தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஓசியா
1. இஸ்ராயேலே, நீ அகமகிழாதே, மற்ற மக்களைப்போல நீ அக்களிக்காதே; உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித்தனம் செய்தாய், புணையடிக்கும் களங்களிலெல்லாம் நீ வேசிக்குரிய விலையை விரும்பியேற்றாய்.
2. புணையடிக்கும் களமும், திராட்சைப் பழம் பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவளிக்க மாட்டா; புதிய திராட்சை இரசமும் அவர்களை ஏமாற்றிவிடும்.
3. ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்; ஆனால் எப்பிராயீம் எகிப்துக்குத் திரும்புவான், அசீரியர்கள் நடுவில் தீட்டுப்பட்டதை உண்பான்.
4. ஆண்டவருக்கு இரசத்தைத் தாரைப் பலியாய் வார்க்க மாட்டார்கள், தங்கள் பலிகளால் அவருக்கு உகந்தவர்கள் ஆக மாட்டார்கள், அவர்களுடைய உணவு இழவு வீட்டாரின் உணவு போலாம், அதை உண்பவர் யாவரும் தீட்டுப் படுவார்கள். ஏனெனில் அவர்களின் உணவு அவர்கள் வயிற்றில் தான் செல்லும், ஆண்டவரின் கோயிலில் அது படைக்கப்படாது,
5. குறிக்கப்பட்ட விழாவின் போதும், ஆண்டவரின் திருநாளன்றும் என்ன செய்வீர்கள்?
6. இதோ, அழிவுக்கு அஞ்சி ஓடுகிறார்கள், எகிப்து அவர்களைக் கூட்டிச் சேர்க்கும், மேம்பிஸ் அவர்களை அடக்கம் செய்யும். அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியெல்லாம் பூனைக்காஞ்சொறிச் செடிகளுக்குச் சொந்தமாகும். அவர்கள் கூடாரங்களில் முட்புதர்கள் முளைத்து வளரும்.
7. தண்டனையின் நாட்கள் வந்துவிட்டன, கைம்மாறு கிடைக்கும் நாட்கள் புலர்ந்து விட்டன; 'இறைவாக்கினன் மடையனாகி விட்டான், இறையூக்கம் பெற்றவன் வெறிகொண்டு உளறுகிறான்' என்று இஸ்ராயேலர் எதிர்த்துப் பேசுகிறார்கள்; ஆம், இது உன் அக்கிரமத்தின் பெருக்கத்தையும், அளவுக்கு மிஞ்சிய மதியீனத்தையும் காட்டுகிறது.
8. என் கடவுளின் மக்களாகிய எப்பிராயீமுக்கு இறைவாக்கினர் ஒரு சாமக்காவலர்; ஆயினும் வேடனின் வலை அவரை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது, அவருடைய கடவுளின் கோயிலிலும் பகைமை நிலவுகிறது.
9. முன்னாட்களில் காபாவில் நடந்ததுபோல் அவர்கள் கனமான பாவங்களைக் கட்டிக் கொண்டனர்; அவர்களுடைய அக்கிரமத்தை ஆண்டவர் நினைவில் கொண்டு அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார்.
10. பாலை நிலத்திற்ல் திராட்சைக் குலைகளைக் கண்டாற் போல் இஸ்ராயேலை நாம் கண்டு பிடித்தோம்; பருவ காலத்தின் தொடக்கத்தில் பழுக்கும் அத்தி மரத்தின் முதற் கனி போல் உங்கள் தந்தையரை நாம் கண்டு பிடித்தோம்; ஆனால் பெல்பேகோருக்கு வந்து சேர்ந்த போது, தங்களையே மானக்கேடானவற்றுக்குக் கையளித்தார்கள்; அவர்கள் நேசித்தவற்றைப் போலவே அருவருப்புக்குள்ளாயினர்.
11. எப்பிராயீமின் மகிமை பறவைப் போலப் பறந்தோடி விடும், அவர்களுக்குள் பிறப்புமில்லை, வயிற்றில் தாங்குவதுமில்லை, கருத்தரிப்பதுமில்லை.
12. அவர்கள் மக்களை ஈன்றெடுத்து வளர்த்தாலும், பெரியவர்களாகு முன்பே அப்பிள்ளைகளை இழக்கச் செய்வோம்; நாம் அவர்களை விட்டு அகன்றுவிட்டால், அவர்களுக்கு ஐயோ கேடு!
13. எப்பிராயீம் தன் மக்களைக் கொள்ளைப்பொருள் ஆக்கிவிட்டான். ஆயினும் எப்பிராயீம் தன் மக்களையெல்லாம் கொலைக்களத்திற்கே கூட்டிச் செல்வான்.
14. ஆண்டவரே, அவர்களுக்குக் கொடுத்தருளும், எதைக் கொடுப்பிர்? கரு வளரும் முன் வெளியேற்றும் கருப்பையையும், பால்சுரக்கா முலைகளையும் கொடுத்தருளும்.
15. அவர்களின் அக்கிரமங்கள் யாவும் கில்காலில் வெளிப்பட்டன, அங்கேதான் அவர்களை நாம் பகைக்கும் படியாயிற்று; அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு, நம் வீட்டினின்று நாம் அவர்களை விரட்டியடிப்போம்; அவர்களுக்கு இனி நாம் அன்பு செய்வோம், ஏனெனில் அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரர்கள் ஆவர்.
16. எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தனர், அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று; இனி மேல் அவர்கள் கனி கொடுக்க மாட்டார்கள்; அப்படியே கொடுத்தாலும், அவர்களுடைய அன்புக் குழந்தைகளை நாம் மாய்த்து விடுவோம்.
17. என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார், ஏனெனில் அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை; புறவினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.

