தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஆதியாகமம்
1. பின் சூசை பாரவோனிடம் போய்: என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடுமாடு முதலியவற்றோடும், தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். இதோ, அவர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.
2. பின், கடைசியில் பிறந்த தம் சகோதரரில் ஐந்து பேரை அரசன் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தினார்.
3. அவன் அவர்களை நோக்கி: உங்கள் தொழில் என்ன என, அவர்கள்: உமது அடிமைகளாகிய நாங்கள் எங்கள் முன்னோரைப் போல் ஆடு மேய்ப்பவர்கள்.
4. உம் நாட்டிலே குடியிருக்க வந்தோம். ஏனென்றால், கானான் நாட்டிலே மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டதால், அடியோர்களின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போயிற்று. அடியோர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கும்படி உத்தரவளிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம் என்றனர்.
5. அப்பொழுது அரசன் சூசையை நோக்கி: உம் தந்தையும் உம்முடைய சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்களே, எகிப்து நாடு உமது பார்வையில் இருக்கிறது.
6. சிறந்த இடத்தில் அவர்கள் குடியேறும்படி செய்யும். யேசேன் நாட்டையே அவர்களுக்குச் சொந்தமாய்க் கொடும். அவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீராயின், என் மந்தைகளைப் பேணுவதற்கு அவர்களைத் தலைவராக நியமிக்கலாம் என்றான்.
7. அதன் பின், சூசை தம் தந்தையை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினார். யாக்கோபு அரசனுக்கு ஆசிமொழி கூறின பின்,
8. பாரவோன் அவனை நோக்கி: உமது வயதென்ன என்று வினவினான்.
9. அதற்கு அவன்: என் அலைந்து திரிந்த வாழ்வின் காலம் நூற்று முப்பதாண்டுகள்; அது கொஞ்சமுமாய், கேடுகள் நிறைந்ததுமாய் இருந்துள்ளதுமன்றி, என் முன்னோருடைய அலைந்த வாழ்வின் ஆயுட்காலத்தை வந்து எட்டவுமில்லை என்று பதில் கூறிய பின்,
10. அரசனை ஆசீர்வதித்து வெளியே போனான்.
11. பின் சூசை, பாரவோன் கட்டளையிட்டிருந்த படி, தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டிலே வளமான நாடாகிய இறாம்சேசை உரிமையாய்க் கொடுத்தார்.
12. மேலும், அவர்களையும், தம் தந்தை வீட்டார் அனைவரையும் பராமரித்து, அவரவர்களுக்கு உணவும் அளித்து வந்தார்.
13. ஏனென்றால், பூமியெங்கும் உணவு கிடைக்கவில்லை. பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது. குறிப்பாக, அஃது எகிப்திலும் கானான் நாட்டிலும் கொடியதாய் இருந்தது.
14. சூசை அந்நாட்டாருக்குத் தானியம் விற்று, அதனால் வந்த பணமெல்லாம் சேர்த்து அரசனின் கருவூலத்தில் சேர்த்து வைத்து வந்தார்.
15. தானியம் வாங்க வகையில்லாமல் போன போது, எகிப்தியர் எல்லாரும் சூசையிடம் வந்து: எங்களுக்கு உணவு தாரும். பணம் இல்லையென்பதனால், உம்முன் நாங்கள் சாக வேண்டுமோ என்றனர்.
16. அதற்கு அவன்: உங்களிடம் பணம் இல்லாவிட்டாலும், உங்கள் ஆடு மாடு முதலியவற்றைக் கொண்டு வாருங்கள்; அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியங்களைத் தருவேன் என்று பதில் சொல்லக் கேட்டு,
17. அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்த போது, சூசை குதிரைகளையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு, அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்குத் தானியங்களைக் கொடுத்தார். இப்படி மிருகங்களைக் கைம்மாறாகப் பெற்று, அவர்களை அந்த ஆண்டு காப்பாற்றி வந்தார்.
18. அடுத்த ஆண்டிலே அவர்கள் மறுபடியும் வந்து, அவரை நோக்கி: பணமும் செலவழிந்து போயிற்று; ஆடுமாடு முதலியவையும் இனி மேல் இல்லை. இதைத் துரை அவர்களுக்குத் தெரிவிக்காது இருப்பது முறையல்ல. இனி என்ன? உடலும் எங்கள் நிலங்களும் போக எங்களிடம் மீதியானது வேறொன்றும் இல்லையென்று தங்களுக்குத் தெரியும்.
