தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஏசாயா
1. யெஸ்ஸேயின் தண்டிலிருந்து ஒரு தளிர் கிளம்பும், அவன் வேரிலிருந்து ஒரு கிளை தோன்றும்:
2. ஆண்டவருடைய ஆவி அவர்மேல் தங்கும், ஞானமும் மெய்யுணர்வும் தரும் ஆவி, ஆலோசனையும் வல்லமையும் தரும் ஆவி, அறிவும் ஆண்டவரைப் பற்றிய அச்சமும் தரும் ஆவி, இந்த ஆவி அவர் மேல் தங்கும்.
3. ஆண்டவருக்கு அஞ்சுவதில் அவர் மகிழ்ந்திருப்பார். அவர் தம் கண்ணால் கண்டதைக் கொண்டு மட்டும் தீர்ப்பிடமாட்டார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் தீர்ப்புச் செய்ய மாட்டார்.
4. ஆனால், நீதி பிறழாமல் எளியோரைத் தீர்ப்பிடுவார், நாட்டின் ஏழைகளுக்கு நடுவு நிலையோடு தீர்ப்புச் சொல்வார், தமது வாய் மொழியால் உலகத்தைச் சாடுவார், தமது மூச்சினால் தீயோரை அழிப்பார்.
5. நீதி அவருக்கு அரைக் கச்சை, உண்மை அவருக்கு இடைக் கச்சை.
6. அந்நாளில், செம்மறியோடு ஓநாய் தங்கியிருக்கும், வெள்ளாட்டுக் குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துறங்கும், கன்றும் சிங்கமும் ஒன்றாய் மேயும், சிறு பிள்ளை ஒன்று அவற்றை நடத்தும்.
7. பசுவும் கரடியும் கூடி மேயும், பசுவின் கன்றும் கரடிக் குட்டியும் ஒன்றாய் இளைப்பாறும், சிங்கமும் எருதைப் போல வைக்கோல் தின்னும்.
8. பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டு விரியன் வளையில் தன் கையை விடும்;
9. நம் பரிசுத்த மலையெங்கும் தீங்கு செய்வதோ, கேடு விளைவிப்பதோ யாதுமிராது; ஏனெனில் தண்ணீர் கடலை நிரப்பியிருப்பது போல், ஆண்டவரைப் பற்றிய அறிவு நாட்டை நிரப்பும்.
10. அந்நாளில், யெஸ்ஸேயின் தளிர் மக்களினங்களுக்கொரு விருதுக்கொடியாய் விளங்கும்; புறவினத்தாரெல்லாம் அவரைத் தேடிச் செல்வர், அவருடைய இருப்பிடம் மகிமையுள்ளதாய் இருக்கும்.
11. அந்நாளில் ஆண்டவர் இரண்டாம் முறையாகத் தம் கையை நீட்டுவார்; நீட்டி அசீரியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் பாத்துரோசிலிருந்தும், எத்தியோப்பியாவிலிருந்தும் ஏலாமிலிருந்தும் சென்னாரிலிருந்தும், ஏமாத்திலிருந்தும் கடலிலுள்ள தீவுகளிலிருந்தும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரை மீட்டுக் கொள்வர்.
12. மக்களினங்களுக்கு ஒரு கொடியை ஏற்றுவார், இஸ்ராயேலில் வெளியேற்றப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்; யூதாவிலிருந்து சிதறுண்டு போனவர்களை உலகின் நான்கு மூலைகளினின்றும் ஒன்று கூட்டுவார்.
13. எப்பிராயீமின் பொறாமை அகன்றுபோகும், யூதாவுக்குத் துன்பம் விளைப்போர் அழிவுறுவர்; எப்பிராயீம் யூதாவின் மேல் அழுக்காறு கொள்ளாது, யூதாவும் எப்பிராயீமுக்குத் துன்பம் தராது.
14. ஆனால் மேற்கிலுள்ள பிலிஸ்தியர் மேல் இருவரும் பாய்வர், கீழ்த்திசை நாட்டினரை இருவரும் சேர்ந்து கொள்ளையிடுவர்; இதுமேயாவுக்கும் மோவாபுக்கும் எதிராகக் கையுயர்த்துவர், அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிந்திருப்பர்.
15. ஆண்டவர் எகிப்து நாட்டின் வளைகுடாவை முற்றிலும் வற்றச் செய்வார்; வற்றச்செய்யும் காற்றினால் ஆற்றின்மேல் தம் கையை நீட்டுவார்; கால் நனையாமல் மனிதர் கடக்கும்படி அவ்வாற்றை ஏழு கால்வாய்களாய்ப் பிரித்து விடுவார்.
16. எகிப்து நாட்டிலிருந்து இஸ்ராயேல் மக்கள் வந்த போது எவ்வாறு அவர்களுக்கு வழி உண்டானதோ, அவ்வாறே அவர் மக்களுள் எஞ்சினோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்படும்.

