தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. கடலையடுத்த பாலைவெளி பற்றிய இறைவாக்கு: தென்மேற்கிலிருந்து கிளம்பி வரும் சூறாவளி போல் அச்சந்தரும் நாடான பாலை நிலத்திலிருந்து படை வருகிறது.
2. கொடிய காட்சியொன்று எனக்குக் காட்டப்பட்டது; கொள்ளைக்காரன் கொள்ளையடிக்கிறான், நாசக்காரன் பாழாக்குகிறான். ஏலாம் நாடே போருக்கெழு, மேதியா நாடே முற்றுகையிடு; பபிலோன் விளைவித்த பெருமூச்சுகளெல்லாம் முற்றுப்பெறச் செய்யப் போகிறோம்.
3. ஆதலால் என் அடிவயிறு கலங்கிக் குமுறுகிறது, பிள்ளைபெறும் பெண்ணின் வேதனைக் கொத்த வேதனை என்யையும் வாட்டுகின்றது; உடல் குன்றினேன், செவிடன் போல் ஆனேன்; திகில் கொண்டேன், குருடன்போல் ஆனேன்;
4. என் உள்ளம் குழம்புகின்றது, திகில் என்னை ஆட்கொண்டுள்ளது; நான் விரும்பிய இரவின் மங்கிய ஒளி எனக்கு நடுக்கத்தையே தந்தது.
5. பந்தி தயார் செய்கிறர்கள், கம்பளங்களைப் பரப்புகின்றார்கள்; சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள். தலைவர்களே, எழுந்திருங்கள்; கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்.
6. ஏனெனில் ஆண்டவர் எனக்குச் சொன்னது இதுவே: "போய் ஒரு சாமக்காவலனை வை; தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.
7. இருவர் இருவராய் அணிவகுத்த குதிரைப் படை வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் வருவதையும் அந்தக் காவலன் காணும்போது, உற்றுக் கேட்கட்டும்; மிகவும் கவனமாய் உற்றுக் கேட்கட்டும்."
8. அப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தவன் கூச்சலிட்டான்: "ஆண்டவனே, பகல் முழுதும் காவல் மாடத்தில் நான் நின்றுகெண்டிருக்கிறேன்; இரவெல்லாம் காவல் காக்கும் வேலையில் நான் கருத்தாய் இருக்கிறேன்.
9. இதோ, இருவர் இருவராய் அணிவகுத்த குதிரைப்படை வந்து கொண்டிருக்கிறது!" தொடர்ந்து அவன் எனக்குச் சொன்னது இதுவே: "விழுந்தது, பபிலோன் வீழ்ச்சியுற்றது; அதனுடைய தெய்வங்கள் படிமங்கள் யாவும் தரையில் விழுந்து நொறுங்கி விட்டன."
10. போரடிக்கப்பட்ட களத்தில் அகப்பட்டவர்களே, தூற்றப்பட்ட களத்தில் சிதறியவர்களே, இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரிடமிருந்து நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. தூமாவைப் பற்றிய இறைவாக்கு: "சாமக்காவலனே, இரவில் நேரம் எவ்வளவு? சாமக்காவலனே, இரவில் நேரம் எவ்வளவு?" என்றொருவன் சேயீரிலிருந்து என்னை நோக்கிக் கத்துகிறான்.
12. காலை புலர்கிறது, அவ்வாறே இரவும் வருகிறது; விசாரிக்க விரும்பினால், விசாரியுங்கள்; வேண்டுமானால் திரும்பி வாருங்கள்" என்று சாமக்காவலன் விடைகொடுத்தான்.
13. அராபியாவைப் பற்றிய இறைவாக்கு: தேதான் நாட்டு வணிகர்களின் கூட்டங்களே, அராபியாவின் காடுகளில் நீங்கள் இராத் தங்குவீர்கள்.
14. தேமா நாட்டின் குடிமக்களே, தாகமுற்றோர்க்கு எதிர்வந்து தண்ணீர் கொடுங்கள், தப்பியோடி வருவோர்க்கு முன்வந்து உணவளியுங்கள்.
15. ஏனெனில் அவர்கள் வாள்களுக்குத் தப்பியோடுகிறார்கள், உருவிய வாளுக்குத் தப்பிப் பிழைத்தும், நாணேற்றிய வில்லுக்கு இரையாகாமலும், போர்க்களத்தின் கொடுமைக்கு அஞ்சியும் ஓடுகிறார்கள்.
16. (ஏனெனில்) ஆண்டவர் எனக்குச் சொன்னது இதுவே: "கூலியாளின் கணக்குப்படியே இன்னும் ஓராண்டில் செதாரின் மகிமையெல்லாம் எடுபட்டுப் போகும்.
17. செதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களில் மிகச் சிலரே எஞ்சியிருப்பர்; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைச் சொன்னார்."