19. உமது கண்முன் நாங்கள் ஏன் சாக வேண்டும்? எங்கள் நிலங்களும் நாங்களுமே உமது உடைமைகளாய் இருப்போம். அரசருக்கு அடிமைகளாக எங்களை வாங்கி, எங்களுக்குத் தானியம் கொடும். கொடாவிட்டால், நாங்களும் சாக, நிலமும் பாழாய்ப் போகும் என்றனர்.
20. அப்படியே சூசை எகிப்தியருடைய நிலங்களையெல்லாம் வாங்கிக் கொண்டார். ஏனென்றால், பசி பொறுக்க மாட்டாமல், அவர்கள் தங்கள் நிலம் சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டனர். அவை பாரவோனுக்குச் சொந்தமாயின.
21. (பூமி மட்டுமல்ல) ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரையிலும் உள்ள குடிகளெல்லாம் (அரசனுக்கு அடிமைகளானார்கள்).
22. குருக்களுடைய நிலத்தை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், அது அரசனாலே (மானியமாக) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருந்ததனாலும், அவர்களுக்கு அரசாங்கமே தானியங்களைக் கொடுத்து வந்ததனாலும், அவர்கள் தங்கள் நிலங்களை விற்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
23. அப்பொழுது சூசை மக்களை நோக்கி: இன்று முதல் பாரவோன் உங்களையும் உங்கள் நிலங்களையும் உடைமையாகக் கொண்டிருக்கிறார். அது உங்களுக்குத் தெரியும். இப்போது, உங்களுக்கு விதைத் தானியம் கொடுக்கிறேன்; வாங்கி, நிலத்தில் விதையுங்கள்.
24. அது விளைந்தால் விளைச்சலில் ஐந்திலொரு பாகம் அரசருக்குச் செலுத்துவீர்கள். மற்ற நான்கு பங்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும் என்று சொன்னார்.
25. அதற்கு அவர்கள்: எங்கள் உயிரே தங்கள் கைகளில் இருக்கிறது. துரை அவர்கள் கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்தால் போதும். நாங்கள் மகிழ்ச்சியோடு அரசருக்குப் பணிவிடை செய்வோம் எனப் பதில் கூறினார்.
26. அது முதல் இந்நாள் வரை எகிப்து நாடெங்கும் ஐந்திலொரு பாகம் அரசர்களுக்குச் செலுத்துவது வழக்கம். இது தேசச் சட்டம் போல் ஆயிற்று. குருக்களுடைய நிலங்களுக்கு மட்டும் அத்தகைய வரி இல்லை.
27. இஸ்ராயேல், எகிப்திலே- அதாவது, யேசேன் நாட்டிலே- குடியிருந்து, அதனை உரிமை கொண்டு, அங்கே மிகவும் பலுகிப் பெருகி வந்தான்.
28. யாக்கோபு பதினேழாண்டு எகிப்தில் இருந்தான். அவன் வாழ்நாள் மொத்தம் நூற்று நாற்பத்தேழு ஆண்டுகள்.
29. அவன், தன் மரண நாள் நெருங்கி வருவதைக் கண்டு, தன் மகன் சூசையை வரவழைத்து, அவரை நோக்கி: என் மேல் உனக்கு அன்பிருக்குமாயின், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, என்னை எகிப்தில் அடக்கம் செய்வதில்லையென்று சத்தியமாய்ச் சொல்லக் கருணை கொள்வாயாக.
30. நான் என் மூதாதையரோடு (மரணத்) துயில் கொள்ள விரும்புகின்றேன். எனவே, நீ என்னை இந்நாட்டிலிருந்து கொண்டு போய், என் முன்னோர்களின் கல்லறையிலே என்னையும் அடக்கம் பண்ணுவாயாக என்றான். அதற்கு சூசை: நீர் கட்டளையிட்டபடியே செய்வேன் என்றார்.
31. அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். அவர் ஆணையிட்டுக் கொடுக்கவே, இஸ்ராயேல், படுக்கையின் தலைமாட்டுப் பக்கம் திரும்பிக் கடவுளைத் தொழுதான்.
