தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஓசியா
1. இஸ்ராயேல் தழைத்து வளர்ந்த ஒரு திராட்சைக் கொடி, அது நிரம்பக் கனிகளைக் கொடுத்தது. எவ்வளவு மிகுதியாக கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாகப் பீடங்களை அமைத்தது; நாடு எவ்வளவுக்குச் சிறப்புற்றதோ அவ்வளவுக்கு சிலைகள் சிறப்புப் பெற்றன.
2. இருமனம் கொண்ட மக்கள் அவர்கள்,ஆதலால் அவர்கள் தண்டனை பெறுவார்கள். ஆண்டவரோ அவர்களுடைய பீடங்களைத் தகர்த்திடுவார், அவர்களுடைய சிலைகளை நொறுக்கிடுவார்.
3. அப்போது அவர்கள், "நமக்கு அரசன் இல்லை, நாமோ ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை, அரசனுந்தான் நமக்கு என்ன செய்வான்?" என்பார்கள்.
4. வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகிறார்கள்; பயனற்ற ஆணைகளையிட்டு உடன்படிக்கை செய்கிறார்கள்; ஆகவே வயலின் உழவுசால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.
5. பெத்தாவானில் கன்றின் முன்னிலையில் சமாரியாவின் மக்கள் நடுங்குகின்றார்கள்; அதனுடைய மகிமை இப்பொழுது மறைந்து போயிற்று, ஆகவே அதன் மக்கள் அதைக் குறித்து அழுகின்றனர்; அதன் பூசாரிகளும் அதற்காகப் புலம்புகின்றனர்.
6. ஆம், அந்தக் கன்றின் சிலையே திறைப் பொருளாக அசீரிய மாமன்னனுக்குக் கொண்டுப் போகப்படும்; எப்பிராயீம் இதைப்பற்றி வெட்கப்படும், இஸ்ராயேல் தனது சிலையை நினைத்துத் தலை நாணும்.
7. சமாரியா அழிந்து போயிற்று, அதன் மன்னன் நீர்க் குமிழி போல் ஆனான்.
8. இஸ்ராயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடங்களெல்லாம் அழிக்கப்படும்; அவற்றின் பீடங்கள் மேல் முட்களும் முட்புதர்களும் வளரும், அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள்," குன்றுகளைப் பார்த்து, "எங்கள்மேல் விழுங்கள்" என்பார்கள்.
9. காபாவில் தங்கியிருந்த காலந்தொட்டே நீ பாவஞ் செய்து வந்திருக்கிறாய், இன்னும் தொடர்ந்து செய்து வருகிறாய்; காபாவின்ன அக்கிரமக்காரர் மேல் கடும் போர் எழாமல் போய்விடுமா?
10. நாம் வந்து அவர்களைத் தண்டிப்போம், அவர்களது இருவகையான அக்கிரமத்திற்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு, அவர்களுக்கு எதிராக நாடுகள் ஒன்று கூடும்.
11. எப்பிராயீம் புணையடிக்கப் பழக்கப்பட்டதும், புணையடிக்க விரும்புவதுமான பசுவுக்கு ஒப்பானவன், நாமே அதன் அழகான கழுத்தின் மீது நுகத்தை வைப்போம், எப்பிராயீமை நுகத்தில் பூட்டுவோம், யூதா நிலத்தை உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
12. உங்களுக்கென நீதியை விதையுங்கள், அன்பை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள் மேல் நீதியைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடுங்காலம் நெருங்கிவிட்டது.
13. நீங்கள் அக்கிரமத்தை உழுதீர்கள், அநீதியை அறுவடை செய்தீர்கள், பொய்களின் கனியைத் தின்றீர்கள், உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்ததால்,
14. உங்கள் மக்களிடையே போர்க்குரல் எழும்பும்; சல்மான் போரில் பெத்- ஆர்பெல்லை அழித்தது போல் உங்கள் கோட்டைகள் யாவும் அழிக்கப்படும்; தாய்மாரும் குழந்தைகளும் நொறுக்கப்படுவர்.
15. இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் மாபெரும் அக்கிரமத்திற்காக உங்களுக்கும் இவ்வாறே செய்யப்படும்;
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
1 இஸ்ராயேல் தழைத்து வளர்ந்த ஒரு திராட்சைக் கொடி, அது நிரம்பக் கனிகளைக் கொடுத்தது. எவ்வளவு மிகுதியாக கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாகப் பீடங்களை அமைத்தது; நாடு எவ்வளவுக்குச் சிறப்புற்றதோ அவ்வளவுக்கு சிலைகள் சிறப்புப் பெற்றன. 2 இருமனம் கொண்ட மக்கள் அவர்கள்,ஆதலால் அவர்கள் தண்டனை பெறுவார்கள். ஆண்டவரோ அவர்களுடைய பீடங்களைத் தகர்த்திடுவார், அவர்களுடைய சிலைகளை நொறுக்கிடுவார். 3 அப்போது அவர்கள், "நமக்கு அரசன் இல்லை, நாமோ ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை, அரசனுந்தான் நமக்கு என்ன செய்வான்?" என்பார்கள். 4 வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகிறார்கள்; பயனற்ற ஆணைகளையிட்டு உடன்படிக்கை செய்கிறார்கள்; ஆகவே வயலின் உழவுசால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும். 5 பெத்தாவானில் கன்றின் முன்னிலையில் சமாரியாவின் மக்கள் நடுங்குகின்றார்கள்; அதனுடைய மகிமை இப்பொழுது மறைந்து போயிற்று, ஆகவே அதன் மக்கள் அதைக் குறித்து அழுகின்றனர்; அதன் பூசாரிகளும் அதற்காகப் புலம்புகின்றனர். 6 ஆம், அந்தக் கன்றின் சிலையே திறைப் பொருளாக அசீரிய மாமன்னனுக்குக் கொண்டுப் போகப்படும்; எப்பிராயீம் இதைப்பற்றி வெட்கப்படும், இஸ்ராயேல் தனது சிலையை நினைத்துத் தலை நாணும். 7 சமாரியா அழிந்து போயிற்று, அதன் மன்னன் நீர்க் குமிழி போல் ஆனான். 8 இஸ்ராயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடங்களெல்லாம் அழிக்கப்படும்; அவற்றின் பீடங்கள் மேல் முட்களும் முட்புதர்களும் வளரும், அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள்," குன்றுகளைப் பார்த்து, "எங்கள்மேல் விழுங்கள்" என்பார்கள். 9 காபாவில் தங்கியிருந்த காலந்தொட்டே நீ பாவஞ் செய்து வந்திருக்கிறாய், இன்னும் தொடர்ந்து செய்து வருகிறாய்; காபாவின்ன அக்கிரமக்காரர் மேல் கடும் போர் எழாமல் போய்விடுமா? 10 நாம் வந்து அவர்களைத் தண்டிப்போம், அவர்களது இருவகையான அக்கிரமத்திற்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு, அவர்களுக்கு எதிராக நாடுகள் ஒன்று கூடும். 11 எப்பிராயீம் புணையடிக்கப் பழக்கப்பட்டதும், புணையடிக்க விரும்புவதுமான பசுவுக்கு ஒப்பானவன், நாமே அதன் அழகான கழுத்தின் மீது நுகத்தை வைப்போம், எப்பிராயீமை நுகத்தில் பூட்டுவோம், யூதா நிலத்தை உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான். 12 உங்களுக்கென நீதியை விதையுங்கள், அன்பை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள் மேல் நீதியைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடுங்காலம் நெருங்கிவிட்டது. 13 நீங்கள் அக்கிரமத்தை உழுதீர்கள், அநீதியை அறுவடை செய்தீர்கள், பொய்களின் கனியைத் தின்றீர்கள், உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்ததால், 14 உங்கள் மக்களிடையே போர்க்குரல் எழும்பும்; சல்மான் போரில் பெத்- ஆர்பெல்லை அழித்தது போல் உங்கள் கோட்டைகள் யாவும் அழிக்கப்படும்; தாய்மாரும் குழந்தைகளும் நொறுக்கப்படுவர். 15 இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் மாபெரும் அக்கிரமத்திற்காக உங்களுக்கும் இவ்வாறே செய்யப்படும்;
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References