தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஓசியா
1. இஸ்ராயேல் மக்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; நாட்டுக் குடிகளோடு ஆண்டவர் வழக்காடப் போகிறார்: உண்மையோ பரிவோ நாட்டில் இல்லை, கடவுளை அறியும் அறிவு கூட இல்லை.
2. பொய்யாணை, புளுகு, கொலை, களவு, விபசாரம் ஆகியவை நாட்டில் மலிந்துள்ளன; இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.
3. ஆதலால், நாடு புலம்புகிறது, அதில் வாழ்கின்ற உயிர்கள் யாவும், வயல் வெளி மிருகங்களும் வானத்துப் பறவைகளும் ஒருங்கே சோர்வடைந்திருக்கின்றன; கடல் வாழ் மீன்களும் அழிந்து போகின்றன.
4. ஆயினும் எவனும் வழக்காட வேண்டா, எவனும் குற்றஞ்சாட்ட வேண்டா; அர்ச்சகனே, உன்னைத்தான் குற்றஞ்சாட்டுகிறோம்.
5. பகலிலே நீ இடறி விழுகிறாய், இரவில் தீர்க்கத்தரிசியும் உன்னோடு இடறி விழுகிறான்; உன் தாயை நாம் அழித்து விடுவோம்.
6. அறிவின்மையால் நம் மக்கள் அழிகிறார்கள்; நீ அறிவைப் புறக்கணித்தது போல, நீ நமக்கு அர்ச்சகனாய் இராதபடி நாமும் உன்னைப் புறக்கணிப்போம். உன் கடவுளின் திருச்சட்டத்தை நீ மறந்து விட்டதால் நாமும் உம் மக்களை மறந்து விடுவோம்.
7. எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ, அவ்வளவுக்கு அவர்கள் நமக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது மகிமையை மானக் கேடாய் மாற்றி விடுவோம்.
8. நம் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கிறார்கள், அவர்கள் அக்கிரமம் செய்யும்படி இவர்கள் ஏங்குகிறார்கள்.
9. அர்ச்சகன் எவ்வழியோ, அவ்வழியே மக்களும்; அவர்களுடைய நெறிகளுக்காக அவர்களைத் தண்டிப்போம், அவர்களுடைய செயல்களுக்கேற்ப பலனளிப்போம்.
10. அவர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நிறைவடைய மாட்டார்கள், வேசித்தனம் செய்தாலும் அவர்கள் பலுகமாட்டார்கள்; ஏனெனில் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரை அவர்கள் கைவிட்டார்கள்.
11. திராட்சை இரசம், புத்தம் புதிய திராட்சை இரசம் அறிவை மழுங்கச் செய்கின்றது.
12. நம் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர், அவர்கள் கோல் மறைமொழிகள் கூறிடும்! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது; விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளை விட்டு அகன்றனர்.
13. மலைகளின் உச்சியில் அவர்கள் பலியிடுகிறார்கள், குன்றுகளின் மேலும், குளிர்ந்த நிழல் தருவதால் கருவாலி மரம், புன்னை மரம், தேவதாரு மரம் இவற்றின் கீழும் பலி செலுத்துகிறார்கள். ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கிறார்கள், உங்கள் மனைவியரும் விபசாரம் புரிகின்றார்கள்.
14. உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்யினும், உங்கள் மனைவியர் விபசாரம் புரிந்தாலும் நாம் அவர்களைத் தண்டிக்கமாட்டோம்; ஏனெனில் ஆண்களே வேசிகளோடு திரிகிறார்கள்; தேவதாசிகளோடு சேர்ந்து பலியிடுகிறார்கள்; இவ்வாறு அறிவற்ற அம்மக்கள் அழிந்து போகிறார்கள்.
15. இஸ்ராயேலே, நீ விபசாரியாய்ப் போனாலும் யூதாவாகிலும் குற்றமற்றவளாய் இருக்கட்டும்; கல்கலாவுக்குப் போகாதீர்கள், பெத்தாவென் என்னுமிடத்திற்கும் செல்ல வேண்டா; "ஆண்டவர் மேல் ஆணை" என்று நீங்கள் ஆணையிடவும் வேண்டா.
16. கட்டுக்கடங்காத இளம் பசுபோல் இஸ்ராயேல் மக்கள் பிடிவாதமாய் இருக்க, அவர்களை ஆண்டவர் பரந்த புல் வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல மேய்க்க முடியுமா?
17. எப்பிராயீம் சிலைகளோடு சேர்ந்துகொண்டான், அவனை விட்டு விலகியிரு.
18. குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; தங்களுடைய மகிமையைக் காட்டிலும் மானக்கேட்டையே மிகுதியாய் விரும்புகிறார்கள்;
19. காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் மூடிக் கொண்டது, தாங்கள் இட்ட பலிகளைக் குறித்துத் தலை நாணுவர்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
1 இஸ்ராயேல் மக்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; நாட்டுக் குடிகளோடு ஆண்டவர் வழக்காடப் போகிறார்: உண்மையோ பரிவோ நாட்டில் இல்லை, கடவுளை அறியும் அறிவு கூட இல்லை. 2 பொய்யாணை, புளுகு, கொலை, களவு, விபசாரம் ஆகியவை நாட்டில் மலிந்துள்ளன; இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது. 3 ஆதலால், நாடு புலம்புகிறது, அதில் வாழ்கின்ற உயிர்கள் யாவும், வயல் வெளி மிருகங்களும் வானத்துப் பறவைகளும் ஒருங்கே சோர்வடைந்திருக்கின்றன; கடல் வாழ் மீன்களும் அழிந்து போகின்றன. 4 ஆயினும் எவனும் வழக்காட வேண்டா, எவனும் குற்றஞ்சாட்ட வேண்டா; அர்ச்சகனே, உன்னைத்தான் குற்றஞ்சாட்டுகிறோம். 5 பகலிலே நீ இடறி விழுகிறாய், இரவில் தீர்க்கத்தரிசியும் உன்னோடு இடறி விழுகிறான்; உன் தாயை நாம் அழித்து விடுவோம். 6 அறிவின்மையால் நம் மக்கள் அழிகிறார்கள்; நீ அறிவைப் புறக்கணித்தது போல, நீ நமக்கு அர்ச்சகனாய் இராதபடி நாமும் உன்னைப் புறக்கணிப்போம். உன் கடவுளின் திருச்சட்டத்தை நீ மறந்து விட்டதால் நாமும் உம் மக்களை மறந்து விடுவோம். 7 எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ, அவ்வளவுக்கு அவர்கள் நமக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது மகிமையை மானக் கேடாய் மாற்றி விடுவோம். 8 நம் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கிறார்கள், அவர்கள் அக்கிரமம் செய்யும்படி இவர்கள் ஏங்குகிறார்கள். 9 அர்ச்சகன் எவ்வழியோ, அவ்வழியே மக்களும்; அவர்களுடைய நெறிகளுக்காக அவர்களைத் தண்டிப்போம், அவர்களுடைய செயல்களுக்கேற்ப பலனளிப்போம். 10 அவர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நிறைவடைய மாட்டார்கள், வேசித்தனம் செய்தாலும் அவர்கள் பலுகமாட்டார்கள்; ஏனெனில் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரை அவர்கள் கைவிட்டார்கள். 11 திராட்சை இரசம், புத்தம் புதிய திராட்சை இரசம் அறிவை மழுங்கச் செய்கின்றது. 12 நம் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர், அவர்கள் கோல் மறைமொழிகள் கூறிடும்! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது; விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளை விட்டு அகன்றனர். 13 மலைகளின் உச்சியில் அவர்கள் பலியிடுகிறார்கள், குன்றுகளின் மேலும், குளிர்ந்த நிழல் தருவதால் கருவாலி மரம், புன்னை மரம், தேவதாரு மரம் இவற்றின் கீழும் பலி செலுத்துகிறார்கள். ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கிறார்கள், உங்கள் மனைவியரும் விபசாரம் புரிகின்றார்கள். 14 உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்யினும், உங்கள் மனைவியர் விபசாரம் புரிந்தாலும் நாம் அவர்களைத் தண்டிக்கமாட்டோம்; ஏனெனில் ஆண்களே வேசிகளோடு திரிகிறார்கள்; தேவதாசிகளோடு சேர்ந்து பலியிடுகிறார்கள்; இவ்வாறு அறிவற்ற அம்மக்கள் அழிந்து போகிறார்கள். 15 இஸ்ராயேலே, நீ விபசாரியாய்ப் போனாலும் யூதாவாகிலும் குற்றமற்றவளாய் இருக்கட்டும்; கல்கலாவுக்குப் போகாதீர்கள், பெத்தாவென் என்னுமிடத்திற்கும் செல்ல வேண்டா; "ஆண்டவர் மேல் ஆணை" என்று நீங்கள் ஆணையிடவும் வேண்டா. 16 கட்டுக்கடங்காத இளம் பசுபோல் இஸ்ராயேல் மக்கள் பிடிவாதமாய் இருக்க, அவர்களை ஆண்டவர் பரந்த புல் வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல மேய்க்க முடியுமா? 17 எப்பிராயீம் சிலைகளோடு சேர்ந்துகொண்டான், அவனை விட்டு விலகியிரு. 18 குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; தங்களுடைய மகிமையைக் காட்டிலும் மானக்கேட்டையே மிகுதியாய் விரும்புகிறார்கள்; 19 காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் மூடிக் கொண்டது, தாங்கள் இட்ட பலிகளைக் குறித்துத் தலை நாணுவர்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References