தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஓசியா
1. அர்ச்சகர்களே, இதைக் கேளுங்கள், இஸ்ராயேல் வீட்டாரே, கவனியுங்கள், அரச குடும்பத்தினரே, செவி கொடுங்கள்; உங்களுக்கு எதிராகவே தண்டனைத் தீர்ப்பு தரப்படுகிறது: ஏனெனில் மிஸ்பாவில் நீங்கள் கண்ணியாகவும், தாபேரில் விரிக்கப்பட்ட வலையாகவும் இருந்திருக்கிறீர்கள்.
2. வஞ்சகப் படுகுழியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர், ஆதலால் அவர்கள் அனைவரையும் தண்டிக்கப் போகிறோம்.
3. எப்பிராயீமை நாம் அறிந்திருக்கிறோம், இஸ்ராயேல் நமக்குத் தெரியாததன்று; ஏனெனில் எப்பிராயீமே, நீ வேசித்தனத்தில் ஈடுபட்டுள்ளாய்; இஸ்ராயேல் மக்கள் தீட்டுப்பட்டுள்ளனர்.
4. அவர்களுடைய கடவுளிடம் திரும்பி வருவதற்கு அவர்கள் செயல்கள் அவர்களை விடுவதில்லை; ஏனெனில் வேசித்தனப் புத்தி அவர்களை ஆட்கொள்கிறது, ஆண்டவரைப் பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.
5. இஸ்ராயேலின் இறுமாப்பே எதிர்சாட்சி சொல்லுகிறது; எப்பிராயீம் தன் அக்கிரமத்தில் இடறி விழுகிறான்;
6. யூதாவும் அவர்களோடு தடுக்கி வீழ்கிறான். தங்கள் ஆடுமாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள், ஆயினும் அவரைக் கண்டடைய மாட்டார்கள்; ஏனெனில் அவர்களை விட்டு அவர் விலகி விட்டார்.
7. ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; ஏனெனில் விபசாரத்தால் அந்நிய பிள்ளைகளைப் பெற்றார்கள். இப்பொழுது அவர்களையும், அவர்கள் நிலங்களையும் அமாவாசை அடியோடு விழுங்கி விடும்.
8. காபாவிலே கொம்பு ஊதுங்கள், ராமாவிலே எக்காளம் ஊதுங்கள்; பெத்தாவானில் ஓலமிடுங்கள், பென்யமீனை எச்சரிக்கைப் படுத்துங்கள்.
9. தண்டனையின் நாளில் எப்பிராயீம் பாழ் வெளியாகும், இஸ்ராயேலின் கோத்திரங்களுக்கு உறுதியாய் நேரிடப்போவதையே அறிவிக்கிறோம்.
10. எல்லைக் கற்களைத் தள்ளிப் போடுகிறவர்களைப் போல யூதாவின் தலைவர்கள் ஆகிவிட்டனர்; வெள்ளப் பெருக்கைப் போல் அவர்கள் மேல் நமது கோபத்தை நாம் கொட்டித் தீர்ப்போம்.
11. எப்பிராயீம் ஒடுக்கப்படுகிறான், தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகிறான்; ஏனெனில் வீணானதைப் பின் தொடர்வதில் பிடிவாதமாய்க் கருத்தூன்றியிருந்தான்.
12. ஆதலால் எப்பிராயீமுக்கு நாம் அரிபுழு போலும், யூதாவின் வீட்டுக்கு உளுப்புப் பூச்சி போலும் இருப்போம்.
13. எப்பிராயீம் தன் பிணியைக் கண்டுகொண்டான், யூதாவும் தன் காயத்தை உணரலானான்; ஆதலால் எப்பிராயீம் அசீரியாவில் புகலிடம் தேடினான், தன்னைக் காக்கும்படி யூதா பேரரசனைக் கேட்டுக் கொண்டான். ஆனால் உங்களை நலமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.
14. எப்பிராயீமுக்கு நாம் ஒரு சிங்கத்தைப் போலும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக் குட்டியைப் போலும் இருப்போம்; நாமே போவோம், அவர்களைக் கவ்விப் பிடிப்போம், தூக்கிக் கொண்டு ஓடுவோம்; விடுவிப்பவன் எவனுமிரான்.
15. தங்கள் குற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு நமது முகத்தை அவர்கள் தேடும் வரை, நாம் நம்முடைய இடத்திற்கே மறுபடியும் திரும்பிப் போய் அவர்களுக்காகக் காத்திருப்போம்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 14 Chapters, Current Chapter 5 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
ஓசியா 5:1

×

Alert

×

tamil Letters Keypad References