தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஓசியா
1. எப்பிராயீம் பேசியபோது, மனிதர் நடுங்கினர், இஸ்ராயேலில் அவன் மிக உயர்த்தப்பட்டான்; ஆனால் பாகாலை வழிபட்டப் பாவத்தில் வீழ்ந்தான், மடிந்தான்.
2. இப்பொழுதோ தீவின் மேல் தீவினை செய்கிறார்கள், வார்ப்பிட்ட சிலைகளைத் தங்களுக்கெனச் செய்கிறார்கள்; அவர்களுடைய வெள்ளியில் செய்யப்பட்ட சிலைகள் அவை, அவை யாவும் தட்டானுடைய கைவேலைகளே. "இவற்றுக்குப் பலியிடுங்கள்" என்கிறார்கள்; கன்றுக்குகட்டிகளை மனிதர் முத்தம் செய்கிறார்கள்.
3. ஆகையால் அவர்கள் காலைநேரத்துப் பனிபோலும், விரைவில் உலர்ந்துபோகும் பனித்துளி போலும், களத்திலிருந்த துரும்பு சுழற்காற்றில் சிக்கியது போலும், பலகணி வழியாய் வெளிப்பட்ட புகை போலும் ஆவார்கள்.
4. எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; நம்மைத் தவிர வேறு கடவுளை நீ அறிவாய், நம்மையன்றி வேறு மீட்பரும் இல்லை.
5. வறண்ட நிலமாகிய பாலைவெளியில் உன்னை அறிந்து ஆதரித்தவர் நாமே.
6. ஆனால் அவர்கள் வளமான மேய்ச்சலால் வயிறு நிறைந்தனர், வயிறு நிறைந்ததும் அவர்கள் செருக்குற்று நம்மை மறந்து போனார்கள்.
7. ஆனால் நாம் அவர்களுக்கு ஒரு சிங்கம் போல் இருப்போம், வேங்கைபோலப் பாய வழியோரத்தில் மறைந்திருப்போம்.
8. குட்டிகளைப் பறிக்கொடுத்த பெண் கரடி போல் அவர்கள் மேல் பாய்ந்து, மார்பைப் பிளப்போம்; சிங்கத்தைப் போல் அங்கேயே அவர்களைத் தின்றொழிப்போம், காட்டு மிருகங்கள் அவர்களைக் கிழித்தெறியும்.
9. இஸ்ராயேலே, உன்னை நாம் அழிக்கப்போகிறோம், உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?
10. எனக்கு ஓர்அரசன் கொடும், தலைவர்கள் கொடும்" என்று நீ நம்மிடம் கேட்டாயே! அந்த அரசன் எங்கே? தலைவர்கள் எங்கே? அவர்கள் இப்பொழுது உன்னையும், உன் நகரங்களையும் மீட்கட்டுமே!
11. எரிச்சலோடு உனக்கு அரசனைத் தந்தோம், கோபத்தில் அவனை நாம் எடுத்து விட்டோம்.
12. எப்பிராயீமின் அக்கிரமம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது, அவனுடைய பாவம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
13. பிரசவ வேதனைகள் அவனுக்கு வருகின்றன, ஆனால், அவன் ஒரு புத்தியில்லாப் பிள்ளை, ஏனெனில் பேறு காலம் வந்துவிட்டது; இருப்பினும் வயிற்றை விட்டு வெளியேறுகிறானல்லன்.
14. பாதாளத்தின் பிடியினின்று அவர்களை விடுவிப்போமோ? சாவிலிருந்து அவர்களை நாம் மீட்போமோ? சாவே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு (வேலை) எங்கே? இரக்கம் இப்பொழுது நம் கண் முன் இல்லை.
15. எப்பிராயீம் நாணல்களின் நடுவில் செழித்து வளரலாம், ஆயினும் கீழ்த்திசையினின்று காற்று வரும், பாலை நிலத்திலிருந்து ஆண்டவரின் மூச்சு கிளம்பி வரும்; வந்து நீரோடைகளையும் நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும், விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் வாரிக் கொண்டு போம்.