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 66
1 யெஸ்ஸேயின் தண்டிலிருந்து ஒரு தளிர் கிளம்பும், அவன் வேரிலிருந்து ஒரு கிளை தோன்றும்: 2 ஆண்டவருடைய ஆவி அவர்மேல் தங்கும், ஞானமும் மெய்யுணர்வும் தரும் ஆவி, ஆலோசனையும் வல்லமையும் தரும் ஆவி, அறிவும் ஆண்டவரைப் பற்றிய அச்சமும் தரும் ஆவி, இந்த ஆவி அவர் மேல் தங்கும். 3 ஆண்டவருக்கு அஞ்சுவதில் அவர் மகிழ்ந்திருப்பார். அவர் தம் கண்ணால் கண்டதைக் கொண்டு மட்டும் தீர்ப்பிடமாட்டார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் தீர்ப்புச் செய்ய மாட்டார். 4 ஆனால், நீதி பிறழாமல் எளியோரைத் தீர்ப்பிடுவார், நாட்டின் ஏழைகளுக்கு நடுவு நிலையோடு தீர்ப்புச் சொல்வார், தமது வாய் மொழியால் உலகத்தைச் சாடுவார், தமது மூச்சினால் தீயோரை அழிப்பார். 5 நீதி அவருக்கு அரைக் கச்சை, உண்மை அவருக்கு இடைக் கச்சை. 6 அந்நாளில், செம்மறியோடு ஓநாய் தங்கியிருக்கும், வெள்ளாட்டுக் குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துறங்கும், கன்றும் சிங்கமும் ஒன்றாய் மேயும், சிறு பிள்ளை ஒன்று அவற்றை நடத்தும். 7 பசுவும் கரடியும் கூடி மேயும், பசுவின் கன்றும் கரடிக் குட்டியும் ஒன்றாய் இளைப்பாறும், சிங்கமும் எருதைப் போல வைக்கோல் தின்னும். 8 பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டு விரியன் வளையில் தன் கையை விடும்; 9 நம் பரிசுத்த மலையெங்கும் தீங்கு செய்வதோ, கேடு விளைவிப்பதோ யாதுமிராது; ஏனெனில் தண்ணீர் கடலை நிரப்பியிருப்பது போல், ஆண்டவரைப் பற்றிய அறிவு நாட்டை நிரப்பும். 10 அந்நாளில், யெஸ்ஸேயின் தளிர் மக்களினங்களுக்கொரு விருதுக்கொடியாய் விளங்கும்; புறவினத்தாரெல்லாம் அவரைத் தேடிச் செல்வர், அவருடைய இருப்பிடம் மகிமையுள்ளதாய் இருக்கும். 11 அந்நாளில் ஆண்டவர் இரண்டாம் முறையாகத் தம் கையை நீட்டுவார்; நீட்டி அசீரியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் பாத்துரோசிலிருந்தும், எத்தியோப்பியாவிலிருந்தும் ஏலாமிலிருந்தும் சென்னாரிலிருந்தும், ஏமாத்திலிருந்தும் கடலிலுள்ள தீவுகளிலிருந்தும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரை மீட்டுக் கொள்வர். 12 மக்களினங்களுக்கு ஒரு கொடியை ஏற்றுவார், இஸ்ராயேலில் வெளியேற்றப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்; யூதாவிலிருந்து சிதறுண்டு போனவர்களை உலகின் நான்கு மூலைகளினின்றும் ஒன்று கூட்டுவார். 13 எப்பிராயீமின் பொறாமை அகன்றுபோகும், யூதாவுக்குத் துன்பம் விளைப்போர் அழிவுறுவர்; எப்பிராயீம் யூதாவின் மேல் அழுக்காறு கொள்ளாது, யூதாவும் எப்பிராயீமுக்குத் துன்பம் தராது. 14 ஆனால் மேற்கிலுள்ள பிலிஸ்தியர் மேல் இருவரும் பாய்வர், கீழ்த்திசை நாட்டினரை இருவரும் சேர்ந்து கொள்ளையிடுவர்; இதுமேயாவுக்கும் மோவாபுக்கும் எதிராகக் கையுயர்த்துவர், அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிந்திருப்பர். 15 ஆண்டவர் எகிப்து நாட்டின் வளைகுடாவை முற்றிலும் வற்றச் செய்வார்; வற்றச்செய்யும் காற்றினால் ஆற்றின்மேல் தம் கையை நீட்டுவார்; கால் நனையாமல் மனிதர் கடக்கும்படி அவ்வாற்றை ஏழு கால்வாய்களாய்ப் பிரித்து விடுவார். 16 எகிப்து நாட்டிலிருந்து இஸ்ராயேல் மக்கள் வந்த போது எவ்வாறு அவர்களுக்கு வழி உண்டானதோ, அவ்வாறே அவர் மக்களுள் எஞ்சினோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்படும்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References