தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. ஆமோஸ் என்பவரின் மகனான இசையாஸ் பபிலோனுக்கு எதிராகக் கூறிய இறைவாக்கு.
2. மொட்டை மலை மீது கொடியேற்றுங்கள், அவர்களை நோக்கி உரக்கக் கூவுங்கள்; பெருங்குடி மக்களின் வாயில்களில் நுழையும்படி அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள்.
3. போருக்கென அர்ச்சிக்கப்பட்ட நம் வீரர்களுக்கு நாமே ஆணை பிறப்பித்திருக்கிறோம்; நம்முடைய கோபத்தின் கட்டளையை நிறைவேற்றிட, வலிமையில் பெருமை கொள்ளும் நம் வீரர்களை அழைத்திருக்கிறோம்;
4. இதோ, மலைகளின் மேல் பேரிரைச்சல்! பெருங் கூட்டம் வருவது போல் ஆரவாரம்! இதோ, அரசுகளின் எழுச்சிக் குரல்! மக்களினங்கள் ஒன்றாகக் கூடுகின்றன! சேனைகளின் ஆண்டவர் போருக்காக, ஆள் சேர்த்துச் சேனையொன்றைத் திரட்டுகின்றார்.
5. தொலை நாட்டினின்று அவர்கள் வருகின்றார்கள், தொடுவானத்து எல்லையிலிருந்து வருகின்றார்கள்; ஆண்டவரும் அவரது ஆத்திரத்தின் படைக்கலங்களும் உலகத்தை முழுவதும் அழிக்கவே வருகின்றனர்.
6. கதறியழுங்கள், ஏனெனில் ஆண்டவரின் நாள் அருகில் உள்ளது; பேரழிவைப் போல் எல்லாம் வல்லவரிடமிருந்து அது வரும்!
7. ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து போகும், மனிதரின் உள்ளமெல்லாம் சோர்வடையும்.
8. அவர்கள் திகில் அடைவார்கள், வேதனைகளும் துயரமும் அவர்களைப் பிடித்தலைக்கும், பிள்ளை பெறும் பெண்ணைப் போல் அவர்கள் வேதனையுறுவர்; ஒருவரையொருவர் திகிலோடு உற்று நோக்குவர், அவர்களுடைய முகங்களில் தீப்பறக்கும்.
9. இதோ, ஆண்டவருடைய நாள் வருகின்றது. கொடுமையும் ஆத்திரமும் கடுஞ்சினமும் நிறைந்த நாள் அது; உலகத்தைப் பாழாக்கி அது வெறுமையாக்கும், அதிலிருக்கும் பாவிகளை அழித்தகற்றும்.
10. வானத்து மீன்களும் விண்மீன் கூட்டங்களும், தம் ஒளியினை வீசமாட்டா; தோன்றும் போதே கதிரவன் இருண்டு போவான். வெண்ணிலவும் தன்னொளியைப் பரப்பிடாது.
11. உலகத்தை அதன் தீமைக்காகத் தண்டித்திடுவோம், தீயோரை அவர்களின் அக்கிரமத்துக்காகப் பழிவாங்குவோம்; இறுமாப்புக் கொண்டவரின் செருக்கை அடக்குவோம்; முரடர்களின் ஆணவத்தை அழித்துத் தாழ்த்துவோம்.
12. சுத்தத் தங்கத்தை விட மனிதர்களை அரிதானவர்கள் ஆக்குவோம், ஓப்பீரின் தங்கத்தை விட மனித உயிர் அரிதாகும்.
13. ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வோம், பூமியும் தன்னிலையில் ஆட்டங்கொடுக்கும்; சேனைகளின் ஆண்டவருடைய ஆத்திரத்தினால், அவர் கடுஞ் சினத்தின் நாளிலே இவை நடக்கும்.
14. துரத்தப்பட்டுத் தப்பியோடும் மான் கன்று போல், சேர்ப்பாரின்றி சிதறுண்ட ஆடுகளைப் போல், அவனவன் தன் மக்களிடம் திரும்பியோடுவான் அவனவன் சொந்த நாட்டை நோக்கி ஓடுவான்,
15. அகப்பட்டுக் கொள்பவன் எவனும் கொல்லப்படுவான், பிடி படுபவன் எவனும் வாளால் மடிவான்.