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 66
1 கடலையடுத்த பாலைவெளி பற்றிய இறைவாக்கு: தென்மேற்கிலிருந்து கிளம்பி வரும் சூறாவளி போல் அச்சந்தரும் நாடான பாலை நிலத்திலிருந்து படை வருகிறது. 2 கொடிய காட்சியொன்று எனக்குக் காட்டப்பட்டது; கொள்ளைக்காரன் கொள்ளையடிக்கிறான், நாசக்காரன் பாழாக்குகிறான். ஏலாம் நாடே போருக்கெழு, மேதியா நாடே முற்றுகையிடு; பபிலோன் விளைவித்த பெருமூச்சுகளெல்லாம் முற்றுப்பெறச் செய்யப் போகிறோம். 3 ஆதலால் என் அடிவயிறு கலங்கிக் குமுறுகிறது, பிள்ளைபெறும் பெண்ணின் வேதனைக் கொத்த வேதனை என்யையும் வாட்டுகின்றது; உடல் குன்றினேன், செவிடன் போல் ஆனேன்; திகில் கொண்டேன், குருடன்போல் ஆனேன்; 4 என் உள்ளம் குழம்புகின்றது, திகில் என்னை ஆட்கொண்டுள்ளது; நான் விரும்பிய இரவின் மங்கிய ஒளி எனக்கு நடுக்கத்தையே தந்தது. 5 பந்தி தயார் செய்கிறர்கள், கம்பளங்களைப் பரப்புகின்றார்கள்; சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள். தலைவர்களே, எழுந்திருங்கள்; கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள். 6 ஏனெனில் ஆண்டவர் எனக்குச் சொன்னது இதுவே: "போய் ஒரு சாமக்காவலனை வை; தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும். 7 இருவர் இருவராய் அணிவகுத்த குதிரைப் படை வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் வருவதையும் அந்தக் காவலன் காணும்போது, உற்றுக் கேட்கட்டும்; மிகவும் கவனமாய் உற்றுக் கேட்கட்டும்." 8 அப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தவன் கூச்சலிட்டான்: "ஆண்டவனே, பகல் முழுதும் காவல் மாடத்தில் நான் நின்றுகெண்டிருக்கிறேன்; இரவெல்லாம் காவல் காக்கும் வேலையில் நான் கருத்தாய் இருக்கிறேன். 9 இதோ, இருவர் இருவராய் அணிவகுத்த குதிரைப்படை வந்து கொண்டிருக்கிறது!" தொடர்ந்து அவன் எனக்குச் சொன்னது இதுவே: "விழுந்தது, பபிலோன் வீழ்ச்சியுற்றது; அதனுடைய தெய்வங்கள் படிமங்கள் யாவும் தரையில் விழுந்து நொறுங்கி விட்டன." 10 போரடிக்கப்பட்ட களத்தில் அகப்பட்டவர்களே, தூற்றப்பட்ட களத்தில் சிதறியவர்களே, இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரிடமிருந்து நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11 தூமாவைப் பற்றிய இறைவாக்கு: "சாமக்காவலனே, இரவில் நேரம் எவ்வளவு? சாமக்காவலனே, இரவில் நேரம் எவ்வளவு?" என்றொருவன் சேயீரிலிருந்து என்னை நோக்கிக் கத்துகிறான். 12 காலை புலர்கிறது, அவ்வாறே இரவும் வருகிறது; விசாரிக்க விரும்பினால், விசாரியுங்கள்; வேண்டுமானால் திரும்பி வாருங்கள்" என்று சாமக்காவலன் விடைகொடுத்தான். 13 அராபியாவைப் பற்றிய இறைவாக்கு: தேதான் நாட்டு வணிகர்களின் கூட்டங்களே, அராபியாவின் காடுகளில் நீங்கள் இராத் தங்குவீர்கள். 14 தேமா நாட்டின் குடிமக்களே, தாகமுற்றோர்க்கு எதிர்வந்து தண்ணீர் கொடுங்கள், தப்பியோடி வருவோர்க்கு முன்வந்து உணவளியுங்கள். 15 ஏனெனில் அவர்கள் வாள்களுக்குத் தப்பியோடுகிறார்கள், உருவிய வாளுக்குத் தப்பிப் பிழைத்தும், நாணேற்றிய வில்லுக்கு இரையாகாமலும், போர்க்களத்தின் கொடுமைக்கு அஞ்சியும் ஓடுகிறார்கள். 16 (ஏனெனில்) ஆண்டவர் எனக்குச் சொன்னது இதுவே: "கூலியாளின் கணக்குப்படியே இன்னும் ஓராண்டில் செதாரின் மகிமையெல்லாம் எடுபட்டுப் போகும். 17 செதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களில் மிகச் சிலரே எஞ்சியிருப்பர்; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைச் சொன்னார்."
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References