தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஆதியாகமம்
1. யாக்கோபு தன் புதல்வர்களை வரவழைத்து: நீங்கள் கூடிவாருங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன்.
2. கூடிவந்து கூர்ந்து கேளுங்கள். யாக்கோபின் புதல்வர்களே, உங்கள் தந்தையாகிய இஸ்ராயேலக்குச் செவிகொடுங்கள்:
3. என் மூத்த புதல்வனாகிய ரூபனே, நீ என் வலிமையும் என் துயரத்தின் அடிப்படையும் ஆனவன். வரங்களிலும் முதல்வன்; அதிகாரத்தில் பெரியவனும் நீயே.
4. தண்ணீரைப் போல் நீ வடிந்து போனாய். உள்ளபடி, உன் தந்தையினுடைய மஞ்சத்தின் மேல், ஏறி, அவனுடைய படுக்கையைத் தீட்டுப் படுத்தத் துணிந்தாய். ஆதலால் நீ ஒருக்காலும் மேன்மை அடைய மாட்டாய்.
5. சிமையோனும் லேவியும் சகோதரர்களாம்; முறையற்ற போராட்டத்தின் கருவிகளாம்.
6. என் ஆன்மா அவர்களுடைய சதியாலோசனைக்கு உடன்படாதிருப்பதாக. அவர்களுடைய கூட்டத்தில் எனக்குப் பெருமை உண்டாகாதிருப்பதாக. ஏனென்றால், அவர்கள் கோப வெறியால் ஒரு மனிதனைக் கொன்றார்கள்; வேண்டுமேன்றே அரண்களை அரித்தார்கள்.
7. அவர்களுடைய மூர்க்கமான கோபவெறியும் கொடுமையான எரிச்சலும் சபிக்கப் படக்கடவன. அவர்களை யாக்கோபினின்று பிரியவும் இஸ்ராயேலினின்று சிதறவும் பண்ணுவேன்.
8. யூதாவே, உன் சகோதரர் உன்னைத் துதித்துப் புகழ்வார்கள். உன் கை உன் பகைவருடைய தலையின் மேல் இருக்கும். உன் தந்தையின் புதல்வர்கள் உன்னை வணங்குவார்கள்.
9. யூதா சிங்கக் குட்டியாம். இரையைக் கவர எழுந்தாய், என் மகனே. ஆண் சிங்கத்தைப் போலும் பெண் சிங்கத்தைப் போலும் இளைப்பாற மடங்கிப் படுத்தாய். அவனைத் தட்டி எழுப்புகிறவன் யார்?
10. அனுப்பப்பட இருக்கிறவர் வரும் வரையிலும் செங்கோல். யூதாவை விட்டு (நீங்குவதும் இல்லை); அவனுடைய சந்ததியை விட்டுக் கடவுள் விலகுவதும் இல்லை.
11. மகனே, அவன் திராட்சைத் தோட்டத்தில் தன் கழுதைக் குட்டியையும், திராட்சைக் கொடியில் தன் கழுதையையும் கட்டுவான். திராட்சை இரசத்தில் தன் மேற்சட்டையையும், திராட்சைச் சாரத்தில் தன் அங்கியையும் தேய்ப்பான்.
12. அவனுடைய கண்கள் திராட்சை இரசத்தை விட அழகுள்ளவை. அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.
13. சாபுலோன், கடற்கரையிலும் கப்பற்றுறை அருகிலும் குடியிருப்பான். சீதோன் வரையிலும் அவன் பரவுவான்.
14. இசக்கார், தன் சொத்துக்களின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற வலிமையுள்ள கழுதையாம்.
15. அவன், இளைப்பாறுதல் நல்லதென்றும், நாடு மிக வசதியானதென்றும் கண்டான்; சுமைக்குத் தன் தோளைச் சாய்த்துக் கப்பம் கட்டுவதற்கு இணங்கினானே!
16. தான், இஸ்ராயேலின் வேறொரு கோத்திரம் போல் தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
17. தான், வழியில் கிடக்கிற பாம்பு போலவும் பாதையில் தென்படுகிற பாம்பு போலவும் ஆகி, குதிரை மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படி அதன் குதிக்காலைக் கடிக்கக் கடவான்.
18. ஆண்டவரே! உம்முடைய (மீட்பை) எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன்.
