தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எபிரேயர்
1. நாம் சொன்னவற்றில் தலையாயது: இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார்; அவர் மகத்துவமிக்கவரது அரியணையின் வலப்புறத்திலே வானகத்தில் அமர்ந்துள்ளார்.
2. அங்கே மனிதராலன்று கடவுளாலேயே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் இறைபணி ஆற்றுபவராயிருக்கின்றார்.
3. ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அவ்வாறு செலுத்துவதற்கு ஏதாவது இவருக்கும் இருந்திருக்கவேண்டும்.
4. உலகிலேயே இருந்திருப்பாரானால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டம் குறிப்பிடும் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்க ஏற்கெனவே வேறு குருக்கள் இருக்கின்றனர்.
5. இவர்கள் வானக இறைபணியின் வெறும் சாயலும் நிழலுமாயுள்ள பணியைப் புரிகிறார்கள். இதை, மோயீசன் கூடாரத்தை அமைக்கத் தொடங்கியபொழுது கடவுள் கொடுத்த கட்டளை குறிப்பிடுகிறது: ' மலைமீது உனக்குக் காண்பித்தவற்றின் மாதிரியாக எல்லாவற்றையும் செய்யப்பார் ' என்பது அக்கட்டளை.
6. மேலான வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு, இயேசுவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை எவ்வளவுக்கு மேலானதோ அவ்வளவுக்கு மேலானது அவர் பெற்றிருக்கும் இறைபணியலுவல்.
7. அந்த முதல் உடன்படிக்கை குறையில்லாததாக இருந்திருப்பின் மற்றொன்றிற்குத் தேவையே இருந்திராது.
8. ஆனால் கடவுள் அவர்களைக் குற்றங் கூறிச் சொன்னதாவது: "ஆண்டவர் கூறுவது: இதோ, ஒருநாள் வரும். அந்நாளில் இஸ்ராயேல் குலத்தாரோடும் யூதாவின் குலத்தாரோடும் புதியதோர் உடன்படிக்கை செய்துகொள்வேன்.
9. எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய முன்னோரைக் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு போன நாளில், அவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைபோலிராது இவ்வுடன்படிக்கை. அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கவில்லை, நானும் அவர்களைக் கைவிட்டேன், என்கிறார் ஆண்டவர்.
10. அந்நாட்களுக்குப்பின் இஸ்ராயேல் குலத்தாரோடு நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே, என்கிறார் ஆண்டவர்: என் சட்டங்களை அவர்களுடைய மனத்தில் புகுத்துவேன், அவர்களுடைய உள்ளங்களில் அவற்றைப் பொறித்து வைப்பேன். நான் அவர்களுக்குக் கடவுளாயிருப்பேன், அவர்கள் எனக்கு மக்களாயிருப்பர்.
11. 'ஆண்டவரை அறிந்துகொள் ' என்று இனி ஒருவனும் தன் அயலானுக்கோ, தன் சகோதரனுக்கோ கற்பிக்க வேண்டியதில்லை. சிறுவர் முதல் பெரியோர் ஈறாக எல்லாரும் என்னை அறிவர்.
12. ஆம், நான் அவர்களுடைய அக்கிரமங்களை இரக்கத்தோடு மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை இனி நினையேன்."
13. 'புதியதோர் உடன்படிக்கை' என்றதால் முந்தினதைப் பழமையாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைந்துபோக வேண்டியதே.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 13 Chapters, Current Chapter 8 of Total Chapters 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
எபிரேயர் 8:1

×

Alert

×

tamil Letters Keypad References