மொத்தம் 50 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 50
1 பின் சூசை பாரவோனிடம் போய்: என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடுமாடு முதலியவற்றோடும், தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். இதோ, அவர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கிறார்கள் என்று அறிவித்தார். 2 பின், கடைசியில் பிறந்த தம் சகோதரரில் ஐந்து பேரை அரசன் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தினார். 3 அவன் அவர்களை நோக்கி: உங்கள் தொழில் என்ன என, அவர்கள்: உமது அடிமைகளாகிய நாங்கள் எங்கள் முன்னோரைப் போல் ஆடு மேய்ப்பவர்கள். 4 உம் நாட்டிலே குடியிருக்க வந்தோம். ஏனென்றால், கானான் நாட்டிலே மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டதால், அடியோர்களின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போயிற்று. அடியோர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கும்படி உத்தரவளிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம் என்றனர். 5 அப்பொழுது அரசன் சூசையை நோக்கி: உம் தந்தையும் உம்முடைய சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்களே, எகிப்து நாடு உமது பார்வையில் இருக்கிறது. 6 சிறந்த இடத்தில் அவர்கள் குடியேறும்படி செய்யும். யேசேன் நாட்டையே அவர்களுக்குச் சொந்தமாய்க் கொடும். அவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீராயின், என் மந்தைகளைப் பேணுவதற்கு அவர்களைத் தலைவராக நியமிக்கலாம் என்றான். 7 அதன் பின், சூசை தம் தந்தையை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினார். யாக்கோபு அரசனுக்கு ஆசிமொழி கூறின பின், 8 பாரவோன் அவனை நோக்கி: உமது வயதென்ன என்று வினவினான். 9 அதற்கு அவன்: என் அலைந்து திரிந்த வாழ்வின் காலம் நூற்று முப்பதாண்டுகள்; அது கொஞ்சமுமாய், கேடுகள் நிறைந்ததுமாய் இருந்துள்ளதுமன்றி, என் முன்னோருடைய அலைந்த வாழ்வின் ஆயுட்காலத்தை வந்து எட்டவுமில்லை என்று பதில் கூறிய பின், 10 அரசனை ஆசீர்வதித்து வெளியே போனான். 11 பின் சூசை, பாரவோன் கட்டளையிட்டிருந்த படி, தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டிலே வளமான நாடாகிய இறாம்சேசை உரிமையாய்க் கொடுத்தார். 12 மேலும், அவர்களையும், தம் தந்தை வீட்டார் அனைவரையும் பராமரித்து, அவரவர்களுக்கு உணவும் அளித்து வந்தார். 13 ஏனென்றால், பூமியெங்கும் உணவு கிடைக்கவில்லை. பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது. குறிப்பாக, அஃது எகிப்திலும் கானான் நாட்டிலும் கொடியதாய் இருந்தது. 14 சூசை அந்நாட்டாருக்குத் தானியம் விற்று, அதனால் வந்த பணமெல்லாம் சேர்த்து அரசனின் கருவூலத்தில் சேர்த்து வைத்து வந்தார். 15 தானியம் வாங்க வகையில்லாமல் போன போது, எகிப்தியர் எல்லாரும் சூசையிடம் வந்து: எங்களுக்கு உணவு தாரும். பணம் இல்லையென்பதனால், உம்முன் நாங்கள் சாக வேண்டுமோ என்றனர். 16 அதற்கு அவன்: உங்களிடம் பணம் இல்லாவிட்டாலும், உங்கள் ஆடு மாடு முதலியவற்றைக் கொண்டு வாருங்கள்; அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியங்களைத் தருவேன் என்று பதில் சொல்லக் கேட்டு, 17 அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்த போது, சூசை குதிரைகளையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு, அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்குத் தானியங்களைக் கொடுத்தார். இப்படி மிருகங்களைக் கைம்மாறாகப் பெற்று, அவர்களை அந்த ஆண்டு காப்பாற்றி வந்தார். 