தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எபிரேயர்
1. ஆகையால், வழி தவறிப்போகாதவாறு நாம் கேட்டறிந்தவற்றின்மேல் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.
2. ஏனெனில், வானதூதர் வாயிலாகத் தெரிவிக்கப்பட்ட திருச்சட்டமே கட்டுப்படுத்த வல்லதாய் இருந்ததென்றால். அதற்கு எதிரான எத்தகைய குற்றமும் கீழ்ப்படியாமையும் தக்க தண்டனையைப் பெற்றுக்கொண்டதென்றால், இத்துணைப் பெரிய மீட்பைப்பற்றிக் கவலையற்று இருப்போமானால் நாம் எப்படித் தப்பமுடியும்?
3. முதன்முதல் ஆண்டவராலே அறிவிக்கப்பட்ட இந்த மீட்பைப்பற்றி, அவருடைய வார்த்தையைக் கேட்டவர்களும் நமக்கு உறுதியாகச் சான்று கூறியுள்ளனர்.
4. கடவுளும், அருங்குறிகளாலும் அற்புதங்களாலும் பல்வேறு புதுமைகளாலும், தம் விருப்பத்தின்படி அளித்த பரிசுத்த ஆவியின் கொடைகளாலும் அவர்களுடைய சாட்சியத்தை உறுதிப்படுத்தினார்.
5. நாம் குறிப்பிடும் புதிய உலகைக் கடவுள் வான தூதர்களுடைய அதிகாரத்திற்கு உட்படுத்தவில்லை.
6. அதற்குச் சான்றாக ஓரிடத்தில் எழுதியுள்ளதாவது: "மனிதன் யார், நீர் அவனை நினைவுகூர! மனுமகன் யார், நீர் அவனைத் தேடிவர!
7. நீர் அவனைச் சிறிது காலத்திற்கு வானதூதர்களைவிடத் தாழ்ந்தவனாக்கினீர். மகிமையும் மாட்சியும் அவனுக்கு முடியெனச் சூட்டினீர். அனைத்தும் அவனுக்கு அடிபணியச் செய்தீர். "
8. அனைத்தையும் அவனுக்குப் பணியச் செய்ததால் பணியாமலிருக்க எதையும் விடவில்லை. ஆயினும் அனைத்தும் மனிதனுக்கு இன்னும் பணிந்திருக்கக் காணோம்.
9. நாம் காண்பது, சிறிது காலத்திற்கு வான தூதர்களைவிடத் தாழ்ந்தவராக்கப்பட்ட ஒருவரைத்தான். இவர் இயேசுவே. இவர் பாடுபட்டு இறந்ததால், 'மகிமையும் மாட்சியும்' இவருக்கு முடியெனச் சூடப்பட்டதையும் காண்கிறோம். இங்ஙனம் கடவுளின் அருளால் அனைவருடைய நன்மைக்காகவும் இவர் சாவுக்குட்பட வேண்டியிருந்தது.
10. யாருக்காக எல்லாம் உள்ளனவோ, யாரால் எல்லாம் உண்டாயினவோ அவர், புதல்வர் பலரை மகிமைக்கு அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களுடைய மீட்பைத் தொடங்கி வைத்த இயேசுவைப் பாடுகளால் நிறைவுள்ளவராக்கியது தகுதியே.
11. பரிசுத்தமாக்குபவர், பரிசுத்தமாக்கப்படுபவர்கள் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனாலே இறைமகன் அவர்களைச் 'சகோதரர்கள் ' என்றழைக்க வெட்கப்படவில்லை.
12. 'என் சகோதரர்களுக்கு உம் பெயரை அறிவிப்பேன்; சபையின் நடுவே உமக்குப் புகழ் பாடுவேன் ' என்றும்,
13. 'நான் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன்' என்றும், ' இதோ நானும் கடவுள் எனக்களித்த பிள்ளைகளும்' என்றும் கூறினாரன்றோ?
14. பிள்ளைகளுக்கு ஒரே ஊனும் இரத்தமும் இருப்பதால், அவரும் அதே ஊனும் இரத்தமும் பெற்றுக்கொண்டார். இவ்வாறு சாவைத்தன் கையில் கொண்டிருந்தவனை, அதாவது அலகையை, சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.
15. சாவுக்கு அஞ்சியதால் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் கட்டுண்டிருந்தவர்களை விடுவித்தார்.
16. வான தூதர்களுக்கு அவர் துணை நிற்கவில்லை என்பதை கண்கூடு. ஆபிரகாமின் வழி வந்தவர்களுக்கே அவர் துணை நின்றார்.
17. ஆகையால் மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு, கடவுளைச் சார்ந்தவற்றில் அவர் இரக்கமுள்ளவரும் நம்பிக்கைக்குரியவருமான தலைமைக் குருவாகும்படி, எல்லாவற்றிலும் சகோதரர்களைப்போல் ஆக வேண்டியதாயிற்று.
18. அவ்வாறு தாமே சோதனைக்குள்ளாகித் துன்பப்பட்டதனாலேயே சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவரால் உதவிசெய்ய முடிகிறது.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 13 Chapters, Current Chapter 2 of Total Chapters 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
எபிரேயர் 2:36

×

Alert

×

tamil Letters Keypad References