16. அவர்களின் கண்கள் காணும்படியே அவர்களுடைய குழந்தைகள் நசுக்கப்படுவர்; அவர்களின் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்களின் மனைவியர் கற்பழிக்கப்படுவர்.
17. மேதியரை அவர்களுக்கெதிராய் இதோ நாம் தூண்டுகிறோம், அவர்கள் வெள்ளியைப் பொருட்படுத்தாதவர்கள்; பொன்னை விரும்பித் தேடாதவர்கள்.
18. ஆனால் அம்புகளால் இளைஞரைக் கொல்வர், பால் குடிக்கும் குழந்தைகள் மேல் இரக்கம் காட்டார், குழந்தைகளுக்கு அவர்கள் கண்கள் இரங்கமாட்டா.
19. அரசுகளின் மகிமையும், கல்தேயரின் பெருமிதமும், பேரழகுமான பபிலோன் பட்டணம், கடவுள் கவிழ்த்து வீழ்த்திய சோதோம், கொமோரா நகரங்களைப் போலவே ஆகிவிடும்.
20. மக்கள் இனி ஒரு போதும் அங்கே குடியேற மாட்டார்கள், எல்லாத் தலைமுறைகளுக்கும் அது குடியற்றுக் கிடக்கும்; அராபியர் தம் கூடாரத்தை அங்கு அடிக்க மாட்டார், இடையர் தம் ஆடுகளை அங்கு மடக்க மாட்டார்.
21. ஆனால் காட்டு மிருகங்கள் அங்கே படுத்துக் கிடக்கும், ஆந்தைகள் அவர்களுடைய வீடுகளில் அடைந்து கிடக்கும், தீக்கோழிகள் அங்கு வந்து குடி கொண்டிருக்கும், கூளிகள் அவ்விடத்தில் கூத்துகள் ஆடும்.
22. அவர்களின் அரண்மனைகளில் கழுதைப் புலிகள் கத்தும், இன்ப மாளிகைகளில் குள்ள நரிகள் ஊளையிடும்; அதற்குரிய காலம் நெருங்கி விட்டது; அதற்குரிய நாட்களோ தொலைவில் இல்லை.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 66
ஏசாயா 13:12
1 ஆமோஸ் என்பவரின் மகனான இசையாஸ் பபிலோனுக்கு எதிராகக் கூறிய இறைவாக்கு. 2 மொட்டை மலை மீது கொடியேற்றுங்கள், அவர்களை நோக்கி உரக்கக் கூவுங்கள்; பெருங்குடி மக்களின் வாயில்களில் நுழையும்படி அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள். 3 போருக்கென அர்ச்சிக்கப்பட்ட நம் வீரர்களுக்கு நாமே ஆணை பிறப்பித்திருக்கிறோம்; நம்முடைய கோபத்தின் கட்டளையை நிறைவேற்றிட, வலிமையில் பெருமை கொள்ளும் நம் வீரர்களை அழைத்திருக்கிறோம்; 4 இதோ, மலைகளின் மேல் பேரிரைச்சல்! பெருங் கூட்டம் வருவது போல் ஆரவாரம்! இதோ, அரசுகளின் எழுச்சிக் குரல்! மக்களினங்கள் ஒன்றாகக் கூடுகின்றன! சேனைகளின் ஆண்டவர் போருக்காக, ஆள் சேர்த்துச் சேனையொன்றைத் திரட்டுகின்றார். 5 தொலை நாட்டினின்று அவர்கள் வருகின்றார்கள், தொடுவானத்து எல்லையிலிருந்து வருகின்றார்கள்; ஆண்டவரும் அவரது ஆத்திரத்தின் படைக்கலங்களும் உலகத்தை முழுவதும் அழிக்கவே வருகின்றனர். 6 கதறியழுங்கள், ஏனெனில் ஆண்டவரின் நாள் அருகில் உள்ளது; பேரழிவைப் போல் எல்லாம் வல்லவரிடமிருந்து அது வரும்! 7 ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து போகும், மனிதரின் உள்ளமெல்லாம் சோர்வடையும். 