தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. எகிப்து நாட்டுக்கு எதிராகக் கூறப்பட்ட இறைவாக்கு: இதோ, விரைந்து செல்லும் கார்மேகத்தில் ஏறிக் கொண்டு, ஆண்டவர் எகிப்துக்கு வருகின்றார்; எகிப்து நாட்டின் சிலைகள் அவர் முன்னிலையில் அஞ்சி நடுங்கும், எகிப்தியரின் இதயம் உள்ளுக்குள் பாகாய் உருகும்.
2. எகிப்தியருக்கு எதிராய் எகிப்தியரையே தூண்டிவிடுவோம், சகோதரனுக்கு விரோதமாய்ச் சகோதரனும், தன் அயலானுக்கு எதிராய் ஒவ்வொருவனும், நகருக்கெதிராய் நகரமும், அரசுக் கெதிராய் அரசும் அவர்களுக்குள்ளே போரிடுவார்கள்.
3. எகிப்தியரின் ஆற்றல் அவர்களுக்குள்ளே வற்றிப் போகும், அவர்களுடைய திட்டங்களை நாம் குழப்பி விடுவோம்; சிலைகளையும் குறிசொல்பவர்களையும் ஆலோசனை கேட்பார்கள்; மை வித்தைக்காரரையும் மந்திரவாதிகளையும் வழி கேட்பார்கள்.
4. கொடுமையாக வேலை வாங்கும் தலைவர்களிடம் எகிப்து நாட்டினரைக் கையளிப்போம்; கொடுங்கோலனான அரசன் ஒருவன் அவர்களை ஆள்வான் என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய கடவுள்.
5. கடல் நீர் வற்றிப் போகும், ஆற்று நீர் வறண்டு காய்ந்து போகும்.
6. அதனுடைய கால்வாய்கள் நாற்றம் வீசும், எகிப்து நாட்டின் நைல் ஆற்றுக் கிளை நதிகள் நீர் குறைந்து மௌ;ள மௌ;ள வற்றிப் போகும், கோரைகளும் நாணல்களும் வதங்கிப் போகும்.
7. நைல் நதியருகிலும், நைல் நதியின் கரைகளிலும், இருக்கின்ற புல்தரைகள் யாவும், நைல் நதியருகில் விதைக்கப் பட்டவை அனைத்தும் வறண்டு போம், வாடிப்போம், மடிந்து போகும்.
8. செம்படவர்கள் அழுவார்கள், புலம்புவார்கள்; நைல் நதியில் தூண்டில் போடுவோர் அனைவரும் துக்கம் கொள்வர்; தண்ணீரில் வலை வீசுவோர் கலங்கி நிற்பர்.
9. மெல்லிய சணலாடை செய்வோர் நம்பிக்கையிழப்பர், வெண்பருத்தியில் துணி நெய்வோர் சோர்வு கொள்வர்.
10. நெசவுத் தொழில் செய்பவர்கள் நசுக்கப்படுவர், கூலி வேலை செய்வோர் அனைவரும் துக்கம் கொள்வார்கள்.
11. தானீஸ் பட்டணத்துத் தலைவர்கள் அறிவிலிகள், பார்வோனின் ஞானமிக்க மந்திரிகள் மடமையான ஆலோசனை கொடுத்தார்கள்; "நான் ஞானிகளின் புதல்வனல்லனோ? பழங்கால மன்னர்களின் மைந்தன் அல்லனோ?" என்று நீங்கள் பார்வோனிடம் எவ்வாறு சொல்லக்கூடும்?
12. அப்படியானால் உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராக என்ன திட்டம் தீட்டியுள்ளார் என்பதை அவர்கள் உனக்கு வெளியாக்கிக் கூறட்டுமே!
13. தானீஸ் பட்டணத்துத் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள், மெம்பீஸ் நகரத்துத் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்; எகிப்து மக்களுக்கு மூலைக்கல் போல் இருந்தவர்களே எகிப்தைத் தவறான நெறியில் நடத்தினார்கள்.
