைக்கப்படுவர்; சிறைக்கூடத்தில் அவர்கள் மூடப்படுவார்கள், பல நாட்கள் சென்றபின் தண்டனை பெறுவர்.
23. அப்போது நிலா வெட்கமுறும், கதிரவன் தலை நாணுவான்; ஏனெனில், சேனைகளின் ஆண்டவர் சீயோன் மலை மேலும் யெருசலேமிலும் அரசாளுவார்; அவருடைய மூப்பர்கள் முன்னிலையில் அவர் தமது மகிமையை வெளிப்படுத்துவார்.

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 66
1 இதோ ஆண்டவர் பூமியைப் பாழாக்கப் போகிறார்; அதனை வெறுமையாக்கப் போகிறார்; அதன் முகத்தை மாற்றமடையச் செய்வார், அதில் வாழ்பவர்களைச் சிதறடிப்பார். 2 பொதுமக்களுக்கு எப்படியோ அப்படியே அர்ச்சகருக்கும், ஊழியனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும், பணிப் பெண்ணுக்கு எங்ஙனமோ அங்ஙனமே அவள் தலைவிக்கும், வாங்குபவனுக்கு எப்படியோ அப்படியே விற்பவனுக்கும், கடன் கொடுப்பவனுக்கு எவ்வாறோ அவ்வாறே கடன் வாங்குபவனுக்கும், வட்டி வாங்குபவனுக்கு எங்ஙனமோ அங்ஙனமே வட்டி தருபவனுக்கும், அனைவர்க்கும் தீர்ப்பு நடக்கும். 3 பூமி முற்றிலும் அலைக்கழிக்கப்படும், கொள்ளையடிக்கப்பட்டுப் பாழாகும்; ஏனெனில் ஆண்டவரே இவ்வார்த்தையைச் சொல்லியிருக்கிறார். 4 பூமி அழுது புலம்புகிறது, வாடி வதங்குகிறது; உலகம் வேதனையுறுகிறது, சோர்வுற்றுச் சாய்கிறது; வானமும் பூமியுடன் சேர்ந்து துன்புறுகிறது. 5 பூமி அதனுடைய குடிமக்களால் தீட்டுப்பட்டு, அசுத்தத்தால் நாறுகிறது; ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள், கட்டளைகளுக்குக் கட்டுப்படவில்லை, முடிவில்லா உடன்படிக்கையை முறித்து விட்டார்கள். 6 ஆதலால் உலகத்தைச் சாபனை விழுங்குகின்றது, அதன் குடிகள் தங்கள் குற்றத்துக்காகத் துன்புறுகிறார்கள். ஆதலால் தான் அதில் வாழ்வோர் வெப்பத்தால் தீய்கிறார்கள், அதிலிருந்து மிகச் சிலரே தப்புவார்கள். 7 திராட்சை இரசம் அழுகிறது, திராட்சைக் கொடி வேதனைப்படுகிறது, மகிழ்ந்திருந்த உள்ளமெல்லாம் பெருமூச்செறிகின்றது. 8 மேளத்தின் மகிழ்ச்சியொலி அடங்கி விட்டது, மகிழ்ச்சியுற்றோர் ஆரவாரம் ஓய்ந்து விட்டது, வீணையின் இன்னிசை அடங்கிப் போயிற்று. 9 பாடலோடு இரசபானஞ் செய்ய மாட்டார்கள், போதை தரும் பானமும் குடிப்போர்க்குக் கசப்பாயிருக்கும். 10 ஒழுங்கீனத்தின் நகரம் தகர்க்கப்பட்டது, வீடுகள் எல்லாம் அடைபட்டன, அவற்றினுள் நுழைபவன் எவனுமில்லை. 11 இரசமின்மையால் தெருக்களில் கூச்சல் உண்டாகும், மகிழ்ச்சியெல்லாம் மௌ;ள மௌ;ள மங்கிப் போகிறது, பூமியின் அக்களிப்பு அகற்றப்பட்டது. 12 பாழாக்கப்பட்ட நிலைமையே நகரத்தில் காணப்படும், வாயில்கள் இடித்துத் தகர்க்கப்படும். 13 ஒலிவ மரத்தில் காய்களை அடிக்கும் போது இருப்பது போலும், திராட்சை அறுவடையில் பழம் பறிக்கும் போது இருப்பது போலும், பூமியில் மக்களினங்களின் நடுவிலும் இருக்கும். 14 அவர்களோ தங்கள் குரல்களை உயர்த்தி மகிழ்ச்சி பொங்கப் பாடுவார்கள், ஆண்டவரின் மகிமையைக் குறித்து மேற்குத் திசையிலிருந்து ஆரவாரம் செய்வார்கள். 15 ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள். கடலையடுத்துள்ள கடற்கரை நாடுகளில், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் புகழ்ந்து போற்றுங்கள். 16 உலகத்தின் இறுதி எல்லைகளினின்று புகழ்ப்பாடல் எழுகின்றது, 'நீதியுள்ளவர்க்கு மகிமை' என்று கேட்கின்றது; அப்போது நான் சொன்னேன்: "ஐயோ ஐயோ, போதும் போதும், துரோகிகள் துரோகம் செய்தனர், துரோகிகள் கொடிய துரோகம் செய்தனர்." 17 பூமியில் வாழும் மனிதனே, உனக்கெதிராய்த் திகில், படுகுழி, கண்ணி இவை காத்திருக்கின்றன. 18 திகில் தரும் இரைச்சல் கேட்டு ஓடுபவன் படுகுழியில் விழுவான், படுகுழிக்குத் தப்பி ஏறியோடுபவன் கண்ணியில் மாட்டிக் கொள்வான். தீர்ப்புப்பற்றிய கவிதையின் தொடர்ச்சி: வானத்து நீர்மடைகள் திறக்கப்படும், பூமியின் அடிப்படைகள் ஆட்டங்கொள்ளும். 19 பூமியானது முற்றிலும் முறிக்கப்படும், நிலவுலகம் இரண்டாகக் கிழிக்கப்படும். மண்ணுலகம் பலமாக ஆட்டப்படும். 20 குடியனைப் போல் உலகம் தள்ளாடும், வயல் வெளிக் குடிசை போல் அலைக்கழிக்கப்படும், அதன் அக்கிரமம் அதனை அழுத்தும், அது வீழ்ச்சியுறும்; அது இனி மேல் ஒருநாளும் எழும்பாது. 21 அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படையையும், பூமியில் உலகத்தின் அரசர்களையும் தண்டிப்பார். 22 எல்லாரும் ஒன்றாகக் கூட்டப்பட்டுப் படுகுழியில் கைதிகளாய் அடைக்கப்படுவர்; சிறைக்கூடத்தில் அவர்கள் மூடப்படுவார்கள், பல நாட்கள் சென்றபின் தண்டனை பெறுவர். 23 அப்போது நிலா வெட்கமுறும், கதிரவன் தலை நாணுவான்; ஏனெனில், சேனைகளின் ஆண்டவர் சீயோன் மலை மேலும் யெருசலேமிலும் அரசாளுவார்; அவருடைய மூப்பர்கள் முன்னிலையில் அவர் தமது மகிமையை வெளிப்படுத்துவார்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References