தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. ஆண்டவர் யாக்கோபின் மேல் இரக்கம் காட்டுவார்; இஸ்ராயேலை மறுபடியும் தேர்ந்து கொள்வார்; அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டில் நிலைநாட்டுவார்; அந்நியரும் அவர்களோடு கூடிவந்து யாக்கோபின் வீட்டாரோடு சேர்ந்து கொள்வார்கள்.
2. புறவினத்தார் வந்து அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கூட்டிப் போவார்கள்; இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருடைய நாட்டில் அவர்களை வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக் கொள்வார்கள்; தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமைகளாக்குவார்கள்; தங்களை ஒடுக்கினவர்களை அடக்கி ஆளுவார்கள்.
3. ஆண்டவர் உன் வேதனையையும் நெருக்கடியையும், உன் மேல் சுமத்தப்பட்டிருந்த அடிமை வாழ்வையும் அகற்றி உனக்கு அமைதி தந்த பிறகு,
4. பபிலோனிய அரசனுக்கு எதிராக இந்த வசைப் பாடலைக் கூறு: "கொடுங்கோலன் என்ன கதியானான்? அவனுடைய ஆணவம் என்ன ஆயிற்று?
5. கொடியவர்களின் தடியையும் ஆட்சி செய்தவர்களின் கோலையும் ஆண்டவர் ஒடித்தெறிந்தார்.
6. ஆத்திரத்தோடு மக்களை ஓயாமல் அடி மேல் அடியாக அடித்து நொறுக்கி, கோபத்தோடு மக்களினங்களை இரக்கமின்றித் துன்புறுத்தி ஆண்டு வந்த கொடுங்கோலை முறித்து விட்டார்.
7. உலகமெலாம் இளைப்பாறி அமைதியடைகிறது; பூரிப்பால் அக்களித்துப் பாடுகின்றனர்.
8. தேவதாரு மரங்களும் லீபானின் கேதுரு மரங்களும், உன் வீழ்ச்சியால் மகிழ்ந்து உன்னைப்பற்றி, 'நீ வீழ்ந்தாய், எமை வீழ்த்த எமக்கெதிராய் வருபவர் யாருமில்லை' எனக் கூறும்.
9. நீ வரும்போது எதிர் கொண்டு சந்திக்கும்படி கீழுள்ள பாதாளம் துள்ளி எழுகிறது; உலகத்தின் தலைவர்களின் நிழல்கள் எல்லாம் வந்துன்னை வரவேற்க எழுப்புகின்றது; பல நாட்டு மன்னர்களாய் இருந்தவரெல்லாம் அரியணை விட்டு எழுந்திருக்கச் செய்கின்றது.
10. அவர்கள் அனைவரும் உன் முன் வந்து, 'நீயுமா எங்களைப் போல் வலுவிழந்தாய்! நீயும் எங்களைப் போல் ஆகிவிட்டாயே!' என்று அவர்கள் உன்னை நோக்கிக் கூறுவார்கள்.
11. உன் ஆடம்பரம் தரைமட்டம் ஆகிவிட்டது, இசை முழக்கம் பாதாளம் வரைத் தாழ்த்தப்பட்டது. அரி புழுக்கள் உன் கீழ் படுக்கையாகும், பூச்சிகளே உனக்குரிய போர்வையாகும்,
12. வைகறைப் புதல்வனே, விடி வெள்ளியே, வானின்று நீ வீழ்ந்த வகை தான் என்னே! புண்பட மக்களை வாட்டி வந்த நீ எவ்வாறு தரை மீது வீழ்த்தப்பட்டாய்?
13. வானுலகத்திற்கு நான் ஏறிப் போவேன், கடவுளின் விண்மீன்களுக்கும் அப்பால் உயரத்தில் என் அரியணையை அமைத்திடுவேன், தொலைவான வடபுறத்தின் எல்லையிலே, சபை கூடும் மலை மேலே வீற்றிருப்பேன்;
14. மேகங்களுக்கும் மேலாக ஏறிடுவேன், உன்னதற்கு ஒப்பாக என்னை ஆக்கிக்கொள்வேன்' என்று நீ உன்னுள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.
15. ஆயினும் நீ பாதாளம் வரைத் தாழ்த்தப்பட்டாய், படுகுழியின் ஆழத்தில் வீழ்த்தப்பட்டாய்.
16. காண்பவர்கள் உன்னை இன்னும் உற்றுப் பார்ப்பர்; 'உலகமெலாம் நடு நடுங்கச் செய்தவனும், அரசுகள் ஆட்டங்கொள்ளச் செய்தவனும்,
