தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. தமஸ்குப் பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு: இதோ, தமஸ்கு ஒரு நகரமாய் இராமற் போகும், பாழடைந்த மண்மேடாய்க் கிடக்கும்.
2. அரோயர் பட்டணங்கள் கைவிடப்படும், மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாய் விட்டுவிடப்படும்; அவை அவ்விடத்திலேயே அடைந்திருக்கும், அவற்றை அச்சுறுத்துபவன் எவனுமில்லை.
3. எப்பிராயீமின் அரண்காவல் அழிந்து விடும், தமஸ்குவின் அரசுரிமை பறிக்கப்படும்; சீரியா நாட்டிலே எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களின் மகிமையைப் போல் ஆவார்கள் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
4. மேலும் அந் நாளில், யாக்கோபின் மகிமை தரைமட்டமாய்த் தாழ்த்தப்படும், அவனுடைய உடல் வலிமை குன்றிப் போகும்.
5. அறுப்பவன், நிற்கின்ற தானிய மணிகளைச் சேர்ப்பது போலும், கையால் கதிர்களை எளிதாகக் கொய்வது போலும், ரப்பாயீம் பள்ளத்தாக்கில் தப்புக் கதிர்களைத் தேடிப் பொறுக்குவதுபோலும் இருக்கும்;
6. ஒலிவ மரத்தின் காய்களைப் பறிக்கும் போது உயர்ந்தோங்கிய கிளை நுனியில் ஒன்றிரண்டும், பழமரத்துக் கிளைகளிலே நாலைந்தும் காய்கள் தப்புவது போல், அவர்களிலும் தப்பியவர்கள் எஞ்சியிருப்பார் என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்.
7. அந்நாளில் தன்னைப் படைத்தவர் முன் மனிதன் தலைவணங்குவான்; அவனுடைய கண்கள் இஸ்ராயேலின் பரிசுத்தரை நோக்கும்;
8. தன்னுடைய கை வேலைப்பாடுகளான பீடங்களைப் பொருட்படுத்தமாட்டான்; தானே தன் கைகளால் செய்த மரச் சிலைகளையும் கற்கூம்புகளையும் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்.
9. அந் நாளில், இஸ்ராயேல் மக்களின் முன்னிலையில் அமோரியர், ருவிதியர் இவர்களின் நகரங்கள் கைவிடப்பட்டது போல் அரண் சூழ்ந்த உன் நகரங்களும் கைவிடப்படும். அவை யாவும் பாலை வெளியாகும்.
10. ஏனெனில் உன்னுடைய மீட்பின் கடவுளை நீ மறந்துவிட்டாய்; உன் புகலிடமான பாறையை நீ நினைவுகூரவில்லை; ஆதலால், இனிய செடிகளையே நீ நட்டு வைத்தாலும், அந்நிய தெய்வங்களுக்குரிய நாற்றுகளைப் பயிரிட்டாலும்,
11. நீ அவற்றை நட்ட நாளிலேயே வளரச் செய்தாலும், விதைத்த நாள் காலையிலேயே பூக்கச் செய்தாலும், துயரத்தின் நாளில் ஆற்ற முடியாத வேதனை வரும் போது, அறுவைடையே கிடைக்காமல் போய்விடுமே!
12. இதோ, பல நாட்டு மக்களின் பேரிரைச்சல்: கடல் கொந்தளிப்பின் இரைச்சல் போல முழங்குகிறார்கள்; இதோ, மக்களினங்களின் கர்ச்சனை கேட்கின்றது; வெள்ளப் பெருக்கின் கர்ச்சனை போல கர்ச்சிக்கிறார்கள்!
13. பெரு வெள்ளம்போல பல நாட்டினர் கர்ச்சிக்கிறார்கள், ஆயினும் அவர் அதட்டுவார், அவர்கள் ஓடிப் போவார்கள், பெருங் காற்றால் மலை மேலே பறந்தோடும் பதர் போலும், புயல் காற்றில் சுழன்றோடும் தூசு போலும் சிதறிப் போவார்கள்.