19. காத், ஆயுதங்களை அணிந்தவனாய் இஸ்ராயேல் முன்னிலையில் போர்புரிவான்; ஆயுதங்களை அணிந்தவனாய்த் திரும்புவான்.
20. ஆசாரின் உணவு கொழுத்ததாம்; அரசர்களுக்கும் இன்பம் கொடுக்குமாம்.
21. நெப்தலியோ விடுதலை பெற்ற மகனும். அவன் சிறப்பான பேச்சுக்களையும் பேசுவான்.
22. சூசை விருத்தி அடையும் புதல்வனாம். அவன் பலுகிப் பெருகுவான். அவன் முகம் அழகானது. அவனைப் பார்க்க வேண்டிப் பெண்கள் மதில் மேல் ஏறுவார்கள்.
23. ஆனால், அம்புகளைக் கையில் ஏந்திய பகைவர் அவனை வலிய வம்புக்கு இழுத்து வாதாடினார்கள்; அவன் மீது பொறாமை கொண்டார்கள்.
24. அவனுடைய வில்லோ உறுதியாய் நின்றது. யாக்கோபின் வல்லபக் (கடவுளால்) அவன் கையிலும் புயத்திலும் இருந்த சங்கிலிகள் உடைக்கப்பட்டன. அதனால் அவன் இஸ்ராயேலின் மேய்ப்பனும் அரணும் ஆனான்.
25. உன் தந்தையின் கடவுளே உனக்குத் துணையாய் இருப்பார். எல்லாம் வல்லரே உன்னைப் பற்பல ஆசீர்களால் நிரப்புவார். உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசிராலும், கீழே பாதாளத்திலிருந்து உண்டாகும் ஆசீராலும் கொங்கைகளுக்கும் கர்ப்பத்திற்கும் உரிய ஆசீர்களாலும் அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.
26. உன் தந்தையின் ஆசிகள் அவன் மூதாதையரின் ஆசிகளிலும் சிறந்தவை. நித்திய மலைகளினால் ஆசிக்கப் பட்டிருக்கிறவர் வரும் வரை அவை விருத்தியாகவும், சூசையின் தலை மேலும் அவன் சகோதரரில் நசரேயனாய் இருப்போனின் உச்சந் தலை மேலும் வரவுங்கடவன.
27. பெஞ்சமினோ பறிக்கும் ஓநாயாம். அவன் காலையில் தன் இரையை உண்பான்; மாலையிலோ கொள்ளைப் பொருளைப் பங்கிடுவான் என்று யாக்கோபு உரைத்தான்.
28. இவர்கள் எல்லாரும் இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரத்தார். இவர்களுடைய தந்தை இவர்களுக்கு இவற்றைச் சொல்லி, அவனவனுக்குரிய ஆசிமொழி கூறி அவனவனை ஆசீர்வதித்தான்.
29. மேலும் அவர்களை நோக்கி: இதோ நான் என் முன்னோரோடு சேர்க்கப்பட இருக்கிறேன். என்னை என் மூதாதையர் அண்டையில், ஏத்தையனான எபிரோனின் நிலத்திலுள்ள இரட்டைக் குகையில் அடக்கம் செய்யக் கடவீர்கள்.
30. அது கானான் நாட்டிலே மம்பிறேய்க்கு எதிரே இருக்கின்றது. ஆபிரகாம் ஏத்தையனான எபிரோனின் கையில் அதையும் அதற்குரிய நிலத்தையும் சொந்தக் கல்லறை நிலமாய் இருக்கும்படி வாங்கினார்.
31. அங்கே அவரையும் அவர் மனைவி சாறாளையும் அடக்கம் செய்தார்கள், அங்கே ஈசாக்கையும் அவர் மனைவி இரேபேக்காளையும் சேமித்தார்கள். அங்கே லீயாளையும் அடக்கம் செய்திருக்கிறேன் என்றான்.
32.
33. (32) யாக்கோபு தன் புதல்வர்களுக்கு அறிவுரை வழங்கி முடித்த பின், தன் கால்களைப் படுக்கையின் மேல் மடக்கி உயிர் துறந்தான்; தன் முன்னோரோடு சேர்க்கப்பட்டான்.