8 அவர்கள் திகில் அடைவார்கள், வேதனைகளும் துயரமும் அவர்களைப் பிடித்தலைக்கும், பிள்ளை பெறும் பெண்ணைப் போல் அவர்கள் வேதனையுறுவர்; ஒருவரையொருவர் திகிலோடு உற்று நோக்குவர், அவர்களுடைய முகங்களில் தீப்பறக்கும். 9 இதோ, ஆண்டவருடைய நாள் வருகின்றது. கொடுமையும் ஆத்திரமும் கடுஞ்சினமும் நிறைந்த நாள் அது; உலகத்தைப் பாழாக்கி அது வெறுமையாக்கும், அதிலிருக்கும் பாவிகளை அழித்தகற்றும். 10 வானத்து மீன்களும் விண்மீன் கூட்டங்களும், தம் ஒளியினை வீசமாட்டா; தோன்றும் போதே கதிரவன் இருண்டு போவான். வெண்ணிலவும் தன்னொளியைப் பரப்பிடாது. 11 உலகத்தை அதன் தீமைக்காகத் தண்டித்திடுவோம், தீயோரை அவர்களின் அக்கிரமத்துக்காகப் பழிவாங்குவோம்; இறுமாப்புக் கொண்டவரின் செருக்கை அடக்குவோம்; முரடர்களின் ஆணவத்தை அழித்துத் தாழ்த்துவோம். 12 சுத்தத் தங்கத்தை விட மனிதர்களை அரிதானவர்கள் ஆக்குவோம், ஓப்பீரின் தங்கத்தை விட மனித உயிர் அரிதாகும். 13 ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வோம், பூமியும் தன்னிலையில் ஆட்டங்கொடுக்கும்; சேனைகளின் ஆண்டவருடைய ஆத்திரத்தினால், அவர் கடுஞ் சினத்தின் நாளிலே இவை நடக்கும். 14 துரத்தப்பட்டுத் தப்பியோடும் மான் கன்று போல், சேர்ப்பாரின்றி சிதறுண்ட ஆடுகளைப் போல், அவனவன் தன் மக்களிடம் திரும்பியோடுவான் அவனவன் சொந்த நாட்டை நோக்கி ஓடுவான், 15 அகப்பட்டுக் கொள்பவன் எவனும் கொல்லப்படுவான், பிடி படுபவன் எவனும் வாளால் மடிவான். 16 அவர்களின் கண்கள் காணும்படியே அவர்களுடைய குழந்தைகள் நசுக்கப்படுவர்; அவர்களின் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்களின் மனைவியர் கற்பழிக்கப்படுவர். 17 மேதியரை அவர்களுக்கெதிராய் இதோ நாம் தூண்டுகிறோம், அவர்கள் வெள்ளியைப் பொருட்படுத்தாதவர்கள்; பொன்னை விரும்பித் தேடாதவர்கள். 18 ஆனால் அம்புகளால் இளைஞரைக் கொல்வர், பால் குடிக்கும் குழந்தைகள் மேல் இரக்கம் காட்டார், குழந்தைகளுக்கு அவர்கள் கண்கள் இரங்கமாட்டா. 19 அரசுகளின் மகிமையும், கல்தேயரின் பெருமிதமும், பேரழகுமான பபிலோன் பட்டணம், கடவுள் கவிழ்த்து வீழ்த்திய சோதோம், கொமோரா நகரங்களைப் போலவே ஆகிவிடும். 20 மக்கள் இனி ஒரு போதும் அங்கே குடியேற மாட்டார்கள், எல்லாத் தலைமுறைகளுக்கும் அது குடியற்றுக் கிடக்கும்; அராபியர் தம் கூடாரத்தை அங்கு அடிக்க மாட்டார், இடையர் தம் ஆடுகளை அங்கு மடக்க மாட்டார். 21 ஆனால் காட்டு மிருகங்கள் அங்கே படுத்துக் கிடக்கும், ஆந்தைகள் அவர்களுடைய வீடுகளில் அடைந்து கிடக்கும், தீக்கோழிகள் அங்கு வந்து குடி கொண்டிருக்கும், கூளிகள் அவ்விடத்தில் கூத்துகள் ஆடும். 22 அவர்களின் அரண்மனைகளில் கழுதைப் புலிகள் கத்தும், இன்ப மாளிகைகளில் குள்ள நரிகள் ஊளையிடும்; அதற்குரிய காலம் நெருங்கி விட்டது; அதற்குரிய நாட்களோ தொலைவில் இல்லை.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References