14. மாலையில், இதோ, திகிலுண்டாகும்! விடியுமுன் அவர்கள் அழிந்துபோவர்கள்! நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பாடு இதுவாகும், நம்மைச் சூறையாடுவோர் கதி இவ்வாறாகும்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 17 / 66
1 தமஸ்குப் பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு: இதோ, தமஸ்கு ஒரு நகரமாய் இராமற் போகும், பாழடைந்த மண்மேடாய்க் கிடக்கும். 2 அரோயர் பட்டணங்கள் கைவிடப்படும், மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாய் விட்டுவிடப்படும்; அவை அவ்விடத்திலேயே அடைந்திருக்கும், அவற்றை அச்சுறுத்துபவன் எவனுமில்லை. 3 எப்பிராயீமின் அரண்காவல் அழிந்து விடும், தமஸ்குவின் அரசுரிமை பறிக்கப்படும்; சீரியா நாட்டிலே எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களின் மகிமையைப் போல் ஆவார்கள் என்கிறார் சேனைகளின் ஆண்டவர். 4 மேலும் அந் நாளில், யாக்கோபின் மகிமை தரைமட்டமாய்த் தாழ்த்தப்படும், அவனுடைய உடல் வலிமை குன்றிப் போகும். 5 அறுப்பவன், நிற்கின்ற தானிய மணிகளைச் சேர்ப்பது போலும், கையால் கதிர்களை எளிதாகக் கொய்வது போலும், ரப்பாயீம் பள்ளத்தாக்கில் தப்புக் கதிர்களைத் தேடிப் பொறுக்குவதுபோலும் இருக்கும்; 6 ஒலிவ மரத்தின் காய்களைப் பறிக்கும் போது உயர்ந்தோங்கிய கிளை நுனியில் ஒன்றிரண்டும், பழமரத்துக் கிளைகளிலே நாலைந்தும் காய்கள் தப்புவது போல், அவர்களிலும் தப்பியவர்கள் எஞ்சியிருப்பார் என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர். 7 அந்நாளில் தன்னைப் படைத்தவர் முன் மனிதன் தலைவணங்குவான்; அவனுடைய கண்கள் இஸ்ராயேலின் பரிசுத்தரை நோக்கும்; 8 தன்னுடைய கை வேலைப்பாடுகளான பீடங்களைப் பொருட்படுத்தமாட்டான்; தானே தன் கைகளால் செய்த மரச் சிலைகளையும் கற்கூம்புகளையும் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். 9 அந் நாளில், இஸ்ராயேல் மக்களின் முன்னிலையில் அமோரியர், ருவிதியர் இவர்களின் நகரங்கள் கைவிடப்பட்டது போல் அரண் சூழ்ந்த உன் நகரங்களும் கைவிடப்படும். அவை யாவும் பாலை வெளியாகும். 10 ஏனெனில் உன்னுடைய மீட்பின் கடவுளை நீ மறந்துவிட்டாய்; உன் புகலிடமான பாறையை நீ நினைவுகூரவில்லை; ஆதலால், இனிய செடிகளையே நீ நட்டு வைத்தாலும், அந்நிய தெய்வங்களுக்குரிய நாற்றுகளைப் பயிரிட்டாலும், 11 நீ அவற்றை நட்ட நாளிலேயே வளரச் செய்தாலும், விதைத்த நாள் காலையிலேயே பூக்கச் செய்தாலும், துயரத்தின் நாளில் ஆற்ற முடியாத வேதனை வரும் போது, அறுவைடையே கிடைக்காமல் போய்விடுமே! 12 இதோ, பல நாட்டு மக்களின் பேரிரைச்சல்: கடல் கொந்தளிப்பின் இரைச்சல் போல முழங்குகிறார்கள்; இதோ, மக்களினங்களின் கர்ச்சனை கேட்கின்றது; வெள்ளப் பெருக்கின் கர்ச்சனை போல கர்ச்சிக்கிறார்கள்! 13 பெரு வெள்ளம்போல பல நாட்டினர் கர்ச்சிக்கிறார்கள், ஆயினும் அவர் அதட்டுவார், அவர்கள் ஓடிப் போவார்கள், பெருங் காற்றால் மலை மேலே பறந்தோடும் பதர் போலும், புயல் காற்றில் சுழன்றோடும் தூசு போலும் சிதறிப் போவார்கள். 14 மாலையில், இதோ, திகிலுண்டாகும்! விடியுமுன் அவர்கள் அழிந்துபோவர்கள்! நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பாடு இதுவாகும், நம்மைச் சூறையாடுவோர் கதி இவ்வாறாகும்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 17 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References