16. (14:1) சமாரியா அழியக் கடவது, ஏனெனில் தன் கடவுளை எதிர்த்துக் கோபமூட்டிற்று; அதன் குடிமக்கள் வாளால் மடியக்கடவார்கள், அவர்களுடைய குழந்தைகள் பாறைகளில் மோதப்படுவர்; கர்ப்பவதிகள் வயிறு கிழித்தெறியப்படும்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
1 எப்பிராயீம் பேசியபோது, மனிதர் நடுங்கினர், இஸ்ராயேலில் அவன் மிக உயர்த்தப்பட்டான்; ஆனால் பாகாலை வழிபட்டப் பாவத்தில் வீழ்ந்தான், மடிந்தான். 2 இப்பொழுதோ தீவின் மேல் தீவினை செய்கிறார்கள், வார்ப்பிட்ட சிலைகளைத் தங்களுக்கெனச் செய்கிறார்கள்; அவர்களுடைய வெள்ளியில் செய்யப்பட்ட சிலைகள் அவை, அவை யாவும் தட்டானுடைய கைவேலைகளே. "இவற்றுக்குப் பலியிடுங்கள்" என்கிறார்கள்; கன்றுக்குகட்டிகளை மனிதர் முத்தம் செய்கிறார்கள். 3 ஆகையால் அவர்கள் காலைநேரத்துப் பனிபோலும், விரைவில் உலர்ந்துபோகும் பனித்துளி போலும், களத்திலிருந்த துரும்பு சுழற்காற்றில் சிக்கியது போலும், பலகணி வழியாய் வெளிப்பட்ட புகை போலும் ஆவார்கள். 4 எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; நம்மைத் தவிர வேறு கடவுளை நீ அறிவாய், நம்மையன்றி வேறு மீட்பரும் இல்லை. 5 வறண்ட நிலமாகிய பாலைவெளியில் உன்னை அறிந்து ஆதரித்தவர் நாமே. 6 ஆனால் அவர்கள் வளமான மேய்ச்சலால் வயிறு நிறைந்தனர், வயிறு நிறைந்ததும் அவர்கள் செருக்குற்று நம்மை மறந்து போனார்கள். 7 ஆனால் நாம் அவர்களுக்கு ஒரு சிங்கம் போல் இருப்போம், வேங்கைபோலப் பாய வழியோரத்தில் மறைந்திருப்போம். 8 குட்டிகளைப் பறிக்கொடுத்த பெண் கரடி போல் அவர்கள் மேல் பாய்ந்து, மார்பைப் பிளப்போம்; சிங்கத்தைப் போல் அங்கேயே அவர்களைத் தின்றொழிப்போம், காட்டு மிருகங்கள் அவர்களைக் கிழித்தெறியும். 9 இஸ்ராயேலே, உன்னை நாம் அழிக்கப்போகிறோம், உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்? 10 எனக்கு ஓர்அரசன் கொடும், தலைவர்கள் கொடும்" என்று நீ நம்மிடம் கேட்டாயே! அந்த அரசன் எங்கே? தலைவர்கள் எங்கே? அவர்கள் இப்பொழுது உன்னையும், உன் நகரங்களையும் மீட்கட்டுமே! 11 எரிச்சலோடு உனக்கு அரசனைத் தந்தோம், கோபத்தில் அவனை நாம் எடுத்து விட்டோம். 12 எப்பிராயீமின் அக்கிரமம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது, அவனுடைய பாவம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 13 பிரசவ வேதனைகள் அவனுக்கு வருகின்றன, ஆனால், அவன் ஒரு புத்தியில்லாப் பிள்ளை, ஏனெனில் பேறு காலம் வந்துவிட்டது; இருப்பினும் வயிற்றை விட்டு வெளியேறுகிறானல்லன். 14 பாதாளத்தின் பிடியினின்று அவர்களை விடுவிப்போமோ? சாவிலிருந்து அவர்களை நாம் மீட்போமோ? சாவே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு (வேலை) எங்கே? இரக்கம் இப்பொழுது நம் கண் முன் இல்லை. 15 எப்பிராயீம் நாணல்களின் நடுவில் செழித்து வளரலாம், ஆயினும் கீழ்த்திசையினின்று காற்று வரும், பாலை நிலத்திலிருந்து ஆண்டவரின் மூச்சு கிளம்பி வரும்; வந்து நீரோடைகளையும் நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும், விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் வாரிக் கொண்டு போம். 16 (14:1) சமாரியா அழியக் கடவது, ஏனெனில் தன் கடவுளை எதிர்த்துக் கோபமூட்டிற்று; அதன் குடிமக்கள் வாளால் மடியக்கடவார்கள், அவர்களுடைய குழந்தைகள் பாறைகளில் மோதப்படுவர்; கர்ப்பவதிகள் வயிறு கிழித்தெறியப்படும்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References