மொத்தம் 50 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 49 / 50
1 யாக்கோபு தன் புதல்வர்களை வரவழைத்து: நீங்கள் கூடிவாருங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 2 கூடிவந்து கூர்ந்து கேளுங்கள். யாக்கோபின் புதல்வர்களே, உங்கள் தந்தையாகிய இஸ்ராயேலக்குச் செவிகொடுங்கள்: 3 என் மூத்த புதல்வனாகிய ரூபனே, நீ என் வலிமையும் என் துயரத்தின் அடிப்படையும் ஆனவன். வரங்களிலும் முதல்வன்; அதிகாரத்தில் பெரியவனும் நீயே. 4 தண்ணீரைப் போல் நீ வடிந்து போனாய். உள்ளபடி, உன் தந்தையினுடைய மஞ்சத்தின் மேல், ஏறி, அவனுடைய படுக்கையைத் தீட்டுப் படுத்தத் துணிந்தாய். ஆதலால் நீ ஒருக்காலும் மேன்மை அடைய மாட்டாய். 5 சிமையோனும் லேவியும் சகோதரர்களாம்; முறையற்ற போராட்டத்தின் கருவிகளாம். 6 என் ஆன்மா அவர்களுடைய சதியாலோசனைக்கு உடன்படாதிருப்பதாக. அவர்களுடைய கூட்டத்தில் எனக்குப் பெருமை உண்டாகாதிருப்பதாக. ஏனென்றால், அவர்கள் கோப வெறியால் ஒரு மனிதனைக் கொன்றார்கள்; வேண்டுமேன்றே அரண்களை அரித்தார்கள். 7 அவர்களுடைய மூர்க்கமான கோபவெறியும் கொடுமையான எரிச்சலும் சபிக்கப் படக்கடவன. அவர்களை யாக்கோபினின்று பிரியவும் இஸ்ராயேலினின்று சிதறவும் பண்ணுவேன். 8 யூதாவே, உன் சகோதரர் உன்னைத் துதித்துப் புகழ்வார்கள். உன் கை உன் பகைவருடைய தலையின் மேல் இருக்கும். உன் தந்தையின் புதல்வர்கள் உன்னை வணங்குவார்கள். 9 யூதா சிங்கக் குட்டியாம். இரையைக் கவர எழுந்தாய், என் மகனே. ஆண் சிங்கத்தைப் போலும் பெண் சிங்கத்தைப் போலும் இளைப்பாற மடங்கிப் படுத்தாய். அவனைத் தட்டி எழுப்புகிறவன் யார்? 10 அனுப்பப்பட இருக்கிறவர் வரும் வரையிலும் செங்கோல். யூதாவை விட்டு (நீங்குவதும் இல்லை); அவனுடைய சந்ததியை விட்டுக் கடவுள் விலகுவதும் இல்லை. 11 மகனே, அவன் திராட்சைத் தோட்டத்தில் தன் கழுதைக் குட்டியையும், திராட்சைக் கொடியில் தன் கழுதையையும் கட்டுவான். திராட்சை இரசத்தில் தன் மேற்சட்டையையும், திராட்சைச் சாரத்தில் தன் அங்கியையும் தேய்ப்பான். 12 அவனுடைய கண்கள் திராட்சை இரசத்தை விட அழகுள்ளவை. அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை. 13 சாபுலோன், கடற்கரையிலும் கப்பற்றுறை அருகிலும் குடியிருப்பான். சீதோன் வரையிலும் அவன் பரவுவான். 14 இசக்கார், தன் சொத்துக்களின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற வலிமையுள்ள கழுதையாம். 15 அவன், இளைப்பாறுதல் நல்லதென்றும், நாடு மிக வசதியானதென்றும் கண்டான்; சுமைக்குத் தன் தோளைச் சாய்த்துக் கப்பம் கட்டுவதற்கு இணங்கினானே! 16 தான், இஸ்ராயேலின் வேறொரு கோத்திரம் போல் தன் மக்களுக்கு நீதி வழங்குவான். 17 தான், வழியில் கிடக்கிற பாம்பு போலவும் பாதையில் தென்படுகிற பாம்பு போலவும் ஆகி, குதிரை மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படி அதன் குதிக்காலைக் கடிக்கக் கடவான். 