தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஓசியா
1. நாம் இஸ்ராயேலைக் குணமாக்க வரும் போது, எப்பிராயீம் அக்கிரமம் வெளியாகும், சமாரியாவின் தீச்செயல்கள் புலனாகும். ஏனெனில் அவர்கள் வஞ்சகம் செய்கிறார்கள், திருடர்கள் உள்ளே நுழைகிறார்கள், கொள்ளைக் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.
2. அவர்களுடைய தீச்செயல்களை எல்லாம் நாம் அறிந்திருக்கிறோம் என அவர்கள் நினைப்பதில்லை; இப்பொழுது அவர்கள் செயல்கள் அவர்களை வளைத்துக் கொண்டன, அவை நம் கண்முன் இருக்கின்றன.
3. இஸ்ராயேலில் சதித்திட்டம் மலிந்துள்ளது: தங்கள் தீமையினால் அரசனையும், பொய்களினால் தலைவர்களையும் மகிழ்வித்தனர்; அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
4. மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும் வரையில் அப்பம் சுடுபவனால் மூட்டப்படாத அடுப்புக் கொத்தவர்கள்.
5. நம் அரசனின் நாளில், தலைவர்கள் குடிவெறியால் போதையேறிக் கிடந்தனர்; அரசனும் கயவர்களோடு சேர்ந்து கொண்டான்.
6. சதித்திட்டத்தால் அவர்கள் உள்ளம் அடுப்பைப் போல் எரிகின்றது. இரவெல்லாம் அவர்களது கோபத்தீ கனன்று கொண்டிருந்தது, காலையில் தீக்கொழுந்து போலச் சுடர் விட்டெரியும்.
7. அவர்கள் எல்லாரும் அடுப்பைப் போல் எரிகிறார்கள், தங்களை ஆளுகிறவர்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; அவர்களின் அரசர்கள் யாவரும் வீழ்ந்துபட்டனர், அவர்களுள் எவனுமே நம்மை நோக்கிக் கூப்பிடவில்லை.
8. எப்பிராயீம் புறவினத்தாருடன் கலந்து வாழ்கிறான், எப்பிராயீம் திருப்பிப் போடாத தோசையானான்.
9. அவனுடைய ஆற்றலை அந்நியர்கள் உறிஞ்சி விட்டனர், ஆயினும் அதை அவன் உணரவில்லை. அவனுக்கு ஊடு நரை விழுந்துள்ளது, ஆயினும் அதை அவன் அறியவில்லை.
10. இஸ்ராயேலின் இறுமாப்பே எதிர்சாட்சி சொல்லியும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை. இப்படியெல்லாம் இருந்தும் அவர்கள் அவரைத் தேடவில்லை.
11. அறிவில்லாப் பேதைப் புறாவைப் போல் எப்பிராயீம் மக்கள் இருக்கிறார்கள்; எகிப்தைத் துணைக்கு அழைக்கிறார்கள்; அசீரியாவிடம் புகலிடம் தேடுகிறார்கள்.
12. அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் மேல் நம் வலையை விரித்திடுவோம்; வானத்துப் பறவைகளைப் போல் அவர்களைக் கீழே வீழ்த்தி அவர்கள் தீச்செயல்களுக்காகத் தண்டிப்போம்.
13. அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் நம்மை விட்டு அகன்று போனார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கிறது, ஏனெனில் நம்மை அவர்கள் எதிர்த்தார்கள்; அவர்களை மீட்க நமக்கு விருப்பந்தான், ஆனால் அவர்கள் நமக்கு விரோதமாய்ப் பொய் பேசுகிறார்களே!
14. தங்கள் உள்ளத்திலிருந்து நம்மை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவதில்லை, அதற்குப் பதிலாக தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகிறார்கள்; தானியத்திற்காகவும், திராட்சை இரசத்திற்காகவும் தங்களையே பிய்த்துப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; ஆயினும் நமக்கெதிராய் எழும்புகிறார்கள்.
15. நாமே அவர்களைப் பயிற்றுவித்து அவர்களின் தோள்கள் வலிமை பெறச் செய்திருந்தும், நமக்கே விரோதமாய்ச் சதி செய்கிறார்கள்.
