தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஓசியா
1. (2) இஸ்ராயேலே, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா, ஏனெனில் உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,
2. (3) வாய் விட்டுச் சொல்லி ஆண்டவரிடம் திரும்புங்கள்: "அக்கிரமங்களை எல்லாம் அப்புறப்படுத்தியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும், உதடுகளால் தரும் காணிக்கையை உமக்களிக்கிறோம்; அசீரியர் எங்களைக் காக்க மாட்டார்கள்,
3. (4) குதிரைகள் மேல் நாங்கள் இனி ஏற மாட்டோம்; எங்கள் கைவேலைப்பாடுகளை நோக்கி, 'எங்கள் இறைவா!' என்று சொல்ல மாட்டோம்; ஏனெனில் திக்கற்ற பிள்ளைக்குப் பரிவு காட்டுபவர் நீரே" என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள்.
4. (5) அவர்களுடைய பிரமாணிக்கமின்மையை நாம் குணமாக்குவோம், அவர்கள் மேல் உளமார அன்பு கூர்வோம்; ஏனெனில் அவர்கள் மேலிருந்த நம் சினம் ஆறி விட்டது,
5. (6) நாம் இஸ்ராயேலுக்குப் பனி போல இருப்போம், அவன் லீலியைப்போலத் தளிர்ப்பான், லீபானைப்போல வேரூன்றி நிற்பான்.
6. (7) அவனுடைய கிளைகள் நீண்டு படரும். ஒலிவ மரம் போல் அவன் அழகு இருக்கும்; லீபானைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.
7. (8) நமது நிழலில் வாழ அவர்கள் திரும்பி வருவர், வளமான தானியமும் திராட்சையும் பயிரிடுவர், லீபானின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும்
8. (9) இனிமேல் எப்பிராயீமுக்குச் சிலைகள் எதற்கு? நாமே அவனுக்குச் செவி சாய்த்துக் கண்காணிக்கிறோம்; பசுமையான தேவதாரு மரம் போல் இருக்கிறோம்; நீ கனிகொடுப்பது நம்மால் தான்.
9. (10) ஞானம் நிறைந்தவன் இவற்றைக் கண்டு பிடிக்கட்டும், புத்தியுள்ளவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் ஆண்டவரின் வழிகள் நேர்மையானவை, நேர்மையானவர்கள் அவற்றில் நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகிறார்கள்.

பதிவுகள்

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
1 (2) இஸ்ராயேலே, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா, ஏனெனில் உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய், 2 (3) வாய் விட்டுச் சொல்லி ஆண்டவரிடம் திரும்புங்கள்: "அக்கிரமங்களை எல்லாம் அப்புறப்படுத்தியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும், உதடுகளால் தரும் காணிக்கையை உமக்களிக்கிறோம்; அசீரியர் எங்களைக் காக்க மாட்டார்கள், 3 (4) குதிரைகள் மேல் நாங்கள் இனி ஏற மாட்டோம்; எங்கள் கைவேலைப்பாடுகளை நோக்கி, 'எங்கள் இறைவா!' என்று சொல்ல மாட்டோம்; ஏனெனில் திக்கற்ற பிள்ளைக்குப் பரிவு காட்டுபவர் நீரே" என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள். 4 (5) அவர்களுடைய பிரமாணிக்கமின்மையை நாம் குணமாக்குவோம், அவர்கள் மேல் உளமார அன்பு கூர்வோம்; ஏனெனில் அவர்கள் மேலிருந்த நம் சினம் ஆறி விட்டது, 5 (6) நாம் இஸ்ராயேலுக்குப் பனி போல இருப்போம், அவன் லீலியைப்போலத் தளிர்ப்பான், லீபானைப்போல வேரூன்றி நிற்பான். 6 (7) அவனுடைய கிளைகள் நீண்டு படரும். ஒலிவ மரம் போல் அவன் அழகு இருக்கும்; லீபானைப்போல் அவன் நறுமணம் பரப்புவான். 7 (8) நமது நிழலில் வாழ அவர்கள் திரும்பி வருவர், வளமான தானியமும் திராட்சையும் பயிரிடுவர், லீபானின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும் 8 (9) இனிமேல் எப்பிராயீமுக்குச் சிலைகள் எதற்கு? நாமே அவனுக்குச் செவி சாய்த்துக் கண்காணிக்கிறோம்; பசுமையான தேவதாரு மரம் போல் இருக்கிறோம்; நீ கனிகொடுப்பது நம்மால் தான். 9 (10) ஞானம் நிறைந்தவன் இவற்றைக் கண்டு பிடிக்கட்டும், புத்தியுள்ளவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் ஆண்டவரின் வழிகள் நேர்மையானவை, நேர்மையானவர்கள் அவற்றில் நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகிறார்கள்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References