18 ஆண்டவரே! உம்முடைய (மீட்பை) எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன். 19 காத், ஆயுதங்களை அணிந்தவனாய் இஸ்ராயேல் முன்னிலையில் போர்புரிவான்; ஆயுதங்களை அணிந்தவனாய்த் திரும்புவான். 20 ஆசாரின் உணவு கொழுத்ததாம்; அரசர்களுக்கும் இன்பம் கொடுக்குமாம். 21 நெப்தலியோ விடுதலை பெற்ற மகனும். அவன் சிறப்பான பேச்சுக்களையும் பேசுவான். 22 சூசை விருத்தி அடையும் புதல்வனாம். அவன் பலுகிப் பெருகுவான். அவன் முகம் அழகானது. அவனைப் பார்க்க வேண்டிப் பெண்கள் மதில் மேல் ஏறுவார்கள். 23 ஆனால், அம்புகளைக் கையில் ஏந்திய பகைவர் அவனை வலிய வம்புக்கு இழுத்து வாதாடினார்கள்; அவன் மீது பொறாமை கொண்டார்கள். 24 அவனுடைய வில்லோ உறுதியாய் நின்றது. யாக்கோபின் வல்லபக் (கடவுளால்) அவன் கையிலும் புயத்திலும் இருந்த சங்கிலிகள் உடைக்கப்பட்டன. அதனால் அவன் இஸ்ராயேலின் மேய்ப்பனும் அரணும் ஆனான். 25 உன் தந்தையின் கடவுளே உனக்குத் துணையாய் இருப்பார். எல்லாம் வல்லரே உன்னைப் பற்பல ஆசீர்களால் நிரப்புவார். உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசிராலும், கீழே பாதாளத்திலிருந்து உண்டாகும் ஆசீராலும் கொங்கைகளுக்கும் கர்ப்பத்திற்கும் உரிய ஆசீர்களாலும் அவர் உன்னை ஆசீர்வதிப்பார். 26 உன் தந்தையின் ஆசிகள் அவன் மூதாதையரின் ஆசிகளிலும் சிறந்தவை. நித்திய மலைகளினால் ஆசிக்கப் பட்டிருக்கிறவர் வரும் வரை அவை விருத்தியாகவும், சூசையின் தலை மேலும் அவன் சகோதரரில் நசரேயனாய் இருப்போனின் உச்சந் தலை மேலும் வரவுங்கடவன. 27 பெஞ்சமினோ பறிக்கும் ஓநாயாம். அவன் காலையில் தன் இரையை உண்பான்; மாலையிலோ கொள்ளைப் பொருளைப் பங்கிடுவான் என்று யாக்கோபு உரைத்தான். 28 இவர்கள் எல்லாரும் இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரத்தார். இவர்களுடைய தந்தை இவர்களுக்கு இவற்றைச் சொல்லி, அவனவனுக்குரிய ஆசிமொழி கூறி அவனவனை ஆசீர்வதித்தான். 29 மேலும் அவர்களை நோக்கி: இதோ நான் என் முன்னோரோடு சேர்க்கப்பட இருக்கிறேன். என்னை என் மூதாதையர் அண்டையில், ஏத்தையனான எபிரோனின் நிலத்திலுள்ள இரட்டைக் குகையில் அடக்கம் செய்யக் கடவீர்கள். 30 அது கானான் நாட்டிலே மம்பிறேய்க்கு எதிரே இருக்கின்றது. ஆபிரகாம் ஏத்தையனான எபிரோனின் கையில் அதையும் அதற்குரிய நிலத்தையும் சொந்தக் கல்லறை நிலமாய் இருக்கும்படி வாங்கினார். 31 அங்கே அவரையும் அவர் மனைவி சாறாளையும் அடக்கம் செய்தார்கள், அங்கே ஈசாக்கையும் அவர் மனைவி இரேபேக்காளையும் சேமித்தார்கள். அங்கே லீயாளையும் அடக்கம் செய்திருக்கிறேன் என்றான். 32 33 (32) யாக்கோபு தன் புதல்வர்களுக்கு அறிவுரை வழங்கி முடித்த பின், தன் கால்களைப் படுக்கையின் மேல் மடக்கி உயிர் துறந்தான்; தன் முன்னோரோடு சேர்க்கப்பட்டான்.
மொத்தம் 50 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 49 / 50
×

Alert

×

Tamil Letters Keypad References