18 அடுத்த ஆண்டிலே அவர்கள் மறுபடியும் வந்து, அவரை நோக்கி: பணமும் செலவழிந்து போயிற்று; ஆடுமாடு முதலியவையும் இனி மேல் இல்லை. இதைத் துரை அவர்களுக்குத் தெரிவிக்காது இருப்பது முறையல்ல. இனி என்ன? உடலும் எங்கள் நிலங்களும் போக எங்களிடம் மீதியானது வேறொன்றும் இல்லையென்று தங்களுக்குத் தெரியும். 19 உமது கண்முன் நாங்கள் ஏன் சாக வேண்டும்? எங்கள் நிலங்களும் நாங்களுமே உமது உடைமைகளாய் இருப்போம். அரசருக்கு அடிமைகளாக எங்களை வாங்கி, எங்களுக்குத் தானியம் கொடும். கொடாவிட்டால், நாங்களும் சாக, நிலமும் பாழாய்ப் போகும் என்றனர். 20 அப்படியே சூசை எகிப்தியருடைய நிலங்களையெல்லாம் வாங்கிக் கொண்டார். ஏனென்றால், பசி பொறுக்க மாட்டாமல், அவர்கள் தங்கள் நிலம் சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டனர். அவை பாரவோனுக்குச் சொந்தமாயின. 21 (பூமி மட்டுமல்ல) ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரையிலும் உள்ள குடிகளெல்லாம் (அரசனுக்கு அடிமைகளானார்கள்). 22 குருக்களுடைய நிலத்தை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், அது அரசனாலே (மானியமாக) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருந்ததனாலும், அவர்களுக்கு அரசாங்கமே தானியங்களைக் கொடுத்து வந்ததனாலும், அவர்கள் தங்கள் நிலங்களை விற்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. 23 அப்பொழுது சூசை மக்களை நோக்கி: இன்று முதல் பாரவோன் உங்களையும் உங்கள் நிலங்களையும் உடைமையாகக் கொண்டிருக்கிறார். அது உங்களுக்குத் தெரியும். இப்போது, உங்களுக்கு விதைத் தானியம் கொடுக்கிறேன்; வாங்கி, நிலத்தில் விதையுங்கள். 24 அது விளைந்தால் விளைச்சலில் ஐந்திலொரு பாகம் அரசருக்குச் செலுத்துவீர்கள். மற்ற நான்கு பங்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும் என்று சொன்னார். 25 அதற்கு அவர்கள்: எங்கள் உயிரே தங்கள் கைகளில் இருக்கிறது. துரை அவர்கள் கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்தால் போதும். நாங்கள் மகிழ்ச்சியோடு அரசருக்குப் பணிவிடை செய்வோம் எனப் பதில் கூறினார். 26 அது முதல் இந்நாள் வரை எகிப்து நாடெங்கும் ஐந்திலொரு பாகம் அரசர்களுக்குச் செலுத்துவது வழக்கம். இது தேசச் சட்டம் போல் ஆயிற்று. குருக்களுடைய நிலங்களுக்கு மட்டும் அத்தகைய வரி இல்லை. 27 இஸ்ராயேல், எகிப்திலே- அதாவது, யேசேன் நாட்டிலே- குடியிருந்து, அதனை உரிமை கொண்டு, அங்கே மிகவும் பலுகிப் பெருகி வந்தான். 28 யாக்கோபு பதினேழாண்டு எகிப்தில் இருந்தான். அவன் வாழ்நாள் மொத்தம் நூற்று நாற்பத்தேழு ஆண்டுகள். 29 அவன், தன் மரண நாள் நெருங்கி வருவதைக் கண்டு, தன் மகன் சூசையை வரவழைத்து, அவரை நோக்கி: என் மேல் உனக்கு அன்பிருக்குமாயின், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, என்னை எகிப்தில் அடக்கம் செய்வதில்லையென்று சத்தியமாய்ச் சொல்லக் கருணை கொள்வாயாக. 30 நான் என் மூதாதையரோடு (மரணத்) துயில் கொள்ள விரும்புகின்றேன். எனவே, நீ என்னை இந்நாட்டிலிருந்து கொண்டு போய், என் முன்னோர்களின் கல்லறையிலே என்னையும் அடக்கம் பண்ணுவாயாக என்றான். அதற்கு சூசை: நீர் கட்டளையிட்டபடியே செய்வேன் என்றார். 31 அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். அவர் ஆணையிட்டுக் கொடுக்கவே, இஸ்ராயேல், படுக்கையின் தலைமாட்டுப் பக்கம் திரும்பிக் கடவுளைத் தொழுதான்.
மொத்தம் 50 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 50
×

Alert

×

Tamil Letters Keypad References