16. பாகால் பக்கமே சேர்ந்து கொள்ளுகிறார்கள், வஞ்சக வில்லுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்; தங்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு அவர்களின் தலைவர்கள் வாளால் மடிவர்; இதைக் கண்டு எகிப்தியர் அவர்களை எள்ளி நகையாடுவர்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
ஓசியா 7:9
1 நாம் இஸ்ராயேலைக் குணமாக்க வரும் போது, எப்பிராயீம் அக்கிரமம் வெளியாகும், சமாரியாவின் தீச்செயல்கள் புலனாகும். ஏனெனில் அவர்கள் வஞ்சகம் செய்கிறார்கள், திருடர்கள் உள்ளே நுழைகிறார்கள், கொள்ளைக் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது. 2 அவர்களுடைய தீச்செயல்களை எல்லாம் நாம் அறிந்திருக்கிறோம் என அவர்கள் நினைப்பதில்லை; இப்பொழுது அவர்கள் செயல்கள் அவர்களை வளைத்துக் கொண்டன, அவை நம் கண்முன் இருக்கின்றன. 3 இஸ்ராயேலில் சதித்திட்டம் மலிந்துள்ளது: தங்கள் தீமையினால் அரசனையும், பொய்களினால் தலைவர்களையும் மகிழ்வித்தனர்; அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும் வரையில் அப்பம் சுடுபவனால் மூட்டப்படாத அடுப்புக் கொத்தவர்கள். 5 நம் அரசனின் நாளில், தலைவர்கள் குடிவெறியால் போதையேறிக் கிடந்தனர்; அரசனும் கயவர்களோடு சேர்ந்து கொண்டான். 6 சதித்திட்டத்தால் அவர்கள் உள்ளம் அடுப்பைப் போல் எரிகின்றது. இரவெல்லாம் அவர்களது கோபத்தீ கனன்று கொண்டிருந்தது, காலையில் தீக்கொழுந்து போலச் சுடர் விட்டெரியும். 7 அவர்கள் எல்லாரும் அடுப்பைப் போல் எரிகிறார்கள், தங்களை ஆளுகிறவர்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; அவர்களின் அரசர்கள் யாவரும் வீழ்ந்துபட்டனர், அவர்களுள் எவனுமே நம்மை நோக்கிக் கூப்பிடவில்லை. 8 எப்பிராயீம் புறவினத்தாருடன் கலந்து வாழ்கிறான், எப்பிராயீம் திருப்பிப் போடாத தோசையானான். 9 அவனுடைய ஆற்றலை அந்நியர்கள் உறிஞ்சி விட்டனர், ஆயினும் அதை அவன் உணரவில்லை. அவனுக்கு ஊடு நரை விழுந்துள்ளது, ஆயினும் அதை அவன் அறியவில்லை. 10 இஸ்ராயேலின் இறுமாப்பே எதிர்சாட்சி சொல்லியும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை. இப்படியெல்லாம் இருந்தும் அவர்கள் அவரைத் தேடவில்லை. 11 அறிவில்லாப் பேதைப் புறாவைப் போல் எப்பிராயீம் மக்கள் இருக்கிறார்கள்; எகிப்தைத் துணைக்கு அழைக்கிறார்கள்; அசீரியாவிடம் புகலிடம் தேடுகிறார்கள். 12 அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் மேல் நம் வலையை விரித்திடுவோம்; வானத்துப் பறவைகளைப் போல் அவர்களைக் கீழே வீழ்த்தி அவர்கள் தீச்செயல்களுக்காகத் தண்டிப்போம். 13 அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் நம்மை விட்டு அகன்று போனார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கிறது, ஏனெனில் நம்மை அவர்கள் எதிர்த்தார்கள்; அவர்களை மீட்க நமக்கு விருப்பந்தான், ஆனால் அவர்கள் நமக்கு விரோதமாய்ப் பொய் பேசுகிறார்களே! 14 தங்கள் உள்ளத்திலிருந்து நம்மை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவதில்லை, அதற்குப் பதிலாக தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகிறார்கள்; தானியத்திற்காகவும், திராட்சை இரசத்திற்காகவும் தங்களையே பிய்த்துப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; ஆயினும் நமக்கெதிராய் எழும்புகிறார்கள். 15 நாமே அவர்களைப் பயிற்றுவித்து அவர்களின் தோள்கள் வலிமை பெறச் செய்திருந்தும், நமக்கே விரோதமாய்ச் சதி செய்கிறார்கள். 16 பாகால் பக்கமே சேர்ந்து கொள்ளுகிறார்கள், வஞ்சக வில்லுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்; தங்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு அவர்களின் தலைவர்கள் வாளால் மடிவர்; இதைக் கண்டு எகிப்தியர் அவர்களை எள்ளி நகையாடுவர்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References