17. பூமியினைப் பாலை நிலம்போல் ஆக்கிவிட்டு அதனுடைய நகரங்களை வீழ்த்தியவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை தராமல் வைத்திருந்தவனும் இவன் தானோ' என்று சொல்லுவார்கள்.
18. மக்களினங்களின் அரசலெல்லாரும் மகிமையோடு படுத்துள்ளனர், ஒவ்வொருவரும் தத்தம் கல்லறையில் படுத்துள்ளனர்;
19. நீயோ கல்லறையினின்று புறம்பே எறியப்பட்டு அருவருப்பான அழுகல் போல விடப்பட்டாய்; வாளால் வெட்டுண்டு இறந்தவர்களின் உடல்களால் மூடப்பட்டாய்; பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு நாற்றமெடுத்த பிணம் போலக் கிடக்கின்றாய்.
20. அவர்களோடு சேர்த்து உன்னை அடக்கம் செய்ய மாட்டார்கள், ஏனெனில் உனது நாட்டை நீ பாழாக்கினாய், உன் நாட்டு மக்களை நீ கொன்று போட்டாய். "தீமை செய்வோர் சந்ததியின் பெயர் எந்நாளும் சொல்லப்படாது,
21. கொலைகளத்துக்கு அவன் மக்களைத் தயாரியுங்கள், ஏனெனில் அவர்களுடைய தந்தையர் அக்கிரமம் செய்தனர்; இனிமேல் அவர்கள் உலகத்தைத் தங்களுக்குக் கீழ்ப்படுத்தத் தலையெடுக்கவே கூடாது; பூமியின் நகரங்களை நிரப்பவும் கூடாது."
22. சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "அவர்களுக்கு எதிராக நாம் கிளம்புவோம்; பபிலோனின் பெயரையும், அங்கே எஞ்சியிருப்போரையும், வழித் தோன்றல்களையும் சந்ததியையும் அழிப்போம் என்கிறார் ஆண்டவர்.
23. அதை முள்ளம் பன்றிகளின் உரிமையாக்குவோம்; நீரும் சேறும் நிறைந்த இடமாக்குவோம்; அழிவு என்னும் துடைப்பம் கொண்டு முழுவதும் பெருக்குவோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."
24. சேனைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகிறார்: "நாம் திட்டமிட்டவாறே நிகழ்ந்து வரும், நாம் எண்ணியபடியே நிறைவேறி வரும்;
25. நம்முடைய நாட்டில் அசீரியனை அழிப்போம், நம் மலைகளின் மேல் அவனைக் காலால் மிதிப்போம்; அவனுடைய நுகத்தடி அவர்களிடமிருந்து அகலும், அவன் வைத்த சுமை அவர்கள் தோளினின்று இறங்கும்."
26. பூமியனைத்தையும் பற்றி நாம் கொண்டுள்ள உட்கருத்து இதுவே. மக்களினம் அனைத்தின் மேலும் நீட்டிய கையும் இதுவே.
27. சேனைகளின் ஆண்டவர் ஆணை தந்திருக்க, அதைத் தடுக்க வல்லவன் யார்? அவர் தமது கையை நீட்டியிருக்க, அதை மடக்கக் கூடியவன் யார்?
28. ஆக்காஸ் அரசன் இறந்து போன ஆண்டில் இந்த இறைவாக்கு அருளப்பட்டது:
29. பிலிஸ்தேயா நாடே, நீ அக்களிக்காதே, உன்னை அடித்த தடி முறிந்ததென மகிழாதே; ஏனெனில் பாம்பென்னும் வேரிலிருந்து ஒரு கட்டு விரியன் புறப்பட்டு வரும்; அதனுடைய கனியாக ஒரு பறவை நாகம் வெளிப்படும்.
30. எளியவர்களில் எல்லாம் எளியவர்கள் உணவு பெறுவர், ஏழைகள் நம்பிக்கையோடு இளைப்பாறுவர்; ஆனால் உன் இனத்தைப் பசியால் மடியச் செய்வோம், உன் சந்ததியில் எஞ்சியோரை நாசமாக்குவோம்.
31. வாயிலே புலம்பியழு, நகரமே கதறியழு; பிலிஸ்தேயா நாடே நடுநடுங்கு! ஏனெனில் வடதிசையிலிருந்து புகை எழும்புகிறது, அந்த அணிவகுப்புகளை விட்டகல்வோன் எவனுமில்லை."
32. அந்நாட்டுத் தூதுவர்க்கு என்ன பதில் சொல்வது? "ஆண்டவர் சீயோனை உறுதியாக நிலை நாட்டினார், அவருடைய மக்களுள் துன்புறுவோர் அங்கே புகலிடம் பெறுகின்றனர்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 14 of Total Chapters 66
ஏசாயா 14:15

×

Alert

×

tamil Letters Keypad References