தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. கடவுள் நோவாவையும் அவருடன் பெட்டகத்தில் இருந்த எல்லாக் காட்டு மிருகங்களையும் வீட்டு மிருகங்களையும் நினைவு கூர்ந்து, காற்று வீசச் செய்யவே, வெள்ளம் குறைந்தது.
2. அன்றியும், பாதாளத்தின் நீரூற்றுக்களும் வானத்தின் மதகுகளும் அடைபட்டு, வானினின்று பெய்த மழையும் நின்றது.
3. சிறிது சிறிதாய் வெள்ளம் பூமியில் வற்றத் தொடங்கியது. நூற்றைம்பது நாட்களுக்குப் பின் அது வடிய ஆரம்பித்தது.
4. ஏழாம் மாதத்தின், இருபத்தேழாம் நாளன்று பெட்டகம் ஆர்மேனிய நாட்டு மலையின் மீது தங்கியது.
5. வெள்ளம் பத்தாம் மாதம் வரை வடிந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலைகளின் சிகரங்கள் காணப்பட்டன.
6. நாற்பது நாட்களுக்குப் பின் நோவா பெட்டகத்தின் சன்னலைத் திறந்து ஒரு காக்கையை வெளியே விட்டார்.
7. அது புறப்பட்டுப் போய்ப் பூமியில் வெள்ளம் வற்றுமட்டும் இங்குமங்குமாய்ச் சுற்றித் திரும்பவேயில்லை.
8. மறுபடியும், பூமியின் மீது வெள்ளம் வற்றி விட்டதா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு, (நோவா) ஒரு புறாவை வெளியே விட்டார்.
9. பூமியின் மீது எங்கும் வெள்ளம் பரந்து கிடந்தமையால், கால் வைத்து இளைப்பாறவும் இடம் காணாமல் அது திரும்பவும் அவரை நாடிப் பெட்டகத்திற்கு வந்தது. அவர் கை நீட்டி அதைப் பிடித்துப் பெட்டகத்தினுள் சேர்த்தார்.
10. அவர் மேலும் ஏழு நாட்கள் பொறுத்து மீண்டும் புறாவைப் பெட்டகத்திலிருந்து வெளியே விட்டார்.
11. அது மாலை நேரத்தில் பசும் இலைகளையுடைய ஒலிவ மரத்தின் கிளையொன்றை அலகில் கவ்விக் கொண்டு தன் அண்டையில் வந்ததனால், பூமியின் மீது வெள்ளம் அற்றுப் போயிற்றென்று நோவா தெரிந்து கொண்டார்.
12. மேலும் அவர் வேறு ஏழு நாட்கள் பொறுத்திருந்து புறாவை விட, அது அவரிடம் திரும்பி வரவேயில்லை.
13. இவ்வாறு அறுநூற்றோராம் ஆண்டின் முதல் மாதம், முதல் நாளன்று பூமியின் மீது வெள்ளம் வற்றிப் போயிற்று. அப்பொழுது நோவா பெட்டகத்தின் மேல் தட்டைப் பிரித்து (வெளியே) பார்த்துப் பூமியின் மேல் தண்ணீர் இல்லையென்று கண்டார்.
14. இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாள் பூமி காய்ந்திருந்தது.
15. அப்போது கடவுள் நோவாவை நோக்கி:
16. நீயும் உன் மனைவியும், புதல்வர்களும், புதல்வர்களின் மனைவியரும் பெட்டகத்தை விட்டு வெளியே வாருங்கள்.
17. உன்னோடிருக்கிற பலவகை உயிரினங்களாகிய எல்லாப் பறவைகளையும் மிருகங்களையும், பூமியின் மேல் ஊர்வன யாவையும் உன்னோடு கூட வெளியே வரவிடு. நீங்கள் பூமியில் வாழ்ந்து அதன் மேல் பலுகிப் பெருகுவீர்களாக என்றார்.
18. அப்படியே நோவாவும், அவர் புதல்வரும், அவர் மனைவியும், அவர் புதல்வரின் மனைவியரும் வெளியேறி வந்தார்கள்.
19. அன்றியும், மிருகங்களும், பூமியின் மேல் ஊர்வனவாகிய எல்லா உயிர்களும் இனம் இனமாகப் பெட்டகத்தை விட்டு வெளியே வந்தன.
20. பின் நோவா ஒரு பீடத்தைக் கட்டி, மிருகங்களிலும் சுத்தமான பறவைகளிலும் பலவற்றை எடுத்து அதன் மேல் தகனப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.
21. ஆண்டவர் அவற்றை நறுமணமுள்ள பரிமளமாக ஏற்றுக்கொண்டு: நாம் இனி மனிதன் பொருட்டுப் பூமியை ஒருபோதும் சபிக்க மாட்டோம். ஏனென்றால், மனிதனுடைய இதய சிந்தனைகள் இளமை முதல் தீமையின் மீதே நாட்டம் கொண்டுள்ளன. ஆதலால், இப்பொழுது செய்தது போல் இனி நாம் உயிரினங்கள் யாவையும் மறுமுறை அழிக்க மாட்டோம்.
22. பூமி இருக்குமட்டும் விதைப்பும் அறுப்பும், குளிரும் வெப்பமும், கோடைக் காலமும் குளிர் காலமும், இரவும் பகலும் ஒழிவதில்லை என்று திருவுளம் பற்றினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 8 of Total Chapters 50
ஆதியாகமம் 8:15

×

Alert

×

tamil Letters Keypad References