பதிவுகள்

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
1 இஸ்ராயேலே, நீ அகமகிழாதே, மற்ற மக்களைப்போல நீ அக்களிக்காதே; உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித்தனம் செய்தாய், புணையடிக்கும் களங்களிலெல்லாம் நீ வேசிக்குரிய விலையை விரும்பியேற்றாய். 2 புணையடிக்கும் களமும், திராட்சைப் பழம் பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவளிக்க மாட்டா; புதிய திராட்சை இரசமும் அவர்களை ஏமாற்றிவிடும். 3 ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்; ஆனால் எப்பிராயீம் எகிப்துக்குத் திரும்புவான், அசீரியர்கள் நடுவில் தீட்டுப்பட்டதை உண்பான். 4 ஆண்டவருக்கு இரசத்தைத் தாரைப் பலியாய் வார்க்க மாட்டார்கள், தங்கள் பலிகளால் அவருக்கு உகந்தவர்கள் ஆக மாட்டார்கள், அவர்களுடைய உணவு இழவு வீட்டாரின் உணவு போலாம், அதை உண்பவர் யாவரும் தீட்டுப் படுவார்கள். ஏனெனில் அவர்களின் உணவு அவர்கள் வயிற்றில் தான் செல்லும், ஆண்டவரின் கோயிலில் அது படைக்கப்படாது, 5 குறிக்கப்பட்ட விழாவின் போதும், ஆண்டவரின் திருநாளன்றும் என்ன செய்வீர்கள்? 6 இதோ, அழிவுக்கு அஞ்சி ஓடுகிறார்கள், எகிப்து அவர்களைக் கூட்டிச் சேர்க்கும், மேம்பிஸ் அவர்களை அடக்கம் செய்யும். அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியெல்லாம் பூனைக்காஞ்சொறிச் செடிகளுக்குச் சொந்தமாகும். அவர்கள் கூடாரங்களில் முட்புதர்கள் முளைத்து வளரும். 7 தண்டனையின் நாட்கள் வந்துவிட்டன, கைம்மாறு கிடைக்கும் நாட்கள் புலர்ந்து விட்டன; 'இறைவாக்கினன் மடையனாகி விட்டான், இறையூக்கம் பெற்றவன் வெறிகொண்டு உளறுகிறான்' என்று இஸ்ராயேலர் எதிர்த்துப் பேசுகிறார்கள்; ஆம், இது உன் அக்கிரமத்தின் பெருக்கத்தையும், அளவுக்கு மிஞ்சிய மதியீனத்தையும் காட்டுகிறது. 8 என் கடவுளின் மக்களாகிய எப்பிராயீமுக்கு இறைவாக்கினர் ஒரு சாமக்காவலர்; ஆயினும் வேடனின் வலை அவரை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது, அவருடைய கடவுளின் கோயிலிலும் பகைமை நிலவுகிறது. 9 முன்னாட்களில் காபாவில் நடந்ததுபோல் அவர்கள் கனமான பாவங்களைக் கட்டிக் கொண்டனர்; அவர்களுடைய அக்கிரமத்தை ஆண்டவர் நினைவில் கொண்டு அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார். 10 பாலை நிலத்திற்ல் திராட்சைக் குலைகளைக் கண்டாற் போல் இஸ்ராயேலை நாம் கண்டு பிடித்தோம்; பருவ காலத்தின் தொடக்கத்தில் பழுக்கும் அத்தி மரத்தின் முதற் கனி போல் உங்கள் தந்தையரை நாம் கண்டு பிடித்தோம்; ஆனால் பெல்பேகோருக்கு வந்து சேர்ந்த போது, தங்களையே மானக்கேடானவற்றுக்குக் கையளித்தார்கள்; அவர்கள் நேசித்தவற்றைப் போலவே அருவருப்புக்குள்ளாயினர். 11 எப்பிராயீமின் மகிமை பறவைப் போலப் பறந்தோடி விடும், அவர்களுக்குள் பிறப்புமில்லை, வயிற்றில் தாங்குவதுமில்லை, கருத்தரிப்பதுமில்லை. 12 அவர்கள் மக்களை ஈன்றெடுத்து வளர்த்தாலும், பெரியவர்களாகு முன்பே அப்பிள்ளைகளை இழக்கச் செய்வோம்; நாம் அவர்களை விட்டு அகன்றுவிட்டால், அவர்களுக்கு ஐயோ கேடு! 13 எப்பிராயீம் தன் மக்களைக் கொள்ளைப்பொருள் ஆக்கிவிட்டான். ஆயினும் எப்பிராயீம் தன் மக்களையெல்லாம் கொலைக்களத்திற்கே கூட்டிச் செல்வான். 14 ஆண்டவரே, அவர்களுக்குக் கொடுத்தருளும், எதைக் கொடுப்பிர்? கரு வளரும் முன் வெளியேற்றும் கருப்பையையும், பால்சுரக்கா முலைகளையும் கொடுத்தருளும். 15 அவர்களின் அக்கிரமங்கள் யாவும் கில்காலில் வெளிப்பட்டன, அங்கேதான் அவர்களை நாம் பகைக்கும் படியாயிற்று; அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு, நம் வீட்டினின்று நாம் அவர்களை விரட்டியடிப்போம்; அவர்களுக்கு இனி நாம் அன்பு செய்வோம், ஏனெனில் அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரர்கள் ஆவர். 16 எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தனர், அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று; இனி மேல் அவர்கள் கனி கொடுக்க மாட்டார்கள்; அப்படியே கொடுத்தாலும், அவர்களுடைய அன்புக் குழந்தைகளை நாம் மாய்த்து விடுவோம். 17 என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார், ஏனெனில் அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை; புறவினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References