14. ஆண்டவர் அதன் நடுவில் மனக்குழப்பத்தை உண்டாக்கினார், போதை வெறி கொண்டவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவது போல், எகிப்தை அதனுடைய செயல்களிலெல்லாம் தள்ளாடச் செய்தனர்.
15. எகிப்து நாட்டின் தலையோ வாலோ, கிளையோ நாணலோ, யாரும் எதையும் செய்து பயன் விளையாது.
16. எகிப்தும் அசீரியாவும் மனந்திரும்பும்: அந்நாளில், எகிப்தியர் பேடிகளாகி, ஆண்டவர் அவர்கள் மேல் நீட்டியுள்ள கையின் வல்லமையைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள்.
17. யூதா நாடு எகிப்து நாட்டுக்கொரு திகிலாய் இருக்கும்; யூதா என்னும் பெயரைக் கேட்பவர் அனைவரும், சேனைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகக் தீட்டியுள்ள திட்டத்தை முன்னிட்டு அஞ்சுவார்கள்.
18. அந்நாளில் கானான் நாட்டின் மொழியைப் பேசும் நகரங்கள் எகிப்து நாட்டில் ஐந்து இருக்கும்; அவை சேனைகளின் ஆண்டவர் பேரால் ஆணையிடும்; அவற்றுள் ஒன்று சூரியபட்டணம் எனச் சொல்லப்படும்.
19. அந்நாளில், எகிப்து நாட்டின் நடுவில் ஆண்டவருக்கென ஒரு பீடம் இருக்கும்; நாட்டின் எல்லைப்புறத்தில் ஆண்டவருக்கென ஒரு தூண் நாட்டப்பட்டிருக்கும்.
20. அது எகிப்து நாட்டில் சேனைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சாட்சியாகவும் விளங்கும்; கொடியவர்கள் ஒடுக்கும் போது ஆண்டவரை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவார்கள்; அவரோ அவர்களுக்கு மீட்பர் ஒருவரை அனுப்பி, அவர்களை விடுவித்துக் காப்பாற்றுவார்.
21. அப்போது ஆண்டவர் தம்மை எகிப்தியருக்கு வெளிப்படுத்துவார்; எகிப்தியர் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வர்; பலிகளும் தகனப் பலிகளும் தந்து அவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்கு நேர்ச்சிக் கடன் வைத்துக் கொண்டு, அவற்றை நிறைவேற்றுவார்கள்.
22. ஆண்டவர் எகிப்தியரைத் துன்பத்தால் வதைப்பார்; வதைத்தாலும் துன்பத்தை ஆற்றிடுவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவர் அவர்களுடைய மன்றாட்டுகளைக் கேட்டு அவர்களை நலமாக்குவார்.
23. அந்நாளில் எகிப்துக்கும் அசீரியாவுக்கும் ஒரு நெடுஞ்சாலை அமைக்கப்படும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் தாராளமாய்ப் போய் வருவார்கள்; எகிப்தியரும் அசீரியரும் சேர்ந்து வழிபாடு செய்வார்கள்.
24. அந்நாளில், இஸ்ராயேல் எகிப்தோடும் அசீரியாவோடும் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து, உலகத்தின் நடுவில் ஆசீர்வாதமாய் விளங்கும்;
25. அதையே சேனைகளின் ஆண்டவர் ஆசீர்வதித்து, "நம் மக்களாகிய எகிப்தும், நமது கைவேலைப்பாடாகிய அசீரியாவும், நமது உரிமைச் சொத்தாகிய இஸ்ராயேலும் ஆசிர்வதிக்கப்படுவனவாக!" என்று சொல்லி யிருக்கிறார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 19 of Total Chapters 66
ஏசாயா 19:29

×

Alert

×

tamil Letters Keypad References